அத்தியாயம் 04
ஒரு சில நொடிகள் என்றாலும் தன் மனைவியாக காயத்ரியை நினைத்து பார்த்த பின்னர், அவளிடம் இயல்பாக கூட பழக முடியவில்லை ஸ்ரீதரால்.
அன்றைய நாளின் பின்னர் காயத்ரியிடம் இருந்து விலக ஆரம்பித்தான். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இத்தனை நாட்கள் மாமா மாமா என்று அவனையே சுற்றிய காயத்ரி அவனை விட வேண்டுமே.
அதனால் அவன் காய்ச்சலில் விழுந்த நாளில் காட்டிய கோப முகத்தை தான் அவளிடமும் காட்ட வேண்டியதாக போனது.
விடிந்தால் மாமா என்று அவன் முன்பு காயத்ரி வந்து நிற்பாள். அவன் தானே பொட்டு வைத்து விட வேண்டும்.
மறுக்க முடியாமல் அவசர கதியில் ஏதோ ஒன்றை எடுத்து வைத்து விட்டு விலகி சென்று விடுவான்.
அதன்பின் அவன் தோட்டத்திற்கு அல்லது வயலுக்கு சென்று விட அவள் பள்ளிக்கு சென்று விடுவாள், பள்ளி விட்டு வந்த மறு நொடி மாமா என்று அவனைத்தான் தேடுவாள்.
முன்பு என்றால் காயத்ரி பாடசாலை விட்டு வரும் நேரத்தை சரியாக கவனித்து வீட்டிற்கு வந்து விடுவான். அவளும் அவனுடன் சேர்ந்து அவன் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனிப்பது, அல்லது வேறு ஏதாவது பயிற்சிகளை செய்வது என்று அவனையே சுற்றி வருவாள்.
இப்போது அப்படி வீட்டுக்கு வருவதில்லை, நன்கு இருட்டிய பின்னர் தான் வீட்டிற்கு வருகின்றான்.
அப்படி அவளை அவன் தவிர்த்தாலும் காயத்ரியாக அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடிச் சென்று எதையாவது சொல்லித் தர சொல்லி கேட்டு அடம் பிடிப்பாள்.
ஸ்ரீதரும் படிப்பு சம்பந்தப்பட்டது என்றால் பட்டும் படாமல் சொல்லிக் கொடுத்துவிட்டு, “காயூகுட்டி இதுக்கு மேல உனக்கு சொல்லிக் கொடுக்க எனக்கு தோது வராது.. மாமா உன்ன கிளாசுக்கு சேத்து விடட்டுமா?…” என்று கேட்க
“எதுக்கு மாமா.. இது நாள் வரைக்கும் நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க.. காலேஜ் எல்லாம் முடிச்சிட்டீங்க, பிளஸ் வன் படிக்கிற பொண்ணுக்கு சொல்லிக் கொடுக்க முடியலன்னா எப்படி…” என்று கேட்டு தன் விருப்பமின்மையை கூறிவிட்டாள்.
எனவே அதற்கு மேல் அவளை தவிர்க்க முடியாது. ஆனால் தன்னை விட்டு தள்ளி நிறுத்தலாம், அதற்கு கோபம் மட்டுமே கேடயமாக அவனுக்கு கிடைத்தது.
படிப்பை தவிர மற்ற விடயங்களில் அவளை தன்னுடன் வைத்துக் கொள்வதை தவிர்த்தான்.
படிப்பு கூட மாலையில் இரண்டு மணி நேரம்தான் என்று அதற்கும் கட்டுப்பாடு விதித்து விட்டான்.
ஸ்ரீதர் காலேஜ் படிப்பை முடித்திருக்க, அவனின் மாற்றங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படிப்பு முடிந்து விட்டது எனவே தொழிலில் முழுமூச்சாக இறங்கி விட்டான் என்று தான் அவனது அக்காவும் அம்மாவும் நினைத்தனர்.
காயத்ரி உட்பட வேறு யாருக்குமே அவனது மாற்றமும் தெரியவில்லை. அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களும் தெரியவில்லை. ஆம் அவளை விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து அவனையும் அறியாமல் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்டிருந்தான்.
முன்பு எல்லாம் காயத்ரியை தன் வீட்டுப் பெண் அழகே என்னும் வகையில் மட்டுமே அவளை பார்த்திருக்கின்றான்.
இப்போதெல்லாம் அவளது ஒவ்வொரு அசைவுகளும்… அவளது ஒவ்வொரு அங்கங்களும்… அவளது ஒவ்வொரு பரிமாணங்களும்… அவனை ரசிக்க வைக்கின்றது.
அவன் அவளை பார்க்கும் பார்வை மாறிவிட்டது என்பது அவனுக்கே அப்பட்டமாக தெரிந்தது.
அவளை ஆராய்ச்சியாக பார்க்கின்றான்…
அணுஅணுவாய் ரசிக்கின்றான்…
நித்தமும் நினைக்கின்றான்…
சுகமாய் உணர்ந்து சிலாகிக்கின்றான்…
இறுதியில் காதலிக்கவே ஆரம்மித்து விட்டான்.
படிப்பு சொல்லிக் கொடுக்கும் போது எழுதும் பென்னை செம்பவள இதழ்களில் வைத்து காயத்ரி யோசிக்கும் போது…
அந்த இதழ்களில் ஆரம்பித்து… அவள் நுனி மூக்கு, சிறகடிக்கும் இமைகள், செம்மீனாக உருண்டு கொண்டிருக்கும் விழிகள், வேல் போல் நீண்ட புருவம், அதற்கு மத்தியில் அவன் வைத்து விடும் ஒற்றை பொட்டு, அவள் பிறை நெற்றி, அப்படியே சற்று கீழே இறங்க வரைந்து வைத்த செவிகள், அதில் இருக்கும் முத்து வைத்த குடை ஜிமிக்கி, அந்த ஜிமிக்கி தொட்டு தொட்டு உரசும் அவளது பட்டு கன்னங்கள், அந்த கன்னத்தின் முடிவில் தொடங்கி கழுத்து ஓரம் வரை பரவி படர்ந்து இருக்கும் அவள் பூனை முடிகள், தொட்டு பார்க்க தூண்டும் கழுத்து, அதில் ஒய்யாரமாக தொங்கிக் கொண்டிருக்கும் அவளது செயின், அதை ஆடைக்குள் மறைத்து போட்டு இருக்க அது சென்று சேரும் இடம்… என்று அவன் பார்வையை கீழே இறங்க,
சட்டென அவன் மனசாட்சி விழித்துக் கொண்டு ‘நீ எல்லாம் என்ன மனிதன்!’ என்று அவனை குற்றம் சாற்றியது.
நிச்சயமாக தவறான சிந்தனை எதும் இல்லை, தன்னவள் என்கின்ற உரிமை பார்வை தான். ஆனாலும் உள்ளம் சுட்டது. விருட்டென எழுந்து கொண்டவன் அவ்விடம் விட்டு விலப் பார்க்க
“மாமா இன்னும் டைம் முடியல.. எங்க போறீங்க?…” என்று கேட்டு அவன் மனநிலையை சோதிக்க ஆரம்பித்தாள் காயத்ரி.
“என்னடி என்ன இப்போ.. ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கும்போது சரியா கவனிக்கறது இல்ல.. கிளாசுக்கு அனுப்புறேன்னா வேணாம்னு அடம் பிடிக்க வேண்டியது.. என்ன சொல்லிக்கொடு சொல்லிக் கொடுனு நச்சரிக்கிற.. படிப்பிக்கிற டீச்சர் சொல்லி குடுக்குறத விடவா நான் நல்லா சொல்லி குடுத்துட போறேன்.. படிக்காம இருக்குறதுக்கு உனக்கு இது ஒரு சாக்கு இல்ல…” என்று திட்டியவன்
அவளது நோட்டை இழுத்து, கைக்கு வந்த கணக்கு ஒன்றை போட்டுக் கொடுத்தவன் “இத சால்வ் பண்ணு வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவனுக்கு அவனை நினைத்து கோபமாக வந்தது. என்ன செய்கின்றான், தனது தடுமாற்றத்தை மறைக்க, தனது கேவலமான செயலில் இருந்து தப்பித்துக் கொள்ள, எதுவும் அறியாத அவளின் மீது கோபத்தை காட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை, அவனுக்கு இதைவிட வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
காயத்ரிக்கு அன்றுதான் ஸ்ரீதரின் மாற்றம் மண்ணை துளைத்து வெளிவந்த விருட்சம் போன்று தெளிவாக தெரிந்தது.
எதற்கு என்னிடம் இத்தனை கோபம், எதுவும் புரியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது.
அவள் மீது இருந்த பிரியத்தினால் இத்தனை நாட்கள் அவன் கை சிறகுகளுக்குள் தான் அவளை பொத்தி பொத்தி பாதுகாத்தான். அவன் தான் அவளை வெளியே எங்குமே அனுப்பாமல் தானே பாடம் சொல்லிக் கொடுப்பதாக தன்னுடன் வைத்துக் கொண்டான்.
அவள் நன்றாக படிக்கும் போது பாராட்டும் வகையில் கன்னத்தில் முத்தம் கொடுப்பான். ஆனால் இன்று இத்தனை கோபத்தை காட்டுவதற்கு என்ன அவசியம் வந்தது என்பது மட்டும் பாவம் அந்த பேதைக்கு புரியவில்லை, அழுது கொண்டிருந்தாள்.
**********
சில நாட்கள் அப்படியே செல்ல, காயத்ரியால் ஸ்ரீதரின் விலகளை ஏற்க முடியவில்லை.
அவன் மட்டும் என்ன, இத்தனை நாட்கள் இப்போது இருக்கும் புது நேசம் இல்லை என்றாலும், அக்கா மகள் என்ற பாசத்தில் அவளை சுற்றி மட்டுமே அவன் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.
அவன் உழைப்பது அவளுக்காக… அவன் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்கின்றான் என்றால் அது அவளுக்காக… அவன் கடை தெருவிற்கு செல்கின்றான் என்றால் அதுவும் அவளுக்காக பொருள் வாங்கவே.
உணவு உண்ணும் போது கூட அது அவளுக்கு பிடிக்குமே என்று தான் அவன் எண்ணங்கள் போகும். அப்படி இருக்க இப்போது புதிதாக உயிர் நேசம் வேறு துளிர்த்து இருக்க, அவளை தள்ளி வைத்து இவன் விலகி நிற்பது உடலை பிரிந்து ஆன்மா தவிப்பது போன்ற நிலை தான்.
அன்று வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு துணிக்கடை ஒன்றுக்கு வந்திருந்தான் ஸ்ரீதர். இன்னும் நான்கு தினங்களில் காயத்ரியின் 16 ஆவது பிறந்தநாள் அதற்கு அவளுக்கு புது துணி எடுக்கவே வந்திருந்தனர்.
எப்போதும் காயத்ரிக்கு ஆடை தேர்ந்தெடுப்பது அவன் தான். ஆனால் இந்த முறை பெண்களை பார்க்க சொல்லிவிட்டு அவன் சற்று தள்ளி நின்று கொண்டான்.
பத்மினியும் மகளுக்காக பார்த்து பார்த்து ஆடைகளை தெரிவு செய்து காட்டிக் கொண்டிருக்க, அவற்றிலிருந்து இரண்டு மூன்றை தனியாக எடுத்து வைத்த காயத்ரி, ஒன்றை தன் மேல் வைத்துக்கொண்டு கண்கலால் ஸ்ரீதரை தேட
அவன் சற்று தள்ளி நின்று அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னை பார்க்கவும் “மாமா இது ஓகேவா?…” என்று கேட்க
ஒரு நொடி அவளை உற்றுப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பார்வையை திருப்பிக் கொண்டான்.
அவன் பார்வையை திருப்பிக் கொண்டால் அவள் விட வேண்டுமே, அந்த உடையை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தவள் அவன் முன்பு நின்று “மாமா இது ஓகேவானு பாத்து சொல்லுங்க.. எனக்கு இது புடிச்சிருக்கு, நல்லா இருக்கா?…” என்று கேட்க
“உனக்கு புடிச்சிருந்தா எடுத்து தொலையேன்.. எதுக்கு என்ன போட்டு தொந்தரவு பண்ற…” என்று எரிந்து விழுந்தான்.
வீட்டில் வைத்து இல்லை தனியாக அவன் காட்டும் கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்தவளால், இப்படி பொது இடத்தில் வைத்து அவன் மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் திட்டினாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சட்டென கண்களில் இருந்து வழிந்த கண்ணீருடன் நின்றிருக்க,
இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மினி எழுந்து வந்து “என்னாச்சு டி? எதுக்கு அழுற?…” என்று கேட்க
அவன் திட்டியதை கூறாமல் “மாமா தானே எப்பவுமே ட்ரெஸ் செலக்ட் பண்ணி தரும் இப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க…” என்று மூக்கை உறிஞ்ச
“ஏன்டா என்னாச்சு?.. எப்போவும் நீ தானே செலக்ட் பண்ணி குடுப்ப.. இப்ப தள்ளி வந்து நின்னுட்ட.. சரி அவளா ஒன்னும் எடுத்துக்கிட்டு வந்தா அத புடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு…” என்று பத்மினியும் கூற
“அதான் அவளுக்கு புடிச்சிருக்குல, அப்போ எடுக்க வேண்டியதுதானே, என் கிட்ட கேக்க என்ன இருக்கு.. எத்தன நாளைக்கு நானே எடுத்துக் கொடுக்க முடியும்.. தனக்கு என்ன வேணும்னு அவளுக்கு தெரியாதா…” என்று தமக்கையிடமும் காட்டமாக தான் பதில் சொன்னான்.
