அத்தியாயம்:2
மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்த வெளிநாட்டவர்கள் அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தார்கள். நந்தனியோ பார்வையினால் அவர்களை சுட்டெரித்தாள்.
“சாரி...ஃபார் தி டிலே…எவிரிபடி.” எனக் கூறி விட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான் அருண்மொழி .
அவன் பின்னே ஒருவர் பின் ஒருவராக அசடு வழிய அமர்ந்தனர்.
ஒவ்வொரு குழுவினரும் தங்களது மாடியூல்களை விவரித்துக் கூறி முடித்தனர்.
அருண்மொழி முறை வந்தது. தனது குழுவில் உள்ள ஒருவரின் புரோக்கராமில் தவறு வந்து விடவே அதனை சாமர்த்தியமாக சமாளித்து எதிர்பார்த்ததை விட அருமையாக தங்களுடைய தொகுப்புகளை மட்டுமில்லாமல் மற்ற குழுவினருடைய தொகுப்புகளையும் இணைத்து தங்களுடைய நிறுவனத்தின் கல்வி கற்பதை மேம்படுத்தும் மென்பொருளையும் அதன் உபயோகத்தையும் தெளிவாக விளக்கி அனைவரையும் உச்சிக் குளிர வைத்தான் அருண்மொழி.
மிகவும் மகிழ்ந்து போன வெளிநாட்டவர்கள் அருண்மொழியை தனியாக அழைத்துப் பாராட்டினார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருந்தது அந்த மென்பொருள். அனைவரது உழைப்பையும் பாராட்டி நந்தினியிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.
அவளுக்கு மனதிற்கு நிறைவாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுத்தமாக இருந்தாள்.
அனைவரிடமும் பேசி அனுப்பியவள் அருண்மொழி மற்றும் அவனது குழுவினரை மட்டும் உட்கார வைததிருந்தாள்.
“எப்படியும் உன்னை எதுவும் சொல்லப் போறதில்ல. எங்களை மட்டும் தான் வறுத்தெடுக்கப் போறாங்க…” என சலித்துக் கொண்டாள் பாரதி. அவனது தோழி.
நந்தினியை பார்வையால் கபளீகரம் செய்தபடி, “ “உனக்கேன் இவ்வளவு காண்டு.?” என்று கூறிச் சிரித்தான்
அவனது கையில் கைக்குட்டையை வைத்து அழுத்தியவள், “ ரொம்ப வழியுது தொடச்சிக்கோ…” என்றாள் கடுப்புடன்.
அதனைப் பார்த்து விட்டாள் நந்தினி
அவர்களிடம் மெதுவாக நடந்து வந்தவள் அலைப்பேசியிலிருந்த காணொளியை காட்டி, “என்ன இது…?” என்றாள் அழுத்தமாக.
“ இல்ல மேடம்….அது வந்து…சும்மா…தலைவரோட புதுப்படம்…அதான் …* எனத் தலையை சொரிந்தான்.
“உங்களுக்கு ப்ராஜெக்ட்டை விட தலைவரோட புதுப்படம் முக்கியமா போச்சா…? ஃபாரினர்ஸ்கெல்லாம் டைம் ரொம்பவே முக்கியம். கொஞ்சம் டிலே ஆகியிருந்தா மொத்தத்தையும் இழுத்து மூடியிருக்கணும். நீங்கயெல்லாம் ஐடி புரெபெஷனல்ஸ்ன்னு வெளியே சொல்லிக்காதீங்க. பொறுக்கித்தனமா இப்படி தான் சட்டையை கழட்டிட்டு ஆடுவிங்களா…? புல்ஷிட்…கொஞ்சம் கூட டைமை கீப்அப் பண்ணனும்னு இல்லை. அப்படியே எங்களையெல்லாம் பதட்டத்துலயே வச்சிருக்கணும்…அப்படித்தான…? சொல்லுங்க மிஸ்டர் அருண்மொழி. நீங்க தானே இதுக்கெல்லாம் ஹெட்.” என கோபத்தில் முகம் சிவக்க சத்தம் போட்டாள்.
அவனோ மிகவும் நிதானமான நடையுடன் அவளருகே வந்து , “ மேடம்…கூல்…இந்த வயசுல இவ்வளவு டென்ஷன் ஆகக்கூடாது. இன்னும் உங்களுக்கு ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல. அதுக்குள்ள டென்ஷன் பீபின்னு வந்துட்டா கஷ்டம் பாருங்க…” என்றான் நக்கலுடன்.
