கரையுடைக்கும் கணமொன்றில் – 29 (1)

கோடை காலம் ஆரம்பித்திருந்தது. அடிக்கடி மழை பெய்தாலும் ரசிப்புக்குரிய காலமாச்சே! எப்போதடா வேலை முடியும் என்று காத்திருந்து சேந்தனும் கவனியும்  ஊர் சுற்றத் தொடங்கி விடுவார்கள்.

அன்றும் அப்படித்தான்,  லண்டன் பிரிட்ஜிலிருந்து தேம்ஸ் நதிக்கரையோரமாக நடப்பதற்குத் திட்டமிட்டிருந்தார்கள். 

வாணனையும் கேட்டிருந்தாள், கவினி. அவளை ஒரு சாதியாகப் பார்த்தான், அவன்.

 “மாட்டன் எண்டு சொல்லுவன் எண்ட நம்பிக்கையோட கேக்கிற மாதிரி இருக்கே!” 

“உமக்கு விசரா? உண்மையாத்தான் கேக்கிறன். அந்தப் பக்கம் வடிவா இருக்கும், வீடியோ எடுக்கலாம். சும்மா வாரும்.” 

“அதானே பாத்தன். இனி இதுகளை உம்மட ஆளைக்கொண்டு செய்வியும் ஓகே! நீங்க சோடியா போக வெளிக்கிட்டுப்போட்டு இடைக்க நந்தியா நான் ஏன் சொல்லும்? ‘எனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேணும்டா’ எண்டு பாத்துக்கொண்டு திரியிறன், அப்ப நாங்களும் நடப்பம், ஓடுவம், பாடுவம் எல்லாம் செய்வம்  ஓகே!”என்று கடித்து அனுப்பி வைத்திருந்தான், அவன்.

“இந்த இடம் சூப்பர் வியூ சேந்தன்! ஒரு சோர்ட் எடுத்திட்டுப் போவம்.” அவன் கையில் செல்ஃபீ ஸ்டிக்கை கொடுத்துவிட்டு, பின்புறம் இயற்கை எழில் கொட்டிக் கிடக்க, சேந்தன் தோளுரசி நிற்கப் பாடத் தொடங்கினாள், கவினி.

என்ன பாட்டு என்று முதலே கேட்டவனுக்குப் பதில் சொல்லாதவள் பாடத் தொடங்கவும், கைப்பேசித் திரையில் தெரிந்த அவள் முகத்தை, இமைக்க மறந்து பார்த்து நின்றான், சேந்தன். 

நினைப்புதான் பொழப்பையும் கெடுக்குது

கெடுக்கட்டும் உன் நினைப்பு

வர வர அடிக்கடி சிரிக்கிறேன்

மனசுல உன் நினைப்பு

வார்த்தைகளுக்கேற்ப அசைந்த விழிகள் சீண்டலோடு கதை பேசின. அவனுக்கே தான் சொல்கிறாள்.  கைப்பேசித் திரையில் இருந்த பார்வையை அவள் முகத்துக்குக் கொண்டுவந்த சேந்தனின் மறு கரம், அவள் தோளை வளைத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டது.

“ஐயே! என்ன சேந்தன் நீங்க?”அந்தக் கிளிப்பை சேவ் செய்துவிட்டு முறைத்தாள். அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. 

“எங்க இருந்து இப்பிடித் தேடிப் பிடிக்கிறனீர்? ஒருநாளும் கேட்காத பாட்டு இது!”

“அடோய்! முதல் எடுத்திட்டுப் பிறகு கதைக்கலாம் எல்லா?”அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள். துள்ளி விலகினான், அவன். 

“ப்ளீஸ் சேந்தன்! ஆட்டாமல் வடிவாப் பிடியுங்கோ. ஒரே ஒரு நிமிசம் தான். ஒரேதா எடுத்திட்டா எடிட் செய்யற வேலை மிச்சம். இல்லாட்டி முன்னால போய்  நிண்டு எடுங்கோ! பாவம், ஆளிண்ட தோள் சரி தெரியட்டும் எண்டு பாத்தா…” பொய்யாக அதட்டல் போட்டு, அவனோடு மல்லுக்கட்டுவதில் அடுத்த சில நிமிடங்கள் செலவானது. 

“அந்த நாலு வரிகளும் வேணாம் சேந்தன்.  இத வடிவா ரெகோர்ட் செய்யுங்க சொல்லிட்டன்!” அதட்டிவிட்டு, குரலைச் செருமிக்கொண்டே பாட ஆரம்பித்தாள். 

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே

அடிமனதில் அண்டிப்பிட்டானே

நான் பாட்டுல சுத்தி வந்தேனே

நகம் கடிக்க கத்துத் தந்தானே

வெக்கத்துல விக்க வச்சானே

வெப்பத்துல சிக்க வச்சானே

பசப்புறேனே மழுப்புறனே சொதப்புறனே

அலங்காரி அளட்டிக்கிட்டேனே

அலுங்காம அள்ளிப்புட்டானே

அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே

கிளிப்பை நிறுத்தியவன், அதே வேகத்தில் அவளை இறுக அணைத்துக்கொண்டான். 

 

error: Alert: Content selection is disabled!!