அத்தியாயம் 33- 5

சட்டென்று திடுக்கிடலோடு உற்றுப் பார்த்தார்.

  “நீநீ என்ன நம்பேல்லையா உதயா?”

 “அய்யோ! நான் பகிடிக்குச் சொன்னன்நீங்க இப்பிடிக் கதைக்கிறதப் பார்க்கேலாமக் கிடக்கு!”

  இதைச் சொல்கையில் எனக்கு அழுகை வந்திட்டு! மறைக்க முயன்றும் முடியாது கண்ணீர் வழிய, “என்னச் சொல்லிப்போட்டு நீ அழுறியே!” கண்ணீரைத் துடைத்துவிட்டவர், “எனக்கு மனசில இருக்கிறத முழுசாச் சொன்னாத்தான் நிம்மதி உதயா.” தொடர்ந்தார்.  

  “அன்றைக்குத்  திரும்பவும் வீட்ட வந்தியே, அப்ப  உன்னச் சந்தோசமா  வைச்சிருக்கவேண்டியது என்ர பெரிய கடமை என்றளவில  மனத்தில முடிவெடுத்திருந்தன். ஒவ்வொன்றையும் அப்பிடி நினைச்சித்தான் செய்தன்.”

  “நினைச்சன்நினைச்சன். அதுவும் அண்டைக்கு ஸ்கூட்டி பழுதான நேரம் அநியாயத்துக்கு ஓடியோடி ஏற்றி இறக்கேக்க இது விளங்காதா எங்களுக்கு! ம்ம்பெரிய பொறுப்புத் திலகம்!” 

  வேண்டுமென்றே  எரிச்சலோடு சொல்வது போல் சொல்ல, அவரின் அணைப்பு இறுகியது

  “சொல்ல வந்ததைச் சொல்ல விடாமல் குறுக்கக் குறுக்கக் கதைச்சா …” விழிகளை உற்றுப் பார்த்தார்.

   “கதைச்சாம்ம்”  நான்.

   “ஐயோடி! நீ உன்ர தங்கச்சிகளுக்கு ஒரு படி மேல போல! எனக்குத்தான் இவ்வளவு நாளும் தெரியேல்லையோ!” தலையால் நெற்றியில் முட்டியவர், சொல்ல வந்ததைச் சொல்லி விடுவதில் குறியாக இருந்தார்.  

   “குட்டி கொழும்புக்குப் போன அடுத்த நாள் காலம ஒரு தேத்தண்ணி கூடத்  தராமல் அம்மா ஒதுக்கின நேரம், நீ எனக்கு சாப்பாடு போட்டுத் தந்தியே, அடுத்ததாஎனக்காக தீபிட்ட கதைச்ச நேரம், எல்லாத்துக்கும் மேல, அண்டைக்கு நர்மதா வீட்டில, அவமானமும் தாழ்வுணர்ச்சியும் குத்திக் குதற அப்பிடியே திரும்பி ஓடி வந்திர வேணும் போல இருந்தது தெரியுமா? அப்ப, ஓடிவந்து என்ர கையைப் பிடிச்சுக்கொண்டு போனியேஅந்தத் தருணங்களில உன்ன நான் எனக்குள்ள உணர்ந்தன் உதயா

  அவே தந்த சங்கிலிய சந்தோசமா விரும்பித்தான்  உன்ர கழுத்தில போட்டனான்.

   நர்மதான்டா அம்மா சொன்னதுபோலஉன்னநானும் நீயும் வாழுற வாழ்க்கையில எப்பவும் சந்தோசமா வச்சிருக்க வேணும் என்ற தீர்மானமே அப்ப எடுத்திருந்தன்

  நீயோ முறைக்கிறதிலேயே குறியா இருந்த. அப்பிடி இருந்தும் பஸ்சில நல்ல நித்திரையில என்ர கை வளைக்குள்ள இருந்த நேரம், காலம் முழுமைக்கும் உன்ன அப்படியே வச்சிருக்க வேணும் எண்டு நினைச்சு முடிக்கேல்லஅடுத்து …” அணைப்பு இறுகியது, நடுக்கத்தோடு

  என்னுள்ளமும் நடுநடுங்கியது. அந்த விபத்து, அதற்கு முதல் என் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை பாதக நிகழ்வுகளையும் துசெனத் தள்ளி முன்னால் நின்று மரண பயத்தைக் காட்டிச் சென்றிருந்ததே! நானுமே அவரின் நெஞ்சில்  ஒன்றிவிட்டேன்.

