எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 15

அத்தியாயம் 15

அவன் நெஞ்சில் ஒருத்திக்கென காலம் காத்த காதல், இன்று கைகூடும் நன்னாளாம், இந்நாள் என மாலை சூட்டி, முதல் அச்சாரம் பதிக்க போகின்றான்.

அவள் கழுத்தில் மலர் மாலை சூட்டி, அவள் வாழ்நாள் முழுவதையும் தன் நெஞ்சில் சூட்டிக் கொள்வதற்காக, காதல் கொஞ்சும் கந்தர்வனாக, தேவர்கள் மயங்கும் சுந்தரனாக,

கருநீல நிற முழுக்கை சட்டையை முட்டிவரை மடித்து விட்டு, தங்க நிற வேஷ்டியும், அதே நிறத்தில் தோளில் துண்டும், கையில் வாட்ச் அணிந்து, அலை அலை கேசத்தை அழகாக வாரி, நெற்றியில் சந்தனக் கீற்றும், முத்தாரமாக முகத்தில் தெத்து பல் புன்னகையும் என்று தயாராகி, கதவை திறந்து கொண்டு ஐங்கரனுடன் வெளியே வந்தான் ஸ்ரீதர்.

அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க, ஸ்ரீதரை அழைத்து வந்து கமலத்தின் அண்ணன் அருகில் அமர வைத்தான் ஐங்கரன்.

மணமகன் வந்த பின்னர் மணமகளின் வருகைக்காக தானே அனைவரும் எதிர்பார்ப்பார்கள், அவர்களை காக்க விடாமல் கதவை திறந்து கொண்டு அமுதினியுடன் வெளியே வந்தாள் காயத்ரி.

என்னவென்று மற்றவர்கள் எதிர்பார்த்தது போன்று, தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல், ஸ்ரீதர் எதிர்பார்த்ததை போன்று தங்க நிற புடவையில், கோயில் விக்ரகம் போல், காதில் கழுத்தில் மட்டும் நகை அணிந்து வந்திருந்தாள்.

மகளைப் பார்த்து பத்மினிக்கு கோபம் வர, அவளின் அருகே சென்று “என்னடி இது?…” என்று கடிந்து கொள்ள

கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் “என்னமா காயத்ரி இது?.. உன் மாமன் இல்லாததால இந்த மாதிரி இத்தன நாள் இருந்த.. இப்போ தான் ராஜா கனகா திரும்பி வந்துட்டானே.. நிச்சயமதுவுமா இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்?…” என்று கேட்க

அவள் எதற்கு பதில் சொல்லப் போகின்றாள். நீ தான் சொல்ல வேண்டும் என்பது போல் ஸ்ரீதரைத்தான் பார்த்திருந்தாள்.

‘சின்ன குட்டி!’ என்று செல்லமாக கொஞ்சிக் கொண்டவன், எழுந்து அவள் அருகே வந்தான். விழி அசைக்காமல் அவளையே பார்த்தவன், தன் கையில் இருந்த ஃபோனில் இருந்து சிகப்பு நிற பொட்டை எடுத்தவன், தன் இடது கையால் அவள் நாடியை பற்றி, வலது கையினால் எப்போதும் அவனை சுண்டி இழுக்கும் அந்த காந்தக் கண்களை பார்த்துக் கொண்டே, வில்லென வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் வைத்து விட்டான்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணோ “அது சரி, அவன் சிங்காரிச்சி விட்டு வளர்ந்தவ தானே, இப்பவும் அப்படியே இருக்கா…” என்று சொல்ல

“ம்ம், ஆமா.. என் சிங்காரிக்கு நான் தான் அலங்காரம் பண்ணி விடணும்…” என்று தன் அக்கா மகளை ஆசையாக பார்த்துக் கொண்டே கூற

அவளும் வெட்கத்தில் கன்னம் சிவக்க, செல்லமாக அவனை முறைத்தாள்.