“ ஹலோ…! என்ன மிஸ்டர்..? “ என எகிறிக் கொண்டு வர. “ கூல் மேடம். லைஃபை நல்லா என்ஜாய் பண்ணனும். எப்ப பார்த்தாலும் இப்படியே சும்மா சிடுசிடுன்னு இருந்தா லைஃபை எப்ப தான் என்ஜாய் பண்ணுவீங்க. அதான் ப்ராஜெக்ட் கிடைச்சிருச்சுல்ல. அதை நல்லா செலிபிரேட் பண்ணுங்க. அதே விட்டுட்டு தியேட்டர் போகக்கூடாது, என்ஜாய் பண்ணக்கூடாதுன்னா என்ன அர்த்தம்…? .தலைவரோட படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவெல்லாம் ஒரு ஃபீல் மேடம். டிக்கெட் கிழிச்சு போட்டு , விசில் அடிச்சு…ம்ம்ச்... உங்களுக்கு சொன்னா புரியாது. அதை விடுங்க.. இந்த தடவையாவது ப்ராஜெக்ட் கிடைச்சதுக்கு செலிப்ரேஷன் உண்டா…? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கூட வேண்டாம் ஒரு த்ரீ ஸ்டார்..? இல்ல ஒரு டூ ஸ்டார்…? .ம்ம்…”என அவளது முகத்திற்கு அருகே குனிந்தபடி அவன் கேட்க சட்டென்று பதறி விலகி நின்றாள்.
அவனோ மெல்ல சிரித்தபடி அவளையே பார்த்திருக்க அவனை முறைத்து விட்டு வெளியேறினாள் நந்தினி.
“ அடேய்ப்பா…! உன்னை மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லப்பா…ஆனாளப்பட்ட நந்தினி மேடத்தையே மிரண்டு ஓட வச்சிட்டியே டா.” என்றான் அமுதன்.
“ ஏய்…சீ..! சும்மாயிரு அவங்க பயந்துயெல்லாம் போகலை. இவனோட அறுவைத் தொல்லை தாங்க முடியாம சரிதான் போடான்னு போயிட்டாங்க…” என்றாள் பாரதி.
மென் சிரிப்புடன் அவள் சென்ற திசையை கேசத்தை கோதியவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அருண்மொழி.
தனது தந்தையிடம் புதிய ப்ராஜெக்ட் கிடைத்ததை ஒரு தகவலாக மட்டுமே கூறினாள். அதில் பெரிதாக மகிழ்ச்சியோ, பரவசமோ இல்லை. இன்னும் பயணிக்க வேண்டிய பாதையும் சாதிக்க வேண்டியதும் அதிகம் என்பதினால் இந்த வெற்றியை எல்லாம் அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக அவளது தந்தை அகமகிழ்ந்து அவளைப் பாராட்டித் தள்ளிவிட்டார்..
“ போதும் டாட்...வாழ்கையில இன்னும் போக வேண்டியது பார்க்கவேண்டியது நிறைய இருக்கு. அதெல்லாம் நடந்த பிறகு நல்லா பாராட்டலாம். போதும்…போதும் நீங்க போய் தூங்குங்க..” என அலட்சியத்துடன் கூறி விட்டு தனதறைக்கு சென்று விட்டாள்.
ஒரு பெருமூச்சுடன் தங்களுடைய அறைக்குள் நுழைந்தார் விஜயேந்திரன்.
அவரது மனைவி மகிழினி சீரான மூச்சில் உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மாத்திரை போட்டவுடன் உறக்கம் வந்துவிடும். எனவே மனைவியை தொந்திரவு செய்யாமல் பேசாமல் படுத்துக் கொண்டார்.
நந்தினி தனது நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கையில் ஏற்று மூன்றாண்டாண்டுகள் தான் ஆகின்றது. இது அவளுடைய ஐந்தாவது வெற்றி.
அவளது தந்தை கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் கால் பதித்திருந்தாலும் அதனை கையிலெடுத்து திறம்பட நடத்த அவள் விரும்பவில்லை.
நான்காண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தான் ஆரம்பித்த இந்த நிறுவனத்தை மெல்ல மெல்ல வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அயராது பாடுபடுகிறாள். சில பல சறுக்கல்கள் இடையிடையே இருக்கத்தான் செய்தது.
அதனை திறமையாக சமாளித்து கொண்டு முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறாள்.
தனது ஏ.பி.எம் நிறுவனத்தை தந்தையின் மற்ற நிறுவனங்களை விடவும் அதிகம் நேசிப்பவள். எனவே ஒவ்வொரு வெற்றியையும் மிகச் சாதாரணமாக கடந்து செல்ல ஆரம்பித்தாள். இன்னுமின்னும் வெற்றி வேண்டும் என்ற வேட்கை அவளது மனதை ஆக்கிரமித்திருந்தது.
கண்ணாடித்தடுப்பிற்கு வெளியே பேசிக் கொண்டிருந்தவன் மீது ஒரு கணம் நந்தினியின பார்வை நிலைத்தது.
அவளது அறையிலிருந்து பார்த்தால் வெளியே நடப்பதை பார்க்க முடியும். ஆனால் வெளியே இருந்து கொண்டு உள்ளே நடப்பதை பார்க்க முடியாது.
யாரேனும் ஒருவர் மாற்றி ஒருவர் அவனது மேசைக்கு வந்து அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
அவனும் புன்னகை முகத்துடன் அவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அவன் வேலையை பார்ப்பது போலவே தெரியவில்லை அவளுக்கு.
அலைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
“ கொஞ்சம் என் கேபினுக்கு வாங்க மிஸ்டர் அருண்மொழி ..” எனக் கூறி பட்டென்று வைத்தாள்
“ எக்ஸ்கியூஸ் மீ…மே ஐ கம் இன்…”
“ எஸ்…வாங்க..”
“ என்ன விஷயம் மேம்…?” எனக் கேட்டபடி போலியான பவ்யத்துடன் நின்றிருந்தான்.
அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவள், “ அந்த மும்பை க்ளையண்ட்டோ அடுத்த மாடியூல் ரெடி பண்ணியாச்சா…?” என்றாள் அழுத்தமாக.
“ இல்ல மேடம்…இனிதான் ஆரம்பிக்கணும். சீக்கிரம் முடிஞ்சிடும்…”
“ ஹலோ….! நாளைக்கு ரன் பண்ணி செக் பண்ணிட்டு நாளை கழிச்சு அவங்களுக்கு டெமோ காமிக்கணும். இன்னும் ஆரம்பிக்கவேயில்லன்னு ரொம்பவே கூலா பதில் சொல்றீங்க…? நானும் அரைமணி நேரமா பாக்குறேன். உங்க கேபினுக்கு வந்தவங்க கூட அரட்டை தான் அடிச்சிட்டு இருக்கீங்களே ஒழிய வேலை செஞ்ச மாதிரி தெரியல. நீங்க வந்து வெட்டி அரட்டை அடிக்க உங்களுக்கு சம்பளம் குடுக்கல… சொன்னா சொன்ன தேதிக்கு ப்ராஜெக்ட் முடிச்சி கொடுக்கணும். நீங்க என்னடான்னா ரொம்ப அசால்டாக எல்லாத்தையும் எடுத்துக்கிறீங்க. உங்களால அடுத்தவங்க பெயரும் சேர்ந்து கெடுது.” என கடுகடுத்தாள்.
குபீரென சிரிக்க முயன்ற தனது உதடுகளை இறுக மூடிக் கொண்டு மெல்ல அவளருகே வந்தவன் “ சாரி…மேம்...இதோ இப்ப வேலையை ஆரம்பிச்சிடுறேன்…” என்றான்.
அவனை முறைத்தவள், “ ம்ம்….” என்று கூறி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ மேம்…” என மென்மையாக அழைத்தான்.
என்னவென்பது போல அவனைப் பார்த்தாள் நந்தினி.
“ நா அரை மணி நேரமா வேலை செய்யலங்கறதை இங்க இருந்து நீங்க பாத்துட்டே தான் இருந்தீங்களா…? அப்ப நீங்களும் என்னைய பாக்கறதை தவிர வேற வேலை செய்யல போல இருக்கே….? என் மேல அவ்வளவு…” என்று கூற வந்த வார்த்தையை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாக்கை உதட்டுக்குள் இருபுறமும் சுழற்றியபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“ வாட்யூ மீன்..? என முறைத்தாள்.
அவளது முகத்தருகே குனிந்தவன் , “ ஐ மீன்…என் மேல…. அவ்வளவு….” என மீண்டும் வேண்டுமென்றே நிறுத்த அவளது இதயம் படபடத்தது.
“அவ்வளவு அக்கறையா…?” என வார்த்தையை மாற்றி போட்டு நிறைவு செய்தான்.
கோபத்தில் நுனி மூக்கு சிவக்க நின்றவளை ரசனையோடு பார்த்திருந்தவன், “ உங்க நுனி மூக்கு கூட அவ்வளவு அழகு....சான்சே இல்ல…இந்த புடவையில அவ்வளவு அழகு நீங்க...” என கண்களில் கிலோ கணக்கில் காதல் வழிய கூறினான்.
“ ஹலோ…! மிஸ்டர் என்ன கொழுப்பா…? நான் இந்த கம்பெனியோட எம்.டி. நீங்க ஆஃப்ட்ரால் ஒரு எம்ப்ளாயி….அதை நினைவு வச்சுக்கோங்க. உங்க ஆசையெல்லாம் இவ்வளவு உயரத்துக்கு இருக்கக்கூடாது. குறைச்சுக்கோங்க… உங்களுக்குன்னு ஷீலா….மாலான்னு யாராவது மாட்டுவாங்க. ஐ யம் ஒன் அண்ட் ஒன்லி தி கிரேட் நந்தினி தேவி.. சோ.. பிஹேவ் யுவர் செல்ஃப். இனி இந்த மாதிரி காதல் வசனம் பேசிட்டு இந்த ஆஃபிஸ்ல திரியாதீங்க. ஒரு நேரம் போல ஒரு நேரம் நானிருக்க மாட்டேன். கெட் லாஸ்ட்…” என அழுத்தமாக கூறியவள் தனது நாற்காலியில் சென்று கம்பீரமாக அமர்ந்தாள்.
அவளது பேச்சில் முகம் சுருங்கி வெளியேறினான் அருண்மொழி.
செல்லும் அவனையே உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.

Last edited: