வர்ணம் 15
அருளின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைக் கண்டதும் ராஷி பதற்றமடைந்தாள். அவனது பொக்கிஷத்தை தான் ஏதோ பறிப்பது போல உணர்ந்து, அவசர அவசரமாகத் தன் குரலைத் தாழ்த்திப் பேசினாள்.
“அருள்… தயவுசெஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க! இந்தப் புடவைகளை நான் என்றைக்குமே சொந்தமாக்கிக்க நினைக்கல. எங்கக் காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காகவும், சென்னையில நடக்குற மாபெரும் கண்காட்சியில உங்க நெசவோட அற்புதத்தைக் காட்டுறதுக்காக மட்டும்தான் கேட்குறேன். வேலை முடிஞ்சதும் திரும்ப இந்தப் புடவைகளை அப்படியே உங்ககிட்ட பத்திரமா கொண்டு வந்து கொடுத்துடுறேன்…” என்று பதற்றத்தோடு விளக்கினாள்.
ராஷியின் குரலில் இருந்த உண்மையான பதற்றத்தையும், அவளது நேர்மையான காதலையும் பார்த்த அருள் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.
“அப்படியெல்லாம் இல்லை ராஷி… ஒரு நிமிஷம் இருங்க,” என்று மென்மையாகச் சொன்னவன், உடனே வெளியே சென்று தறிக்கூடத்தில் இருந்த தன் தந்தை முத்தையா ஐயாவிடம் விஷயத்தைக் கூறினான்.
தலைமுறை தலைமுறையாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் பரம்பரைப் பொக்கிஷங்களை வெளியே அனுப்புவதைக் கேட்டதும் முத்தையா ஐயா ஒரு நொடி திகைத்துத்தான் போனார். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ராஷியும் சாருவும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறி, அருளின் கலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைத்ததை நினைத்துப் பார்த்தார். அவர்களின் உண்மையான அன்பின் மீதும், நம்பிக்கையின் மீதும் இருந்த உறுதியால் மெல்லத் தலையசைத்து அனுமதி அளித்தார்.
அருள் மீண்டும் அந்த அறைக்குள் வந்தான். அந்த மூன்று அரிய பட்டுப் புடவைகளையும் முன்பைப் போலவே மிகக் கவனமாகவும் அழகாகவும் பட்டுத் துணியில் பார்சல் செய்தான்.
பின்னர், அதை நேராகப் பூசையறைக்குக் கொண்டு சென்று, குலதெய்வப் படங்களின் பாதத்தில் வைத்து வணங்கினான். அதன்பின், பார்சலை இரண்டு கைகளாலும் ஏந்தி வந்து ராஷி மற்றும் சாருவின் முன்னால் நீட்டினான்.
“ராஷி… சாரு பாப்பா… இதை வச்சுக்கோங்க,” என்று கொடுத்தவன், அவளது கண்களை ஆழமாகப் பார்த்து உருக்கமானக் குரலில் சொன்னான்:
“இது வெறும் துணி இல்லை… இது எங்க குலதெய்வம் போல! தலைமுறை தலைமுறையா எங்களுக்குச் சோறு போட்ட தெய்வம்… அந்த தெய்வத்தையே இப்போ உங்களை முழுசா நம்பி உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். இதை நான் எப்படி உங்ககிட்டக் கொடுக்கிறேனோ… அதேபோலக் சேதமில்லாம அப்படியே திரும்ப என் கைக்கு வந்து சேரணும்!”
அருளின் வார்த்தைகளில் இருந்த மாபெரும் நம்பிக்கையும், பாசமும் ராஷியின் நெஞ்சை நெகிழச் செய்தது.
“நிச்சயமா அருள்! உங்க நம்பிக்கைக்கு எந்தக் காலத்துலயும் பங்கம் வராது. உங்க தெய்வத்தை நாங்க உங்களை விடப் பத்திரமா பார்த்துப்போம்,” என்று ராஷி அழுத்தமாக வாக்களித்தாள்.
இருவரும் அந்தப் பார்சலை மிகுந்த மரியாதையோடு பெற்றுக்கொண்டு, அருள் மற்றும் அவரது பெற்றோரிடம் விடைபெற்றுத் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்கள்.
அறைக்குள் நுழைந்ததும், ராஷி தன் துணிப்பெட்டியைத் திறந்து, அந்தப் பட்டுப் புடவைகளின் பார்சலை மிகவும் கவனமாக உள்ளே நடுவில் வைத்தாள். அதன் மீது வேறு எந்தக் கனமான பொருட்களும் படாதவாறு மென்மையான உடைகளை அடுக்கி, பெட்டியைப் பூட்டிச் சாவியைத் தன் கையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
அருளின் காதலும், அவனது பரம்பரையின் உழைப்பும், நம்பிக்கையும் அந்தப் பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்க… மறுநாள் காலை சென்னை நோக்கிய அவர்களின் பயணம் தொடங்குவதற்குத் தயாரானது!
இரவு மணி 11.
சிரசாமலையின் அமைதியில், சில்வண்டுகளின் ரீங்காரமும் தென்னந்தோப்பு வீசும் மெல்லிய காற்றும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
கட்டிலில் படுத்திருந்த ராஷியின் தொலைபேசி அதிர்ந்து, ஒளிர்ந்தது. திரையில் ‘அருள்’ என்ற பெயர் மின்னியதும், அவள் அவசர அவசரமாக மொபைலை எடுத்து மெசேஜைப் படித்தாள்.
“வெளியே தோட்டத்துப்பக்கம் வர முடியுமா ராஷி? உன்னைப் பாக்கணும் போல இருக்கு…”
படித்ததும் ராஷியின் நெஞ்சு லேசாகப் படபடவென அடித்தது. மெதுவாகத் திரும்பித் தன் அருகில் படுத்திருந்த சாருவைப் பார்த்தாள். சாரு தலையணையை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ‘சாரு ஒருதடவை தூங்கிட்டா விடியுற வரைக்கும் மலையே சரிஞ்சு விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டா’ என்பது ராஷிக்கு நன்றாகத் தெரியும்.
ஆனாலும், எந்தச் சத்தமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். காலடிகளைப் பூப்போல எடுத்து வைத்துப் படுக்கையிலிருந்து எழுந்தவள் அறையின் கதவை எந்தவிதச் சத்தமும் வராதவாறு மெல்லச் சாத்திவிட்டு, வீட்டின் பின்பக்கமிருந்த தோட்டத்துக் கதவை நோக்கி நடந்தாள்.
தோட்டத்துக் கதவைத் திறந்து, நிலவொளி படர்ந்திருந்த அந்த இருட்டுக்குள் அடிஎடுத்து வைத்த அடுத்த நொடி…
திடீரென இருட்டிலிருந்து ஒரு வலிமையான கரங்கள் நீண்டு, அவளது இடுப்பை வளைத்துச் சட்டென்று தன்னோடு இழுத்துக் கொண்டன!
ராஷி பயத்தில் அலறப்போக, அவளது உதடுகளை அருளின் கரங்கள் மென்மையாகப் பொத்தின. “நான்தான்டி…” என்று அவளது காதோரம் அருள் முணுமுணுத்த குரலில் அவளது உடம்பு சிலிர்த்தது.
அருள் அவளைச் சற்றே தள்ளி அமைதியாக நின்றிருந்த உயரமான தென்னை மரத்தின் தண்டுப் பகுதியில் சாய்த்து, தன் இரு கரங்களாலும் அவளைத் தப்ப முடியாதபடி பூட்டிக்கொண்டான்.
இரவு நேரத்து மலைக்காற்று உடலை நடுங்க வைக்கும் குளிரைக் அள்ளி வீசிக்கொண்டிருக்க… இருவரின் அந்த இறுக்கமான கட்டி அணைப்பு, அந்த இரவின் குளிரிலும் ஒரு மாபெரும் கதகதப்பை இருவருக்கும் கொடுத்தது.
“என்ன அருள் இது… யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? காலைலதானே பார்த்தோம்… அப்புறம் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிட்டீங்க?” என்று ராஷி மூச்சிரைக்க, அவனது நெஞ்சில் தன் கைகளை வைத்து மெல்லத் தள்ள முயன்றபடி கேட்டாள்.
அருள் அவளது தள்ளுதலையும் மீறி அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். அவளது முகத்தில் விழுந்த முடி கற்றைகளை மெல்ல ஒதுக்கிவிட்டு, அவளது நிலவு போன்ற விழிகளை உற்றுப் பார்த்தான்.
“காலைல நீ கிளம்பிடுவடி… ஆறு மாசமா என் கண்ணெதிரேயே திரிஞ்சவ, நாளைல இருந்து என் பக்கத்துல இருக்க மாட்டேங்கிற எண்ணமே என்னை தூங்க விடல. இத்தனை நாளா என் கூட இருந்ததை விட… இந்த ஒரு இரவு முழுக்க உன்னை என் நெஞ்சோட வச்சுக்கணும் போல இருக்குடி,” என்று அருளின் குரல் காதலில் குழைந்து ஒலித்தது.
அவனது அந்த உண்மையான அணைப்பிலும், காதலின் தவிப்பிலும் ராஷியின் எதிர்ப்பெல்லாம் கணப்பொழுதில் கரைந்து போனது.
அவள் மெதுவாகத் தன் கரங்களை அருளின் கழுத்தைச் சுற்றி வளைத்து, அவனது நெஞ்சில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். நிலவொளியின் வெளிச்சத்தில், அந்தத் தென்னந்தோப்பின் மௌனத்தில், இருவரின் இதயத் துடிப்புகளும் ஒன்றைய ஒன்று தொட்டுப் பேசிக்கொண்டன.
நாளை தொடங்கும் சென்னைப் பயணத்திற்கு முன்பாக, அந்த விடியாத இரவு முழுவதும் அவர்களின் காதலுக்கு மட்டுமே சொந்தமாகியிருந்தது!அருளின் விரல்கள் ராஷியின் இடுப்பை இன்னும் இறுக்கமாக வளைத்துக்கொண்டன.
“தினமும் போன் பண்ணனும்… ஃப்ரீயா இருக்குறப்பல்லாம் வீடியோ கால் பண்ணி பேசணும் சரியா?” என்று அவனது ஆழ்ந்த குரல் அவளது காதோரம் மென்மையாக ஒலிக்க, காதலின் தவிப்போடு அவனது கரங்கள் ராஷியின் நைட் டிரஸின் இடைவெளி வழியே ஊடுருவி, அவளது வெற்ற இடுப்பைத் தொட்டு அழுத்தியது.
அந்த எதிர்பாராத கதகதப்பானத் தொடுதலில், ராஷியின் உடலெங்கும் ஒரு மெல்லிய அதிர்வு பரவ, “உவாக்…” என்ற ஒரு மெல்லிய முனகல் அவளையறியாமல் உதட்டைத் தாண்டி எழும்பியது.
உணர்ச்சிகளின் கிளர்ச்சியில் அவள் அருளின் அகன்ற நெஞ்சோடு இன்னும் நெருக்கமாக வந்து மோதினாள். இத்தனை நாட்களாக மிகக் கண்ணியமான, எல்லைகள் வகுக்கப்பட்ட ‘சைவக் காதலில்’ மௌனமாகத் தவித்துக்கொண்டிருந்த அருள்மொழிவர்மனின் பொறுமை அந்த நொடியில் முற்றிலும் உடைந்தே போனது.
தன் காதலியின் இந்த நெருக்கமும் முனகலும் அவனுள் இருந்த காதலை எல்லை மீறச் செய்ய, பட்டென்று அவளது இதழ்களைத் தன் உதடுகளால் சிறைபிடித்தான்!
அந்த முதல் முத்தம்… நிலவொளி படர்ந்திருந்த அந்தத் தென்னந்தோப்பின் இரவை அப்படியே உறைய வைத்தது.
ராஷி திகைப்பில் கண்களை மூட, அருளின் முத்தத்தில் இருந்த ஆழமும், இத்தனை நாள் பிரிவின் பயமும், காதலின் தவிப்பும் அவளை மெல்ல மெல்லத் தன் வசமிழந்துகொள்ளச் செய்தன. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து கதகதப்பை உருவாக்கியது.
நீண்ட நேர முத்தத்திற்குப் பிறகு, மெல்ல அவளது உதடுகளை விடுவித்த அருள், அவளது நெற்றியில் தன் நெற்றியைத் சாய்த்து மூச்சிரைக்க நின்றான்.
“உன்னை விட்டு ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாதுடி ராஷி… சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு என்கிட்ட வந்துடு,” என்று அவனது கண்கள் காதலின் உச்சத்தில் மின்னப் பேசினான்.
ராஷியின் முகம் வெட்கத்தில் சிவந்து போக, அவனது நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, “சீக்கிரமே வந்துடுவேன் அருள்…” என்று மெல்லிய குரலில் உறுதியளித்தாள்.
அந்த விடியற்காலைக்கு முந்தைய இருட்டில், தென்னந்தோப்பின் குளிர் காற்றும் அவர்களின் இந்த முதல் முத்தத்தின் கதகதப்பும் காதலின் புதிய அத்தியாயத்திற்குச் சாட்சியாய் நின்றன.அருளின் அணைப்பிலிருந்து மெல்ல விலகிய ராஷி, அவனது கண்களை ஆழமாகப் பார்த்தபடி ஒரு குறும்புச் சிரிப்போடு பேசத் தொடங்கினாள்.
“ஹலோ, மிஸ்டர் அருள்மொழிவர்மன்! இனிமே நான் உங்களைத் தேடி வரமாட்டேன்… நீங்கதான் என்னைத் தேடி வரணும்! காலம் நேரம் எல்லாம் சரியா வரும்போது, எங்க அப்பாகிட்ட நம்ம காதலைப் பத்தி சொல்றேன். நீங்க முறைப்படி பொண்ணு கேட்டு வரணும், சரியா?”
அவளது அந்த கம்பீரமான நிபந்தனையைக் கேட்டதும் அருளின் முகத்தில் ஒரு மாபெரும் புன்னகை மலர்ந்தது.
“அதைவிட எனக்கு வேற என்னடி வேலை?” என்று காதலின் உச்சத்தில் சொன்னவன், அவளது எலும்புகள் மொத்தமாக நொருங்கும் அளவுக்கு அவளை மீண்டுமொரு முறை தன் வலிமையான கரங்களால் இறுக்கி அணைத்தான்.
அவளை அணைத்தபடியே தென்னை மரத்தின் மீது மீண்டும் சாய முயன்றான். ஆனால், காதலின் வேகத்தில் நிலைதவறி, மரத்தைத் தாண்டிச் சற்றுத் தள்ளி இருவரும் தடுமாறிச் சரிந்தனர்!
அங்கிருந்த தென்ன மட்டைகள் மற்றும் உதிர்ந்த தென்ன ஓலைகளின் மீது இருவரும் ஒன்றாக விழுந்தனர்.
அங்கே, ராஷி கீழே இருக்க… அருள்மொழிவர்மன் அவள் மேலே விழுந்திருந்தான்!
அவனது வலிமையான, அகன்ற தேகம் அவளது பிஞ்சு உடலை மொத்தமாக மூடிக் கொண்டிருக்க, அந்த எதிர்பாராத எடையில் ராஷி ஒரு நொடி மூச்சுத் திணறிப் போனாள். அவளது கண்கள் அகல விரிய, அவளது நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.
ஆனால் அருள் அவளை விடவில்லை. ஒரு ஆக்டோபஸ் போல தன் கைகளாலும் கால்களாலும் அவளை மொத்தமாகப் பின்னி வளைத்து, இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
நிலவொளியின் வெளிச்சத்தில் மிளிர்ந்த அவளது ஒவ்வொரு அங்கத்தையும் தன் காதலால் நிரப்பத் தொடங்கினான். அவளது நெற்றி, கன்னங்கள், கூர்மையான மூக்கு, வளைந்த கழுத்து, காதோரம் என அவனது கண் பட்ட இடங்களிலெல்லாம் தன் வலிமையான, கதகதப்பான முத்தங்களைப் பொழிந்தான்.
அவனது தொடர்ச்சியான முத்தக் மழையில் ராஷியின் திணறல் கரைந்துபோய், அவளுக்குள் ஒரு புதிய உணர்ச்சி அலை கரையேறியது.
“இப்படியே இருந்துடலாம் போல இருக்குடி…” என்று அருள் அவளது காதோரம் முணுமுணுக்க, அவனது மூச்சுக்காற்று அவளது உடலெங்கும் தீயாய் பரவியது.
சராசரியான எந்த எல்லைகளும் இல்லாமல், ஒரு சரத்தைப் போல இருவரும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருந்தனர்.
வர்ணம் மிளிரும்…

