• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வித்தியாசமான எங்கள் குடும்ப வழக்கு

நிதனிபிரபு

Administrator
Staff member
இதை 2021ல் பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறேன் . இன்று நினைவூட்டவும் அதை இங்கே கொண்டுவந்து போடுறேன்.

பிள்ளைகளுக்கு கிழமைக் காசு கொடுக்கிறது வழக்கம். (இப்ப பள்ளிக்கூடம் இல்லாததால அவேன்ர வங்கி பே நட்டத்தில ஓடிக்கொண்டு இருக்கு.) ஒவ்வொரு கிழமையும் முடிஞ்சா மிச்சமா இருக்கிற சில்லறைகளைத் தந்து தாள் மாத்துறது வழமை.

உதாரணத்துக்கு 4 யூரோ சொச்சம் இருந்தா தந்திட்டு அதை 5 யூரோ தாளா மாத்திக்கொள்ளுவினம். இதுவே 80 சென்ட்ஸ் (சதம்)அப்பிடி இருந்தா அதை தந்து 1 யூரோவா மாத்துறது. அதுகூட நான் குடுக்க மாட்டன். தகப்பன் தான்.

இப்பிடி போய்க்கொண்டிருந்த வாழ்க்கை வரலாற்றுல இண்டைக்கு புதுமையான வழக்கு ஒண்டை எங்கட குடும்பம் சந்திச்சது.

தகப்பனிட்ட வந்த சிந்து 14 சென்ட்ஸ் குடுத்திட்டு ஒரு யூரோவா மாத்தித் தரச் சொல்லிக் கேட்டவா. எல்லாத்துக்கும் தலையாட்டுற தகப்பனுக்கே மனம் பொறுக்கேல்ல. “என்னம்மா இது?” எண்டு கேட்டா, அவவிட்ட ஏற்கனவே 9 யூரோ இருக்கு. அதை பத்து யூரோ தாளா மாத்தவேணும். அம்மாட்ட விளையாடேலாது அப்பாக்கு மிளகாய் அரைக்கலாம்.

சில்லறை டீலிங் எல்லாம் அப்பா. தாள் டீலிங் எல்லாம் அம்மா. அம்மாட்ட கணக்கு கணக்கா இருக்கோணும். அப்பாட்ட கணக்கு எப்பிடியும் இருக்கலாம்.

சோ பிள்ளை 10 யூரோ தாள் மாத்திக்கொண்டு போறா.

முடிவு சுபம்!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom