சிற்ப பாவை - 3
அவனுக்கு நகை என்றால் அத்தனைப் பிரியம்; அவளை உயிராக நேசிக்கிறான். சொல்லப்போனால், அவளை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டும் இருக்கின்றான். அவளை ஒரு நிமிடம் பார்ப்பதற்காகவே, வாரத்திற்கு ஒரு நாள் தவறாமல் தன் மாமன் வீட்டுக்கு ஓடி வந்து விடுவான் பிரனேஷ்.
"மாமா..." என வாசலில் பிரனேஷின் குரல் கேட்டதுமே, நகையின் முகத்தில் சொல்லொணா ஓர் எதிர்பார்ப்பு கூடியது. அவளது மாற்றத்தைத் தங்கைகள் இருவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.
"என்ன மாமா வந்துட்டாரா? ஒரே பிரைட்னஸ் தான் உன் மூஞ்சில!" என்று சுடர் கிண்டல் செய்ய,
பதறிப்போன நகை, "அமைதியா இருடி, அப்பா அம்மா காதுல விழுந்துட போகுது. என்ன தங்கச்சியோ நீ!" என்று செல்லமாக திட்டிவிட்டு, ஓடிப்போய் கண்ணாடி முன்பு நின்று, தன் கூந்தலை சரி செய்து, முகத்தைப் பார்த்து மெருகேற்றிக் கொண்டு படபடப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
"பிரனேஷ் வாப்பா, என்ன இன்னைக்கு லீவா?" என வெண்பா அத்தனை ஆசையாக அவனை வரவேற்றார்.
"இல்ல அத்தை, லீவு எல்லாம் கிடையாது. சும்மா இந்த பக்கம் ஒரு வாக்கிங் போனேன், அப்படியே உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்" என்று மழுப்பலாக சொன்னவன் கண்களோ, ஆவலோடு நகையைத் தேடியது.
அவன் தேடலைப் பொய்யாக்காமல், நகை சட்டென்று வெளியே ஓடி வந்தாள். அவளுக்கு முன்னே அவளது அடர்ந்த நீண்ட கூந்தல் காற்றில் நாட்டியமாடியது. அவனுக்கு அவளின் அந்த நீண்ட முடி என்றால் அத்தனைப் பிடிக்கும்.
அவளைப் பார்த்த அந்த நொடி, அவன் முகத்தில் நூறு கோடி மின்னல்கள் ஒரே நேரத்தில் தோன்றி மறைந்தன. அவளுக்கும் அவனைப் பிடிக்கும் என்பதுதான் உண்மை. இருவரும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், தங்கள் காதலைத் தங்களுக்குள் மிக ஆழமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.
"மாமா இல்லையா அத்தை?" என்று அவன் கேட்க,
"மாமாவுக்கு இன்னைக்கு ஏதோ வேலை, அதான் வெளிய போயிருக்காங்க. இரு, உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்" என்றார் வெண்பா.
"சரி அத்தை" என்று அவர் உள்ளே சென்றுவிட, நகை கதவோரம் சாய்ந்தபடி அங்கே நின்று கொண்டிருந்தாள். பிரனேஷ் எவ்வித கூச்சமும் இல்லாமல் அவளைச் சைட் அடித்துக் கொண்டிருந்தான். இருவரும் தங்கள் காதலை வார்த்தைகளால் சொல்லாமல், விழி மொழிகளால் பேசிக்கொண்டனர்; ஆனாலும் இன்னும் வெளிப்படையாகக் கூறி கொள்ளவில்லை.
"என்னடா நடக்குது இங்க?" எனக் கேட்டபடி கவி அங்கே வர, பிரனேஷ் சட்டென்று அதிர்ந்து தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
"கவி, நீ இங்கதான் இருக்கியா?" என சமாளித்தான்.
"எங்க வீட்ல நான் இல்லாம வேற யாரு இருப்பா? என்ன புதுசா ஒரு கேள்வி கேட்குற? என்ன மாமா ஆச்சு உனக்கு? ஒரு மார்க்கமா தான் இருக்க" என கவி வம்பு இழுத்தாள்.
பிரனேஷ் எதற்கும் பதில் சொல்ல முடியாமல் அசடு வழிய சிரித்தான். எப்பொழுதும் கவி, சுடர் இருவரும் இவனை அதிகமாகக் கிண்டல் செய்வார்கள் என்பதால், அவர்கள் இருக்கும் பொழுது அவன் வருவதை தவிர்ப்பான். ஆனால் இன்று ஏதோ ஒரு வேகத்தில், அவளைப் பார்த்தே தீர வேண்டும் என்ற தவிப்பில் வந்துவிட்டான்.
"தெரியாமக் கேட்டுட்டேன், விடுமா தாயே!” என கையெடுத்துக் கும்பிட்டு கூற, அவன் பணிவதைப் பார்த்த நகை, வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
அவளின் அந்த அழகான செய்கையை ரசித்துப் பார்த்த பிரனேஷ் அப்படியே உறைந்து போய் நிற்க, "நடத்துங்க நடத்துங்க... இந்த வயசுல இதெல்லாம் பார்க்க வேண்டிய தா இருக்கு!" என கவி குட்டி, தன் தலையில் தானே அடித்துக் கொண்டே சென்றாள்.
நகை சட்டென்று கவியின் தலையில் வலிக்காமல் தட்ட, "இரு, அப்பா வந்ததும் எல்லாத்தையும் அப்பாகிட்ட போட்டுக்கொடுக்கிறேன்" என கவி மிரட்டினாள்.
"சொல்லிக்கோ..." என நகையும் சளைக்காமல் பதில் சொன்னாள்; அவளுக்குப் பயம் ஏதுமில்லை.
அதற்குள் வெண்பா அத்தை பலகாரத்தோடு வந்துவிட, பிரனேஷ் உடனே தன் முகபாவனையை மாற்றிக் கொண்டான். அவர் கொடுத்த சூடான பஜ்ஜியை வாய்க்குள் தள்ளியவன்,
"இங்க வந்தால்தான் ஏதாவது உருப்படியாக சாப்பிட முடியுது அத்தை. வீட்ல அம்மா என்னன்னா எதையுமே செய்ய மாட்டேங்குது. இங்கிருந்து எதையாவது கொண்டு வருவதை அப்படியே பிரிட்ஜில் வைத்து வைத்து ஓட்டுறாங்க" எனப் புகார் வாசித்தான்.
"அம்மாவை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பிரனேஷ், அது தப்பு. ஆனந்திக்கு கொஞ்சம் வேலை செய்ய சோம்பேறித்தனம் அவ்வளவுதான். இனி தினமும் நானே செஞ்சு கொடுத்திடவா?" என வெண்பா கேட்க,
"ஐயோ அத்தை! அந்தத் தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க. அவ்வளவுதான், அப்புறம் மாசக்கணக்குல அவங்க சமைக்கவே மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப் போட்டுக் கிள்ளிப் போட்டு எனக்கும் அப்பாவுக்கும் கொடுத்தே சாவடிச்சிடுவாங்க. தயவு செஞ்சு எதையும் கொடுக்காதீங்க. அவங்க அப்பப்போ வாளியைத் தூக்கிட்டு வந்து சாப்பாடு வாங்கிட்டு போறது அப்பாவுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு, அவமானமா இருக்கு. வெளியே தலை காட்ட முடியலன்னு டெய்லி சண்டை போட்டுட்டு இருக்காரு. நீங்க இன்னும் ஏதாவது பண்ணி விட்றாதீங்க. நான் போயிட்டு வர்றேன் அத்தை. மாமா வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க" என்று அங்கிருந்து நகர மனமே இல்லாமல் கிளம்பினான்.
நகையும் அவனையே ஏக்கத்தோடும் தவிப்போடும் பார்த்துக் கொண்டிருக்க, "போயிட்டு வர்றேன்" எனக் கண்களால் மட்டும் விடைபெற்று அவளிடமிருந்து நகர்ந்தான் பிரனேஷ்.
படிகளில் இறங்கிச் சென்றவன் முகத்திலோ அவளைக் கண்ட பெரும் ஆனந்தம். அவள் முகமோ அவனது பார்வையால் வெட்கத்தில் சிவந்து போயிருந்தது.
வெண்பா இவை அனைத்தையும் கவனித்தாலும், எதுவும் அறியாதது போலவே இருந்து கொண்டார். அவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. பிரனேஷ் நல்ல குணமுள்ளவன் என்பதால் வெண்பா அவர்கள் காதலைத் தடுக்கவில்லை.
ஆனால், கசப்பான 'பணம்' என்ற ஒன்று இடையில் இருக்கும் வரை காதலர்கள் எளிதில் சேர்வதில்லை; அதற்குப் பிரனேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன? நாம் சொந்தமாக நினைக்கும் அனைவரும் நாம் கஷ்டப்படும் காலங்களில் நம்மை சொந்தமாக நினைப்பதில்லை; அதற்கு ஆனந்தி அத்தை மட்டும் விதிவிலக்கா?
சொந்தத் தங்கையாக இருந்தாலும், சொந்த அண்ணனாக இருந்தாலும் நமக்கு ஒரு வலி என்று வரும் பொழுது அந்த வலியை அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை. நமக்கு ஒரு உதவி என்று தேவைப்படும் பொழுது, அந்த உதவியைத் தானாக முன்வந்து எவரும் செய்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இரவு காத்தவராயன் வீட்டிற்கு வந்ததும், "பிரனேஷ் இன்னைக்கு வந்தான், உங்களைத் தான் தேடிட்டு இருந்தான். ஆனா நீங்க வர லேட் ஆகும்னு சொன்னதும் கிளம்பிட்டான்" என்றார் வெண்பா.
"அவன் எதுக்கு வர்றான்னு நமக்குத் தெரியாதா? அவன் நம்மளைத் தேடியா வர்றான்?" என மனைவியிடம் அவர் ரகசியமாகக் கேட்டாலும், அவருக்குள் ஒரு சின்னப் பயம் இருக்கத்தான் செய்தது.
"சும்மா இருங்க, நம்மளே நேரடியாக பேசிக்கிட்டா அது தப்பா போய்டும். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். காலம் எப்படி வேணாலும் மாறும்" என வெண்பா கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு அமைதிப்படுத்தினார்.
"எனக்கும் அந்தப் பயம் தான் இருக்கு. அதனாலதான் இதுவரைக்கும் நான் எதையும் வெளிப்படையாக கேட்டுக்கல. நம்ம சூழ்நிலை இப்படி இருக்கும் போது, நம்மளே பிள்ளை மனசுல ஆசையை வளர்க்கக் கூடாது" என அவர் வேதனையுடன் சொன்னார்.
"சரி விடுங்க, இப்ப பாப்பா படிச்சிட்டு தான் இருக்கு. இந்த வருஷம் படிப்பை முடிக்கட்டும், அப்புறம் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்" என்றார் வெண்பா.
அப்போது, "காத்தவராயா... காத்தவராயா..." என வெளியே ஒரு குரல் கேட்க, இருவரும் எட்டிப் பார்த்தனர்.
"வா சங்கர், வந்து உட்காரு" என காத்தவராயன் உள்ளே அழைத்து, அவருக்குத் தர வேண்டிய வட்டிப் பணத்தை எடுத்து வந்து நீட்டினார்.
"எப்போ அசலக் கொடுக்கப் போற காத்தவராயா?"
"கூடிய சீக்கிரம் கொடுத்திடுவேன் சங்கர்."
"சீக்கிரம் பார்த்துக் கொடுத்திடு. உன்கிட்ட கடனுக்குப் பிணையாக இருக்கிறது இந்த வீடு மட்டும்தான். அதுவும் லோன்ல இருக்குது. எப்பப் பார்த்தாலும் உன் தங்கச்சிங்களுக்கு ஓடிட்ட... உன் பொண்ணுங்களுக்கு ஏதாவது செய்யணும் இல்லையா? ஆம்பளப் புள்ள இருந்தாக்கூட அவன் கடன் அடைப்பான்னு நம்பலாம். பொம்பள பிள்ளைங்க வேற ஒருத்தன் வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிப் போயிடும், அதுங்க எப்படிக் கடன் அடைக்கும்? அதான் சொல்றேன், சீக்கிரமாகக் கொடுத்துக் கடன்களை முடி. ஏன்னா நீ ஊருக்குள்ள நிறையக் கடன் வாங்கி வச்சிருக்க. எவனும் வீடு தேடி வர கூடாதுன்னு தான் நினைக்கிறேன். வீட்டு முன்னாடி நின்னு சத்தம் போடுற நிலைமைக்குக் கொண்டு வந்துடாதே" என எச்சரித்து விட்டு சென்றார்.
மகள்கள் இருவரும் தந்தையை வேதனையாகப் பார்க்க, காத்தவராயன் தன் கவலையை அவர்களுக்காக மறைத்துக் கொண்டு, "சங்கர், எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடு, பெரிய பொண்ணு படிப்பு முடிஞ்சுடும். அதுக்கப்புறம் பணத்தை ரெடி பண்ணி நான் கொடுத்திடுறேன்" என்றார் உறுதியாக.
"நீ கொடுத்த வார்த்தையை மீற மாட்டேன்னு எனக்குத் தெரியும், அந்த நம்பிக்கையில் தான் போறேன். நீயே வீடு தேடி வந்து பணத்தைக் கொடுத்திடு" என்று கூறிச் சென்றார் சங்கர்.
"பணத்துக்கு என்னங்க பண்ணுவீங்க?" என வெண்பா கேட்க,
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன், நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க? வாங்க எல்லோரும் சாப்பிடலாம்" என்று அங்கிருந்த இறுக்கமான சூழலை மாற்ற முயன்றார் காத்தவராயன்.
அப்பாவிற்கு எவ்விதத்திலும் பாரமாக இருக்கக் கூடாது என்பதுதான் அந்த மூன்று மகள்களின் ஒரே லட்சியம். ஊரார் தூற்றுவது போலத் தந்தையின் சுமையாக நாம் இருந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் கலங்கினர். அதிலும் இந்தக் கடன் சுமை ஏற ஏற, சீக்கிரம் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்று அப்பாவைக் காக்க வேண்டும் என்ற வெறி அவர்களுக்குள் உண்டானது.
இரவு உணவை முடித்ததும் நகையின் போன் ஒலித்தது. போனில் தெரிந்த எண்ணைக் கண்டதும் தலையில் அடித்துக் கொண்டவள், "அய்யோ... அப்பா, என்னை ரெக்கார்ட் நோட் வாங்க வரச் சொன்னாள், நான் அறவே மறந்து போயிட்டேன். அவள் கீழ நிக்கிறா போல இருக்கு!" என்றாள் பதற்றமாக.
"சுடர் அக்கா கூட போயிட்டு வா" என்றார் வெண்பா.
"அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர். பில்டிங் கீழதானே அவ பிரண்டு நிக்கிறா? அதுக்குக் கூடவா இவ தனியாகப் போக மாட்டாள்?" எனச் சுடர் சலித்துக் கொண்டாள்.