அத்தியாயம் 14
ஒரு உயிர் இரண்டாகப் பிரிந்து நிற்குமா!, சூரியனை விட்டு பூமி விலகிச் செல்லுமா!, சாத்தியமற்றது அல்லவா, அதை உணரும் நிலையில் ஸ்ரீதர் இல்லை.
பத்மினியை போட்டு உலுக்கியவன், மனதின் துயரத்தை தாங்க முடியாமல், மண்டியிட்டு நிலத்தில் விழுந்தான்.
ஐங்கரன் தான் அவன் அருகில் சென்று “என்னடா ஸ்ரீ.. எதுக்கு அதிகப்படியா யோசிக்கிற.. உன் மேல இருந்த கோபத்துல எங்கேயாவது போயிருப்பா.. தேடலாம் வாடா…” என்று நண்பனின் தோளை தொட
பாய்ந்து அவனை கட்டிக் கொண்டவன் “எங்கடா போய் தேடுவேன்.. ஏன்டா இப்படி பண்ணுனா?…” என்று கலங்கி துடிக்க
கமலம் “ஸ்ரீ பின்னுக்கு தோட்டத்து கதவு திறந்திருக்கு.. அந்த பக்கமா எங்கேயாவது போயிருப்பா.. உடனே போய் தேடிப் பாரு…” என்று சொல்ல
நண்பர்கள் இருவரும் வேகமாக வீட்டின் பின் வந்து, தோட்டத்தை தாண்டி திறந்திருந்த கதவின் வழி வழியே வந்தனர். அந்த வீதியின் இரு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் யாரும் இல்லை.
ஐங்கரன் “மச்சான் காயத்ரி வேலைக்கு சென்னைக்கு போறதா இருந்தா.. இந்த பக்கமா போனா ரயில்வே ஸ்டேஷன், ஒருவேள அங்க போயிருப்பா.. நீ போய் பாரு…” என்று வலது பக்கம் காட்டியவன்
“இந்த பக்கம் போனா கோயில் தான்.. நான் அங்க போய் ஊருக்குள்ள தேடுறேன்…” என்று சொல்ல
ஸ்ரீதர் தீவிர யோசனையில் இருந்தவன், திரும்பி வீட்டை பார்த்தான். குறிப்பாக மொட்டை மாடியை.
“என்னடா?…” என்று ஐங்கரன் அவனை உலுக்க
“என் காயூக்குட்டி எங்கயுமே போயிருக்க மாட்டா…” என்று சொன்னவன்
வேகமாக வீட்டினுள் வந்து, பரிதவிப்பாக அமர்ந்திருந்த கமலம் மற்றும் காயத்ரியின் நண்பிகளுக்கு அழைத்து கேட்கலாம் என்று தொலைபேசியை எடுத்த பத்மினியிடம்
“காயூக்குட்டிய மொட்டை மாடியில தேடுனிங்களா?…” என்று கேட்க
பத்மினி “நான்தான் பாத்தேன்.. அவ அங்க இல்லயே…” என்று சொல்ல
“இல்ல…” என்று தலையை ஆட்டியவன் “அவ அங்கதான் இருப்பா…” என படிகளில் வேகமாக தாவி ஏறினான்.
மற்றவர்களும் புரியாமல் அவன் பின் சென்று பார்க்க, காயத்ரி இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
ஆனால் ஸ்ரீதர் தண்ணீர் டேங்கின் பின் சென்று பார்த்தான். பார்த்தவன் பார்த்த விழி சிமிட்டாமல் அப்படியே நின்றான். அவன் எங்கே, எப்படி விட்டு சென்றானோ, அங்கேயே அப்படியே அமர்ந்திருந்தாள் அவன் காதல் தேவதை.
அவன் பின்னே வந்து பார்த்தவர்களுக்கும் அதிர்ச்சியே. அதனோடு பத்மினிக்கு கோபமும், எவ்வளவு சந்தோஷமாக, ஆசையாக வந்த ஸ்ரீதரை இப்படி அலைக்கழித்து விட்டாளே தன் மகள் என்று.