எத்தனை வருடங்களானது சிங்காரி என்று அவன் சீண்ட, இவள் செல்லமாக முறைக்க என்று.

அமுதினி மல்லிகை பூச்சரத்தை எடுத்து, “இந்தா உன் மாமன் கையாலேயே வச்சிக்க…” என்று காயத்ரியின் கையில் வைக்க

அழகிய புன்னகையுடன், தன்னவள் கையில் இருந்த மல்லிகை பூச்சரத்தை ஸ்ரீதர் எடுத்துக்கொள்ள, காயத்ரியும் உள்ளம் நெகிழ தன்னுள் பெருகும் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி நிற்க, தலைவனும் தலைவியின் கார் கூந்தலில் கச்சிதமாக மலர் சூடினான்.

என்னதான் அவளை அவன் சிறுவயதில் இருந்து அலங்கரித்து விட்டாலும், இதுதான் முதல் முறை தன் கையினால் பூ வைத்து விடுவது.

அதேபோல் அவளுக்கும் இது நீண்ட நாள் ஆசை, காதலாக திரும்பி மாமன் முகம் பார்க்க, நாளாக மடித்து சூட்டிவிட்ட மலர் சரத்தில், ஒற்றை தொங்கலை எடுத்து முன் தோளில் போட்டு வெட்டு, அவளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தான்.

மொத்த கூட்டமும் சிறு புன்னகையுடன் ஆவென பார்த்திருந்தனர் இருவரையும்.

ஐங்கரனிடம் ஸ்ரீதர் கையை நீட்ட, அவனும் கண்ணாடி வளையலை குடுக்க, அதை வாங்கிக் கொண்டவன், காதலுடன் ரசனையாக தன் பிரியமானவளை பார்த்துக் கொண்டே, இரண்டு இரண்டு வளையல்கலாக, பொறுமையாக வளையலோடு சேர்த்து தன் விரல்களையும் உரச விட்டு…உலாவ விட்டு… போட்டு விட,

“டேய் மொத்த கூட்டத்தையும் வெச்சிட்டு ரொமான்ஸ் பண்ற ஒரே ஆள் நீ தான்டா.. நீ என்ன களவாணித்தனம் பண்றன்னு தெரியாம ரசிச்சு பாக்குறாங்க பாரு இவங்களும்…” என ஐங்கரன் ஸ்ரீதரின் காதில் கிசுகிசுக்க

அது காயத்ரியின் அருகில் நின்ற அமுதினியின் காதில் கேட்டுவிட “அண்ணா அளவுக்கு உங்களுக்கு சாமர்த்தியம் பத்தல.. இல்லனா இன்னும் மொட்ட பையனாவே சுத்துவீங்களா?…” என்று கேட்டு விட

“இங்க பாரு அமுதினி, மாமா மானத்த வாங்காத.. புருஷனோட அண்ணன்னு கொஞ்சமாச்சும் மரியாத கொடு…” என்று சொல்ல

“ம்க்கும்!…” என்று நொடித்துக் கொண்டாள் அமுதினி.

ஆம் ஐங்கரனின் தம்பி குமரனை தான் அமுதினி திருமணம் செய்து கொண்டாள். தன்னால் தன்னைவிட இரண்டு வருடம் இளையவனான தம்பியின் திருமணம் தள்ளி போக வேண்டாம் என்று, அமுதினியை குமரன் விரும்பி இருக்க, இரு வீட்டிலும் பேசி ஐங்கரன் தான் ஐந்து மாதங்களுக்கு முன் திருமணத்தை முடித்தான்.