    “அந்த இருட்டு, அழுகுரல், கத்திக் குளறின சத்தம்அந்த நேரம் தான் முழுமையா உனக்கும் எனக்குமான உறவ என்னால உணர முடிஞ்சிது உதயா. அதை உணர்ந்த நேரமே, உன்னையும்  இழந்திட்டன் எண்டு நான் பட்டபாடுநீ அந்த ஆஸ்பத்திரில மயங்கிக் கிடந்த நேரம் சத்தியமா பைத்தியம் பிடிச்சிரும் போல இருந்திச்சு! உனக்கு ஒண்டுமில்லைஅதிர்ச்சி மயக்கம் எண்டு சொல்லியும், நீ எழும்பி வரும் வரைக்கும் நான் பட்ட பாடு ” 

  “பச்! விடுங்க.” கசியும் அவர் கண்களைத் துடைத்து விட்டேன். அந்தக் கரத்தைத் தன்  கன்னத்தோடு அழுத்திப் பிடித்துக்கொண்டே தொடர்ந்தார் அவர்

   “நான் கல்யாணிய என்னைவிடவும் அதிகமா விரும்பினன். ஆனால், அது இப்படிப் போகுமெண்டுவேணாம் விடு! இத்தனை நாட்களும் பைத்தியமாகத் திரிந்த என்னைஇன்றைக்கு நேராக நிறுத்தியது நீதான்டி! இந்த விசயத்தில பெரியக்கா அப்ப சொல்லிப் போட்டுப் போனது அவ்வளவும் சரி! உன்னால தான் நான் இண்டைக்குச் சூர்யா என்று நிமிர்ந்து நிக்கிறன்

  உனக்கு நான் எப்படிப் பொருந்தி வருவன் என்ற கேள்விக்கு விடையாகத்தான் என்னை நானே மாற்றிக்கொள்ளத்  தொடங்கினன் தெரியுமா

  உனக்கு ஒரு முறையான புருசனா நான் இருக்க வேணுமெண்டு  நான் என்னையும் மீறி நினைத்துக் கொண்டதாலதான்.  

  ‘அப்பகல்யாணியை மறந்திட்டியா? கொஞ்ச முதல் கூட அவள்ட படத்தைப் பார்த்துக்கொண்டு நின்றியே!’ என்று நீ நினைக்கலாம்.” என்றதும், அவர் முகத்தைப் பார்த்தேன். என்னையும் மீறி இதழ்களின் முறுவல்.

  “! அப்ப அப்பிடி  நினைச்சியா?”

  “ம்ம்பின்ன? நான் ஒரு சாதாரண ஆள் சூர்யா…”

 “நானும் தான்; அவளை அப்பிடியே மறந்திட்டன் எண்டு பொய்யெல்லாம் சொல்ல மாட்டன்இந்தக்கணம் அவள் இல்லையே என்ற வருத்தமும் சோகமும் இருக்கு எண்டும்  சொல்ல மாட்டன் ; ஏனென்றால்இப்ப என்ர  மனசில முழுமையா இவள்தான் இருக்கிறாள்.”

   என் முகத்தைச் சுற்றி வட்டம் போட்டது அவரின் ஆட்காட்டி விரல்.

  மளுக்கென்று வழிந்த கண்ணீரை அவர் நெஞ்சிலே சரிந்து மறைத்துவிட்டேன்.

  “இங்க என்னப்  பார் உதயா!” என்  முகத்தைத் திருப்பினார்

  “அழாதடிநான் பொய்யெல்லாம் சொல்லேல்ல; சத்தியமா உண்மையைத்தான் சொல்லுறன்.” தவிப்போடு சொன்னார்.

  “நான் அப்பிடியெல்லாம் எதுவும் நினைக்கேல்ல சூர்யா; உண்மையாவே சந்தோசத்தில் வந்த கண்ணீர் அது!” என்றபடி மீண்டும் நெஞ்சில் முகத்தை மறைத்தேன்

  “பச்! எனக்குச் சொல்லீட்டு நீ இப்படி அழுதா எப்படிக் கதைக்கிறது சொல்லு? வேணுமென்றால் முறைச்சுப் பார், சண்டைபோடு, அழுகை மட்டும் வேணாம்?

   இங்க பாரன், நீ இப்படியே அழுது அழுது  முகம் வீங்க நின்றியோ  நாளைக்குக்  காலையில ஓடி வரும் உன்ர வாலுகள் ரெண்டும் என்னைக் கொன்று போட்டாலும் போடுங்கள்

  அம்மாவும் சேர்ந்து மொத்துவா! நான் பாவமில்லையா?”

   தங்கைகள்  பற்றி அவர் சொன்ன பாவனையில் என்னையும் மீறி உதடுகளில் முறுவல். கட்டாயம் செய்வாள்கள். அம்மம்மாவும்தான்.

  “ம்ம்.. இனி எப்பவும் நீ இப்பிடிச்  சிரிச்சுக்கொண்டே இருக்க வேணும் உதயா!”

   குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டே என் கண்ணீரைத்  துடைத்து விட்டவர் கண்கள் திரும்பவும் கலங்கி நிறைந்து நின்றன.

   “பச்! இப்ப என்னைச் சொல்லிப் போட்டு நீங்க?” கடிந்து கொள்ள, எழுந்த என் கரம் அவர் கண்களைத் அழுந்தத்  துடைத்து விட்டது.

  “இன்னொன்று உன்னட்டக்  கேட்ட வேணும் உதயா!” 

   என் முகத்தை நெருங்கி கண்களை உற்றுப் பார்த்தபடி கேட்டார். கேட்கப் போவதன் பதிலை என்னுள்ளே தேடுவது போலிருந்தது அவர் தோரணை.  

  “என்ன சொல்லுங்கோ?” 

  வார்த்தைகள் சத்தமே இன்றி கிசுகிசுப்பாகத்தான் வந்து தொலைத்தன

  “இல்ல, என்னதான் பெரியக்கா சொன்னாலும் என்ன துணிவில  என்னைக் கலியாணம் செய்தனி? பாவப்பட்ட பிறப்பு, இவனுக்கு வாழ்க்கை குடுப்பம் எண்டு நினைச்சோ!” கேட்டு முடிக்கவில்லை, “முதல்….என்னைவிடுங்க….பதில் சொல்லுறன்.” திமிறி விலக முயன்றேன். அது எங்கே

 “வாழ்க்கை குடுக்கிறதா?” முறைத்தேன்.

 “ம்ம்நான் எத்தினை தடவைகள் கதைக்க நினைச்சு வந்தாலும் வெட்டுப் பார்வையோட விலகிப் போறனி தானே? அப்ப இப்பிடித்தான் நினைச்சன் தெரியுமா?” என்கிறார், படு சோகமாக.

  “அந்தளவுக்கெல்லாம் நான் தியாகி இல்லப் பாருங்க. வேண்டா வெறுப்போடு, சித்தீட்ட மாட்டன் எண்டு சொல்லிப் பிரச்சனைப்படத் தைரியம் இல்லாமல்தான் ஓமென்றனான். அப்பவும் மனசில ஒரு நம்பிக்கை, கண்ணுக்கு முன்னால நல்ல மாதிரித்  திரிஞ்ச மனுசன் மாறுவார் என்று…” 

   சொன்ன நான் மீண்டும் அவரின் இறுகிய  அணைப்புக்குள் போயிருந்தேன்.

 “ஒரு வார்த்தை உணர்ந்து மன்னிப்புக்  கேட்க மாட்டாராம்கதைக்க வந்தால் கதைக்க வேணுமோ!” 

  முணுமுணுத்த என்  இதழ்கள், வேறு அடாவடியான ஆக்கிரமிப்பில் அகப்பட்டுப் போயிருந்தன!

  ‘முதல் வேலையாக இந்தத் தாடியைக் குறைக்கச் சொல்ல வேணும்என்  மனம் தான் சிவந்தபடி முணுமுணுத்தது

     சில நிமிடங்கள் கடந்திருக்கலாம்

     “கதவு திறந்து கிடக்குபிள்ளைகள் எங்க இருக்கிறீங்க? குளிர் காற்று வேற இப்படி அடிக்குது!” 

   அம்மம்மாவின் குரலில் திடுக்கிட்டு விலகி எழுந்து நின்றோம்.

   திடுமென்று எழுந்து நின்றதில் சற்றே தள்ளாடிய என்னைத்  தன்னோடு அணைத்துப் பிடித்தபடி நடக்க எத்தனித்தார் சூர்யா. மெல்ல விடுபட்டு அவர் கரங்களைக் கெட்டியாகப் பற்றியபடி நடந்தேன் நான்

  அப்படியே இணைந்த கரங்களோடு அம்மம்மாவின் முன்னால்  சென்று நிற்க, அவரோ பொலபொலவென்று வடியும்  கண்ணீரோடு  எங்களைப் பார்த்து நின்றார்.

 

error: Alert: Content selection is disabled!!