பாறாங் கல்லில் படுத்திருக்கிறாள் பிரார்த்தனா. இரவும் இல்லா பகலும் இல்லா அந்தி மயங்கிய மாலைப் பொழுது அது. அவளைச் சுற்றி முட்செடிகள் மண்டியிருக்க, கால் கையை மர வேரால் கட்டி அசைய முடியாது கிடக்கிறாள்.
அச்சத்தில் மேனி எங்கும் வியர்வை ஊற்றெடுக்க, மேலே மரத்தில் இருந்து பாம்பு விழுகிறது அவள் மீது.
ஐய்யோ பாம்பு என்று வாய் திறந்து அலறுகிறாள். ஆனால் சத்தம் வெளியே கேட்கவில்லை.
பாம்பு கொத்தி நுரை கக்கி சாக போகிறாளோ..
எவ்வளவு சிரமங்கள் கடந்து வந்தாள்! கடைசியில் பாம்பு தீண்டியா மரணிக்க வேண்டும் அவள்.
அவள் மாண்டால், அம்மா அழுவாள். ரமணிஅக்கா அழுவார்.
அவர்கள் மட்டுமா??
கருப்பில் வெள்ளை வரி போட்ட பாம்பு கழுத்தில் ஊர்ந்து மார்பில் படர்கிறது.
நிச்சயம் விஷப் பாம்பாக தான் இருக்கும்..
கடிக்க போகிறது.
முகத்தில் கொத்தப் போகிறது.
பிரார்த்தனாவால் அசைய கூட முடியவில்லை மூச்சை பிடித்துக் கிடக்கிறாள்.
"பிரார்த்தனா?"
யார் அதூ!
"வரோதயன் நீங்களா?"
"ஏன் படுத்திருக்கிங்க.. எழும்புங்க!" நகைக்கிறான்.
"பயித்தியமா வரோதயன் என்னப் பாத்து சிரிக்கிறிங்க.. என்ர கால் கை கட்டி இருக்கு. பாம்பு கொத்தப் போகுது என்ன! என்னால எப்படி எழும்ப ஏலும்?"
"முடியும் பிரார்த்தனா. எழும்பி வாங்க" என்றவன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு நகர்கிறான். தூரம் போகிறான். மறைகிறான்.
கோபம் கோபமாக வருகிறது பிரார்த்தனாவுக்கு.
கழுத்தில் ஊர்ந்த பாம்பு மார்பில் கொத்த வர, உதறி எழுகிறாள்.
வியர்த்து வழிந்து மூச்சு வாங்கியவள் கட்டிலில் இருக்க, மடியில் பேண்ட் பெல்ட் கிடக்கிறது. விளக்கணைந்த அறையில் வீதி விளக்கு கசிந்து தன்னிலை விளங்குகிறது.
போர்வை சுருண்டு அவளைச் சுற்றிக் கிடக்க, அது கைகாலை பிணைத்த வேராகவும், மேலே ஹாங்கரில் தொங்கிய விமலனின் இடுப்பு பட்டி நழுவி விழுந்ததை பாம்பு போலவும் கற்பனை செய்திருக்கிறாள்.
கனவு!
என்ன மாதிரி கனவு இது!? எதனுடனும் தொடர்பு படுகிறது?
எழுந்து விளக்கை போட்டு நேரம் பார்த்தாள். இரவு பதினொன்று நாற்பது காட்டியது.
நீர் அருந்தச் சென்றாள். வருணனும் விமலனும் ஹாலில் படுத்திருந்தனர். ராஜேஸ்வரியையும் எட்டிப் பார்த்து விட்டு அறை வந்தவள் ஃபோன் எடுத்துப் பார்த்தாள்.
"நாளைக்கு ஒஃபிஸூக்கு வருவிங்களா?" மேசேஜ் அனுப்பி இருந்தான் வரோதயன்.
"எழும்பி என்னோட வாங்க" என்று கனவில் கூப்பிட்ட வரோதயனை நினைவு படுத்திப் பார்த்தாள்.
ரமணியுடன் பேசி விட்டு படுத்த மாதிரி எட்டு மணிக்கே அவள் உறங்கி இருக்க, "ஓம்!" என்று அவனுக்கு பதில் அனுப்பி விட்டு, நாளை உடுத்த சேலை ரவுக்கை உள்பாவாடை எடுத்து வைத்துப் படுத்தாள்.
சரியாக சொல்வதானால் பிரார்த்தனா அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு ஒரு வாரம் முடிகிறது. வேலை நாள் ஐந்தும் விடுமுறை நாள் இரண்டுமாக ஏழு நாள் கணக்காகிறது.
இன்று விடியற்காலை 3.30க்கு திருகோணமலையை வந்தடைந்தவள் ஸ்டேஷனில் இறக்கியதும் ரமணிக்கு கூப்பிட்டாள்.
'தனா.. என்ன தனா இந்த நேரத்தில?? என்னவாம் தங்கச்சி?' தூக்கம் கலைந்து கரகரத்த குரலில் ரமணிக்கு பயம் தொற்ற,
'அக்கா, நான் பயந்த மாதிரி ஒண்டும் இல்ல. ஊருக்கு வந்துட்டம். இப்ப ரயில்வே ஸ்டேஷன்ல நிக்கிறன். என்னோட வரோதயன் இருக்கிறார்..' என்றாள்.
'ஓ! ட்ரிங்கோ வந்துட்டிங்களா.. சரி தனா விளங்குது' பக்கென பற்றிக் கொண்டார் ரமணி. என்ன கேட்க வருகிறாள் என்று புரிந்து கொண்டார்.
பதினைந்து நிமிடத்தில் பாலா ஸ்டேஷனுக்கு வந்தார், உறக்கத்தில் எழுந்த மாதிரி கலைந்த தலையும் துடைத்த முகமுமாக.
'ரெண்டு பேரும் ஏறுங்க!' என்றதும் ஹிமாலய சங்கடம் வரோதயன் பிரார்த்தனாவுக்கு.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் எப்படி?
ஸ்டேஷனில் இருந்து பிரார்த்தனாவின் வீடு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதற்காக நடையில் வருவது அந்த நேரத்தில் சாத்தியமல்ல.
பாலா தூக்கத்தில் எழுந்து ஓடி வந்ததே பேரன்பு.
"மூணு பேர் இருக்கலாமா பாலாண்ணா??"
"அட்ஜஸ்ட் பண்றதான் தனா"
பாலு ஒடிசலும் உயரமும். ரகுவரன் போல. பிரார்த்தனா கூட அளவான உடல் வாகு என்றாலும், முழுமையான ஆண் மகன் வரோதயனுக்கு இடம் அதிகம் தேவைப்படும்.
மோட்டார் சைக்கிளில் மூவர் ஏறி சுற்றுவது நண்பர்களுக்கு பொருந்தும்.
"எங்களுட்ட கார் வேன் இல்ல தனா. இருந்தா எடுத்து வந்து ஏத்தி இறக்க மாட்டனா.. ஒரு பத்து நிமிஷ பயணம் தான். பல்லக் கடிச்சுட்டு ஏறுங்க.. என்ன வரா.. உன்னக் கெஞ்சணும் எண்டு இல்லையே.."
வரோதயன் கவலை எல்லாம் பிரார்த்தனாவை பற்றியது.
"ஹெல்மட் இல்லையேண்ணா.." என்றாள்.
"அதான் பிரச்சினையா.. ஏறும்மா.. ரஃபிக் பொலிஸ் எல்லாம் எழும்பி ட்யூட்டிக்கு வர நேரம் கிடக்கு.." என்றவர் முடிந்தவரை இடம் விட்டு முன்னால் நகர, அவன் அமர்ந்த பிறகு பின்னால் இடம் போதுமா பிரார்த்தனாவுக்கு, நடுவில் வழுக்கி கிழுக்கி விழுந்து விடுவாளோ எனப் பயந்து பயந்தே வரோதயன் உட்கார,
"தனா, ரெண்டு பக்கமும் கால் போட்டு தான் இருக்கணும்" என பாலசுப்பிரமணியம் நினைவு படுத்தினார்.
துப்பட்டாவை கழுத்தில் சுற்றி கால் தூக்கிப் போட்டு வரோதயனை ஒட்டி உட்கார்ந்த சம்பவங்கள் எல்லாம் வாழ்வில் கற்பனையிலும் தனா காணாதவை.
திருகோணமலை நெடுஞ்சாலைகள் மாநகர சபை விளக்கு வெளிச்சத்தில் உறங்க, தெரு நாய்கள் தாம் குரைத்து விரட்டின அவர்களை.
பிரார்த்தனாவை இறக்கி விட்டு வரோதயனை தனது வீட்டுக்கு அழைத்துப் போனார் பாலா.
வரோதயன் அங்கே சற்று ஓய்வெடுத்து விடிந்ததும் தயாராகி அலுவலகம் கிளம்பினானாம். பிரார்த்தனா லீவை நீட்டித்து விட்டாள்.
காலையில் முதல் வேலையாக ராஜேஸ்வரியை அழைத்து வந்தவள் ஆறுதலாக சமைத்து பரிமாறி ஊர் சுற்றிய கதையை சொன்னாள்.
"நிலானிய பத்தின கவலை வேணாம்.. அவள நினைச்சி இன்னும் ரெண்டு வாய் கூடுதலா சாப்பிடலாம்.. அவ்வளவு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு நிலானிக்கு"
ராஜேஸ்வரி கடுகடுப்பு அடங்கி இருந்தது. "நல்ல வாழ்க்கை அமைஞ்சிருந்தா யாரு தடுத்ததாம்.. சொல்லிட்டு போக ஏலாதாமா.. ரெண்டு வரியில ஒரு கடிதம் எழுத கிடைக்கல்ல.. பெத்த வயிறு எரிஞ்சது அவளுக்கு தெரியுமா?" பொறுக்காமல் திட்டினார்.
"ஏன் அம்மா.. ஏன்? அவளாவது நல்லா இருக்கட்டும் விடுங்கள்ன்.. இப்ப எனக்கு ஒரு சுமை குறைஞ்ச மாதிரி இருக்கு. இனி உன்ர மகனுக்கு ஒரு வழி செய்றத தான் பாக்கணும்.." என்றாள்.
"என்ன அம்மாச்சி, இண்டைக்கும் லீவா! கணக்கு வழக்கில்லாம போகுது தனா லீவு.. வேலைக்கு வார எண்ணம் இருக்கா இல்லையா??" ரமணி அழைத்துக் கேட்டார்.
"இண்டைக்கு ஒரு நாள் லீவ போடுங்க.. நாளைக்கு ஒஃபிஸ்ல இருப்பன்"
வருணன் கூட அக்கறையுடன் விசாரித்தார் இளைய பெண்ணை பற்றி. விமலன் கோபித்துக் கொண்டிருந்தான்.
கனவு காணும் அளவுக்கு தூங்கி எழுந்தமையால் உறக்கம் எளிதில் வரவில்லை. இத்தனை நாளும் அந்த சிறிய படுக்கை அறைக் கட்டிலின் இடது புறத்தை பகிர்ந்து கொண்ட தங்கை இன்று எங்கோ சவுகரியமாக வாழ்கின்றாள் என்பதை நினைத்துப் பார்த்தாள்.
அலுமாரியில் பாதியை அடைத்திருந்த நிலானியுடைய உடைகளை காணும் போது முன்போல் இதயம் தடக்கிடுவதில்லை.
தங்கையின் தற்போது அந்தஸ்துக்கு தொடக் கூட தகுதி அற்ற ஆடைகள் அவை. அதனால் தான் ஒரு கைக்குட்டையை கூட எடுக்காமல் போயிருக்கிறாள் என்பது விளங்கியதும் ஒரு வகையில் நிம்மதி தானே!
மறு நாள் காலை இயல்பாக விடிந்தது.
போட்டி இல்லாமல் பாத்ரூம் பயன்படுத்தி, சமையலை கவனித்து, அலுவலகம் கிளம்பி கல்வித் திணைக்களத்தில் இறங்கும் போது, பள்ளிக் கூடத்துக்கு பொய் காய்ச்சல் சொல்லி லீவ் போட்ட மாணவி போன்ற மனநிலை மாறுதலை தவிர்க்க முடியவில்லை.
ட்ரெயினியின் தயவால் 'பிரார்த்தனாமிஸ்ஸின் தங்கை யாருடனோ ஓடி விட்டாளாம்' செய்தி பரவி இருக்கிறது அலுவலகத்தில்.
'தங்கச்சி ரன்னிங்காம் என பிரார்த்தனா.. இப்ப எங்க??' என்று யாரும் கேட்கக்கூடும்.
'ஓம்! தனக்கு விருப்பமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். உங்களுக்கு ஏதும் நஷ்டமா அதில்?' என்று பதிலுக்கு கேட்டு விடலாமா?
முகத்தில் அடித்துப் பேச வராதே..
என்ன சொல்ல வேண்டும், எப்படி பேச வேண்டும் என மனதில் ஒத்திகை ஓட, பிரார்த்தனா என்கிற நடுத்தர வர்க்க இளம் பெண் இந்த சூழ்நிலையையும் சமாளிக்க கற்கிறாள்.
அலுவலகம் நுழைந்தவளுக்கு அவள் பயந்ததை போல் சவுக்கடி காத்திருக்கவில்லை.
சிலர் சொன்ன 'குட் மோர்னிங்' விதங்களில் சிறிய மாற்றங்கள் தெரிந்தன!
தனது மேசைக்கு வந்து கோப்புகளைப் பரப்பிக் கொண்டவள் வேலையில் தன்னைப் புதைத்து கொள்ள, அவளைத் தொடர்ந்து நுழைந்த வரோதயனை, அவளைக் பார்த்துக் கொண்டே வரவுப் பதிவேட்டில் அவன் ஒப்பம் இடுவதை உள்ளார்ந்த பதட்டத்தில் இருந்தவள் கவனிக்கவில்லை.
கடந்து சென்று தனது இடத்தில் அமர்ந்த அவன் பின்னால் இருந்து கொண்டு வசதியாக அவளை கவனிக்க, அலுவலகம் வந்ததும் அவளை கை பிடித்து டைனிங் அறை அழைத்து சென்று இறுக அணைத்தார் ரமணி.
"ரமணி அக்கா!!"
விடுவித்து கன்னம் தொட்டு கொஞ்சியவர் "நீங்க நல்லா இருப்பீங்க தனா.. நல்லா மட்டும் தான் இருப்பீங்க.. இப்ப அனுபவிக்கிற துன்பம் எல்லாம் தற்காலிகம்.. நிரந்தரம் இல்ல. நல்ல ஒரு வாழ்க்கைய தர முதல் கடவுள் சோதிச்சி பார்க்கிறார்.. இதுக்கு எல்லாம் சேர்த்து உங்கள நல்லா வைப்பார்"
"ரமணி! என்ன நடந்த.. என்னத்த சாதிச்சதுக்கு எனக்கு இவ்வளவு ஆசீர்வாதங்கள்"
"சொல்லணும் எண்டு தோணுது தனா. மனசார சொல்றன்.."
"அக்கா..." அவர் கை பற்றி அழுத்தினாள்.
"மனசுக்கு சரியான வருத்தம் பிள்ள.. நிலானிய காண இல்ல எண்டு நீங்க துடிச்ச துடிப்பு இருக்கே.."
"என்ர தங்கச்சி அக்கா அவ.. என்ர ரத்தம். இயல்பா நடந்திச்சு அது.."
"சரி பிள்ள.. அந்த துடிப்பு அவளுக்கு இல்லையே.. நல்லா புளியங்கொம்பா புடிச்சதும், தாங்கி நிண்ட கையை உதறித் தட்டிட்டு போயிருக்காள்"
"விடுங்க அக்கா, நானே இப்ப தான் தெளிஞ்சி இருக்கன்.. அவ நல்லா இருந்தா போதும்.."
"போனவள் ஏன் ஃபோன் ஓஃப் பண்ணாளாம்?"
"இங்க இருந்து பைக்ல தான் போயிருக்காங்க.. வழியில எங்கயோ ஃபோன் மிஸ் ஆகிட்டாம்.."
"ஃபோன் துலஞ்சிட்டாமா.. சரி கூட்டிட்டு போனவன்ர நம்பர்ல இருந்து கதைச்சி இருக்கலாமே.."
"அந்த பெடியன்ர வீட்ட அவங்கட லவ்வுக்கு எதிர்ப்பாம்.. சிம் மாத்திட்டானாம். அந்த நம்பர் வேற யாருக்கும் தெரிய கூடாது எண்டு ஒருவருக்கு எடுக்கல்லயாம்"
"இதெல்லாம் ஒரு காரணமா தனா... இந்த விளக்கம் யாரு சொன்ன? நீங்க நிலானியோட கதைக்கல்லயாமே, வரோதயன் சொன்னார்.."
"அம்மாக்கு ஃபோன் எடுத்து கதைச்சவள்.."
"எப்ப?"
"நேற்று.."
"ராஜேஸ்வரி என்ன சொன்னாங்க.. தூசணத்தால (கெட்ட வார்த்தை) பேசி இருப்பாங்களே?"
முறுவலித்தவள் "ம்ம்.. இப்ப ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க.."
"ஆகுவாங்க அகுவாங்க.."
இரண்டு நாள் பயணத்தை கேட்டறிந்து அலசி முடித்தவர் "வேற என்ன கதை? எங்கட பிள்ளைட வாழ்க்கைல எப்ப விசேஷம் வருமாம்?" உள்ளர்த்தமாக கேட்க,
"அக்கா, பொறுப்புள்ள CC யா நடவுங்க.. தலைக்கு மேல பெண்டிங் இருக்கு.. AO பெல் அடிச்சு கூப்பிட்டு வச்சி க்ளாஸ் எடுக்க முதல் ரெண்டு ஃபைலயாவது க்ளியர் பண்ணணும், நான். வாங்க" என்று அழைத்துப் போனாள்.
ரமணி தந்த ஒற்றை அணைப்பு அவளுக்கு பெரும் ஆறுதலும் பலமும் கொடுத்திருந்தது.
"மிஸ் பண்ணினிங்களா அக்கா என்ன? மூணு வருஷத்துல இவ்வளவு நாள் நாம பார்க்காம இருந்தது இது தான் முதல் தடவை என?" மதிய உணவு இடைவேளையின் போது கேட்டாள்.
"ஓம் பிள்ள.. மனசுல ஒரு ஓரத்தில பயம் தான் எனக்கு. இந்த கஷ்ட நேரத்தில என்னோட நிக்க இல்லையே ரமணி, தனிய போக வேண்டி ஆகிட்டே எண்டு கோபிப்பிங்களோ எண்டெல்லாம் யோசனை எனக்கு. நித்திரையும் இல்ல.."
"என்ன ரமணி அக்கா?"
"இல்ல பிள்ள, நீங்க நினைக்காட்டியும் எனக்குமே குற்றவுணர்வு.. நல்ல வேளைக்கு வரோதயன் வந்தார். இந்த வருஷமா கடவுள் தான் அந்த பெடியன அனுப்பி வச்சிருக்கு.."
அவர் வரோதயனிடமே வந்து நிற்க, பிரார்த்தனா மௌனமாக உண்டாள்.
வாகன சப்ஜெக்ட எடுத்தமையால் வெளி வேலைகளே அதிகம் இருந்தன வரோதயனுக்கு. அவன் காலையில் பார்க்கும் போது இவள் தலை நிமிர்த்த தயாரில்லை. மதியம் இருந்து அவன் இருக்கை காலியாக கிடந்தது.
"எங்க எங்க போனிங்க தனா.. சாப்பாடு எல்லாம் எங்க? வரோதயன் குணம் எப்டி.. நல்ல பொறுமையான பெடியன் என.. உதவிக்கு மட்டும் வந்த மாதிரி தெரியல்ல?" கிடைக்கும் பொழுதில் வரோதயனுக்கும் அவளுக்கும் உறவு நிலையில் முன்னேற்றம் உண்டா என அறிய, தூண்டவும் துருவவும் செய்தார் லோகேஷ் ரமணி.
திருத்தப் பணிக்கு விட்டிருந்த வாகனங்களை மெக்கானிகல் எஞ்சினியரோடு சென்று தர நிர்ணயம் செய்த பிறகே கையேற்க இயலும். கணக்கு பிரிவு அதன் பிறகே கொடுப்பனவு காசோலை வரையும்.
பணம் வங்கிக் கணக்கில் விழும் வரை சப்ஜெக்ட் காரனை விட மாட்டான் ஷெட் ஓனர்.
'வாகனத் திருத்தம் செய்து எடுத்து வர வேண்டும்' என்று எந்த நேரம் வீட்டில் பொய் உரைத்தானோ வரோதயன், சிலாபம் இருந்து வந்த பிறகு மெக்கானிக் செட்டில் தஞ்சம் புகுந்திருந்தன அசைன் வண்டிகளுக்கு பின்னால் அலைந்தான்.
அலுவலகத்தில் பேசாமல் போனால் என்ன இரவு புலனம் வந்து விடுவான்.
அவன் தாமதம் ஆகினால் 'குட் நைட்' அனுப்பி எங்கே ஆளை காணவில்லை என்று தனா தேடுவாள்.
அன்று இரவு பஞ்சு ராசுவுடன் வெளியே வந்திருந்தவன் "என்ன நடக்குது.. தங்கச்சி கதைச்சாங்களா" என்று கேட்டான்.
"ம்! அம்மாவோட கதைப்பா.."
"நீங்க?"
"நான் கதைப்பன். என்ன அவசரம்?"
"பிறகு, என்ன சமையல்?"
"புதுசா ஒண்டும் இல்ல.. வழக்கம் போல தான்"
"நாங்க வெளில சாப்பிட வந்தம்.."
"அம்மாவோட வா.. சரி நான் டிஸ்ரர்ப் பண்ணல்ல"
"இல்ல, அம்மா எங்க இந்த நேரத்தில வரப் போறாங்க?" என்று நின்றிருந்த உணவகத்தை படம் பிடித்து அனுப்பினான்.
"ரெஸ்ராரன்ட் மாதிரி இருக்கு. உங்கட ஊரா?"
"இல்ல இது மூதூர் 'சைனத் ஹோட்டல்' இண்டைக்கு ராசுட பிறந்த நாள்.. ட்ரீட் கேட்டம். சாப்பிட கூட்டி வந்தான்"
"ஓ.."
கலகலப்பாக பேசிச் சிரித்து பொழுது கழித்த நண்பர்கள் இவன் தனித்து நின்று கைபேசியை தடவவும்,
"யாரோட இவன் மெனெக்கெடுறான்.. கிழிஞ்ச ரவுசரோடவா?"
"அந்த புள்ளயா தான் இருக்கும்..கிழிஞ்ச கதை காதல் கதையா மாறிட்டுதா மச்சான்.. "
கிண்டல் செய்யும் ராசு பஞ்சுவுக்கு தனது மனதை வெளிப்படுத்தாமல் எங்கே போய்விடப் போகிறான். முதலில் அவள் மனம் திறக்க வேண்டுமே.
பிரார்த்தனாவுக்கு அவனைப் பிடிக்கும். பிடித்தம் எதுவரை என்பது அவள் வாயாலும் வெளிப்பட வேண்டும்.
வேலைக்கு போவதும் வருவதும் இரவில் வரம்புக்குட்பட்டு பேசுவதும் என நாள்கள் நகர, வரோதயன் பிரார்த்தனாவிடம் மனதில் உள்ளதை நேரிடையாக கேட்கும் நாள் வந்தது.
திருகோணமலை வரோதய நகரில் கிழக்கு மாகாண நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு அருகில் நடேசர் ஆலயம் அமைத்துள்ளது. கோயிலின் வெள்ளிக் கிழமை பூஜையானது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் பொறுப்பாக்கப்பட்டிருக்க, கல்வித் திணைக்களத்தின் பூசை அந்த வாரத்தில் இருந்தது.
கோயிலில் தென்னங்குருத்தோலை தோரணம் அமைப்பது முதல் அன்னதான சமையல் பணிகள் வரை அனைத்திலும் உத்தியோகத்தர்களே பங்கெடுப்பர்.
புதிதாக நியமனம் பெற்ற ஆறு பேருக்கும் இது புதிய அனுபவம். ஜுனியர்களான அவர்கள் வேலைகளை எடுத்து போட்டு செய்ய, வரோதயன் காய் கறி பழக்களுக்கு பொறுப்பு எடுத்து இருந்தான்.
காய் கறி, பூஜைக்கான பழங்களை ஊரில் சித்தப்பாவிடன் இருந்து தருவித்தவன் தங்கள் கோயில் பணிகளில் தலைமை வகிக்கும் அனுபவத்தில் வேலைகள எடுத்து போட்டு செய்து நிற்காமல் ஓட, மதிய பூஜையில் தான் பிரார்த்தனாவைக் கண்டான்.
கண்டவன் சர்வ அலங்காரங்களுடன் காட்சி தந்த நடராஜர் பெருமானை தரிசிக்க மறந்தான்.
பிறந்த நாளுக்கு அவன் பரிசளித்த மஞ்சள் புடவையில் கூப்பிய கரமும் மூடிய இமையுமாக தீவிர பக்தையாக தெரிந்தாள் ரமணியை ஒட்டி நின்ற பெண்.
தக்க தருணத்திற்கு காத்திருந்தான், சிறு புன்னகையாயினும் அவள் முகம் பார்த்து சிந்த.
பூஜை நிறைவுற்றதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலைப் பொழுதில் கோயிலில் இருந்து பெட்டியை கட்டும் வரை அவன் வேண்டிய சந்தர்ப்பம் அமையவில்லை.
அலுவலக வாகனம் பகுதி பகுதியாக ஸ்டாஃபை ஏற்றிச் செல்ல, முதல் இரு தவணையை தவற விட்டு ரமணியுடன் இணைய காத்திருந்த பிரார்த்தனா, ராஜேஸ்வரிக்கு திருநீறு சந்தனம் குங்குமம் எடுக்க கோயிலுக்கு சென்றாள்.
அன்னதான மடத்தில் அனைவரும் இருக்க, அந்தப் பக்கம் கோயிலுக்கு சென்றவளைத் தொடர்ந்தவன் தனது தாய்க்கும் ஒரு கடதாசியில் விபூதி சேகரித்து "இந்த சாரிய எங்கயோ கண்ட மாதிரி இருக்கே.." என்றான் விழியோரச் சிரிப்புடன்.
"அதுக்குள்ள மறந்து இருக்க மாட்டிங்க எண்டு நினைக்கிறன்?" பிரார்த்தனா புன்னகைத்தாள்.
"அப்ப நான் நினைக்கிறது சரி?"
"என்ன நினைக்கிறீங்க நீங்க?"
"உங்களுக்கு புடிச்சிருக்கு?"
பிரார்த்தனாவின் இமைகள் சில தடவை துடித்தன.
"உங்களுக்கு புடிச்சிருக்கு எண்டே எடுத்து கொள்ளலாமா நான்?"
அவன் கண் பார்த்தவள் "புடிச்சா மட்டும் கட்ட ஏலாது.."
வரோதயன் புருவங்கள் சுருங்கின.
கோயிலைப் பார்த்தவன் "இத விட பொருத்தமான இடம், சரியான நேரம் கிடைக்காது எண்டு நினைக்கிறன்.. நான் நேரடியாவே கேக்கிறன்.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு பிரார்த்தனா. உங்கள கல்யாணம் செய்ய விருப்புறன். நீங்க என்ன நினைக்கிறீங்க"
வாழை இலையில் சேகரித்த பிரசாதத்தை நிதானமாக மடித்தவள் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
“உங்கட மனசில உள்ளத நீங்க மறைமுகமா சொல்லிட்டிங்க.. இப்ப நேராகவும் கேட்டுட்டிங்க. இதுக்கு மேல உங்களுக்கு பதில் சொல்லாம இழுத்தடிக்க விரும்பல்ல நான்..." என நிறுத்தியவள் "எனக்கு ஓல்ரெடி கல்யாணம் ஆகிட்டு வரோதயன். நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் ஆகாத குமர் பிள்ளை இல்ல நான். பத்தொன்பது வயசுலயே எனக்கு எல்லாம் முடிஞ்சுது” என்றாள்.