அத்தியாயம் 33- 2

 இப்படி, சூர்யா அவ்வான்மதியின் அழகில் சற்றே மயங்கி நின்ற நேரம் நான் சொல்கிறேனே!

   யார் சொன்னால் என்ன? இருவரும் ஒன்றுதான்!

   உண்மையைச் சொல்லுவதென்றால், எனக்குமே  இதுவரை நாளும் மனதுள் புதைத்து வைத்திருந்த எல்லாவற்றையும் தட்டிக்கொட்டிக் கதைத்திட  ஆசையாகவே இருந்தது. ஆனாலும், அவரைப் பார்க்கப் பெரும் பாவமாக இருந்தது. மிகவுமே களைத்திருந்தார். இத்தனை நாட்கள் பொறுத்த என்னால் இன்னும் சில தினங்கள் பொறுக்க முடியாதா என்ன

  அதனால்தான், “இப்பத்  துங்குங்க!” என்றுவிட்டு நகர முயன்றேன்.

   அவரோ, அவ்வளவு பிடிவாதமாக, அதுவும், மின்னலென என் கரம் பற்றிய அக்கணம்விபரிக்கவியலா உணர்வை என்னுள் விதைத்திட்டு என்பதே உண்மை

  சற்று முன்னரும் என் கரம் பற்றினார்தான், தன் மனதுள் அடைந்து  கிடப்பதைக் கொட்டிவிடும் தவிப்போடு! அக்கரம் பற்றுதலை நான் முழுமையாக உணரும் முன்னரே சின்னத்தான் குறுக்கிட்டுவிட்டார். என்னைச் சங்கடத்தில் நெளிய வைத்தது, அக்கரம் பற்றுதல்

   ஏன், அன்றொருநாள், மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்துச் செல்ல முயன்ற போதும், ஒன்றுக்கு இருதடவைகள் இதே கரத்தில் அதுவும் இதேயிடத்தில் பற்றியிருந்தார். அப்போது என்னுள் பலத்த எரிச்சல் எழுந்தது. காரணம்,’ நான் சொல்வதைக் கேளாது போவியா?’ என்ற கண்டிப்பில் பற்றிய பிடியது

   இதுவோ…! அதீத உரிமையுணர்வு, ‘கதைக்கவேணும் என்று நான் பரிதவிப்பதை நீ எப்பிடி உணராது போகலாம்என்றொரு ஆதங்கம் என, எல்லாம் கலந்த அப்பிடியில் விறுவிறுவென்று நடந்தவரையே பார்த்தபடிதான் பின்னால் வந்தேன்

  குளிர் காற்றடிக்குதே என்றதுக்கு அவர் சொன்ன பதிலிலிருந்தே அவர் தவிப்பையும் புரிந்து கொள்ள முடிந்தது

   அவ்வளவு வேகமாக வந்து இப்படி அருகில் அமர்த்திக்கொண்டவர் மௌனமாக இருந்தால்?

   இதழில் மென் முறுவல் வந்தொட்டிக்கொண்டது!

   அவர் மௌனம் பார்த்ததும் என் மனமொன்றும் தானும் மௌனத்தில் குதித்திடவில்லை. அது, என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துவிட்ட அந்த விபத்தை நாடியோடியது

   அக்கணம், மின்னாமல் முழங்காமல் எனக்குக் கற்பித்த பாடத்தை அணுவணுவாக மீட்டிப் பார்த்தது

   மறுபிறவி எடுத்தது போன்ற உணர்வோடு, அந்த வைத்தியசாலை வராண்டாவில்  நானும் சூர்யாவும் ஒத்த வார்த்தை பேசாது அமர்ந்திருந்த கணங்களை ஆசைதீர ஆரத் தழுவி, மீண்டும் மீண்டும் புத்தம் புதிதாக உணர்ந்து கொண்டது.

  தொடர்ந்து, வீடு வந்து சேரும் வரையிலுமே இருவருமே அருகருகில் நெருங்கியிருந்தாலுமே ஒத்த வார்த்தை பேசிக்கொள்ளாது, மனத்தோடும் விழிகளோடும் உறவாடியபடி வந்த ஒவ்வொரு மணித்துளியையும் தொட்டு, உணர்ந்து ரசித்துப் பார்த்திட்டு

   அந்நினைவுகள் ஒவ்வொன்றும், என் நெஞ்சை மெத்து மெத்தென்று மோதிச் சென்றன தான். மறுக்கவே முடியாத உண்மையிது. மணமாகியபின்னர் என் நிலையில் இருந்திருக்கக் கூடிய ஒருத்திக்கு இயல்பான நிதர்சனமும் இதுதான்.

   ‘என்றாலும்…’

  மேலே சொன்ன, அணுவணுவாக உணர்ந்த எல்லாவற்றோடும்  போட்டிபோடும் அளவுக்குச் சக்தியிருந்தது இந்தஎன்றாலும்எனும் சொல்லுக்கு!

 அந்த ஒற்றைச்சொல்லினுள் அடங்கியுள்ள, என் மனவாழத்தில் உறைந்து நின்ற கேள்விகள், எண்ணங்கள், ஊகங்கள் எல்லாமே  ஒன்றுமேயில்லை என்றளவில் இன்னமும் மரித்திடவில்லையே

  சற்று முன்னர் கல்யாணியின் புகைப்படத்தை ஏந்தி நின்ற சூர்யாவின் தோற்றமும்தான்.

  ‘அவற்றுக்கெல்லாம் விடை அறிந்துகொள்ளும் சாத்தியமிருந்தால்இன்னும் அந்த வாழ்வு சிறக்குமே! முழுமை கிட்டுமே!’ இப்படியெண்ணியதும் என் பார்வை அருகில் மெல்லப் பாய்ந்தது.

  அவர் பார்வை மேலே தென்னங்கீற்றுக்கிடையால் விட்டு விட்டுத்  தெரிந்த நிலவில் நிலைத்திருந்தது. அவர் மனதுள்ளும் இதே நிலையாகவும் இருக்கலாமே

  இணைகளுக்கிடையேயான  உணர்வுகள், பார்வைகள், புரிதல்கள் என்பவற்றைக் கடந்து, வார்த்தைகளும் மிக மிகப் பெறுமதியானவையே! வலிமையானவைகளும் கூட

   ‘கதைப்போம்மனம் திறந்து.’ உள்ளத்தில் சொல்லிக்கொண்டே என் பார்வையும் அவர் பார்வையை ஒட்டிச் சென்றது

  இந்த இருபத்தியைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள்  இதே முழுமதியைக்  கண்டிருக்கிறேன்

  எத்தனையோ இரவுகள்  எந்தவித உணர்வுமின்றியே அதைப்  பார்த்தபடி எங்களறை யன்னலில் நின்றிருக்கிறேன். அங்கிருந்து எந்தத் தடையுமின்றி பளீரெனப் பார்க்கலாம்வாடி, ஏங்கி, ஏன் மகிழ்ந்து  நின்ற தருணங்களில் எல்லாம் அங்கே என் அம்மாவைத் தேடியிருக்கிறேன். அப்பா போன பிறகோஎங்காவது  தென்பட்டுவிட்டால் என்ற அற்பமான  கற்பனையில் எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாவற்றையும் விட, இப்பொழுதோ, மறைத்து அழிச்சாட்டியம் பண்ணிய தென்னங்கீற்றுகளுக்கு டிமிக்கி  கொடுத்துவிட்டுத்  தரிசனம் தந்த மதியானவன், அத்தனை இரம்மியமாக என் விழிகளில் விழுந்தான்.

  ‘இந்த அழகை இத்தனை நாட்களில் எப்படித் தவற விட்டன்?’ என்னையுமறியாது உள்ளத்தில் ஏங்கிப் போனேன்.

  அவன் சுரந்த குளிர்மை அப்படியே என்னுள் இறங்கி என் உள்ளத்தை மேலும் மேலும்  இதமாக்கியது.

  “உதயா!” 

  என் கரத்தை எடுத்துத் தன் கரங்களுள் பொத்திக்கொண்டார் சூர்யா.

   “ம்ம்..” கனிந்திருந்த  பார்வை அவரை நோக்கித் திரும்பியது. என்னையே தான் பார்த்திருந்தார்.

  “என்னில கோவமில்லையே!” 

  எடுத்ததும் இப்படி அவர் கேட்டதும் என்ன பதில் சொல்வது? இதழ்களில் முறுவல் விரிந்தது

 “சொல்லு உதயா!”

 இருக் …” சொல்லிக்கொண்டே அவர் விழிகளை பார்த்த வேகத்தில், “இருந்திச்சுநிறையநிறையவே…!” என்னையும் மீறி உதிர்த்துவிட்டன, என் இதழ்கள்

   “அது தெரியும், இப்ப?” 

    என் பார்வை மீண்டும் வானுக்குப் போயிருந்தது. மனதுள் வார்த்தைகளைக் கோர்க்கும் பணி தொடங்கியிருந்தது

  “இப்பிடி என்னைப் பார்!” முகத்தைப் பற்றித் திருப்பி உற்றுப்பார்த்தார்.

  அந்தப் பார்வையில் என் விழிகள் கலங்கிக் குளமாகின. அந்தஎன்றாலும்முற்று முழுதாகவே முன்னணிக்கு வந்துவிட்டதில் வந்த கண்ணீர் அது!

   “உதயா!” தடுமாறிய குரலும் வலியேந்திய  விழிகளுமாக  என்னைப் பார்த்தார் சூர்யா. என் கண்ணீர் செய்த மாற்றமது

   இனியும் தாமதம் ஏன்? எனக்கே அந்தப் பொறுமை இருக்கவில்லை என்பேன்.

    “அம்மம்மா சொல்லிக் கட்டாயப்படுத்தித்தான் என்னைக் கலியாணம் செய்தீங்க. அதை  உங்கட வாயாலயே சொன்னீங்க தானே? இப்ப அந்தக்கதை வேணாம். ஏனெண்டா சித்தீன்ட அரியண்டத்திலதான் நானும் ஓமெண்டு  சொன்னனான்

error: Alert: Content selection is disabled!!