• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
கையில என்ன? என்றான்.

முதலில் மலங்க மலங்க முழித்தாலும் உடனே நிதானத்திற்கு வந்து விட்டாள். “ஒன்னுமில்ல” என்றபடி நகரப் போனவளின் கையைப் பிடித்தான்.

அந்தக் கையை விடுவிக்க முயன்றவாறே “விடுங்க..ஒன்னுமில்ல” என வலது கையை பின்னால் மறைத்தாள்.அவளைத் திருப்பி தன்னருகில் இழுத்தவன் அவள் திமிற முடியாமல் ஒரு கரத்தால் வயிற்றை இடது கையோடு இறுக்கிப்பிடித்து,மறு கரத்தால் காயம் பட்ட கையை புரட்டிப் பார்த்தான்.

மீராவால் சற்றும் அசைய முடியவில்லை.”வலிக்கும்...விடு” என ஏறத்தாளக் கத்தினாள்.விடுவிக்க ஏகப்பட்ட முயற்சிகள் செய்தாள்.அவனோ எதையும் கண்டுக்காமல் அவள் சுற்றியிருந்த துணியை விலக்கினான்.அது ரத்தத்தோடு ஒட்டியிருந்ததால் வலியில் அழுதே விட்டாள்.அவளது கண்ணீர்த்துளி அவனது கையில் வழிந்து கொண்டிருந்தது.

“ஷ்ஷ்ஷ்...அழாதீங்க.பேபி
மருந்து போட்டா சரியாகிடும்மா”. என அவள் காயத்தின் மேல் மென்மையாக ஊதிவிட்டவாறே முதலுதவிப்பெட்டியின் அருகே சென்றான்.பிடியைத் தளர்த்தாமலே பெட்டியைத் திறந்து சில மருந்துகளை எடுத்தவன் அவனது அறையின் கட்டிலில் சென்று அவளை உட்கார வைத்தான்.மருந்துகளை பக்கத்தில் வைக்கப் போகவும் , அவள் விலகி ஓடப் பார்க்கவும் சரியாக இருந்தது.மீராவைப் பிடிப்பதற்காக நீண்ட அவனது கை, ஒபன் விலகிய சல்வாரியின் ஊடே வெற்றிடையில் அழுந்தப் பதிய அவனோடு அணைத்துப் பிடித்தான்.

“ஏன் ஓடனும் பேபி?? மருந்து போட்டா சரியாகும்” என அவள் காதருகில் மிக மென்மையாய் தத்தைத் தமிழில் சொல்லி கட்டிலில் உட்கார்ந்தவன் அவளை தன் மடி மீது அமரவைத்து துணி ஒட்டிக் கொண்டிருந்த அவள் காயத்தின் மேல் ஸ்பிரிட்டை ஊற்றி மெதுமெதுவாய் கழற்றினான்.அவன் வாய் ஊதுவதையும் நிறுத்தவில்லை.அவள் சிணுங்குவதையும் கூட நிறுத்தவில்லை.

“மெதுவா பண்ணு...அது நோகும்.எதுக்கு கத்திரி எடுக்குறீங்க. என ஆயிரம் கேள்விகளால் அவனைக் குடைந்தாள்.
இடைக்கிடையே திமிறிணாள்.
வலிக்கும் போது முகத்தை அவன் நெஞ்சோடு அழுத்தினாள்.அவனது தாடி உரசும் போது உண்டாகும் குறுகுறுப்பை அவனது தோளில் தேய்த்து சமாளித்தாள்.அத்தனையும் அவனுக்குத் தான் சோதனையாகியது.
சிதறிய அத்தனை கவனத்தையும் பிடிவாதமாய்த் துரத்திக் கொண்டு பெண்டேஜ் போட்டு முடித்தான் ரொஷான்.

இறுக மூடியிருந்த அவள் விழிகளும்,பற்களால் அழுத்தப்பட்டிருந்த இதழ்களும் இன்னும் என்னென்னவோ எல்லாம் அவனுக்குள் போதையேற்றிக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லையா? படக்கென்று கண்ணைத் திறந்த மீரா காயத்தைப் பார்த்தாள்.வெண்மை நிறத்தில் பற்றுப் போடப்பட்டிருந்தது.வலியும் குறைந்திருந்தது.மெல்ல தலையை பின்னுக்கு சாய்த்து அவனை அண்ணாந்து பார்த்தாள்.அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.நெஞ்சு படபடக்க விலகப்பார்த்தாள்.அவன் குனிந்து அவள் கண்களில் முத்தமிட்டான்.நெற்றியில் முத்தமிட்டான்.பிறகு கன்னத்திலும் மூக்கின் நுனியிலும்.ஒரு நொடி தாமதத்தின் பின்னால் அவள் இதழ்களைப் பருகினான்.அவள் கண்ணீர் அவன் கரங்களில் பட்டு அவனை நிதானப்படுத்தியதா?? உணர்வு வந்தவனாய் மனமில்லாமல் விலகினான்.

“பேபி….என்கூட இருக்கமாட்டிங்களா??உங்கள நான் நல்லா பார்த்துப்பன்.உங்களுக்கு பிரச்சினையே வர விடமாட்டன்.ப்ளீஸ்.என்ன நம்பனும்.எனக்கு யாருமே இல்ல பேபி.நீங்க கூட இருக்கமாட்டிங்களா பேபி.? என்றவன் அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கி கூந்தலில் முத்தமிட்டு வாசம்பிடித்தான்.அவளை விட மனமில்லாமல் அவள் கண்களுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தவன் ஏமாற்றத்துடன் பார்வையை விலக்கினான்.

“நாளைக்கி ஒரு ஃபோர்மாலிட்டி மாதிரி சின்ன விசாரனை ஒன்னு இருக்கு.காலைல ஒன்பது அப்டி ரெடியாகுங்க போகனும்” என்றவன் இரு கைகளிலும் அவளை ஏந்தியவனாய் அவளது அறையின் மெத்தையில் படுக்கவைத்தவன் இரவு உணவையும் தண்ணியையும் வைத்துவிட்டு கதவை மூடிச்சென்றுவிட்டான்.

மீராவின் மூளை தனது தொழிற்பாட்டை நிறுத்தி நேரமாகிவிட்டிருந்தது.உடலின் சக்தி பறிபோனவளாய் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அப்படியே தூங்கிவிட்டாள்.
************************
உணர்ச்சியற்ற முகத்துடன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான் ரொஷான்.பக்கவாட்டில் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வந்தாள்.அவனது பார்வையும் கவனமும் சாலையில் இருந்தது.காலையில் எழுந்ததும் அவன் சொன்னது போலவே தயாராகிவிட்டாள்.நேற்றைய நிகழ்வுகள் வந்து தனக்குள் என்னென்னவோ தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதைப் பற்றி நினைக்காமல் மனதை மாற்றினாள்.இந்த விசாரனை முடிஞ்சா வீட்டுக்கு அனுப்புவதா சொன்னானே. அது போதும்.இங்கிருந்து போனாலே போதும்.அப்பா,பாட்டியின் முகத்தை நினைவு படுத்திக்கொண்டே தயாராகினாள்.மீராவுக்கு ஒரு கையால் சுயமாக இயங்குவது கடினமாகவே இருந்தது.இருந்தும் அவன் சொன்ன ஒன்பது மணிக்குள் தயாராகிவிட்டாள்.அவன் கண்களைப் பார்க்கவில்லை.

ஆனாலும் அவனிடம் ஒரு உதவி கேட்க வேண்டியிருந்தது.கேட்டே ஆக வேண்டும்.அவள் அணிந்திருக்கும் சல்வாரில் அசெளகரிகமாக உணர்ந்தாள்.ஊரிலும் சரி கேம்பஸிலும் சரி கையில்லாத உடையை பொதுவில் போட்டதே இல்லை.கிராமத்தில் அதற்கு வாய்ப்பே இல்லாததால் அப்படியே பழகிவிட்டாள்.அதனால் தான் ரொஷானின் முன்னால் வருவதை முடிந்தளவு தவிர்த்து விடுவாள்.அடுத்த பிரச்சினை அந்த மூன்று நாட்கள்.அதற்குரிய எந்தவித ஆயத்தங்களும் அவளிடம் இல்லை.எப்போதும் கைப்பையில் தயாராகவே வைத்திருப்பவளுக்கு நாட்கள் நெருங்க நெருங்க பதட்டமாகவே இருந்தது.மாலாம்மா இருந்திருந்தால் சங்கடத்தை தவிர்த்திருக்கலாம்.ஆனால் அதற்குத் தான் வாய்ப்பே இல்லையே.எல்லாப் பிரச்சினையும் மறந்து அது பற்றியே மனம் சிந்தித்தது.ஏதாவது கடையில் நிறுத்தச் சொல்லி ஒரு துப்பட்டாவும்,செனிட்டரி நப்கின் ஒன்றும் வாங்க வேண்டும்.காசை அவனிடம் வாங்கிவிட்டு ஊருக்குப் போனதும் திருப்பிக் கொடுக்கலாம் என முடிவெடுத்துக் கொண்டாள்.

“ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா??”

அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவளோ குனிந்திருந்தாள்.என்ன?? என்றான்.

“நான் கடைக்குப் போகனும்.அவசரம்” என்றவள் சங்கடமாக அவனைப் பார்த்தாள்.

“எந்தக் கடை?” என்றான்.

தூரத்தில் ஒரு சீலைகள் அடுக்கப்பட்டிருந்த கடை ஒன்று தெரிய “இது தான்” என கைகாட்டினாள்.

ஜீப்பை ஓரமாக்கிவிட்டு இறங்கினான்.பேசாமல் இறங்கியவள் தயக்கமாக அவனைப் பார்த்தாள்.பணம் வேண்டும் என எப்படி கேட்பது? ஆயிரம் தடவை ஒத்திகை பார்த்த பின்னும் வாயை இலகுவில் திறக்க முடியவில்லை.

“இதானே நீங்க சொன்ன கடை??”

“ம்ம்ம்” என்றாள்.அவன் விறுவிறுவென வேகமாய்ப் படியேறினான்.அவளுக்குத்தான் ஓட வேண்டியிருந்தது.பெரிய கடை என்பதற்கில்லை.நடுத்தரமானது.
சல்வாருக்கு கறுப்பு துப்பட்டா பொருந்தும் என்பதால் கறுப்பை தேர்ந்தெடுத்தாள்.பெண்களே வேலை செய்தபடியால் பேட் (pad) இருக்குதா? எனக்கேட்க, இலகுவாக இருந்தது.ஒரு வழியாக தேடி வந்த இரண்டையும் வாங்கிவிட்டாள்.இனி பணத்தை என நினைத்தவாறே அவனைப் பார்க்க அவனோ பர்ஸை எடுத்து அவளிடம் தந்தான்.பேசாமல் வாங்கி பில்லைக் கொடுத்த பின் பர்சை அவனிடம் நீட்டினாள்.

“தேங்க்ஸ்….நான் வீட்டுக்குப் போனதும் அப்பாகிட்ட வாங்கித் தந்திடுவன்” என நெகிழ்வாகச் சொன்னாள்.கேட்பதற்கு முன்னமே அவன் நீட்டியது உண்மையிலேயே அவளை பாதித்தது எனலாம்.

அவன் சொன்னது போல விசாரணை என பெரிதாக ஒன்றுமில்லை.
பெயர்,ஊர்,அடையாள அட்டையின் இலக்கம் பற்றியும் திருமணம் எப்போ நடந்தது? என்பது பற்றியும் கேட்டார்கள்.அவள் ஏற்கனவே இந்த தகவல்களை கொடுத்திருந்ததால் அதனை ஒப்பீட்டுப் பார்த்தார்கள்.கடைசியாக ஒரு கையெழுத்து அவ்வளவு தான்.ஃபோர்மாலிட்டி முடிந்தது. அவள் வெளியே வர எழுந்த போது அங்கிருந்த பெண் அதிகாரி சொன்ன விஷயம் தான் அவளை யோசிக்க வைத்திருந்தது.

