அத்தியாயம் 25- 2

முகம் கல்லென இறுக்கிப் போயிற்று, எனக்கு.

  “சும்மா விசர்க்கதை கதைச்சு அலட்டாமல் இரன அம்மா!” அதட்டலோடு வந்தார் குட்டி அக்கா.

  ” இங்க பாருங்க உதயாவின்ர முகத்த! அப்ப எனக்காகத்தான் அண்ணா அவளை இங்க கூப்பிட நினைச்சவர் எண்டு எல்லாம்மா நினைப்பாள்? நான் அப்படிச் சொன்னன் தான் உதயா, ஆனாலும், அண்ணா விரும்பித்தான் உன்னைக் கூப்பிட வந்தவர். சத்தியமா நம்பும்!” என் கரங்களைப் பற்றிக் கொண்டார். பார்வையைத் தவிர்த்தேன் நான்.

  அம்மம்மாவும் நன்றாகவே அந்தரப்பட்டுப் போனார்.

  “ராசாத்தி நான் கூப்பிட்டல்லோ இங்க வந்தவள். அவனே கூப்பிட்டவன்? நீ சொல்லுறது போல, அவன், தானே தன்ர பிழையை உணர்ந்து விரும்பித்தான் இவளக்  கூப்பிட வந்தவன் எண்டா அதை நடத்தையில எல்லா காட்ட வேணும் குட்டி?” மகளிடம்  சினந்தார்.

  “விடுங்க அம்மம்மா, நான் ஒண்ணும் நினைக்கேல்ல.” என்று விட்டு எழுந்து வெளியில் இறங்க, அங்கே சூர்யா நின்றிருந்தார்.

  நாங்கள் கதைத்தைக் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறார் என்றது அவர் முகம் இருந்த விதம்.

   அவரைக் கடந்து செல்ல முயல, “உதயா…” தயக்கத்தோடு அழைத்தார். நான் திரும்பிப் பார்க்கவில்லை; நிற்கவும் இல்லை; விறுவிறுவென்று சென்றுவிட்டேன்.

  என்னகடமைக்காக ஏதாவது சொல்லப் போறாரோ! இல்லை, ‘ஓம்! என்ர தங்கச்சிக்காகத்தான் உன்னக் கூப்பிட வந்தன்.’ என்று முகத்துக்கு நேரச் சீறுவாரோ

  ‘அப்படித்தானிருக்கும்!’ சிடுசிடுத்தது என்னுள்ளம். எதுவென்றாலும் இப்போது அதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை.

  அதன் பின்னர் சூர்யாவை ஏறிட்டுப்  பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை என்பேன்

  “உதயா , உண்மையாவே அண்ணா விரும்பித்தான் …” என்று, மீண்டும் என்னிடம் ஆரம்பித்தார் குட்டி அக்கா.

  “தயவு செய்து அதைப்பற்றிக் கதைக்க வேணாம் கா. நான் அவர் கூப்பிட வந்தார் எண்டதுக்காக இங்க வரேல்ல; அம்மம்மாவுக்காகத்தான் வந்தன்.” என்று சொல்லிவிட்டேன் நான்.

   “என்ன திரும்ப இந்தக் கதை? ஏதாவது பிரச்சினையா?” என்றபடி வந்த தீபிக்கு மட்டும் இது தெரிஞ்சால் திரும்பவும் தொடங்குவாள். மெல்ல வேறு கதைக்கு மாறிவிட்டோம்.

   இப்படியிருக்க இரண்டு நாட்களின் பின்னர் சூர்யாவே பயண ஏற்பாடுகள்  பற்றித்  தங்கையிடம் கேட்கையில் தான், “அது வந்து அண்ணா, எனக்கு இன்னும் விசாவே வரேல்ல; நான் பொய் சொன்னனான்.” என்று சொன்னார் குட்டி அக்கா.

   நானும் வீட்டில் தான் இருந்தேன். அப்போ என்னை வர வைக்கவே பொய் சொல்லியிருக்கிறார் என்றது உறுதியாகிற்றே!

   “இதில் எல்லாமா பொய் சொல்லுறது?” தங்கையைக் கடிந்து கொண்டார் சூர்யா.

    “அதுதானே? உன்னை என்ன செய்யிறது பிள்ளை?” என்று அம்மாம்மாவும் எரிச்சல் பட்டார்.

    “இப்ப நான் சொன்ன பொய்யால ஏதாவது நட்டமா? விசா வர எப்படியும் ஆறுமாதமாகும்.” என்ற குட்டி அக்கா, “கொழும்பில இவரிட சித்திட மகளுக்குக்  கலியாணமாம்.” என்றார்.

   “! எப்பவாம்? ” அம்மம்மா.