“என்னடா ஆச்சு? ஏன் இப்படி பேசுற?…” என்று சொல்லி பத்மினி மகளைப் பார்க்க, மீண்டும் அவன் கோபப்பட்டதில் அவளது கண்ணீர் நில்லாமல் கன்னம் தாண்டி கழுத்தில் இறங்கி நெஞ்சை நனைத்தது.
“டேய் அப்பா இல்லாத புள்ள டா இவ.. இத்தன நாள் நீ காட்டுற பாசத்துல தானே இவ அந்த கவல இல்லாம இருக்கா.. இப்போ ஏன்டா இப்படி நடந்துக்கிற?…” என்று சொல்லி பத்மினியும் கவலையான குரலில் கேட்க
மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டவன் ‘ச்சே என்ன பண்ணி வச்சிருக்க…’ என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு
“அது.. அக்கா.. வேற டென்ஷன்ல இருந்தேன்.. சாரி, சாரி…”
“காயூ குட்டி சாரிடா.. வா நாம ட்ரெஸ் எடுக்கலாம்…” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு, அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடைகள் அருகே வந்தவன், அவனும் அதில் உள்ள வற்றை பார்த்துவிட்டு, காயத்ரியின் கையில் இருந்ததை பார்த்தவன் “ஏய் சிங்காரி! நீ எடுத்தது நல்லா தான் இருக்கு.. போய் போட்டு பாத்துட்டு வா…” என்று சொல்ல
வெகு நாட்கள் கழித்து அவன் சிங்காரி என்றதில் உற்சாகமானவள் “சரி மாமா.. ட்ரை பண்ணி பாத்துட்டு வாரேன்…” என்று சொல்லி ட்ரையல் ரூம் சென்று அந்த உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அனைவரிடமும் காட்ட,
இதோ இதுக்காகத்தானே அவன் தள்ளி நின்றதும், அவள் மீது எறிந்து விழுந்ததும். அவன் கண்கள் அவள் ஆடையை ரசிக்கவில்லை அந்த ஆடையில் புது மலராக நின்ற அவளைத்தான் ரசித்தது.
இளம் மரகதப் பச்சை நிற காடன் சுடிதார் அவளின் தங்கநிறத் தேகத்திற்கு தனி மெருகூட்டியது. கழுத்துப் பகுதியில் பொன்னிற நூலால் பின்னப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடும், கை முடிவில் இருந்த மெலிதான எம்பிராய்டரியும், அந்த உடைக்கு நேர்த்தியான அழகை சேர்த்திருந்தது.
அதே நிறத்தில் இருந்த பாட்டியாலா பேண்டும், தோளிலிருந்து வழிந்து விழுந்த மென்மையான துப்பட்டாவும், அவளின் ஒவ்வொரு அசைவிலும் காற்றோடு சேர்ந்து நடனமாடின.
இடையைத் தழுவியபடி கச்சிதமாக அமர்ந்திருந்த சுடிதார், அவளின் தோற்றத்தையே பேரழகாக மாற்றியிருந்தது.
இடைவரை நீண்டு ஒற்றைப் பின்னலாகப் பின்னப்பட்ட கருங்கூந்தலில் மல்லிகைப்பூ சரம் மணம் வீசியது.
நெற்றியில் சிறிய கருப்புப் பொட்டு, மையிட்ட பெரிய விழிகள், நீண்ட இமைகள், இயற்கையாகவே சிவந்த இதழ்கள், சிரிக்கும்போது கன்னத்தில் தோன்றிய சிறு சுழிவு, இவை அனைத்தும் சேர்ந்து அவளை ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வந்த தேவதையைப் போலக் காட்டின.
கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் அவள் அசைவுக்கு இனிய இசை சேர்க்க, காலில் இருந்த வெள்ளிக் கொலுசு, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் இவன் இதயத்தில் பதிந்தது போலும் தடவிக் கொண்டான் நெஞ்சுப் பகுதியை.
“மாமா எப்படி இருக்கு?…” என்று காயத்ரி இரண்டு தடவை கேட்ட பின்னர் தான் சுயத்திற்கு வந்தவன் “ஹா! ரொம்ப அழகா இருக்க…” என்று சொல்ல
“உண்மையாவா!.. அப்ப சரி இதையே எடுத்துக்கலாம்…” என்று குதூகலமாக சொன்னவள் சென்று உடையை மாற்றிக் கொண்டு வர
மேலும் ஒரு தாவணி பாவாடையும் அவளுக்காக எடுத்துக்கொண்டு, அக்காவிற்கு அம்மாவிற்கும் புடவையும் எடுத்துக்கொண்டு, அனைவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அன்று இரவு அவனால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. அவன் மனமோ அக்கா மகளையே நினைக்க, அவன் மூளையோ அது தவறு என்று சொல்ல, இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தே அவன் இரவு தூக்கம் தொலைந்து போனது.