ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,479
113
Germany
பார்வை 12

மதுமதி சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“என்னடி, திருவிழாவுல காணாம போன குழந்தை மாதிரி சுத்தி சுத்தி பார்க்கற? யார தேடுற? உங்க அம்மா, அப்பா எல்லாம் ஊர்ல இருக்காங்க ஞாபகம் இருக்கா?” என்று கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

மதுமதி அவள் தோளில் ஒரு அடி வைத்து,
“என்னை கலாய்க்கலன்னா உனக்கு தூக்கமே வராது.

ரொம்ப கூலிங்கா இருக்குன்னு பார்த்தேன். நம்ம ஊரு மாதிரி சுத்தியும் மலை இருக்கு இல்ல ,” என்றாள்.

“ஓ… அப்படியா?” என்றாள் கீதா.
“நம்ம ஊரு மலை இங்க எப்படி வரும்?” என்று சந்தியா புரியாமல் கேட்டாள்.

“அடியே மலை மாடே! ஹிஸ்டரில ரொம்ப வீக்கோ? மேற்கு தொடர்ச்சி மலையின் எக்ஸ்டென்ஷன் தான் இது,” என்றாள் கீதா.

“யாருடி மலை மாடு? நீதான் காட்டெருமை!” என்று சந்தியா பதலளித்தவள் . கீது இங்க பாரு உன் கிண்டல் கேலி எல்லாம் மதுவோட நிறுத்திக்கோ , என்கிட்ட வந்த கடுப்பாயிருவேன் பார்த்துக்க என சொல்ல

“போதும் போதும்… உங்க சண்டையை நிறுத்துங்கடி. வாங்க, வீட்டுக்குள்ள போகலாம்,” என்றாள் பிரியா.



“அத்தான், நீ வீட்டுக்குப் போ. நான் அப்புறம் வரேன். அத்தை கிட்ட வந்து பேசறேன்னு சொல்லு ,” என்றாள் பிரியா மித்ரனிடம்.

“சரி,” என்று தலைஅசைத்தவன்,
“சீக்கிரம் ரெடியா இருங்க. அவுட்டிங் போகணுமில்ல,” என்றான்.

“சரி,” என்றவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். வசீகரனும் காரை எடுத்துக்கொண்டு மித்ரனின் வீட்டுக்குச் சென்றான்.

மித்ரனின் அண்ணன் மனோகரனுக்கும், பிரியாவின் அக்கா ப்ரீத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு இவர்களென, சிறு வயதிலேயே பேசி வைத்த திருமணம் அது. அதேபோலவே, பிரியாவுக்கும் மித்ரனுக்கும்.

பிரியா தோழியர் புடைசூழ வீட்டுக்குள் நுழைந்ததும், பிரியாவின் அக்கா ப்ரீத்தா ஓடிவந்து அவளை அணைத்தாள்.
“வந்துட்டியா வானரம்? நீ இல்லாம ரொம்ப போர். ரொம்ப மிஸ் பண்ணேன்டி உன்ன,” என்றாள்.

“நானும் அக்கா… உன்ன, நம்ம வீட்ட, அம்மா அப்பா, ஆச்சி எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன்,” என்று சொல்லியவாறே அவளும் அவளை அணைத்துக் கொண்டாள்.

“சரி, சரி… அப்புறம் கொஞ்சிக்கலாம். இப்ப அவங்க எல்லாரும் போய் கொஞ்சம் தயாராகி வரட்டும். அவங்களை அறைக்கு கூட்டிட்டு போமா, பிரியா?” என்றார் அவள் அன்னை கனகலட்சுமி.

“சரி மா,” என்றாள் பிரியா.
“அப்புறம் அக்கா, நாங்க எல்லாரும் ஃபால்ஸ் குளிக்க போறோம். நீயும் வரியா?” என்றாள்.

உடனே கனகலட்சுமி,
“அவ எதுக்குடி, கூறு கெட்டவளே? கல்யாணப் பொண்ணை கூட்டிட்டு போய் எங்காவது வழுக்கி விழுந்தா என்ன பண்ணுவ?” என்று கடிந்து கொண்டார்.
“நீ உன் ஃப்ரெண்ட்ஸோட போ. மித்ரன் அத்தான் வரேன்னு சொல்லியிருக்கான் தானே?” என்றார்.

