சிறகு 05

அத்தியாயம் 05

அன்று காயத்ரியின் பிறந்த நாள். மாமன் எடுத்துக் கொடுத்த சுடிதாரில் தன்னை அலங்காரித்துக் கொண்டவள், நெற்றில் பொட்டு மட்டும் வைக்காமல் ஸ்ரீதரை தேடிச் சென்று அவன் முன்பு நிற்க, மூச்சடைத்து போனது ஆடவனுக்கு.

“மாமா பொட்டு வச்சு விடுங்க…” என்று சொல்ல 

அவள் கொண்டு வந்திருந்த பொட்டுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, அவனை கவர்ந்து இழுக்கும் அவள் மை இட்ட விழிகளை பார்த்துக் கொண்டே, நெற்றி வரை கொண்டு செல்வதற்குள் உலகில் உள்ள ஆக்சிசன் அனைத்து முடிந்தது போல் மூச்சு எடுக்க அத்தனை போராட்டமாக இருந்தது அவனுக்கு. 

ஒரு வழியாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் அடர்ந்த இரு புருவத்தின் மத்தியில் அந்த ஒற்றைப் பொட்டை ஒட்டி விட்டான்.

அதே இடத்தில் தன் இதழை ஒற்றி எடுக்கச் சொல்லி அவன் நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று துடித்தது.

கடின பாட்டு பார்வையை விளக்கியவன், அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை எடுத்து நீட்டினான் “ஹாப்பி பர்த்டே குட்டி!…” என்று. 

“ஐ!…” என்று சந்தோஷமானவள் “அதானே பாத்தேன் மாமா தனி கிஃப்ட் வெச்சி இருக்குமே…” என்று சொல்லி அதை வாங்கி திறந்து பார்க்க, 

சிறிய மணி போன்ற தங்க குண்டுகள் சேர்த்த கைச்செயின் அது. 

“அச்சோ! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு மாமா!.. தேங்க்யூ சோ மச்!…” என்று சொல்லி அவன் கன்னம் கிள்ளி, துள்ளி குதித்தவள் அதை எடுத்துக்கொண்டு அம்மா பாட்டி இடம் காட்டுவதற்கு வெளியேற, 

இங்கு ஒருத்தன் சிலையாக சமைந்து நின்றான். இது என்ன அவள் என்னை புதிதாக வா தொடுகின்றாள், ஆனால் அந்த தொடுகை அவனை ஏதோ செய்தது என்பது மட்டும் உண்மை.

தலையை உலுக்கி தன் நினைப்புகள் அனைத்தையும் ஓரம் கட்டியவன், அறையை விட்டு வெளியேற, மகிழ்ச்சியாக கமலத்திடமும் பத்மினியிடமும் மாமன் வாங்கி தந்த பரிசை காட்டிக் கொண்டிருந்தாள் காயத்ரி .

அவர்களை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு வந்த ஸ்ரீதரிடம் “வாடா.. இவளுக்கு இத வாங்குறதுக்காக தான் போன மாச தோப்பு கணக்க காட்டாம இருந்தாயா…” என்று பத்மினி கேட்க 

“ஆமா.. ஏன் உனக்கு தெரியாதா…” என்று கேட்க 

“நினைச்சேன்.. அதான் உன்கிட்ட கேட்டுக்கல…” என்று தம்பியிடம் சொன்ன பத்மினி மகளின் கையில் இருந்த செயினை வாங்கி அவளுக்கு போட்டு விட்டவர்,

“சரி வா சாமி கும்பிட்டுட்டு பாட்டி, மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க…” என்று சொல்ல 

இது ஒவ்வொரு வருடமும் நடப்பது தான். அதேபோல் காயத்ரியும் பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கியவள் கமலத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, தன் அன்னையை காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டவள், 

இப்போது ஸ்ரீதரின் காலில் விழுவதற்கு அவனை நெருங்க, இத்தனை வருடங்களில் இல்லாமல் இன்று அவளை விட ஒன்பது வயது பெரியவனாக இருப்பதையும், அவள் தனது அக்கா மகளாக இருப்பதையும் நினைத்து நொந்து கொண்டான். 

காயத்ரி அவனின் காலில் விழ, தன் உணர்வுகள் எதையும் பொருட்படுத்தாதவன் அவளை தூக்கி விட்டு, எப்போதும் போல் தலையில் கையை வைத்து மென்மையாக அழுத்தியவன் “எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…” என்று சொல்ல 

“என் மாமா இருக்கும்போது என் சந்தோஷத்துக்கு என்ன குற வந்துட போகுது…” என்று காயத்ரியும் சொல்ல 

கமலம் “அது சரி.. அப்போ கடைசி வரைக்கும் என் மகன விடுற ஐடியா உனக்கு இல்ல…” என்று கேட்க 

ஸ்ரீதரின் இடுப்போடு கையை போட்டுக் கொண்டவள் “விட்டு போற சொந்தமா எங்களோடது…” என்று கேட்க 

“அதுதானே தாய்மாமன் உறவுன்னா சும்மாவா…” என்று பத்மினி சொல்ல 

அவள் தான் இடுப்போடு கையை போட்டு நின்றதும் நொடி விரைத்து நின்ற ஸ்ரீதரின் உடல், பத்மினி கூரிய தாய் மாமன் என்ற உறவில் மேலும் இறுகியது.

உடனே காயத்ரியை விட்டு விலகியவன் “சரி எனக்கு தோப்புல வேலை இருக்கு.. என்ன எதிர்பாக்காம நீங்க சாப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் பதிலுக்கு கூட நிற்காமல் பைக் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

அன்றைய நாள் முழுவதும் காயத்ரியை அவன் பார்க்கவே இல்லை. அவள் தூங்கிய பின்னர் தான் வீட்டுக்கு வந்து, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு படுத்தான். 

அதன் பிறகு மீண்டும் அவனது விலகலும் அவளிடம் எரிந்து விழுவதும் தொடர்ந்தது.

“என்னாச்சு மாமா..? எதுக்கு இப்பல்லாம் ரொம்ப கோவப்படுறீங்க?…” என்று காயத்ரி கேட்டும் விட்டாள்.

அவன் எப்படி கூறுவான், நான் உன்னை வேறுவிதமாக பார்க்கின்றேன் என்று… அதை மறைக்கத்தான் இந்த முகமூடி என்று… எதுவும் பேசாமல் கடந்து சென்று விட்டான்.

*****

ஸ்ரீதரைப் பற்றிய யோசனையில் இருந்த காயத்ரி, அன்று பள்ளி முடிந்தவுடன் அமுதினியை கூட எதிர்பார்க்காமல், சைக்கிளை உருட்டிக்கொண்டு தனியாக நடந்து செல்ல, 

அவளைப் பார்த்துவிட்டு தன் சைக்கிள் அவசரமாக எடுத்த அமுதினி வேகமாக அவளிடம் வந்து நின்று “ஏய் என்னாச்சுடி.. சைக்கிள் நல்லா தானே இருக்கு.. ஓட்டிட்டு போகாம உருட்டிட்டு போற.. அதுவும் என்ன விட்டுட்டு தனியா எங்க போற?…” என்று கேட்க 

அப்போதுதான் தான் யோசனையாக வந்து விட்டது தெரிய “சாரிடி மாமாவ பத்தியே யோசிச்சிட்டு வந்தேனா உன்ன கவனிக்கல…” என்று கவலையாக கூற 

“ஏன் என்னாச்சு மாமாக்கு?…” என்று கேட்க 

“தெரியலடி.. மாமா எப்பவும் என் மேல பாசமா இருப்பாங்க.. குரல உசத்தி கூட பேசுனது கிடையாது.. ஆனா இப்போ சில மாசமா என் மேல கோவப்படுறாங்க.. என்கிட்ட சரியா பேசறது இல்ல.. படிப்ப தவிர வேற எதுவும் சொல்லிக் கொடுக்கிறது இல்ல.. படிக்கிறதுக்கு கூட கொஞ்ச நேரம் தான் ஒதுக்குறாக.. அப்போ கூட என் முகம் பாக்கிறது கிடையாது.. சில நேரம் தொழில்ல இருக்கிற டென்ஷன்னு சொல்றாங்க.. ஆனா அம்மா பாட்டி கிட்டல்லாம் எப்பவும் போல தான் இருக்காங்க.. என்கிட்ட மட்டும் தான் இந்த மாதிரி நடந்துக்குறாங்கன்னு எனக்கு தோணுது…” என்று தன் எண்ணங்களை காயத்ரி சொல்ல 

“ஓ.. அப்படி தோணுனா உன் மாமா கிட்ட கேட்டுடு…” என்று அமுதினி சொல்ல 

“கேட்டேனே.. எதுவுமே சொல்லாம போயிட்டாங்க.. இப்ப எல்லாம் மாமா கிட்ட நெருங்கி பழகவே பயமா இருக்கு.. அதுதான் நான் வற்புறுத்தி பதில் சொல்லுங்கனு கேக்கல…” என்று சொல்ல 

“ஒருவேள அவரும் படிக்கிறார்ல்ல அதனால அதிகப்படியான டென்ஷன்ல அப்படி நடந்திருப்பாரு போல…” என்று அமுதினை சொல்ல 

“அது இல்லடி.. மாமாவோட படிப்பு முடிஞ்சிடிட்டுசு, மேற்கொண்டு படிக்கிறத பத்தியும் எதுவும் சொல்லல.. இது வேற என்னமோ…” என்று காயத்ரி சொல்ல 

“அப்படி என்னவா இருக்கும்…” என்று அமுதினி யோசிக்கும் போதே 

ஸ்ரீதரும் ஐங்கரனும் ஒரே வண்டியில் வந்து கொண்டிருந்தனர். 

பெண்கள் இருவரையும் பார்த்த ஸ்ரீதர் சைக்கிளில் வீட்டிற்கு செல்லாமல், உருட்டி கொண்டு வரவும் ஏதும் பிரச்சனையோ என்று வண்டியை நிறுத்த 

ஐங்கரனை யோசனையாக பார்த்த அமுதினி “ஏன்டி எப்பவுமே அட்ட போல நீ உன் மாமன ஒட்டிக்கிட்டே இருப்ப.. அப்போ எல்லாம் உன் மாமனோட கூட்டுக்கு அவரோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம இருக்கும்.. அதனாலேயே உன்ன பத்தி ஏதாவது சொல்லி உன்கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லி கூடவே இருக்கிற இந்த வில்லங்கம் சொல்லி இருக்காதுனு என்ன நிச்சயம்…” என்று ஐங்கரனை கண்ணால் காட்டி கேட்க 

“ஒருவேள இருக்குமோ…” என்று காயத்ரி கேட்கும் போதே 

“என்னாச்சு?.. எதுக்கு சைக்கிள உருட்டிட்டு வாரீங்க?…” என்று ஸ்ரீதர் கேட்க 

காயத்ரி பதில் சொல்லவில்லை. அன்று அவள் கேட்டதற்கு அவன் பதில் சொன்னானா இன்று மட்டும் தான் ஏன் சொல்ல வேண்டும் என்று செல்லக் கோபம் .

காயத்ரி அமைதியாக இருக்கவும் அமுதினி “ஒன்னும் இல்ல ண்ணா.. சும்மா பேசிட்டே வந்தோம்…” என்று சொல்ல 

“வெயில்ல சைக்கிள உருட்டிட்டு வர்ற அளவுக்கு என்ன பேச்சு?…” என்று ஸ்ரீதர் கேட்க 

“அது நீங்க இப்பல்லாம் அடிக்கடி காயத்ரி மேல கோவப்படுறீங்களாம்.. அதுதான் வருத்தமா சொல்லிட்டு இருந்தா…” என்று அமுதினி சொல்லிவிட 

ஸ்ரீதர் காயத்ரியை முறைக்க 

“நான் சொல்லல.. இதோ பாரு இந்த மாதிரியெல்லாம் என்ன எப்பவாச்சும் என் மாமா பாத்திருக்காங்களா.. ஆனா இப்போ எவ்ளோ கோவம் வருது…” என்று அப்போதும் அழுவது போன்று முகத்தை வைத்துக்கொண்டு தோழியிடம் புகார் வாசித்தவள் 

சற்றும் எதிர்பார்க்காத நேரம் ஐங்கரனிடம் “அண்ணா மாமாவ எப்பவுமே நான் புடிச்சு வச்சுக்கிறேன்னு நீங்கதான் என் கூட பேச கூடாது.. கோபபடுன்னு சொன்னீங்களா?…” என்று கேட்டு விட 

“அய்யய்யோ! இது என்ன புது புரளியா இருக்கு.. நானே என் கூட எங்கேயாவது வாடான்னு கூப்பிட்டாலும் எனக்கு அக்கா மக தான் முக்கியம்னு என்ன கழட்டி விட்டுட்டு உன்ன பாக்க ஓடி வருவான்.. அப்படிப்பட்டவன் நான் சொல்லி உன் மேல கோபப்பட்டுடாலும்.. யாரு உன்ன இப்படி எல்லாம் யோசிக்க சொன்னா…” என்று கேட்க 

காயத்ரி அமுதினியை கண்களை உருட்டி பார்க்க 

அதை புரிந்து கொண்ட ஐங்கரன் “முதல்ல உன் கூடவே சுத்துற தீய சக்தி கிட்ட இருந்து தள்ளி இரு.. அப்போதான் இந்த ஓவர் திங்க்லாம் உனக்கு வராது…” என்று அமுதினியை பார்த்துக் கொண்டே சொல்ல 

“அத ஒரு தீஞ்சு போன தீக்குச்சி சொல்றத பாரு…” என்று அமுதினியும் ஐங்கரன் நிறத்தையும் உடலையும் சேர்த்து சொல்லி அசிங்கபடுத்த 

“ஒத்த தீ குச்சி போதும் ஒரு பெரிய காட்டையே கொழுத்த…” என்று அதையும் தனக்கு சாதகமாக சட்டை பின் காலரை தூக்கி விட்டு ஐங்கரன் சொல்ல 

“இப்போ ரொம்ப முக்கியம்.. வாய மூடுடா…” என்று ஸ்ரீதர் நண்பனை திட்ட 

“கொஞ்சம் என் அருமை பெருமைய சொல்ல விட மாட்டேயே…” என்று அழுத்துக் கொண்டவன் வாயை மூடிக்கொள்ள, 

“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளப்புங்க…” என்று பெண்கள் இவரிடமும் சொல்ல அவர்களும் சைக்கிளில் புறப்பட்ட ,

ஸ்ரீதரின் தோளில் தட்டிய ஐங்கரன் “என்னடா என்ன ஆச்சு?…” என்று கேட்க 

“என்னாச்சு.. ஒன்னும் இல்லையே…” என்று பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து கொண்டே சொல்ல 

அவன் பின்னால் ஏரி அமர்ந்த ஐங்கரன் “ஒன்னும் இல்லாமலா காயத்ரி அமுதினி கிட்ட புலம்பிச்சு…” என்று கேட்க 

“டேய் அதெல்லாம் எதுவும் இல்ல.. ஏதோ ஒரு தடவ டென்ஷன்ல கொஞ்சம் குரல உசத்தி இருப்பேன்.. அத தான் தப்பா புரிஞ்சு கிட்டா…” என்று சொல்ல 

“எது ஒரு தடவ நீ கத்தி விட்டதுக்கு தான் காயத்ரி அவ்வளவு சோகமா இருக்கா.. அவ முகத்துலேயே கவலை தெரியுது.. அவள கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டயே டா, உன் கண்ணுக்கு அவளோட வாடுன முகம் தெரியலையா?…” என்று கேட்க 

ஒரு நொடி சைக்கிளை மிதித்து கொண்டு செல்லும் காயத்ரியை திரும்பி பார்த்தவன் முகத்தில் அத்தனை வேதனை. அதை உடனே மறைத்தவன் 

“கண்ணாலயே ஸ்கேன் பண்ற அளவுக்கு எப்போ மாறுனா.. வா உன்ன பெரிய ஆஸ்பத்திரில இறக்கி விட்டுட்டு போறேன்.. அங்க ஸ்கேன் பண்ற மெஷின் இல்லையாம்…” என்று சொல்ல 

“உனக்கு அப்படி என்னடா பாவம் பண்ணுனேன்.. என்ன எங்கேயாவது கொண்டு தொலைக்கிறதுலே இரு…” என்று ஐங்கரன் வேறு கதைக்கு தாவி விட 

ஐங்கரன் பேசிய எந்த வார்த்தையும் ஸ்ரீதரின் காதில் ஏறவில்லை. அவன் மனது சைக்கிளில் சென்ற காயத்ரியுடன் சென்றுவிட்டது. 

தன் சலனப்பட்ட மனதினால் தானும் வருந்தி, அவளையும் வருத்தி எதற்கு இத்தனை கஷ்டங்கள் என்று யோசித்தவன், எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவையும் எடுத்துக் கொண்டான.

error: Alert: Content selection is disabled!!