9. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறைநீர் - 9

"என்ன பேசற ரியா? அவங்களை அழைச்சிட்டு வந்து இங்க தங்க வச்சி இருக்கறது அம்மா.. அது எப்படி சொல்லாம கொள்ளாம அவங்களை இங்க இருந்து வெளில போக சொல்லி சொல்ற? உனக்கு யார் அந்த ரைட்ஸ் கொடுத்தா?" என்று அவன் மிரட்டலாய் கேட்ட கேள்வியில் விக்கித்துப் போய் நின்றாள் ரியா என்கிற ரிந்தியா..

அவள் அப்படி பயந்ததற்கு ஒரு காரணமும் இருந்தது.. ஒரு வாரமாக அவன் கண்ணில் மண்ணை தூவி ஒளிந்து மறைந்து அவனைப் பார்ப்பதை முற்றிலுமாய் தவிர்த்து இருந்தவள் இன்று அவனிடம் வசமாய் மாட்டிக் கொண்டதில் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்..

அவள் அருகில் இருந்த பெண்ணும் "அவ சொல்றதுல என்ன தப்பு அத்தான்? இந்த மாதிரி கௌரவமான குடும்பத்துல ஒரு டிஸ்ப்ளினோட வாழற நமக்கு நடுவுல இப்படிப்பட்டவங்க இருக்கிறது நம்ம எல்லார் பேரையும் கெடுத்துரும் அத்தான்.. முக்கியமா இந்த வீட்ல இவங்க இருக்குற அதே இடத்துல நாங்களும் இருந்தோம்னா எங்களையும் தப்பான பொண்ணுங்களா தானே வெளியில பார்ப்பாங்க..? அவ்வளவு ஏன் அத்தான்? நாளைக்கு நாங்க ரோட்ல நடந்து போகும்போது அந்த வீட்ல இருக்குற பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான்னு பேச மாட்டாங்களா?"

இப்படி கேட்டவள் சிந்து என்கிற சிந்துஜா..

சிந்துஜா ரிந்தியா இருவரும் ஜெகந்நாதன் பூமாவின் வாரிசுகள்..

மூத்தவள் சிந்துஜா அமைதியானவள் தான்.. அடக்கமானவளும் கூட.. பொதுவாக அதிகம் வாய் திறந்து பேச மாட்டாள்.. ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலை அவளை பேச வைத்திருந்தது.. தன் அத்தை மகன் தமிழழகனை மணக்கவேண்டும் என்று மனதார விரும்புபவள்..

அவளுக்கும் தமிழரசிக்கும் ஒத்த வயதுதான்.. ஆனால் தமிழ்ச்செல்வனுடனும் தமிழரசியுடனும் அவளுக்கு பெரிதாக எந்த விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை.. அவர்கள் எல்லோரையும் சமமாக பார்த்து பழகும் பரந்து விரிந்த சிந்தனைக்கும் அவளுக்கும் ரொம்பவும் தூரம்..

தமிழழகனை விட இரண்டு வயது இளையவள் அவள்.. எப்பொழுதும் சிறுவயதில் அவனுடனே சுற்றிக் கொண்டிருப்பாள்.. அதனாலேயே அவனின் சிந்தனைகள் பெரிதும் அவளை பாதித்திருந்தது.. தமிழழகனுக்கும் அவள் அவனை பெரிதும் மதித்து நடப்பதே சற்று பெருமை தான்.. ஆனாலும் அவனின் கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும் அவனை அவளிடமிருந்து ஒரு வயதிற்கு மேல் தள்ளியே நிறுத்தி இருந்தது.. தூரத்திலிருந்து அவளின் ஆரவாரம் இல்லாத அமைதியான நடவடிக்கைகளையும் அளவான பேச்சையும் மெச்சும் பார்வை பார்த்திருப்பானேயன்றி அதை பிரதிபலிக்கும் விதமாக அவளை பார்த்து ஒரு புன்னகை கூட சிந்தியதில்லை..

இருவருமே மனதிற்குள் தங்கள் வாழ்வில் ஒருவரை ஒருவர் தங்கள் வாழ்வில் துணையாக கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார்கள்..

இன்றும் எப்போதும் போல தமிழின் கருத்தை சிந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதன் காரணமாகவே அவனோடு முரண்பட்டு வாதிட்டாள்..

"சிந்து.. ஒருத்தங்களை தப்பானவங்கன்னு அடுத்தவங்க சொல்றத வச்சு பழி போடக்கூடாது.. அவங்க நிஜமாவே தப்பானவங்களான்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் அவங்கள பத்தி எதுவா இருந்தாலும் பேசணும். ஒரு முறை ஒருத்தரை பத்தி தப்பா ஒரு வார்த்தையை விட்டுட்டா திரும்ப அதை அள்ள முடியாது.."

"என்ன அத்தான்.. இவங்க தப்பானவங்க இல்லைன்னு சர்டிஃபிகேட் கொடுக்க போறீங்களா? அப்படின்னா இவங்களை எதுக்கு இங்க பாதுகாப்பா தங்க வச்சிருக்கீங்க..? இவங்களை வெளிய தனியா அனுப்புறதுக்கு நீங்க ஏன் மாமா பயப்படுறீங்க? எல்லாருமே இவங்களை தப்பா தான பாக்குறாங்க? அப்புறம் நாங்க மட்டும் எப்படி இவங்களை குடும்ப குத்து விளக்கா பாக்குறது..? இவங்களோட ஏதோ ஒரு தேவைக்காக அவங்க உடம்பை வித்து பிழைக்கிறாங்க.. அவங்களோட ஒரே வீட்ல ஒரே கூரைக்கு கீழ நாங்க எப்படி அத்தான் இருக்க முடியும்?"

"ம்ம்.. குடும்ப குத்துவிளக்கா இருக்கிறவங்க எல்லாம் தப்பானவங்க இல்லைன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா சிந்து..? உன் பக்கத்துல நின்னுட்டு இருக்காளே உன் தங்கச்சி ரியா.. போன சாட்டர்டே இவ எங்க இருந்தான்னு கேளு.."

அவன் அப்படி கேட்டதும் திருதிருவென விழித்தாள் ரியா..

"இப்ப எதுக்கு அத்தான்.. இவங்கள பத்தி பேசினா சம்பந்தமே இல்லாம ரியா பத்தி எதையோ கேக்குறீங்க?"

"சம்பந்தம் இருக்கு.. போன வாரம் உன் தங்கச்சி மகாபலிபுரம்ல இருக்குற ஒரு ரெஸார்ட்ல யாரோ ஒரு பையனோட நைட்ல தங்கி இருந்தா.. அந்த ரிசார்ட்ல நம்ம மதன் ரெயிட் பண்ணி இருக்கான்.. ஆனா ரியா நம்ம வீட்டு பொண்ணுங்கறதால எதுவும் கண்டுக்கல.. இப்போ ஒரு வேளை அங்க மதன் போகாம வேற யாராவது போயிருந்தா ரியாவை அரெஸ்ட் பண்ணி பலான கேஸ்ல உள்ள வச்சிருப்பாங்க.. அப்ப ரியாவை சரியான பொண்ணுன்னு சொல்லுவியா தப்பான பொண்ணுன்னு சொல்லுவியா?"

"ஐயோ அத்தான்.. நாங்க தப்பு எதுவும் பண்ணல.. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து சும்மா சுத்தி பார்க்க.." என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்தவளை கை நீட்டி தடுத்தான் தமிழ்..

"ஸ்டாப் இட் ரியா.. நான் உன்கிட்ட இருந்து எந்த விளக்கமும் கேட்கல... அந்த பையனோட நீ தங்குனது எனக்கு அன்னைக்கே தெரியும்.. இப்பவும் நானா உன்னை அதை பத்தி கேட்கலை. ஏன் கேட்கலை தெரியுமா? நீ ஒரு ஹோட்டல் ரூம்ல ஒரு பையனோட தங்கி இருந்தாலும் அது நைட் டைமாவே இருந்தாலும் நிச்சயமா இந்த வீட்டு வளர்ப்பு உன்னை தப்பு பண்ண விடாதுன்னு ஒரு நம்பிக்கை தான்.. மோர்ஓவர் ஐ டோன்ட் வாண்ட் டு பி ஜட்ஜ்மெண்டல்.. அங்க போனது உனக்கும் அந்தப் பையனுக்கும் நடுவுல இருக்குற ஒரு பிரைவேட் விஷயம்.. அங்க நீ என்ன பண்ணி இருந்தாலும் அது உன்னோட விருப்பம்.. அதனாலதான் நான் அதை பத்தி எதுவும் கேட்கல.. நான் யார்கிட்டயும் அதை பத்தி எதுவும் சொல்லவும் இல்லை.. இது மட்டும் இல்லை மந்த்லி ஒன்ஸ் நீ போற பப்ஸ்.. அட்டென்ட் பண்ற பார்ட்டிஸ்.. அங்க என்ன எல்லாம் நடக்குது.. இது எல்லாமே எனக்கு தெரியும்.. ஒரு போலீசா என் வீட்டு பொண்ணுங்க பாதுகாப்பா இருக்காங்களான்னு அப்பப்ப செக் பண்ண வேண்டியது என்னோட கடமைன்னு நான் நினைக்கிறேன்.. நீயா இஷ்டப்பட்டு அந்த ரிசார்ட்ல அந்த பையனோட தங்கி இருந்த.. ஆனா இவங்களை இவங்க இஷ்டமே இல்லாம அந்த பாவப்பட்ட இடத்தில வெச்சிருந்தாங்க.. அப்போ அதுல இவங்க மேல என்ன தப்பு இருக்கு? யாரோ செஞ்ச தப்புக்கு இவங்களுக்கு எதுக்கு தண்டனை கொடுக்கணும்?"

அவன் சொன்னதை கேட்டு சிந்து ரியாவை முறைத்தாள்.. "இல்லடி.. நான் சும்மா ஊர் சுத்தி பார்க்க தான்.." என்று மறுபடியும் அதே பழைய பல்லவியை அவள் பாட "வாயை மூடு ரியா.. உன் புத்தி ஏன் தான் இப்படி போகுதோ..?" என்றாள் சிந்து..

"சிந்து.. விடு.. அவ எந்த தப்பும் பண்ணல.. அதேபோல தான் நிலாவும் சூர்யாவும்.. தேவையே இல்லாம அவங்க மேல எந்த தப்புமே இல்லாம அவங்களை தப்பா பேசி இருக்கீங்க.. ரெண்டு பேரும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போங்க.." என்று தமிழ் சொல்ல

சிந்து "அத்தான்.. இவங்க நிலைமையை பார்த்து இவங்க மேல பரிதாபப் படலாம்.. இவங்க வாழ்க்கை இப்படி ஆனதுக்கு இவங்க காரணம் இல்ல தான்.. ஆனா இப்ப கூட இவங்களால எங்களுக்கு கெட்ட பெயர் வருங்கறது உண்மைதானே அத்தான்.. அவங்க தேவைக்காக இந்த தொழில் செய்றாங்கன்னு நான் சொன்னதுக்காக நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.." என்றவள் நிலா சூர்யா பக்கம் திரும்பி "ஐ அம் சாரி.." என்றாள்.

"ஆனா.. அவங்களை இங்க இருந்து வெளிய போக சொன்னது எந்த விதத்திலயும் தப்பு கிடையாது அத்தான்.. இப்பவும் சொல்றேன்.. இவங்க இருக்குற அதே இடத்தில நாங்களும் இருந்தா எங்களையும் தப்பான பொண்ணுங்களா தான் பார்ப்பாங்க.. எங்க பாதுகாப்பை பத்தி இவ்ளோ யோசிக்கிற நீங்க இதை பத்தியும் யோசிச்சு பாருங்க.. புரியும்.." சொல்லிவிட்டு விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தாள் அவள்..

"ரியா அவங்க கிட்ட சாரி கேளு.." என்று அழுத்தமாய் தமிழ் சொல்ல

"முடியாது அத்தான்.. நான் கேட்க மாட்டேன்.." என்றவளை தீவிரமாய் முறைத்தவன் "ஐ செட் அப்பாலஜைஸ் டு தெம் நவ்.." என்று அடிக்குரலில் மிரட்ட அவளும் வேறு வழியின்றி "சாரி" என்று அவர்களைப் பார்த்து சுருங்கிய முகத்தோடு சொன்னவள் காலை அழுத்தமாய் தரையில் உதைத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்..

"அவங்க ரெண்டு பேரும் பேசினதுக்காக நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்.. அவங்க பேசுனதை வச்சு எந்த தப்பான முடிவுக்கும் வந்துறாதீங்க.. இந்த இடம் தான் உங்களுக்கு சேஃப்.. தயவு செஞ்சு வேற மாதிரி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.." என்றவன் அங்கிருந்து வெளியே வந்து தெய்வானையிடமும் அரசியிடமும் நடந்ததை சொல்ல அவர்களும் நிலா இருந்த அறைக்கு சென்று அவளிடமும் சூர்யாவிடமும் ரியா சிந்துவின் நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்டார்கள்..

ஆனால் நிலாவுக்கோ மனம் அமைதி பெறவே இல்லை.. ஜெகன்னாதரை வேறு அங்கு பார்த்ததில் அவள் அந்த வீட்டை விட்டு கிளம்பிவிடும் நினைப்பிலேயே தான் இருந்தாள்..

எல்லோரும் உறங்கியதும் சூர்யாவிடம் "சூர்யா இனிமே நம்ம இங்க இருக்க வேண்டாம்.. நம்ம இங்கே இருந்து யாருக்கும் தெரியாம போயிடலாம்.. ஏதாவது கூலி வேலை செஞ்சாவது பொழைச்சுக்கலாம் டி.. இங்க இருந்தா இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் நம்மால கஷ்டம்.. நம்ம இங்க இருந்தா இந்த குடும்பத்தில பிரச்சனை தான் வரும்.." என்க

"ஹே நிலா.. அதெல்லாம் சரி கிடையாது.. இங்க பாரு.. யாருக்காக இல்லைன்னாலும் தெய்வானை அத்தைக்காக நம்ம இங்க தான்டி இருக்கணும்.. அவங்க நம்மள அவங்க மக மாதிரி பார்த்துக்கிறாங்க.. அவங்களை ஏமாத்திட்டு எப்படி வெளியில போறது? அது சரி கிடையாது.. சொல்றதை கேளு.. இந்த நினைப்பை எல்லாம் விட்டுட்டு பேசாம தூங்கு.." என்று சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்தி நன்றாக உறங்கி விட்டாள்..

ஆனால் நிலாவிற்கோ அங்கே இருப்பு கொள்ளவே இல்லை.. மெதுவாக தன் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வர அதே நேரம் அங்கே வந்திருந்தாள் அரசி..

நிலா திருட்டுத்தனமாக இந்த பக்கமும் அந்த பக்கமும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு வெளிக்கதவின் புறமாய் செல்வதை கண்டவளுக்கு விஷயம் புரிந்தது.. தண்ணீர் குடிக்க வெளியே வந்துவள் அவள் புறம் வேகமாய் நகர்ந்து சென்று "எங்க போற நிலா?" என்று கேட்க

அவளோ அரசியின் சத்தத்தில் திடுக்கிட்டுப் போனாள்..

"அ..அது‌.. தண்ணி குடிக்க வந்தேன்.. இருட்டுல வழி தெரியல.." என்று ஏதேதோ உளறி சமாளித்தவளின் வார்த்தைகளில் சிரிப்பு தான் வந்தது அரசிக்கு..

"ஓ.. தண்ணி வேணுமா? நானும் தண்ணி குடிக்க தான் வந்தேன்.. இதோ வரேன்.." என்று இருவருக்குமாய் சேர்த்து ஒரு ஜாடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து தானும் குடித்துவிட்டு அவளுக்கும் கொடுத்தாள்..

"நிலா.. என் ரூம்ல ஏசி ஒர்க் பண்ணல.. உங்க ரூம்ல ஏசி ஒர்க் பண்ணுது இல்ல..? இன்னைக்கு நான் உங்களோடயே படுத்துக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் அவர்கள் அறைக்குள் அவளை தோளணைத்து அழைத்துச் சென்றாள் அரசி..

அதன் பிறகு தினம் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவள் அறையில் யாராவது ஒருவர் தங்கி கொண்டார்கள்.. தெய்வானை பூமா அரசி என்று மாறி மாறி அவர்களுடைய அறையில் அவர்களை அறியாமல் அவர்களுக்கு காவல் இருக்க தொடங்கினார்கள்..

ஒரு வாரம் இப்படியே ஓடியது.. அன்று ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நள்ளிரவில் தான் வீட்டுக்கு வந்திருந்தாள் அரசி.. அன்று வீட்டிலிருந்த பெரியவர்கள் ஒரு திருமணத்திற்கு வெளியூருக்கு சென்று இருந்தார்கள்.. அவள் வரும் வரை நிலா சூர்யாவோடு அவர்கள் அறையில் இருந்து பேசிக் கொண்டிருந்த சுனிதா அவள் வந்ததும் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்..

காலையிலிருந்து இரவு வரை மருத்துவமனையில் வேலை பளு அதிகமாக இருக்க அயர்வில் நன்றாக உறங்கி விட்டிருந்தாள் அரசி.. நிலாவுக்கு அவளின் ஆழ்ந்த உறக்கம் சாதகமாக போய்விட்டிருந்தது.. பின்னிரவு 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் நிலா..

நீர் உறையும்..
 
Last edited by a moderator:

Author: STN - 72
Article Title: 9. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

இந்த ரியா, சிந்து ஒரு புது மனுஷன்களுக்கு முன்னுக்கு எப்படி நடக்கணும் என்கிற இங்கிதம் கூட இல்லை😡😡😡இதுல இவங்க கிரீடம் இறங்கிடுமாம்😡😡😡😡
இந்த நிலா கால் கம்முன்னு இருக்காது போல😡😡😡இப்பவும் கார்த்தி, சூர்யா பத்தி யோசிக்காமல் கிளம்புது😡😡😡
 
  • Like
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
இந்த ரியா, சிந்து ஒரு புது மனுஷன்களுக்கு முன்னுக்கு எப்படி நடக்கணும் என்கிற இங்கிதம் கூட இல்லை😡😡😡இதுல இவங்க கிரீடம் இறங்கிடுமாம்😡😡😡😡
இந்த நிலா கால் கம்முன்னு இருக்காது போல😡😡😡இப்பவும் கார்த்தி, சூர்யா பத்தி யோசிக்காமல் கிளம்புது😡😡😡
அதே தான்.. எப்பவும் யாரை பத்தியும் யோசிக்க மாட்டா. இப்படி தான் அவசரக்குடுக்கையா யாரைப் பற்றியும் யோசிக்காம தற்கொலை பண்ணிக்கிட்டா. அதுக்கு தமிழ் கிட்டயும் நல்லா வாங்கி கட்டிக்கிட்டா.. இவளுக்கு இதே பொழைப்பா போச்சு..😅😅
 
  • Haha
Reactions: Sudhakar

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
எம்மா சிந்து உன் தொங்கச்சி பண்ண வேலையை பார்த்தியா?????
இதுக்கு உன் ரியாக்ஷன் இவளோ தானா?????
அடுத்தவர்களை குறை சொல்லும் கூட்டம் தன் முதுகை பார்ப்பதே இல்லா....
அச்சோ வெளியில் போயிட்டாள்
 
  • Like
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
எம்மா சிந்து உன் தொங்கச்சி பண்ண வேலையை பார்த்தியா?????
இதுக்கு உன் ரியாக்ஷன் இவளோ தானா?????
அடுத்தவர்களை குறை சொல்லும் கூட்டம் தன் முதுகை பார்ப்பதே இல்லா....
அச்சோ வெளியில் போயிட்டாள்
அதெல்லாம் போக விடமாட்டோம் இல்ல.. ஹீரோ இருக்காரே..
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
249
284
63
Hyderabad
Wow அந்த family யில் எல்லோரும் எவ்ளோ நல்லவர்கள்,சிந்துஜா ரியா தவிர..மாமா புதிர் வேற இருக்கு.அவர் கெட்டவரா,ரொம்ப கெட்டவரா? 🤔🤔
 
  • Like
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
Wow அந்த family யில் எல்லோரும் எவ்ளோ நல்லவர்கள்,சிந்துஜா ரியா தவிர..மாமா புதிர் வேற இருக்கு.அவர் கெட்டவரா,ரொம்ப கெட்டவரா? 🤔🤔
அடுத்தடுத்த எபில தெரிஞ்சுடும் தங்கமே😍♥️🥰