என்னதான் அந்த வீட்டு மருமகளானாலும் ஐங்கரனை வம்பு இழுப்பதை அமுதினி விடவில்லை. இவர்கள் வாய் அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,

ஸ்ரீதர் காயத்ரியின் இரு கைகளுக்கும் வளையல்களை போட்டு விட்டவன் “பிடிச்சிருக்கா?…” என்று கேட்க

“என்னப்பா ஸ்ரீ! உனக்கு இருக்கிற வசதிக்கு தங்கத்துல வளையல் வாங்கி போடலாமே.. இந்த கண்ணாடி வளையல போட்டுட்டு பிடிச்சிருக்கானு கேட்குற…” என்று கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று கேட்க

காயத்ரி “எனக்கு எது பிடிக்கும்னு என் மாமாவ தவிர வேற யாருக்கு தெரியும்.. கோடி கொடுத்தாலும் இதுல இருக்கிற ஒத்த வளையலுக்கு ஈடாகாது…” என்று சொல்ல, மீசையை முறுக்கிக் கொள்ள தோன்றியது ஸ்ரீதருக்கு.

தங்க வளையல் என்ன, வைர வளையல் கூட அவள் கை நிறைய வாங்கி அடுக்க முடியும் அவனால். ஏன் இப்போது கூட அவள் அணிந்திருக்கும் நகைகள் அவன் வாங்கி கொடுத்தது தானே. ஆனால் அவன் மனம் நிறைந்தவளுக்கு எது மகிழ்ச்சியை தரும் என்று அவன் நன்கு அறிவானே.

காயத்ரியின் பதிலில் அனைவரும் இருவரையும் வியந்து பார்த்தனர். மணமாக முன்னரே மனம் ஒத்த தம்பதியினராக அனைவர் கண்களையும் நிறைத்தனர் இருவரும்.

ஸ்ரீதரோ உதட்டுக்குள் மறைந்த புன்னகையுடன் “அலங்காரம் முடிஞ்சது.. நிச்சய மால மாத்தலாமா?…” என்று சொல்லி நகர பார்க்க,

அவன் கையைப் பிடித்த காயத்ரி முறைத்து பார்க்க, “என்ன?…” என்று எதுவும் அறியாதவன் போன்று கேட்க,

“ம்ஹீம்! மாமா!…” என்று சினுங்கி, நிலத்தில் ஒற்றை காலை காயத்ரி உதைக்க

பத்மினியோ “ஏய் இன்னும் என்னடி?.. அவன விடு, நேரம் போகுது நிச்சயம் முடிய உன் செல்லத்த வச்சுக்க…” என்று சொல்ல

“அக்கா!…” என்று அவரை தடுத்த ஸ்ரீதர், மந்த காச புன்னகையுடன், தன் சட்டை பாக்கெட்டில் இருந்து இரு சோடி கொலுசுகளை எடுத்து இரு கைகளிலும் தூக்கி காட்ட, பூவாக மலர்ந்து சிரித்தவள் இரு கைகளையும் நீட்ட, அதில் வைத்தான்.

அவள் கையை இறக்கவில்லை. அவளையே பார்த்துக் கொண்டே தான் இரு சட்டை கை மடிப்பிலிருந்து மேலும் இருசொடி கொலுசுகளை எடுத்து அவள் கையில் வைத்தவன். தன் இடுப்பிலிருந்து மற்றும் ஒரு கொலுசை எடுத்து வைத்தான். மொத்தமாக ஐந்து கொலுசுகள்.

“டேய் என்னடா இது?.. வருஷத்துக்கு ஒன்னு வாங்கி வச்சியா?…” என்று பத்மினி கேட்க

“ம்ம்!…” என்றவன் ஒற்றை காலை மடித்து, மற்ற காலை நிலத்தில் குற்றி அமர்ந்தவன், தன் வேஷ்டியின் உள்பக்க மடிப்பில் முடிந்து வைத்த, தாமரை பூவின் வடிவில் ஆறு பூக்களும், அதன் இடையே மணிகளும் என்று இருந்த கொலுசை எடுத்து,

தன் பிரியசகியின் பஞ்சு பாதத்தை தூக்கி, தன் தொடையில் வைத்து, அதை அவள் காலில் மாட்டி விட, அவளவன் கொடுத்த காதலின் கம்பீரத்தை கிரீடமாகக் கொண்டு, ஒரு ராணியின் தோரணையுடன் நின்றாள் காயத்ரி.

அதேபோல் மற்ற காலிலும் போட்டு விட்டவன், ரசனையாக அவள் பாதத்தை வருடி விட்டு, “ஆறு வருஷ தவத்தின் பலன் இன்னைக்கி கிடைச்சிடுச்சு…” என்று சொல்ல

எவ்வளவு முயன்றும் காயத்ரியின் கண்கள் பனித்தன. இத்தனை காதலை பெற நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்ற எண்ணம் தான் அவளுக்கு.

காயத்ரி காலை எடுத்துக் கொள்ள, அவனும் எழுந்து நின்றவன்,கண்களாலே அவளை ஆற்றுப்படுத்தி, அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தவன், சபையினர் அனைவருக்கும் வணக்கம் வைக்க, காயத்ரியும் அதேபோல் கைகூப்பி வணங்க, அவளுடன் நடுவில் அமர்ந்து கொண்டான்.

புரோகிதர் நிச்சயதார்த்த ஓலையை வாசிக்க, ஒரே குடும்பம், அதே நேரம் தம்பதி சகிதமாக தட்டு மாத்திக்கொள்ள கமலம், பத்மினியால் முடியாது என்பதால் தட்டு மாத்திக் கொள்ளவில்லை.

இன்னும் ஒரு வாரதத்தில் திருமணம் என திகதி குறித்து, நிச்சய ஓலையை தட்டில் வைத்து, புரோகிதர் ஸ்ரீதரின் தாய் மாமாவிடம் கொடுக்க, அவரும் வாங்கிக் கொண்டார்.

அதன் பின் மணமக்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளச் சொல்ல, இருவரின் கைகளிலும் மல்லிகையும் இடையிடையே ரோஜாவும் சேர்த்து கட்டிய மாலைகள் கொடுக்கப்பட, ஒருவரை ஒருவர் காதலா பார்த்தபடி மாற்றிக் கொண்டனர்.

அதன் பின் ஸ்ரீதர் ஐங்கரனிடம் கையை நீட்ட, அவனும் இரு மோதிரம் அடங்கிய தட்டை எடுத்துக் கொடுத்தான்.

அதில் வைரக்கல் பதித்த மோதிரம் கண்ணை பறிக்க, இருவரும் அதையும் ஆசையாக காதலுடன் மாற்றிக் கொண்டனர்.

அதன் பின் இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அனைவருக்கும் பொதுவாக நடுவில் விழுந்து வணங்கினர். கூடியிருந்தவர்கள் அனைவரும் மனதார வாழ்த்த, அவர்கள் வாழ்வில் அழியாத சித்திரமாக அந்நிகழ்வு.

அதன் பின் வந்திருந்தவர்களை இரவு விருந்தை முடித்துவிட்டு செல்லச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க மற்றவர்கள் கலைந்து விட, திருமண வீடு, சொல்லவும் வேண்டுமா, அனைவரும் ஆங்காங்கே கூடி கதை பேச ஆரம்பித்து விட்டனர்.

ஸ்ரீதர் ஹாலில் ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் காயத்ரியுடன் அமர்ந்து கொண்டான். தலையில் ஆசிர்வாதத்திற்காக தூவப்பட்ட பூக்களை தட்டி விட்டுக் கொண்டிருந்த காயத்ரியிடம் “என்னடி சிங்காரி! நீ நினைச்ச மாதிரி நிச்சயம் நடந்துச்சா?…” என்று கேட்க