“ரொஷான் சார், உண்மையாவே உன்னை விரும்பி கட்டிக்கிட்டாரா?.
மனுஷனுக்கு அந்த உணர்வு கூட இருக்குப் போல.ஆனா ஒன்னு அவர் மட்டும் உன்னை கட்டிக்காட்டி நீ நாலாவது மாடியில தான் இன்னேரத்துக்கு விசாரிக்கப்பட்டுட்டு இருப்ப.முகாம்ல ஃபயர் நடந்து எல்லாரையும் பாதுகாப்பா ஆர்மி வெளிய கூட்டிட்டு வந்தப்போ நீ திரும்பவும் அதுக்குள்ள ஏன் ஓடனும்?? அடுத்தது, ஹாஸ்பிடல்ல இருந்த நயோமிகிட்ட சண்டை போட்டிருக்க.அங்கிருந்து சொல்லாம ஆர்மி காவல்ல இருந்து வெளிய வந்தது.நீ நின்றிருந்த பஸ் ஸ்ட்டோப்ல இருந்து பக்கமா தான் இன்னொரு ஃபயர் நடந்திருக்கு.இதெல்லாம் யோசிச்சா நீ சந்தேகத்துக்குரிய நபர்.

இப்போ சட்டம் தெரியும் தானே? .பயங்கரவாதச் சட்டம்.யாரையும் சந்தேகத்துல கைது பண்ணி என்ன வேணும்னாலும் பண்ணலாம்.அந்த பவர் எங்ககிட்ட இருக்கு.யாரும் யாருகிட்டயும் ஏன்னு கேட்க முடியாது. ரொஷான் சாரால தான் நீ பாதுகாப்பா இருக்க.ஏன்னா அவர் பதவியில அவ்வளவு நேர்மையான மனுஷன்.எங்க எல்லாருக்கும் சார்ல நிறைய மரியாதை.உன் அதிஷ்டம்.அவர்ட மனைவியாகிட்ட.
நாங்கலாம் சமூக அக்கறை குறைந்தவங்க.இன அக்கறையும் தான்.ஆனா சார் வித்தியாசமானவர்.
அதான் நீ தமிழா இருந்தும் உன்னை விரும்பி கட்டியிருக்கார்.

திமிராகப் பேசினாள்.
கடைசியாக,”வாழ்த்துக்கள் மிஸஸ் ரொஷான்”என்றாள்.அவளுக்கு மீராவை அவ்வளவு பிடிக்கவில்லை என சிரிப்பே இல்லாத அவளின் வாழ்த்தில் தெரிந்தது.அவள் சிங்களமாக இருந்தாலும்,மீராவுக்குப் புரியும்படியாக நன்றாகவே தமிழ் பேசினாள்.
***********
ஜீப்பை ஒரு கடையின் முன்னால் நிறுத்தினான் ரொஷான்.நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லி சாப்பிட்டாள்.அவன் இடியாப்பமும் சொதியும் சாப்பிட்டான்.சாப்பிட்டுக்கு மேலால் இஞ்சி ப்ளேண்டி வேறு.பிறகு,குவாட்டஸின் முன்னால் இறக்கிவிட்டவன் அவசரமாகச் சென்று விட்டான்.உள்ளே வந்த மீராவின் மனநிலை தான் தெளிந்த நீரோடையில் கல்லெறிந்தது போலிருந்தது.எனக்காகத்தான் அப்படி செய்தானா? இல்லையென்றால் அவள் நிலை?அந்தப்பத்திரிகையில் பார்த்த செய்தி நினைவுக்கு வந்தது.இவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேனா? நான் அவனுக்கு என்ன செய்திருக்கன் என்டு இவ்வளவு உதவிகள் செய்றான்.அவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது.காரணமே இல்லாமல் கொஞ்ச நேரம் அழுதாள்.

எனக்காகத் தான் இந்த முடிவுக்கு வந்தானா?? இல்ல அவ சொன்னது போல சமூக அக்கறை,
மனிதாபிமானம் தான் காரணமா? அவசரப்பட்டு கோபப்பட்டோமே.
மாலாம்மா அவளிடம் சொன்னதெல்லாம் அப்போது விளங்கவில்லை.அப்படீன்னா அந்தப் பார்வை,அதுக்கும் மேல என்னவோ எல்லாம் செய்தானே.அது எதுல வரும்.ஏனோ ரொஷானைப் பற்றி சிந்தித்தால் மட்டும் நேரம் போவதே விளங்குதே இல்ல.

