• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நானும் என் மகனும்

நிதனிபிரபு

Administrator
Staff member
இது 2019ல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறேன். பாத்ததும் சிரிப்பு வந்திட்டுது.

----------------------------


நேற்றுப் பின்னேரம் எண்ணெய் போத்திலைக் கொண்டுவந்து என்னட்ட தந்திட்டு, “உங்களுக்கு எட்டுமா?” எண்டு ஒரு நக்கல் சிரிப்பு. வேறு யாராய் இருக்கும்? நான் பெத்த மகனேதான்!

எண்ணெய் வச்சுவிட அவரின்ர தலை எனக்கு எட்டாதாம். என்ன நக்கல் என்ன சிரிப்பு. எனக்கு பெரும் கடுப்பு.

“வரவர நீங்க சின்னன் ஆகுறீங்க அம்மா.” வாம்.

அவரின்ர தோள் அளவுதான் நான். அதற்கென்று, என்ர கையளவுக்கு இருந்த மகன் இண்டைக்கு வளர்ந்ததும் என்னைப் பார்த்து அப்படிக் கேட்கலாமோ?

ஒரே பிடி! தலை உச்சி முடியை பிடிச்சதும் அவரின்ர தலை தானாக எனக்கு முன்னால மண்டியிட்டுவிட்டது.

“நீங்க எவ்வளவு உயரம் வளந்தாலும் அம்மாக்கு முன்னால தலை குனிஞ்சுதான் நிக்கவேணும். இல்லையோ நிக்க வைப்பன்!” எண்டு சொல்லிப்போட்டு எண்ணெய் வச்சு விட்டேன்.

‘நீங்க எல்லாம் எந்தக் காலத்திலையும் சரிவர மாட்டீங்க’ எண்டுற மாதிரி தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிப்போட்டு ஆள் போய்ட்டார்.

யாரிட்ட சேட்டை விடுறது எண்டு இல்லையா? அம்மா ஒண்டும் சும்மா இல்ல!
 

Ananthi.C

Well-known member
அவன் தோளுக்கு தான் நான் இருக்கிறேன் என்று என்னோட வாலுப்பையனும் சமீபமாக இப்படி தான் என்னை வம்பு இழுக்கிறார் 😔😔... பத்தாவது பரீட்சை தான் எழுதப்போகிறானாம் ஆனால் என்னை விட உயரமாம் அத்தனை பெருமையாக சொல்லுவான் 😄😄
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom