பார்வை 8
காலேஜ் கல்சுரல்ஸ் முடிந்த பிறகு இப்போதுதான் அவள் அவனை பார்க்கிறாள். ஆனால் அவள் எங்கே வசீகரனின் பெயரை சொல்லிவிடுவாளோ என்று மனம் ஒரு கணம் தடுமாறியது. அவளையே கேட்டுக் கொண்டாள், "அவன் யாரா இருந்தால் என்ன?"
"எனக்கு ஏன் மனசு படபடக்குது?" என்று எண்ணியவள், "ஃபர்ஸ்ட் கிரஷ் அதான் இப்படி தோணுது போல," என்று சமாதானம் செய்துகொண்டாள்.
ஆனால் அவள் அறியவில்லை, ஏற்கனவே அவளது மனதிற்குள் அவன் நுழைந்துவிட்டான். இனி அவள் மனம் முழுவதும் அவன் எண்ணம் வந்து அவளை பாடாய் படுத்த போகிறது என்று.
இவர்கள் மூவரும் வருவதை பார்த்த பிரியா, இவர்களை அருகே வருமாறு அழைத்தாள். அப்போதுதான் இவர்களை திரும்பி பார்த்த வசீகரன், விழிகள் விழியெடுக்காமல் அவளைப் பார்த்ததான் . அவன் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்து, "மை லிட்டில் லவ்" என்று.
வசீகரனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த மித்ரன், வசீகரனின் பார்வை சென்ற இடம் பார்க்க , அதில் ஆச்சரியப்பட்டு பிரியாவிடம் கேட்டான், "யாருடி இவங்க?"
"என் ஃபிரண்ட்ஸ்," என்றாள் பிரியா.
"இவ்வளவு நாளா எனக்கு அறிமுகம் செய்யவே இல்லை," என்று குறையாக சொல்ல .
"இவ்வளவு நாளா நீ எத்தனை முறை இங்க வந்த?" என்றாள் அவள்.
"அது என்று யோசித்தவன் ஒரு ரெண்டு முறை ," என்றான் அவன்.
"அப்புறம் எப்படி அத்தான்?" என்றாள் அவள்.
இதுவரை சந்தர்ப்பம் அமையவில்லை. அத்தான் , அதுமட்டும் இல்லை. வசீ அண்ணா தான் கேட்டாங்க, மதுமதியை அறிமுகம் செதுவைக்கும்படி. என்றாள் கண்களை சிமிட்டி அவனுக்கு மட்டும் கேக்குமாறு.
உடனே மித்ரன் நண்பனை திரும்பி பார்த்தான். அவனோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நின்றிருந்தான் .
"ஆனா உனக்கு ஒண்ணுமே தெரியாது, அப்படிதான," என்றான் வசீகரனை பார்த்து .
வசீகரன் எதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே நின்றான்.
"ஓ, இதுக்காக தான் என்ன கூட்டி வந்தயா? என்னவோ எனக்காக என்னோட வந்தது போல பில்ட் அப் எல்லாம் பண்ண," என்றவனை வசீகரன் இதழுக்குள் புன்னகைத்தபடி பார்த்தான்.
"சிரிக்காத டா, கடுப்பா இருக்கு," என்றான் மித்ரன்.
விடு மச்சான், இந்த உதவி கூட பண்ண மாட்டிய என்று வசீகரன் சொல்லிக் கொண்டிருந்த போது, மூவரும் அருகில் வந்தனர்.
"ஏய் கீது, மது, சந்து, இவர் தான் என் அத்தான், மித்ரன் இவர், அவர் ஃப்ரெண்ட் வசீ அண்ணா," என்றாள் பிரியா.
மூவரும் அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே "ஹாய்" என்றார்கள். வசீகரனை பார்த்த மதுமதியோ, அவனின் கூர்மையான பார்வையில் தடுமாறி, தனது பார்வையை தழைத்துக்கொண்டாள்.
வசீகரனின் பார்வை அவளுக்குள் ஒரு குறுகுறுப்பை மூட்டியது.
என்ன இவன் இப்படி பார்க்கிறான்? என்று நினைத்தவள், பின்னர் அவனை மறந்தும் பார்க்கவில்லை.
“மித்ரன்… என்னடி, சந்து பொந்து எல்லாமா பேர் வைப்பாங்க?” என்று பிரியா காதில் கிசுகிசுக்க, அது எப்படியோ சந்தியாவின் காதில் விழுந்துவிட்டது. உடனே சந்தியா பிரியாவை முறைத்தாள்.
அவளைப் பார்த்த பிரியா,
“சும்மா இரு அத்தான்,” என்றாள் சற்றே அதட்டலாக.
கீதா,
“இவங்க ரெண்டு பேரையும் நாங்க பார்த்திருக்கோமே… காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல,” என்றாள்.
உடனே சந்தியா,
“ஆமாம்… பேஸ்கட் பால் சாம்பியன் தானே இவர்?” என்று வசீகரனைப் பார்த்தவாறு கேட்டாள்.
“நானும் தான்,” என்றான் மித்ரன்.
“அப்படியா அண்ணா? ஆனா அவர் தானே சூப்பரா விளையாடினார்,” என்றாள் சந்தியா.
“நான் அண்ணா… அவன் அவரா?” என்றான் மித்ரன் கடுப்பாக.
உடனே கீதா,
“உங்களுக்கு தான் ஆள் இருக்கே… அப்ப நீங்க அண்ணாதான்,” என்றாள்.
பிரியா உடனே அவன் கையை கிள்ளிவைத்து,
“என்ன அத்தான்… நான் இருக்கும்போதே இப்படி பேசுற? நான் இல்லனா என்னெல்லாம் பேசுவே?” என்றாள் கிசுகிசுப்பாக.
“சும்மா ஜாலிக்குப் பேசினேன் டி… நீதான் எப்பவும் என் குவீன்,” என்று அவன் கண்களை சிமிட்டியவாறு சொன்னான்.
இவ்வளவு நடந்துகொண்டிருக்கும் வரை, வசீகரன் மதுமதியையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ யாரையும் பார்க்காமல், தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள்.
இதை வசீகரன் அருகில் நின்றிருந்த கீதா முதலில் கவனித்தாள்.
ஓ… கதை இப்படி போகுதா? என்று நினைத்தவள்,
“க்ஹும்…” என்று குரலைச் செருமி,
“நாங்களும் இருக்கோம்,” என்றாள்—அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
சட்டென்று வசீகரன் கீதாவை பார்க்க, கீதா நமட்டு சிரிப்புடன் அவனை நோக்கினாள்.
அவன் விழிவிரித்து பார்க்க, கீதா மதுவை கடைக்கண்ணால் காட்டி புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
வசீகரன் உடனே வேறு பக்கம் பார்த்தான். அவன் இதழில் கீற்று போன்ற ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
உடனே கீதா மதுவைப் பார்த்து,
“மது… கீழ ஏதாவது விழுந்துடுச்சா? கீழே என்ன தேடுற?” என்றாள்.
“ஒண்ணும் இல்லையே,” என்று புரியாமல் பார்த்தாள் மது.
“இல்ல… வந்ததிலிருந்து கீழேயே பார்க்குற. ஏதாவது தேடுறியோன்னு நினைச்சேன்,” என்றாள் கிண்டல் குரலில்.
அதை உணர்ந்த மது கீதாவை முறைத்தாள்.
கீதா அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்த்தாள்.
அப்போது மித்ரன்,
“நீங்க ரெண்டு பேரும் தான் பேசிட்டே இருக்கீங்க. மது சிஸ்டர் பேச மாட்டாங்களா?” என்றான்—வசீகரனை கடைக்கண்ணால் பார்த்தவாறு.
“அப்படியெல்லாம் இல்லை அண்ணா,” என்றாள் மது—ஒருவித சங்கோஜத்துடன்.
“அவ பழகற வரைக்கும் ரொம்ப பேச மாட்டா அண்ணா. ஆனா பேச ஆரம்பிச்சா அவ்வளவுதான். குட் சிங்கர்,” என்றாள் கீதா.
“எங்களுக்கு தான் தெரியுமே,” என்றான் மித்ரன்—பக்கவாட்டாக திரும்பி வசீகரனை பார்த்தபடி.
“அன்னைக்கு எல்லா பாட்டுமே சூப்பரா இருந்தது,” என்று மித்ரன் மதுவை பாராட்ட,
“தாங்க்ஸ் அண்ணா,” என்றாள் அவள்.
“வசீ அண்ணாவும் தான் பேசவே இல்லை. அவரும் ஷை டைப்பா, அண்ணா,” என்றாள் கீதா—சிரிப்பை அடக்கியபடி.
வசீகரன் சட்டென அவளை பார்த்தான்.
“இல்ல… நீங்க பேசவே இல்லையே, அதான்,” என்றாள் கீதா இழுவையாக.
“அவனுக்கு பொண்ணுங்கன்னா கொஞ்சம் அலர்ஜி. ரொம்ப பேச மாட்டான்,” என்றான் மித்ரன்.
மித்ரனை முறைத்த வசீகரன்,
“என்ன பேசணும் சிஸ்டர்?” என்று கீதாவை நேரடியாக கேட்டான்.
“ஒண்ணும் இல்ல அண்ணா… சும்மாதான்,” என்றவள் சிறிது நிறுத்தி,
“ஒண்ணு சொல்லணும்,” என்றாள்.
“ஒண்ணு கேட்டா அப்புறம் ‘ஒண்ணு’ சொல்லி காமெடி பண்ண மாட்டீல?” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“இல்ல அண்ணா… சீரியஸா தான். அந்த மூணு நாள் புரோகிராமும் சிம்ப்ளி சூப்பர்,” என்றாள்.
“தாங்க்ஸ்,” என்றான் அவன்.
“ உங்க பிளே ஆசம் அண்ணா , சான்சே இல்லை. என்னமா விளையாடுநீங்க. நாங்க எல்லாம் உங்களுக்கு தீவிர விசிறி ஆய்டோம் தெரியுமா என்றாள் அவள்
அதற்கும் அவனிடம் புன்னகைதான். அவனது பார்வை மதுவை தொட்டு தொட்டு மீண்டது. ஆனால் அவள் அவனை நிமிர்ந்தும் பார்த்தாலில்லை.
“ரெண்டு பேரும் கொஞ்சம் இருங்க… எப்ப இருந்து அவன் உனக்கு அண்ணன் ஆனான்? எனக்கு புரியல,” என்றான் மித்ரன்.
“ஜஸ்ட் நௌ தான் அண்ணா,” என்றாள் கீதா—நான் உங்களை கவனிச்சேன் என்பதுபோல் வசீகரனை பார்த்து.
“ஓஹோ… அப்படியா?” என்றான் மித்ரன்—யோசனையாக.
“சரி பிரியா, நாங்க கிளம்பறோம். பஸ்க்கு லேட் ஆகிடுச்சு,” என்றாள் கீதா.
உடனே மித்ரன்,
“என்ன சிஸ்டர், அதுக்குள்ள ஒரு கப் காப்பி ஆர் டீ சாப்பிட்டு போகலாமே,” என்றான்.
“இல்ல ப்ரோ… டைம் ஆகிடுச்சு. இன்னொரு நாள் பார்க்கலாம்,” என்றாள் கீதா.
“பை மித்ரன் அண்ணா… பை வசீ அண்ணா,” என்றாள் கீதா.
சந்தியாவும் “பை” சொல்ல, மது தலையசைத்து மூவரிடமும் விடைபெற்றாள்.
அக்கணத்தில், மது மற்றும் வசீகரன்—இருவரது கண்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு விடைபெற்றன.
“என்னடா… கண்களிலேயே பேசிக்கிறீங்க?” என்றான் மித்ரன்.
“சும்மா இருடா… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல,” என்றான் வசீகரன்.
“சரி வசீ… நான் இவகூட போறேன். நீயும் கிளம்பு,” என்றபடி மித்ரன் நகர்ந்தான்.
.. . . . . . . ...
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன.
தோழிகள் நால்வரும் பரூக் ஃபீல்ட் மாலுக்கு சென்றிருந்தனர். அங்கே மித்ரனும் வசீகரனும் வந்திருந்தனர். அவர்கள் தற்செயலாக அங்கு வரவில்லை; பிரியா தான் சொல்லியிருந்தாள்.
கீதாவும் சந்தியாவும் ப்ளே ஏரியாவில் விளையாடிக்கொண்டிருக்க,
மதுவும் பிரியாவும் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர்.
அப்போது,
“ஹாய் பிரியா,” என்றவாறு நண்பர்கள் இருவரும் அவ்விடம் வந்தனர்.
“ஹாய் அத்தான்… ஹாய் அண்ணா… வாங்க,” என்றாள் பிரியா.
அவர்கள் இருவரும் தோழிகள் இருவருக்கு எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.
அப்போது பிரியா, மித்ரனிடம்,
“எங்க வராம இந்த முறையும் என்ன ஏமாத்திடுவியோனு நினைச்சேன்… பட் வந்திட்ட,” என்றாள்.
“நான் வரலைனாலும் உன் அண்ணன் என்னை விடமாட்டான்… ஏன்னு தெரியுமில்ல?” என்றான்—மதுவை கடைக்கண்ணால் காட்டியபடி.
“என்ன மா மது… எப்படி இருக்க?” என்றான் மித்ரன்.
“நல்லா இருக்கேன் அண்ணா,” என்றாள் அவள்.
“எப்படி?” என்றான் கேள்வியாக.
மது புரியாமல் விழிக்க,
“இல்லமா… இவ கூட இருக்கற நீ எப்படி நல்லா இருக்க?” என்றான்—சிரிக்காமல்.
“மாமா…” என்று பிரியா செல்லமாக முறைத்தாள்.
“இல்லாடி… சும்மா,” என்றான்.
அதை பார்த்து மது சிரிக்க,
அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன், தன்னை மறந்து அவளது சிரிப்பில் இணைந்து கொண்டான்.
உடனே மித்ரன்,
“இங்க ஒரு ஜீவன்… எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாம சிரிக்குது,” என்றான்—வசீகரனின் தோளில் கை போட்டவாறு.
தன்னைத் தான் சொல்கிறான் என்பதை உணர்ந்த வசீகரன்,
சங்கோஜத்துடன் முகத்தை பக்கவாட்டாக திருப்பி, சிரிப்பை அடக்கினான்.
அவன் அந்தச் சிரிப்பை பார்த்த மதுவின் விழிகள்,
அவனை ரசனையுடன் நோக்கின.
பிறகு மித்ரன், மதுவிடம்,
“பிரியா எப்படி? நல்ல படிப்பாளா… இல்ல வாய் மட்டும் தானா?” என்றான்.
“இல்ல அண்ணா… நல்ல படிப்பாள். கொஞ்சம் குறும்பும் பண்ணுவா. மேடம் கிட்ட மாட்டிக்குவா. எப்பவும் அவுட்கோயிங் ஸ்டூடண்ட் தான். கிளாஸ்க்கு வெளியில தான் அதிகம் இருப்பா,” என்றாள் மது.
“அத்தான்… இவ சொல்லறத நம்பாத. இவ மட்டும் என்ன பேசமாட்டா, ஆனா பேச ஆரம்பிச்சானா அவ்வளவுதான். எப்பவும் கிளாஸ்ல பேசுறதுக்குத்தான் மேடம் கிட்ட திட்டு வாங்குவா,” என்றாள் பிரியா.
இருவரும் மாறி மாறி புகார் சொல்ல ஆரம்பிக்க,
“போதும் போதும்… முடியல மா. தெரியாம கேட்டுட்டேன். அதுக்கு இப்படியா?” என்றான் மித்ரன்.
“சரி அத்தான்… அதை விடு. RMKV-யில் டிரஸ் எடுத்துத் தரேன்னு சொல்லியிருக்க. வா போலாம்,” என்றாள் பிரியா.
“சரி… வா போலாம்,” என்றான் மித்ரன்.
உடனே பிரியா,
“மது… நீ வரையா? இல்ல இங்கேயே இருக்கையா?” என்றாள்.
மது பதில் சொல்லும் முன்,
“அவர்கள் போகட்டும் மது… நாம இங்கே வெயிட் பண்ணலாம்,” என்றான் வசீகரன்.
மது அவனை கேள்வியாக பார்க்க,
அவன் தணிந்த குரலில்,“அவர்களுக்கு ப்ரைவசி வேண்டாமா?” என்றான்.
அவளும் ‘ஆம்’ என்பதுபோல் மெதுவாக தலை அசைத்தாள்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.