கோபமாக அவளை நோக்கி செல்ல இருந்த மகளின் கையை பிடித்த கமலம், வேண்டாம் என்று தலையை அசைத்து, பத்மினியை அழைத்துக்கொண்டு கீழே செல்ல, அவர்களுடன் ஐங்கரனும் சென்று விட்டான்.
அங்கு ஆறடியில் நின்றிருந்த ஸ்ரீதரினால் தான் தன்னிலைக்கு வர முடியவில்லை. அனாதரவாக கைவிடப்பட்ட குழந்தை போன்று, கால்களை மடக்கி, அதை கைகளில் கட்டிக்கொண்டு, முகத்தை முட்டியில் மறைத்தபடி அமர்ந்திருந்த காயத்ரியை நெருங்கவே நெஞ்சம் படபடத்தது.
அவள் அழகு வதனத்தில் அவன் ரசிக்கும் அந்த புன்னகை இருக்காதே, அவனை கட்டி இழுக்கும் அந்த காந்த கண்களில் ஏன் விட்டுச் சென்றாய் என்ற குற்றம் சாட்டும் பார்வை தானே இருக்கும். என்ன பதில் சொல்வான்.
இருந்தும் தன் ஜீவனின் பாதியை கண்டுவிட்டவனுக்கு தள்ளி நிற்க முடியுமா என்ன, அள்ளி அணைத்து தன்னூல் அடக்கிக் கொள்ள…
தன் உயிருடன் பிணைத்துக் கொள்ள… ஒவ்வொரு அணுவும் துடித்தது.
மெதுவாக அவன் தாரகையை நெருங்கி, முட்டி போட்டு அமர்ந்தான். அவன் நாசியில் அவளின் பெண்மை வாசனை இதமாக நுழைந்து, அவன் ஆண்மைக்கு மோட்சம் கொடுத்தது. இறுகி கிடந்த நுரையீரல் முழுவதும் சிறு சிறு பூக்கள் பூத்துக் குலுங்கின.
தொண்டை முள் ஏறி இறங்க, எச்சிலைக்கூட்டி விளங்கியவன் “காயூ..க்குட்டி!…” என்று அழைக்க
அவளிடம் அழுகையின் விசும்பல், சத்தியமாக பெண்ணவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் பாட்டிற்கு இனி உன் சிறகுகள் கொண்டு பறந்து, சுதந்திரமாக இரு என விட்டு சென்று விட்டான்.
ஆனால் அவள் அவன் விடயத்தில் சிறகு முளைக்காத குட்டி பறவை தானே, மரத்தில் இருந்த கூட்டில் இருந்து தவறி விழுந்த பறவை குஞ்சாக அவள் பட்ட மனப்போராட்டங்கள் சொல்லில் அடக்கி விட முடியுமா.
அவன் இன்றி அவள் நாள் தொடங்கியதும் இல்லை, முடிந்ததும் இல்லை. அவளின் சுவாசமாக இருந்தவன் விலகிச் சென்று விட, கட்சிலையாக உள்ளுக்குள் இறுகி நின்றாளே அதை யார் அறிவார்.
இதோ அவன் சொன்னது போல் படிப்பை முடித்து, வேலையும் கிடைத்துவிட்டது. அவனும் தன் வைராக்கியத்தில் ஜெயித்து ஊர் வந்து சேர்ந்து விட்டான்.
ஆனால் அவன் இன்றி அவள் பட்ட பாடுகளை கடந்து விட முடியுமா, முடியாமல் அன்று அவனை இறுதியாக பார்த்த அதே மொட்டை மாடியில் நின்று, அவன் வந்ததை கண்டாள்.
ஆசை தீர, கண்கள் பூக்க, அவன் பிம்பத்தை கண்களில் பதித்துக் கொண்டவளுக்கு, ஓடிச்சென்று அவன் மார்பில் விழ கால்கள் பரபரத்தாலும் (ஏன் மாமா!) என்ற ஆதங்கம் விடவில்லை.
எங்கு, எப்படி விட்டு சென்றானோ, அங்கேயே அமர்ந்து விட்டாள்.
இதோ அவள் அருகே அவன். அவர்கள் கொஞ்சங்கள், முத்தங்கள், சண்டைகள், பேச்சுக்கள் என எல்லாவற்றையும் பார்த்த அந்த மொட்டை மாடியில் மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து இருவரும்.
காயத்ரியின் விசும்பல் ஒலி ஸ்ரீதரின் இதயத்தை தைக்க “அடியே!…” என்று அவள் இரு கைகளையும் முழங்கைக்கு மேல் பிடித்து இழுத்து, தன் கழுத்தோடு போட்டு அணைத்துக் கொண்டான்.
அணைத்த வேகத்தில் ஸ்ரீதர் பின்னோடு சரிந்து படுத்துக்கொள்ள, அவன் மீது மலர் கொடியாக அவன் சொந்தமானவள்.
ஒருவரின் ஸ்பரிசம் ஒருவர் உணர்ந்த நொடி, இருவரின் உடலும் சிலிர்த்து அடங்கியது. உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ந்தது போல் புத்துணர்வு பெற்றது.
இப்போதும் அவள் முகத்தை அவனுக்கு காட்டவில்லை. அவன் மார்பிலேயே முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள்.
அவன் அவள் சூடான கண்ணீர் தன் நெஞ்சை நனைக்க, “அடியே சிங்காரி வேணாம்டி.. மாமனால தாங்க முடியல.. அழாத.. அதான் வந்துட்டேனே…” என்று அவளை தன்னிலிருந்து பிரித்து முகம் பார்க்க முனைய
ம்ஹூம் அழுத்தமாக அவன் மார்பில் முகத்தை புதைத்திருந்தவள் “நான் கூப்பிட கூப்பிட நிற்காம, என்ன திரும்பி பாக்காம போயிட்ட…” என்று அன்று அவன் செய்ததற்கு இன்று புகார் வாசித்தாள்.
“உன்ன திரும்பி பாத்திருந்தா நான் போய் இருக்கவே மாட்டேன்.. போனதால தான் இன்னைக்கு அக்கா ஆசைப்பட்ட மாப்பிள்ளையா வந்து நிற்கிறேன்…” என்று சொல்ல
“போ! யாருக்கு வேணும் உன் பவுசும் பணமும்.. நான் உன்ன கட்டிக்க மாட்டேன்…” என்று காயத்ரி சொல்ல
உடனே பிரண்டு அவளை கீழே கிடத்தி, இவன் மேலே வந்தவன் “சரி மாமன கட்டிக்கணும்னா என்ன வேணும்னு சொல்லு.. உனக்காக எது வேணும்னாலும் செய்றேன்…” என்று சொன்ன ஸ்ரீதரினால் இப்போதும் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.
அவனை ஒட்டிக்கொண்டே கிடந்தவள் “நான் அப்பவே சொன்னேன், என்ன விட்டு போகாதனு, இப்போ வந்து கேட்கிற…” என்று அவள் சொல்ல
“சரிடி சின்ன குட்டி!.. போதும் உன் மாமன் தவிச்சு போய் வந்திருக்கேன்.. கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன விட்டு போயிட்டியோனு நினைச்சு துடிச்சு போனேன்.. ஒரு நிமிஷம் உயிர் வலிய அனுபவிச்சேன்.. இன்னமும் என் இதயம் சரியா துடிக்கல.. மாமனுக்கு முகத்த காட்டுடி.. என்ன பாக்க மாட்டியா?…” என்று கேட்க
அவனின் ஏக்கம் புரிந்தது. அதே ஏக்கம் அவளுக்கும் தானே, மெதுவாக அவன் மார்பிலிருந்து முகத்தை எடுத்து, அவன் விழிகளை தான் பார்த்தாள்.
அவள் அழகு வதனம் கண்ட மறுநொடி கதிரவன் கண்ட தாமரையாக உள்ளம் மகிழ, ஒற்றை கையாள் அவள் கன்னம் தாங்கி, மொச் மொச் என முகம் எங்கும் முத்தங்கள் வைத்தான்.
எச்சில் தெறிக்க, அவள் தேகம் சிவக்க, அப்படி ஒரு ஆவேச முத்தங்கள்.
முகம் மட்டும் அவன் ஆறு வருட ஏக்கத்திற்கு போதாதே, அவள் கழுத்து, மார்பு என்று எங்கு எங்கு முடியுமோ அங்கெல்லாம் அழுத்தமான முத்தம்.
அவளுக்கும் அதே தவிப்பும் வேட்கையும் இருக்கும் அல்லவா, அவனை புரட்டிப்போட்டு அவன்மேல் படர்ந்தவள், அதே போன்று அவன் முகம், கழுத்து, மார்பு என்று முத்தங்களை வாரி வழங்கினாள்.
கன்னத்தில் கழுத்தில் வேறு கோபத்தில் கடித்து வைக்க, “ஆ..அடியே விடுடி…” என்று தன் மீது கிடந்தவளின் இடையோடு கையை போட்டு, தன்னுடன் இருக்கிக் கொண்டவன், “இனி ஒரு நொடி கூட உன்ன விட்டு பிரிய மாட்டேன்.. உசுரு போகும் போது கூட உன்னையும் கூடவே கூட்டிட்டு போயிருவேன் சரியா…” என்க
அவன் கண்ணோடு கண் பார்த்த பெண்ணவள் “உன்ன நம்ப மாட்டேன்.. எழுதி கையெழுத்து போட்டு கொடு…” என்று சொல்ல
“கையெழுத்து தானே.. போட்டுடலாமே…” என்றவன்
பெண்ணவளை கீழே சாய்த்து, அவனை முத்தமிட்டு சிவந்து போன அவளின் துடிக்கும் இதழ்களை கவ்விக்கொண்டான்.
இருவரின் மூச்சுக்காற்று ஒன்றாக பிணைந்து…
இருவரின் பார்வையும் ஒன்றாக கலந்து…
இருவரின் இதழ்களும் ஒன்றாக இணைந்த தருணம் அது.
உடலில் இன்பமான சிலிர்ப்பு… உயிரில் சுகமான கிளர்ச்சி… அவள் கேட்ட நம்பிக்கை ஒப்புதலை, தன் நாவினால் அவள் நாவில் எழுதி, முத்தத்தால் கையொப்பம் போட்டுக் கொண்டிருந்தான்.
இத்தனை நாள் பிரிவின் ஏக்கமாக, தாபமாக, மோகமாக என அத்தனை ஆழமான, அழுத்தமான முத்தம்.
இருவரின் அதரங்களும் களைத்து போனாலும், காதல் கிளிகள் வேட்கை அடங்கிய பாடில்லை.
ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிந்து அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொள்ள, அவன் போட்டு படுத்திய பாட்டில் மூச்சு வாங்கிய காயத்ரி “எந்திரி மாமா!.. என்னம்மா கனக்குற…” என்று சொல்ல
வெட்க புன்னகை பூத்தவன் “நான் கனக்கலடி.. நீதான் சரியா சாப்பிடாம நோஞ்சானா ஆகிட்ட…” என்று அவள் அணிந்திருந்த சுடிதாரை விலக்கி வெற்றிடையை இறுக்கிப்பிடித்து “பாரு உடைஞ்சிடும் போல இருக்கு…” என்று சொல்ல
பெண்ணவளுக்கோ நீண்ட நாள் கழித்து ஆடவனின் தீண்டலில் உயிர் வியர்த்தது, உடல் கூசியது, சற்று நெளிந்து கொண்டே
“இப்படி புடிச்சா உடையாம என்ன ஆகும்.. விடு மாமா..! இத்தனை நாள் முகம் கூட பாக்காம இருந்தல்ல.. இப்ப என்ன புதுசா கரிசனை…” என்று கேட்க
அவளின் மேல் இருந்து எழுந்து, மாடி சுவரில் சாய்ந்து அமர்ந்து, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டவன் “உன்ன மறந்திருந்தா எப்பவோ செத்திருப்பேன்…” என்று சொல்ல
காயத்ரி அவன் வாயை மூடி “என்ன பேச்சு இது!…” என்று கடிந்து கொள்ள
தன் வாயை மூடிய அவள் கையில் முத்தம் வைத்தவன் “உண்மையாத்தான் எப்பவுமே உன் நினைப்புதான்.. எங்க உன் கிட்ட ஓடி வந்துருவேன்னு தான் உன்கிட்ட பேசல.. ஆனா நீ என்ன பண்ற, எப்படி இருக்க எல்லாமே ஐங்கரன் கிட்ட கேட்டுப்பேன் .. அவன உனக்கு துணையா இருக்க சொன்னேன்…” என்று ஸ்ரீதர் சொல்ல
“தெரியும் மாமா!.. அண்ணா எப்பவுமே என்ன தள்ளி நின்னு அவதானிக்கும்.. உன் உசுர இங்க விட்டுட்டு.. என் உசுர உன்னோட எடுத்துட்டு போயிட்ட.. போதும் இதுக்கு பிறகு இப்படி ஒரு பிரிவு நமக்குள்ள வர வேணாம்…” என்று அவன் மார்பில் சாய்ந்தபடி அவள் சொல்ல
அவள் உச்சியில் முத்தம் வைத்தவன் “எப்பவும் வராது.. நீ சரின்னு சொல்லு சாயந்திரம் நடக்க இருக்கிற நிச்சயத்த கல்யாணமா மாத்திடுறேன்…” என்று சொல்ல
“அதெல்லாம் வேணாம்.. நம்ம கல்யாணம் முறையா, எல்லாம் சடங்கும் நடந்து, நிறைவா நடக்கணும்.. அதுக்காகத்தானே இத்தன நாள் வேதனைய சுமந்தோம்…” என்று காயத்ரி சொல்ல
“சரி உன் ஆசை எல்லாம் என்னன்னு சொல்லு.. அப்படியே செஞ்சிடலாம்…” என்று ஸ்ரீதர் சொல்ல
“அதெல்லாம் பிறகு சொல்றேன்.. இப்போதைக்கு உனக்குள்ள இப்படி புதைஞ்சிருக்குற இதத்த அனுபவிக்க விடு மாமா…” என்றவள் அவனை கட்டிக்கொண்டு விழி மூட
அவனும் அவளை இறுக்கி அணைத்து மௌனமாக இருந்தான். எங்கோ இருந்து அவன் உள்ளத்தை கூறும் வரிகள்
நெடுங்காலமாய் புலங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே… உன்னைப் பார்த்ததும் உயிர் தூண்டவே, உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…
தரிசான என் நெஞ்சில், விழுந்தாயே விதையாக…
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தாலே என் ஆயுள் நீழுமடி…
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… என்று காற்றில் தவழ்ந்து வர
அழகிய புன்னகையுடன் தன்னவளை குனிந்து பார்த்தவன், அடுத்த வரிகளை தன் குரலில் பாட ஆரம்பித்தான்.
மழை மேகமாய் உருமாறவா…
உன் வாசல் வந்து உயிர் துவவா… மனம் வீசிடும் மலராகவா…
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா…
கண்ணாக கருத்தாக…
உனை காப்பேன் உயிராக…
உனை கண்டேன், கனிந்தேன், கலந்தேனே…
அட உன்னுள் உறைந்தேனே…
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனையென்றும் மறவேனே…
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
அடி நீதான் என் சந்தோசம்… பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம், நான் கேட்கும் சங்கீதம்…
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி… என்று பாடி முடிய
பெண்ணவள் கண்களில் உள்ளத்தின் நிகழ்ச்சியில் கண்ணீர் துளிகள். உதட்டில் மகிழ்ச்சியின் சாயலில் அழகிய புன்னகை.
உண்மை தானே அவன் எத்தனை செல்வம் தேடினாலும் அவளின் ஒற்றை புன்னகைக்கு ஈடாகாது அல்லவா.
“போதும் மாமா! என் மேல நீ வச்சிருக்குற காதல பாத்து எனக்கே பொறாமையா இருக்கு…” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க
“முத்தம் மட்டும் தானா?…” என்ற கள்வனின் கைகள் அத்துமீற, அவனுக்கு இல்லாததா, சிணுங்களுடன் நெகிழ்ந்து கொடுத்தாள் கோதை.
எத்தனை நேரம் சென்றதோ, பத்மினி இருவரையும் தேடி வந்தார்.அவர் வருவது தெரிய, ஸ்ரீதர் காயத்ரியை தன் மடியை விட்டு இறக்கி விட முயற்சிக்க, அடமாக அப்படியே அமர்ந்து கொண்டாள் காயத்ரி.
பத்மினிக்கு சங்கடமாக ஒன்றும் இல்லை, சந்தோஷமாகத்தான் இருந்தது. “அடியே! போதும் அவன விடுடி.. வந்தவன குளிக்க விடாம, குடிக்க ஒருவாய் தண்ணி கொடுக்காம, சட்டமா அவன் மடியில உட்கார்ந்திருக்க.. எந்திரிடி.. நீ போய் முகத்த கழுவிட்டு படுத்து தூங்கு.. முகமெல்லாம் அழுது சிவந்து போய் இருக்கு…” என்று மகளை அதட்ட
“முகம் எதனால சிவந்துச்சின்னு உன் அக்கா கிட்ட சொல்லவா மாமா!..” என்று அவன் காதில் கிசுகிசுத்தவள்
“இப்ப என்ன? மாமா கிட்ட இருந்து என்ன பிரிக்கிறதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்?…” என்று தாயிடம் கேட்க
பத்மினிக்கு சுருக்கென்று தைத்தாலும் “ஏய் அப்படி இல்ல.. சாயந்திரம் நிச்சயம் இப்பவே ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க.. வந்தவங்க ஸ்ரீய கேட்டாங்க…” என்று சொல்ல
“அக்கா இப்ப எதுக்கு இவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்க.. நான் வாரேன்…” என்றவன் அவளையும் எழுப்பி விட்டு, காயத்ரியுடன் கீழே சென்று
முதலில் அவளின் அறைக்கு சென்று, அவளை முகம் கழுவ வைத்து, தன் நெஞ்சில் போட்டு தட்டி கொடுத்து தூங்க வைத்தவன்,
பின் தானும் குளித்துவிட்டு, காலை உணவை உண்டவன், வீட்டில் நடக்கும் வேலைகளை மேற்பார்வை பார்த்தான்.
இடையே கொஞ்ச நேரம் கமலத்தின் வற்புறுத்தலின் பேரில் தூங்கி எழுந்தான். அதன் பின் அவனும் சேர்ந்து நிச்சயதத்திற்கான அலங்காரம், மற்ற ஏற்பாடுகள் என்று செய்ய
மதிய நேரம் வந்துவிட, காயத்ரி எழுந்து வெளியே வந்தாள். ஆனால் அவளை தனியாக விடாமல், அமுதினி வந்திருக்க, அவளுடன் அறையில் விட்டு, அங்கேயே மதிய உணவையும் கொடுத்து, நிச்சயம் வரை ஸ்ரீதரிடம் இருந்து பிரித்து விட்டனர்.
இதோ அதோ என்று நேரம் கடந்து, மாலை 4 மணிக்கு ஸ்ரீதரையும் ஐங்கரனுடன் தயாராகி வரச் சொல்லி அறைக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த பந்தம், அயலவர்கள் என்று அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க, மணமகன் மணமகள் இருவரும் வர வேண்டியது தான் பாக்கி. வந்து விட்டால்
அவனுக்காக பிறந்த அவளையும், அவளுக்காக வளர்ந்த அவனையும் ஒன்று சேர்க்கும் ஓலை வாசிக்கப்படும்.