புன்னகையுடன் மற்ற தோழிகளையும்,
“வாங்கம்மா,” என்று வரவேற்றார்.

“என்ன கனகு, உனக்கு இவ்வளவு கோபம்?” என்று சொல்லி அவள் அவர் கன்னத்தை கிள்ள,
“கனகு!” என்ற அந்த அழைப்பில் அவளை முறைத்தார் கனகலட்சுமி.

“சரி… சரி… கோவத்த குறை கைப்பிள்ளை.

சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சுடலாம்; நெஞ்சு கிழிஞ்சிருச்சு எங்க முறையிடலாம்?” என்று பாடியவாறே அவளது முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தார்.

“கனகு, சொன்னா தோலை உரிப்பேன்… பார்த்துக்க,” என்றார்.

“ஆ… அம்மா, வலிக்குது!” என்றவளிடம்,
“வலிக்கத்தான் அடிக்கிறது. போ… போய் ரெடியா ஆகு. அவங்களையும் கூட்டிட்டு,” என்று சின்ன மகளை செல்லமாக கடிந்தார்.

“அப்பா, எங்கம்மா?” என்றாள் பிரியா.

“மாமாவ பாக்கறதுக்கு வெளியே போயிருக்காங்க,” என்றார் அவர்.

“சரி மா, நாங்க போய் கிளம்புறோம்,” என்று சொல்லிக்கொண்டே, பிரியாவின் அறைக்குள் நால்வர் படையும் நுழைந்தது.

நால்வரும் புறப்பட்டு காலை உணவையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். பிரியாவின் வீடு அந்தக் காலத்து மச்சு வீடு; கிட்டத்தட்ட நான்கு கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. சுற்றி பூச்செடிகள், பல மரங்கள் என்று பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. மதுமதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வீட்டையே நான்கு முறை சுற்றிச் சுற்றி வந்திருப்பாள்.

“என்னடி, கோவிலுக்கு போய் மூணு தடவை சுத்தினாலாவது பிரயோஜனம்… வீட்டை ஏன் டி சுத்திக்கிட்டே இருக்க?” என்றாள் கீதா.

“ஏய், சூப்பரா இருக்கு போடி! உனக்கு ரசனையே இல்ல. எவ்வளவு அழகா இருக்கு… நீ ரசிக்கலன்னா பரவாயில்லை, என்னையாவது ரசிக்க விடு,” என்றாள் மது.


“நான் ரசிக்கிறது இருக்கட்டும்… உன்னை ரொம்ப நாளா ஒருத்தர் ரசிச்சுக்கிட்டே இருக்காரு. அவருக்கு ஏதாவது பதில் இருக்கா?” என்றாள் கீதா, மதுவிடம்.

பிடிபட்ட பாவனையில் மது முழித்தாள்.
“என்னடி, எதையோ திருடினவளாட்டம் முழிக்குற? சரிதான்… நீ திருடிதான் வசீ அண்ணாவோட இதயத்தை திருடின திருடி!”

அது .. என்றவள் சற்று தடுமாறினாள்.

“ஏய் அம்முகுணி! வசீ அண்ணா ப்ரொபோஸ் பண்ணி எவ்வளவு நாள் ஆச்சு… நீ இன்னும் ஏன் பதில் சொல்லல?”

“இது உனக்கு எப்படி தெரியும்?” என்று அதிர்ச்சியில் விழி விரித்தாள் மது.

“தெரியும்… சுரக்காய் உப்பில்லன்னு தெரியும். நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதா? பிரியாதான் சொன்னா… அவங்க அத்தான் சொன்னதை.”

“அப்போ உங்க எல்லாருக்குமே தெரியுமா?” என்றாள் மதுமதி சங்கடத்துடன்.

“எல்லாருக்கும் இல்ல… நம்ம நாலு பேர்ல மூணு பேருக்குத்தான் தெரியும். சந்துவுக்கு மட்டும் தெரியாது. சொல்லல; அவ ஒரு டமாரம், பிரபலப்படுத்தி விடுவாள்.”அது சரி மேடம் சமாதானம் ஆகியாச்சா என்றவள் அவளை குறுகுறுவென பார்க்க

“என்ன சமாதானம் என்றாள் “,ஒன்றும் அறியா பாவனையில்

“அண்ணா அன்னைக்கு பேசியதுக்கு?” ,நானே என்ன இப்படி பேசறார் அப்பிடின்னு யோசிச்சேன் என்றாள் கீதா

ஹம் .. சாரி சொன்னார் என்றவளிடம் , இப்பவே ரொம்ப உரிமை எடுக்கிறார், கொஞ்சம் கஷ்டம் தான் என்றாள் கீதா.

“அப்பிடியெல்லாம் இல்லை”. நல்லவர் தான், என்ன கொஞ்சம் கோவம் வரும் அதனால் அவர் கண்ட்ரோல மீறி வார்த்தை வந்திடும் ஆன தப்புனா உடனே சாரி கேட்டிடுவார் , எங்கே அவனை கீதா தவறாக நினைத்துவிடுவாளோ என்று பரிந்து கொண்டுவந்தாள்

ஒரு நமட்டு சிரிப்புடன் சரி சரி நான் ஒன்னும் உன் அவரை தவறா நினைகல என்றவள் , எப்படி உடனே சப்போர்ட் பண்ண வர , ஆன ஒண்ணு மது இப்பதான் உனக்கு காதலிக்க பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியிருக்கு என்றாள்

அவளை அசடு வழிய பார்த்தாள் மது.

“சரி… எப்ப சொல்லப் போற உன் முடிவை?” என்றாள் கீதா.

“எனக்கே தெரியலடி. நான் லவ் பண்றேனா இல்லையா, ஓகே சொல்லலாமா வேண்டாமா… எனக்கே என்னை சரியா தெரியலைடி , அவங்க ரேஞ்ஜே வேற. எனக்கும் அவங்களுக்கும் ஒத்து வருமா? அவருக்கு எவ்வளவு கோபம் வருது… என்னால சமாளிக்க முடியுமா தெரியலைடி.” யோசிக்கவே பயமா இருக்குடி

“கீத்து… நான் என்ன பண்ணட்டும்? நீயே சொல்லு,” என்றாள் மது.

“நான் எப்படி சொல்ல முடியும்? இது உன்னோட முடிவா தான் இருக்கணும். உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு; பிடிக்கலன்னா வேண்டாம்,” என்று தோளை குலுக்கியவள் தொடர்ந்தாள்.

“ஒண்ணு மட்டும் சொல்லுறேன். ஒரு முடிவு எடுத்துட்டா, அதுக்குப் பிறகு என்ன ஆகும்னு பயந்து யோசிக்க கூடாது. எல்லா விஷயமும் கஷ்டம்தான் தரும்னு இல்லை; அதுல நல்லதும் இருக்கலாம். காதல் தப்பு ன்னு நான் சொல்ல மாட்டேன். அது நமக்கு வரும் துணை சரியா அமைவதைப் பொறுத்து. வசீ அண்ணாவைப் பொறுத்த வரைக்கும் எனக்கு தப்பா எதுவும் தோணலை. ஆனா உனக்கு என்ன தோணுது.. ஓகே அது உன் முடிவா இருக்கணும். நல்லதோ கெட்டதோ, அதை நீ எதிர்கொள்ள தயாரா இருக்கணும்.”

“படிக்கிற காலத்துல லவ் பண்ணுன்னு நான் சொல்ல மாட்டேன்.ஆன பண்ணினாலும் தப்பு இல்லன்னுதான் சொல்வேன். எதுவா இருந்தாலும் அது உன் முடிவு, உன் விருப்பம். உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்,” என்றாள்.

“சரி கீத்து,” என்றாள் மது.

“யாருக்கு சரி? வசீ அண்ணாக்கா?” என்றாள் கீதா.

“ச்சீ! நீ சொன்னதுக்கு சரின்னு சொன்னேன். சீக்கிரம் முடிவை சொல்றேன் என்றவாறு அவளை பிடித்து ஒரு சுற்று சுற்றினாள் .”

“அச்சோ உன்னோட முடியல மது விடு என்னை என்றவள்,எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிடு,” என்றாள் கீதா.

“சரிடி பெரிய மனுஷி. சொல்லிடுறேன். இப்ப கிளம்பலாமா?” என்று இருவரும் பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.

மற்றவர்களும் கிளம்பி நிற்க, நால்வருமாக வெளியே வந்தனர். அந்த நேரம் மித்திரனும் வசீகரனுடன் வந்தான்.

“என்னடே மித்ரா… காலையில வந்துட்டு வீட்டுக்குள்ள நுழையாம போயிட்டியா?” என்றார் பிரியாவின் தந்தை.

“இல்ல மாமா… ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க. அவங்களுக்கு ரூம் எல்லாம் பார்த்து வைக்கணும், அதான் அப்படியே போயிட்டேன். சரி மாமா, நாங்க பால்ஸ் போயிட்டு வந்துடறோம்.”

“பத்ரம்லே… கவனமா போயிட்டு வாங்க,” என்றார் அவரும்.

“சரி மாமா,” என்று சொல்லி, “பிரியா போலாமா?” என நால்வரும் வசீகரனின் காரில் ஏறினர்.

“டேய், அருவியில ரொம்ப தண்ணியாம். முதல்ல குற்றாலீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு, அப்படியே போய் அருவியில குளிச்சிட்டு வரலாம்,” என்றான் மித்ரன்.

“டேய் லூசு! கோயிலுக்கு போயிட்டு எவனாச்சும் குளிப்பானா? முதல்ல குளிச்சிட்டு, அப்புறம் கோயிலுக்கு போகலாம்,” என்றான் வசீகரன்.

“அவங்க எல்லாரையும் அப்படியே வர சொல்லிட்டேன்,” என்றான் மித்ரன்.

அனைவரும் அருவியில் குளிக்கச் சென்றனர். பெண்கள் நால்வரும் பெண்கள் புறமும், ஆண்கள் பத்து பேரும் ஆண்கள் புறமும் குளித்தனர். குளித்து வேற்றுடை மாற்றிக் கொண்டு, கோயிலுக்கு மெதுவாக அனைவரும் நடந்தனர்.

மதுமதி அடர் பச்சை நிற அனார்கலி சுடிதாரில், ஈரம் சொட்ட சொட்ட முடியை விரித்து, முன் பக்கத்தில் சிறிது முடியை மட்டும் எடுத்து கிளிப்பில் பொருத்திக் கொண்டு வந்தாள். பூரண சந்திரனைப் போன்று பொலிவான முகம்; அதில் அடர் பச்சை நிற சிறிய பொட்டு—பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தாள்.

வசீகரன் ஒரு நொடி அசந்துதான் போனான். மித்ரன் அவனின் தோளில் தட்டி,“ப்ரீஸ் ஆயிட்டியா டா? பார்த்தது போதும், வா போலாம்,” என்றவன் ,“நம்ம கூடத்தானே இருக்கப் போறாங்க. பார்த்துட்டேதான் இருக்கப் போறே… அப்புறம் என்ன?” என்றவனை வசீகரன் முறைத்துப் பார்த்தான்.

“போதும் டா, முறைத்தது. இப்படி பார்த்துப் பார்த்துதான் அந்தப் புள்ள உன்னைத் திரும்பிப் கூட பாக்க மாட்டேங்குது. இன்னும் முறைக்கிற நீ!” என்று சொல்லி வசீகரனை இழுத்துக் கொண்டு மித்ரன் முன்னால் நடந்தான். மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty

Gayathri Predeesh

New member
May 5, 2026
22
6
1
123456789@00000
கல்லூரி பருவத்தில் நடக்கும் இயற்கையான நிகழ்வை இயல்பாக எழுதியதற்காக நன்றி
 
  • Like
Reactions: STN- 75

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
கரெக்ட் மித்ரா....நானும் அதை தான் சொல்றேன்....எங்க கேட்கறான் இல்ல
 
  • Like
Reactions: STN- 75