அவனது கோபம்,மென்மை,அன்பு என நிறைய உணர்ச்சிகள் அவளது மனக்கண் முன்னால் வந்து வந்து போனது.வெளியே உட்கார்ந்தபடி அவனது நினைவுகளோடு இருந்தவளுக்கு இதமான காற்றின் சுகமும் சேர்ந்து கொள்ள இனம்புரியாத உணர்வை அனுபவித்தபடி இருந்தாள் மீரா.
**********
ரொஷானின் முன்னாலிருந்த மஞ்சள் நிறக்கடிதம் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
மீராவை வீட்டில் இறக்கிவிட்டு நேராக கேம்ப் போனான்.அங்கு இறங்கியதும் தான் தாமதம்

“சார்….. சில்வா சார்கிட்ட இருந்து ஃபெக்ஸ் வந்திருக்கு.பார்த்ததும் உடனே கால் பண்ண சொன்னார்” என ஒருவன் தகவல் சொன்னான்.

கடிதத்தில்,தொப்பிக்கல என்னும் இடத்துக்கு அவனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருந்தார்.சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தவன், உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டதாய் பதில் அனுப்பினான். முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு நாளைக்கு போகத்தயாராக வீடு நோக்கிவந்து கொண்டிருந்தான்.
போகும் போது மீராவை அவ ஊருல விடனும் என்பது மட்டும் அவனை அலைக்கழிய வைத்தது.

அவனது வாழ்க்கையே ஓட்டம் தான்.யாதும் ஊரே என்பது போல் வேலை செய்யும் இடம் தான் அப்போதைக்கு அவனது சொந்தமான ஊர்.ஓரிடமின்றி சுற்றித்திரிந்தே வாழ்க்கையின் பல வருடங்கள் ஓடிப்போயிற்று.ஆனால் இன்று இதுவரைக்கும் இல்லாமல் புதிதாய் உணர்கிறான்.அதற்கு முழுக்காரணம் மீரா தான்.அவள் தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என அவனை ஏதோ ஒன்று தவிக்க வைத்தது.அந்த ஏதோ ஒன்று தான் காதல் என தெரியாத முரடனவன்.அதை வார்த்தையால் விபரிக்கும் அளவுக்கு அவனை வாழ்க்கை கோலம் மாற்றியிருந்தது.
அவனைக் கேட்டால் எனக்கு மீரா வேண்டும் என்று தான் சொல்லத் தெரியும்.

அவன் சிந்தனைகளின் நாயகியை பார்த்தவாறே ஜீப்பை நிறுத்தினான்.அவனை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை என்பதை பார்வையில் வெளிப்படுத்தினாள்.வழமையாக உள்ளே செல்பவள் அங்கேயே நிற்பதின் காரணத்தை விளங்கியவன்,

“ நாளைக்கு உங்கள வீட்டுல விடுறன்.காலைல நேரத்தோட ரெடியாகனும்.ஐந்து மணி என்றாலும் நல்லம்.எனக்கு தொப்பிக்கலயில டியூட்டில ஜாயின்ட் பண்ணனும்.லேட் ஆகாதீங்க” என்றான்.அவளது முகபாவனை மொட்டு அவிழ்வது போல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.

“தேங்க்ஸ்…..நான் நேரத்தோட ரெடியாவன்.”என முகம்முழுக்க சந்தோசமாய்ச் சொன்னாள்.

நாளைக்கு அப்பா,பாட்டிய பார்க்கப் போறேனா?? இவ்வளவு நாளா மீராவக் காணல்லன்னு நிறைய கவலைப்பட்டிருப்பாங்க பாவம். வீட்டுக்குப் போனதும் நல்லாத் திட்டனும்.வேலை செய்யாத ஃபோன எதுக்கு யூஸ் பண்றீங்கன்னு கேட்டு.

அறையினுள் சென்றவளுக்கு, முதன் முதலாக இந்த அறைக்கு வந்த போது இருந்த மனநிலை நினைவுக்கு வந்தது.எப்படியெல்லாம் காலம் மாறிவிட்டது.தனக்குள் பேசிக்கொண்டிருந்தவளை வெளியே இருந்து வந்த பேச்சுக்குரல்கள் கலைத்தது.யார்கூட பேசிட்டு இருக்கான் என பார்க்க வெளியே வந்தாள். அங்கு தெரிந்த காட்சி நெஞ்சைத் தடதடக்க வைத்தது.அந்த விது என்பவள் அவனை இறுக அணைத்தபடி நின்றிருந்தாள்.
 
Last edited by a moderator:
Top Bottom