“நான் நினைச்சத விட சூப்பராவே நடந்துச்சு மாமா.. ஆனாலும் ஒரு குறை…” என்று சொல்ல

“என்னடி? மண்டபத்துல வைக்கலன்னு வருத்தமா?…” என்று கேட்க

“அது இல்ல மாமா.. பொண்ணு பாத்து தானே நிச்சயம் பண்ணுவாங்க.. நமக்கு அது நடக்கவே இல்லையே.. அட்லீஸ்ட் இப்பவாவது காஃபி எடுத்து வந்து நான் கொடுக்க.. நீ என் முகம் பாத்து அத எடுக்கனு குட்டியா ஒரு பெண்பார்க்கும் படலம் நடந்திருக்கலாம்…” என்று சொல்ல

அவள் தோளை தன் தோளால் இடித்தவன் “என்ன ஒரு கவல உனக்கு.. ஏன் நான் உன்ன பாத்ததே இல்லையா?.. தனியா வேற பொண்ணு பாக்கணுமா?.. நான் தனிமையில பாத்தது போதாதா?…” என்று அவள் காதில் கிசுகிசுப்பாக, ஆழ்ந்த குரலில் கூற

அவன் மூச்சுக்காற்று பட்டு காதுமடல் சிவக்க, அவன் பேசிய வார்த்தைகளால் கன்னம் சிவந்தது பெண்ணவளுக்கு.

ஆனாலும் விடாமல் “அது அரைகுறையா பாத்தது தானே.. முழுசா பாக்கலையே…” என்று சொல்ல

ஆண்மகன் அவனுக்கே வெட்கம் வந்து தொலைத்தது. “அதுதான் நாள் குறிச்சாச்சே.. தாலிய கட்டிட்டு அன்னைக்கு ராத்திரி பாத்துக்கிறேன்…” என்று சொல்லி தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டவனுக்கு, வெட்கப் புன்னகையை மறைக்க சிரமமாக இருந்தது.

இருவரும் காதல் உலகில், கைகோர்த்து சஞ்சரிக்க, அவர்களை கலைத்தது ஐங்கரன் போட்டுவிட்டு பாடல் ஒலி

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்… அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்… உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் என்னாலும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்… விழிகளிலே… என்று ஆரம்பித்து

இருவரின் மனநிலையையும் அப்பட்டமாக கூறியது. இந்த ஆறு வருட பிரிவு இருவரையும் வேறு விதமாக மேலும் பிணைத்து இருந்தது.

சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்… மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்… என்று கல்யாண வீட்டிற்கான கலை கட்டியது பாடலால்.

உடனே காயத்ரி ஐங்கரனிடம் எழுந்து சென்றவள், அவனிடம் ரகசியமாக ஒரு பாடலை போடச் சொல்லிவிட்டு, மாடிப்படிகளின் அருகே வந்து நின்று, மையலுடன் ஸ்ரீதரை பார்க்க,

அடுத்த பாடல் லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா… லேசா லேசா நீண்டகால உறவிது லேசா…

காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே, விரைவினிலே… கலர் கலர் கனவுகள் விழிகளிலே…

உனக்கெனவே…

உலகினிலே…

பிறந்தவளே… என்று ஒலிக்க, மொத்தமாக உருகி கரைந்தான் ஆடவன்.

பாடல் வரிகளும், அவள் பார்வையும், ஓராயிரம் காதல் அம்புகளை அவன் நெஞ்சில் பாய்ச்சியது.

அடுத்து வந்த வரிகள் அவளின் ஆறு வருட ஏக்கங்களை சொல்ல, நெஞ்சை நீவிகொண்டான் ஸ்ரீதர். அவனும் நிம்மதியாக தூங்கி நாளாச்சு தானே.

காலையில் ஸ்ரீதர் பாடியதைப் போன்று, காயத்ரியும் அடுத்து வந்த வரிகளுக்கு தன் இதழை அசைத்தாள்.

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…

நான் வாங்கும் மூச்சுக்காற்று உனதல்லவா…

உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

நீ என்றால் நான்தான் என்று உறவறிய, ஊரறிய, ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய… உடனடியாய்…

உதடுகளால்…

உயிரெழுது… என்று பாடி முடிய

அவளை நோக்கி எழுந்து வந்த ஸ்ரீதர் “புரிஞ்சுது.. ஊரும், உறவும் அறிய உதட்டால உயிர் எழுதனும் அவ்வளவுதானே.. நான் ரெடி…” என தன் உதட்டை பெருவிரலால் வருடியபடி சொல்ல

சுற்றி இருந்தவர்களை பார்த்த காயத்ரி “ஐயோ மாமா! நான் ரெடி இல்ல.. நான் காதல சொல்ல பாட்டு பாடினா, நீ கண்டதையும் யோசிக்கிற பாரு…” என்றவள் படிகளில் இரண்டடி ஏறி நிற்க

“முடியாது.. இன்னைக்கு எல்லார் முன்னாடியும் கிஸ் அடிக்கிறேன்.. புதுவகையா நிச்சயம் பண்றேன்…” என்றவன் வேட்டியை தூக்கி கட்ட

“அய்யோ! என்னால முடியாது…” என காயத்ரி படிகளில் ஏறி ஓட, அவனும் அவளை துரத்திக் கொண்டு ஓட, வேறு எங்கே வரப்போகின்றனர், அவர்கள் ஆஸ்த்தான மொட்டை மாடிக்குத்தான்.

ஸ்ரீதரின் கையில் சிக்காமல் காயத்ரி ஓட, அவனுக்கு அவளை பிடிக்க கஷ்டமா என்ன, இருந்தாலும் தனக்கு போக்கு காட்டும் அவளை ரசித்துக்கொண்டே அவனும் அவளை துரத்தினான்.

“வேணா மாமா!.. சொன்னா கேளு.. வீடு முழுக்க ஆட்கள் இருக்காங்க.. யாராச்சும் பாத்தா மானம் போயிடும்…” என்று காயத்ரி சொல்ல

“நீதானடி மொத்தமா பாக்கலன்னு உசுப்பிவிட்ட.. சிக்குடி இன்னைக்கு உன்ன முழுசா உரிச்சு பாத்துடறேன்…” என்று அவனும் விடாமல் விரட்ட, என்று இருவரும் தண்ணீர் டேங்கை சுற்றி தான் ஓடிக்கொண்டிருந்தனர்.

“மாமா இது தப்பு.. கல்யாணத்துக்கு பிறகுன்னு தானே சொன்ன…” என்று காயத்ரி கேட்க

“நிச்சயம் பண்ணுனாலே பாதி பொண்டாட்டியாம்.. அர பொண்டாட்டிய ஆசைக்கு கொஞ்சமா எடுத்துக்கலாம்.. தப்பில்ல…” என்றவன் அவளை பிடித்து, பின்னோடு கட்டிக் கொண்டான்.

இருவரின் உடலும் சிலிர்த்து அடங்கியது. இது புதிது தான், அவளுக்கும், அவனுக்கும் ஒருவரின் மீது ஒருவருக்கு நாணம் வந்து தொலைத்தது.

ஒருவேளை கடந்த காலத்தை இருவரும் கூடவே இருந்து, ஒட்டிக்கொண்டு கழித்திருந்தால், இதுபோல் புதிய வேதியல் மாற்றங்கள் நிகழாமல் போயிருக்கலாம்.

ஆனால் இந்த ஆறு வருடப்பிரிவு புதிதாக, அதிகப்படியான, தாபத்தையும் மோகத்தையும் இருவருக்குள்ளும் விதைத்து விட்டது.

இந்த ஆறு வருடங்களில் இருவரின் உடலிலும் நிறைய மாற்றங்கள். காலையில் கட்டிக்கொண்டு முத்தாடிய போது இருவருமே உணர்ந்தனர்.

ஸ்ரீதருக்கு ஆசைகள் அளவு கடந்து பெருகின, காயத்ரிக்கோ தயக்கமும் நாணமும் பல்கி பெருகின.

இப்போது கூட அவன் கைக்குள் சிக்கியிருப்பது சுகவதையாகத்தான் இருந்தது. “மாமா!.. விடு மாமா!…” என்று காற்றில் பேசினால் பெண்ணவள்.

அவனிடம் வாய்மொழி இல்லை. அதற்கு பதிலாக சூடான முத்தம் அவள் பின்கழுத்தில் பதிந்தது. கை விரல்களை இறுக பொத்தி, கால் பாதத்தை தரையோடு அழுத்திக் கொண்டாள் பெண்ணவள்.

கழுத்தில் இருந்து அவன் முத்தங்கள் அவள் தோளுக்கு இறங்கி, முதுகுக்கு குடியேறி, மீண்டும் தோளுக்கு இடம் மாற்றமாகி, நாவு கொண்டு கோலம் போட்டு, பற்கள் கொண்டு கவ்விட, துடித்து போனாள் பெண்ணவள்.

மாமா என்று அழைக்க வாயை திறந்தவளுக்கு உஷ்ண காற்று தான் வெளிவந்தது. முயன்று நாதம் கூட்டி “மா..மா!…” என்க

“என்னடி?…” என்றான் கிறக்கமாக, கரகரத்த அவன் குரலே அவளுக்கு மயக்கத்தை கொடுக்க, “மொட்டை மாடியில நிற்கோம்.. யாராச்சும் வர போறாங்க…” என்று சொல்ல

“அதெல்லாம் வரமாட்டாங்க…” என்று ஸ்ரீதர் சொல்லும் போதே

“ஸ்ரீ!”

“காயத்ரி!” என இருவரையும் அழைத்துக் கொண்டு ஐங்கரனுடன், அமுதினையும் கூடவே குமரனும் வர

இருவரும் அவசரமாக பிரிந்து நின்றனர்.அந்த பிரிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்பதை அறியாமல்.

“ஹா! சொல்லுடா?…” என்று ஸ்ரீதர் கேட்க

“வாடா! கீழ எல்லாரும் உன்ன தான் தேடுறாங்க…” என்று ஐங்கரன் சொல்ல

அமுதினியோ “அண்ணா உங்கள கீழ தேடுறது உண்மதான்.. ஆனா மெயின் காரணம் நிச்சயமான ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கிறதால.. உங்க ரெண்டு பேரையும் இனி பிரிச்சு வைக்க சொல்லி பெரியவங்க உத்தரவு.. அதுக்கு தான் நாங்க வந்தோம்…” என்ற அமுதினி

“வாடி! கல்யாணம் வரைக்கும் நீயும் அண்ணாவும் தனியா பாத்துக்க கூடாது…” என்று காயத்ரியை இழுத்துக் கொண்டு செல்ல

ஐங்கரன் தம்பி குமரனிடம் “உன் பொண்டாட்டிய வெச்சுட்டு எதையாவது சாமர்த்தியமா செய்ய முடியுதா?.. போட்டு உடைச்சிட்டு போறா…” என்று அழுத்துக் கொள்ள

“நீங்களாச்சு.. அவளாச்சு.. அம்மாவையும் அவளையும் விட, உன்னையும் அவளையும் சமாளிக்க தான் என்னால முடியல…” என்று அண்ணன் தம்பி இருவரும் அவர்களின் பிரச்சினையை பெரிதாக கூறிக் கொண்டிருக்க

இங்கு ஸ்ரீதர் தனியாக விழி பிதுங்கி நின்றான். ஆறு வருட பிரிவை அடுத்து வர இருந்த ஆறு நாளில் அவன் ஈடு கட்ட நினைத்து இருக்க, அவன் நினைப்பில் நெருப்பை அள்ளி போட்டு விட்டது பெரியோர் கூட்டம்.

error: Alert: Content selection is disabled!!