   “இன்னும் இருபது நாளிருக்கம்மா. இப்பவே என்னைப் போய் நிக்கச் சொன்னவர் இவர்மாமியும் ஒரே கேட்டுக்கொண்டு இருக்கிறா. கொஞ்ச நாளைக்குப் போயிட்டு வருவம் எண்டு பார்க்கிறன். என்ன சொல்லுறீங்க?” 

 அவரின் கணவரின் தாய் தந்தை சொந்தங்கள் கொழும்பில் தான் வசிக்கிறார்கள்

  “அவரே அப்பிடிச் சொன்ன பிறகு போகாமல் இருக்க முடியுமா? போகத்தான் வேணும்.” அம்மம்மா.

   சூர்யா எதுவும் கதைக்கவில்லை.

   “அப்ப அண்ணா நான் நாளைக்கே போகலாம் என்றிருக்கிறன்; பஸ் புக் பண்ணி விடுறீங்களா?” குட்டி அக்கா.

   “நானும் உன்னோட வாறன் குட்டி. நாளைக்கே போகப் போறியா? கலியாணத்துக்கு இருப்பது நாட்கள் இருக்கு எண்டா இன்னும் ஒரு கிழமை நின்றிட்டு வெளிக்கிடன்.” சூர்யா.

   “நீங்க என்னத்துக்கு அண்ணா? அதெல்லாம் நான் தனியாவே போவன்.” என்ற குட்டி அக்கா, “நானும் கொஞ்சம்  கொஞ்சமா வாங்க வேண்டியதுகளை வாங்கினால் விசா வர உடனே வெளிக்கிடலாம் அண்ணா, அதுதான்.” என்ற பிறகு எப்படித் தடுப்பது

  காலையில் பொழுது புலரும் முன்னே, தான் போய்ச் சேர்ந்துவிட்டதாக குறுஞ்செய்தி போட்டிருந்தாள் குட்டிஅந்த ஒலியில் கண்விழித்த நான் அதன் பின்னரும்  எழுந்து கொள்ளாது அப்படியே கட்டிலில் கிடந்தேன்.

  விடியவெள்ளன எழுந்ததும் காலைக்கடன்களை முடித்துவிட்டு வர தேநீரோடு நிற்கும் குட்டி இன்று இல்லை. வீட்டிலிருக்கும் மூன்று பெண்களும் என்னைக் கண்டதும் நெருப்பைக் கக்குவார்கள்

  இப்படி எண்ணுகையில், உதயா, பார்வையில் நெருப்பைக் கக்கவேனும் என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதில்லை என்பது உறைத்தது.

  அதில் அவளில் குறையும் சொல்ல முடியாது தானே? சிநேகமாகவோ விருப்பாகவோ பார்க்கும் நிலையை நான் ஒரு சிறு சந்தர்ப்பத்திலும்  வைக்கவும் இல்லையே!

  சிறிது நேரம் இப்படியே கிடக்க மெல்ல மெல்ல நழுவிய மனம் பழங்கணக்குப் பார்க்கத் தொடங்கவும் விருட்டென்று எழுந்து கொண்டேன்

  மிக அமைதியாக இருந்தது வீடு. இயன்ற மட்டும் சத்தம் செய்யாது காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

  இதுவரை இதற்குள் வந்து சுடுநீர் கூட வைத்ததில்லை; அதற்கான  தேவை இருக்கவில்லை. ஆனால், இனி இதெல்லாம்  அத்தியாவசியமாகும் போல இருக்கே!

  கேற்றிலில் தண்ணீரை நிறைத்து காஸ் அடுப்பில் வைத்துவிட்டு, சமையலறையின் ஒரு புறமாக சீமெந்தில்  கட்டியிருந்த அலுமாரியில் வரிசையாக அடுக்கியிருந்த பிளாஸ்டிக் போத்தல்களை  ஒன்று ஒன்றாக எடுத்துப் பார்த்தேன் .

   “தேயிலைமாசீனி எங்க? இது உப்பு… ” 

   ‘ஒரு கோப்பைத் தேத்தண்ணி, அதுக்கு இத்தனை பாடா?’ மனம் அலுக்க, அதிலிருந்த பிளாஸ்டிக் போத்தலின் முடியில் பிடித்துத் தூக்கியதுதான் தெரியும்

   பட்

  “ஐயோ! மூடியை மூடாமல் வச்சிருந்தா நான் என்ன செய்யிறது? சீனிதான், முழுதும் கொட்டீட்டே!” 

  வாய்விட்டே சொன்னபடி, கணம் செய்வதறியாது நின்றேன். என் கால்களிலும் சமையல் அறையின் பெரும் பகுதியிலும் சீனி! பரிதாபமாக அதை பார்த்தேன்

error: Alert: Content selection is disabled!!