மந்தாரைச் செடி ஓரத்தில் 2 – 1

 

மந்தாரை 2

 

 

“நீயெல்லாம் மனுஷனா? உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? விதவிதமாக ஆக்கி வைக்கிறேன். அதை நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு பானைபோல வயிற்றை வளர்க்கிறே. உன்னை என்ன பண்ண?” என்று ஒருத்தி திட்டிக்கொண்டிருக்க, இன்னொருத்தியோ பால் கொழுக்கட்டையை ருசித்துச் சாப்பிட்டு முடித்தவள், எதிரிலுள்ள தாமரைக் குளத்திற்குப் போய்க் கையைக் கழுவிவிட்டு, தாவணி முந்தானையால் வாயைத் துடைத்துக்கொண்டு வர…

இவள் போகும்போது இன்னொருத்தி எப்படித் திட்டிக்கொண்டிருந்தாளோ, அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

“விட்டால் நாள் முழுவதும் திட்டிய ஒரு வழி பண்ணிவிடுவாள்,” என்று நினைத்தவள், வேகமாகப் போய் அங்கிருந்தவளின் தோளைத் தொட, அதில் திரும்பிப் பார்த்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

 

கடந்த மூன்று வருடங்களாக இது வழக்கமாய் நடக்கும் செயல் என்றாலும், தோழியின் கண்ணீரை கண்ட மீனாவிற்குக் கவலையாக இருந்தது.

 

“ஏன்டி குழலி இப்படி? விடு, அதெல்லாம் எதுவும் நடக்காது. பார்த்துக்கலாம் டி. நாம வந்து ரொம்ப நேரம் ஆகுது. இவ்வளவு நேரம் உன் அண்ணன் அந்த சிடுமூஞ்சி சிவணான்டி தேடிக்கொண்டு வந்தாலும் வரலாம்,” என்கும்போது புல்லட் சத்தம் கேட்டது..

 

“நான் சொல்லல!” என்றவாறு மீனா திரும்பிப் பார்க்க, அங்கு புல்லட்டில் வந்து இறங்கினான் குழலியின் அண்ணனும், ஊர் பிரசிடென்டான கபிலன்

 

அவனோ மீனாவைப் பார்த்துக் கண்ணடிக்க, “திருட்டுப் பயல் தங்கச்சிகாரி கூட இருக்கும் போதே என்ன வேலை பண்ணுறான் பாரு,” என்று முணுவிக்கொண்டே மீனா வேறு பக்கம் திரும்பிக்கொள்ள, அதைப் பார்த்துச் சிரித்தவன், அந்த ஆலமரத்தின் கீழே இருக்கும் பிள்ளையார் முன்பு கைகூப்பி வணங்கினான்.

 

விபூதி, குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசியவாறு தங்கையின் பக்கம் திரும்பியவன், “என்னடா உன் ஹீரோவைப் பார்த்துட்டியா? கோயிலுக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகுதே, ஆளைக் காணோம் என்று அம்மாதான் அனுப்பிச்சு. போகலாமா?” என்று தங்கையிடம் கேட்க, “நீங்கள் போங்கணா. நான் மீனா கூட வண்டியில் வருகிறேன்,” என்ற குழலியோ, பூஜைக்கு எடுத்து வந்த தேங்காயை அங்கிருந்த கல்லில் உடைக்க, அதுவோ தூள் தூளாகச் சிதறி ஓடியது.

 

“ஆமா! இவ பெரிய பைலட்டு. உன்னைக் கொன்று வந்து பத்திரமா விட்டுடுவா. நீ வாடா, அவளே வண்டியை உருட்டிட்டு வருவாள்,” என்று சொல்லிக்கொண்டு மீனாவை பார்க்க, அவளோ கோபத்தில் திரும்பினாள்.

 

“எப்ப திரும்புவாள் என்று காத்திருந்தவன், உதட்டைக் குவித்து முத்தமிடுவதுபோல் சைகை செய்ய, பல்லைக் கடித்தவள், “நீ உன் பாசமலர் கூடையே போடி. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்று அங்கிருந்த தனது ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு சென்றாள்.

 

“வண்டி ஓட்டிய மீனாவோ கபிலனை திட்டி கொண்டே போனாள், கொஞ்ச நாளாவே இவன் பார்வையும் சரி இல்லை. இவனால் தானே அத்தை வீட்டுக்கு நம்ம போகாம இருக்கிறோம்? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்? இன்னொரு வாட்டி இந்த சிடுமூஞ்சி பயல் ஏதாச்சும் சேட்டை பண்ணட்டும். அப்ப இருக்குடா இந்த மீனா யாருன்னு காட்டாம விட மாட்டேன்,” என்று சொல்லிக்கொண்டு வண்டியை ஓட்ட, பின்னாடி புல்லட்டின் ஹாரன் சத்தம் கேட்கவும், அவளோ கண்டுகொள்ளாமலே வந்தாள்.

 

புல்லட் அவள் அருகில் வந்ததும், “மீனா, நாளைக்கு பார்க்கலாம்,” என்று குழலி சொல்லவும், பிறகே திரும்பியவள், “சரி டி,” என்றவளோ, மறந்தும் கபிலனைப் பார்க்கவில்லை.

 

“ஏன்மா, அவ்வளவு பெரிய பூஜை அறையை அப்பா கட்டி வச்சிருக்கிறார். அங்கு சாமி கும்பிட்டு உன் வேண்டுதலை வைத்தால் பலிக்காதா? தினமும் இந்த அரச மரத்துக்கு அடியில் இருக்கும் பிள்ளையார் கிட்ட தான் வேண்டுதல் வைக்கணுமோ?” என்று கபிலன் கேட்க, இது வழக்கமான கேள்வி என்பதால் எப்போதும் போலவே குழலி அமைதியாகவே இருந்தாள்.

 

அப்பொழுது ‘டிராக்டர்’ சத்தம் கேட்டு, சடாரெனக் குழலி திரும்பிப் பார்க்க, சில அடி தூரத்தில் வேந்தன் டிராக்டரை ஓட்டிக்கொண்டு வருவது தெரிந்தது.

 

கண்ணாடி வழியாகப் பின்னாடி வரும் வண்டியைப் பார்த்தவனோ, “ஓஓ, இந்த மாட்டுக்கார வேலனா… இவனுக்கு நான் ஏன் ஒதுக்கிப் போகணும்? பின்னாடியே வரட்டும். துரை என்ன கலெக்டர் ஆபீஸில் கையெழுத்துப் போடவா போறாரு?” என்றான்.

 

அதைக் கேட்ட குழலிக்கு ஆத்திரம் வந்து, “அண்ணா, ஒதுங்கித்தான் போயேன்,” என்கவும், “நீ சும்மா இருடா. பின்னாடி வர்றதால அவன் தோள் ஒன்றும் குறுகிடாதே,” என்கும்போது டிராக்டரில் இருந்து ஹாரன் சத்தம் கேட்டது..

 

“பாத்தியா எவ்வளவு திமிரு! முன்னாடி நாம போயிட்டு இருக்கோம், நம்மள தாண்டி அவனுக்குப் போகணுமாம்….” என்றவனோ வழி மட்டும் விடவில்லை.

 

ஏன் மாமா இன்னுமா என் மனசு உங்களுக்கு புரியவில்லை? என்று மனதிற்குள் கதறியபடியே வேந்தனை பார்த்தாள்.

 

ஆனால் அவனோ சிறிதும் இவளை கண்டுகொள்ளவில்லை..

 

அந்த நேரம் எதிராக கார் ஒன்னு வரவும் வேறு வழியின்றி கதிரவன் ஒதுங்கி போக,வேந்தனும் அவர்களை தாண்டி முன்னே சென்றுவிட்டான்.

 

கடுப்போடு வீட்டிற்கு வந்தவன் வண்டியை நிறுத்த, பின்னாடி உட்கார்ந்திருந்தவளோ அமைதியாக இறங்கி உள்ளே போகவும், அங்கே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவளுடைய அப்பா கார்மேகம், கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் மகள் வருவதைக் கண்டு என்ன கண்ணு உன்னோட கணேசன் இன்று என்ன சங்கதிய சொன்னாரு என்று சிரித்துக் கொண்டே கேட்க, அப்பா என்று சிணுங்கினாள்.

 

ஏன் தாயி…உன் அப்பா 50 பேர் படுத்து உறங்குற அளவுக்கு இவ்வளவு பெரிய சாமி ரூமை வீட்டுக்குள்ள கட்டி வச்சிருக்கேன். ஆனால் நீ அந்த அரச மரத்தடியில் இருக்கிற ஆள தான் தினமும் பாக்கணும்னு போறியே அப்படி என்ன உனக்கும் கணேசனுக்கும் வழக்கு இருக்கு கொஞ்சம் அப்பாகிட்ட சொல்லு தீர்த்து வைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கார்மேகம் கேட்கவும், அப்பொழுது கிச்சனுக்குள் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது.

 

யாத்தே….சகுந்தலா சாமி ஆடுறதுக்கு முன்னாடி நீ வாய மூடுறது நல்லதுடா கார்மேகம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் மகளை பார்த்து உள்ளே போ யென்று சைகையை காட்டி விட்டு பேப்பரை எடுத்து படிக்கலானார்.

 

குழலிக்கு தனது அப்பாவை பார்த்து சிரிப்பு வந்தது இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காமல் வேகமாக உள்ளே போகவும் ஏய் பூங்குழலி சமையல் கட்டுக்கு நீயா வரியா?.

 

இல்ல உன்னை ஆளு வச்சு கூப்பிடனுமா என்று சகுந்தலாவின் குரல் கேட்கவும் இதோ வந்துட்டேங்க அம்மா என்றவாறு பூஜை கூடையோடு சமையல் அறைக்குள் போனவள், இந்தாங்கள் என்று பூஜை கூடையை நீட்ட,அதிலிருந்த விபூதி குங்குமத்தை எடுத்து பூசிக்கொண்ட சகுந்தலா நீ வராமல் சாப்பிட மாட்டேன்னு உங்க அப்பா உட்கார்ந்து இருக்கிறார் சீக்கிரம் போய் டிபன் எடுத்து வை என்றவாறு தோசை ஊற்றுவதற்காக கல்லை எடுத்து வைத்தார்.

 

பூஜை கூடையோடு தனது தாத்தா பாட்டி அறைக்குள் சென்றவள் அப்பாயி என்கவும் வாடா குழலி..கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா?

நேரம் ஆகுதே என்ன இன்னும் காணும்னு உன் அப்புச்சி புலம்பிக் கொண்டு இருந்தார்..

 

சிரித்துக் கொண்டே அவர்களுக்கும் விபூதி குங்குமத்தை காட்ட,எடுத்து முதலில் பேத்தியின் நெற்றியில் பூசிய சாலாட்சி, மனம் போல் மாங்கல்யம் அமையட்டும் ஆத்தா என்கிற போது குழலிக்கு கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.

 

பேத்தியின் முகத்தைப் பார்த்த தம்புசாமி இப்ப என்ன நடந்துச்சுன்னு கண்ணு கலங்குற?.என்னைக்கு இருந்தாலும் வேந்தன் தான் உன் புருஷன் புரியுதா?.எவன் என்ன பண்ணிடுவான் என்று நானும் பார்க்கிறேன்.

 

வயசு தான் ஆகியிருக்கிறதே தவிர இன்னும் உன் அப்புச்சிக்கு வீரம் குறையலை.காலம் நேரம் வரட்டும் எல்லாம் கூடி வரும் கண்ணு.மனசை போட்டு குழப்பிக்காதே என்றவாறு பேத்தியின் கண்களை துடைத்து விட்டவர் பெருமூச்சுடன் வெளியே போக,வாம்மா என்றபடி பேத்தியோடு சாலாட்சியும் ஹாலுக்கு போனார்.

 

பெருமூச்சு விட்டு தன்னை சமாளித்துக் கொண்டவள் பின்னர் அவளது அம்மா சமைத்த டிபனை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தவள் அண்ணா என்று மாடியில் இருக்கும் கபிலனுக்கு குரல் கொடுக்க,தனது ஜன்னல் வழியா சற்று தூரத்தில் இருக்கும் மீனாவின் வீட்டை பார்த்துக் கொண்டிருந்தவனோ, தங்கச்சியின் குரல் கேட்டு கீழே வந்தான்.

 

அப்பு வா சாப்பிடலாம் என்று தம்புசாமி கூப்பிட, இதோங்க அப்புச்சி என்றவன் கையை கழு விட்டு வந்து உட்கார நால்வருக்கும் குழலி பரிமாறினாள்.

 

நாளையிலிருந்து தானே உனக்கு செமஸ்டர் ஆரம்பிக்குது என்று கபிலன் கேட்கவும் ஆமா அண்ணா என்றவாறு இட்லியை வைத்தாள்.

 

அப்புறம் என்ன மூணாவது வருஷம் முடியுது கையோட பாப்பா கல்யாணத்தை முடித்து விடலாமே அப்புச்சி என்கவும், தனது பேரனை நிமிர்ந்து பார்த்த தம்புசாமி,படிச்சுக்கிட்டு இருக்க பிள்ளை கிட்ட போய் என்னடா கல்யாணம் வார்த்தை பேசுற?.

 

அதைவிட பெரியவன் நீ இருக்கிறியே உனக்கு கால் கட்டு போட வேண்டாமா? உன் பொண்டாட்டி வந்த பிறகு என் பேத்தி இன்னொரு வீட்டுக்கு வாழ போகட்டும் ஒன்னும் அவசரமில்லை.

 

நம்ம சாமிதுரை தரகர் கிட்ட உன் ஜாதகத்தை கொடுக்க சொல்லி உன் பாட்டி சொல்றா, நீ என்ன சொல்ற கார்மேகம் என்று தனது மகனிடம் தம்புசாமி கேட்க பெரியவங்க நீங்க இருக்கும் போது இத பத்தி நான் என்ன பேசுவது என்றார்.

 

மகனின் வார்த்தையை கேட்டு மீசையை தடவி விட்டவர் மெச்சுதலாக தனது பேரனை பார்த்து பாரு என்று கண்களால் பேசவும் மன்னிச்சிடுங்க அப்புச்சி என்று கண்களால் இரஞ்சியவனோ, எப்படியாவது இந்த பொண்ணு பாக்குற படலத்தை நிறுத்தணுமே மீனா வேற படிச்சுக்கிட்டு இருக்கா படிச்சு முடிச்சா தானே கல்யாணம் பண்ண முடியும். நம்மளும் மூணு வருஷமா ஏதேதோ காரணத்தை காட்டி தப்பிச்சிட்டு இருக்கிறோமே என்று யோசனை ஆக, முதல்ல சாப்பிடுறதை பாரு என்று கண்டிப்போடு தம்புசாமி சொல்லவும், அதில் சுதாரித்த கபிலன் சரிங்க அப்புச்சி என்று கீழே குனிந்து கொண்டு சாப்பிடலானான்.

 

கிச்சனிலிருந்த சகுந்தலா தோசையை சுட்டு வைக்க கார்குழலியும் எடுத்துட்டு வந்து ஆளுக்கு ஒன்றை கொடுக்கவும் போதும் தாயென்று சாப்பிட்டு எழுந்தவர்கள், ஹாலில் போய் உட்கார, தயாராக போட்டு வைத்திருந்த டீயை ஆளுக்கு ஒன்றாக கொண்டு வந்து சகுந்தலா குடுக்கவும்,நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க ம்மா என்று சாலாட்சி சொல்ல, சரிங்க அத்தை என்றார்.

 

error: Alert: Content selection is disabled!!