தகிக்காதே குளிர்நிலவே..!(எபிலாக்)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
ஏழு வருடங்களுக்கு பிறகு…

நெடுஞ்செழியன்‌ தனது சிற்றப்பனுடன் விசிலடித்துக் கொண்டும் டிக்கெட்டுகளை கிழித்து பறக்க விட்டுக் கொண்டும் திரையரங்கில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

“ சித்து….தூக்குங்க…ஹா…ஹா…ஜாலியா இருக்கு சித்து…கலர் பேப்பர் எங்க சித்து..? தாங்க…இப்ப நான் மேல
தூக்கி போடுறேன்….” என்றவன் அருண்மொழியின் தோள் மீதமர்ந்து கொண்டு வண்ணக் காகிதங்களை பறக்க விட்டபடி குதூகலித்துக் கொண்டிருந்தான்.

“ செழியன் எங்க பாரதி?” என்றபடி‌ கைகளை துடைத்துக் கொண்டு வந்தாள் நந்தினி.

“அவன் எங்க இங்க இருக்கப்‌ போறான்.. இன்னைக்கு தலைவரோட படம் ரிலீஸ் ஆகிருக்கு..அதான் சித்தப்பாவும் பிள்ளையும் ஃபர்ஸ்ட் டே…ஃபர்ஸ்ட் ஷோவுக்கு…போயிருக்காங்க..” என்ற படி மேட்டிட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் பாரதி.

இரண்டாவதாக கருவுற்றிருந்தாள்.

“ என்ன சொன்னாலும்‌ இந்த மனுஷன் கேக்கவே மாட்டாரு…வயசு நாப்பதை தாண்டியாச்சு…இன்னமும் டீனேஜ் பையன் மாதிரியே நடந்துக்குறாரு. போதாததுக்கு செழியனையும் சேர்த்து கெடுக்குறாரு…இன்னைக்கு வரட்டும் இருக்கு கச்சேரி..” என அக்மார்க் மனைவியாக நந்தினி கடுகடுக்க ,மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள் பாரதி.

சில வருடங்களுக்கு முன்பு பார்த்த நந்தினிக்கும் இப்போது இருக்கும் நந்தினிக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.

காலத்திற்கு மட்டுமே அனைத்தையும் மாற்றும் சக்தி உள்ளது போலும் என நினைத்துக் கொண்டாள் .

ஆறு வயது சித்தார்த் ஐந்து வயது சத்யாவின் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க வைத்துக் கொண்டிருந்தான்.

ஆம்..! சத்யாவை இளமாறன்‌ மற்றும் சுகன்யா தத்தெடுத்திருந்தார்கள்.

அவளுக்கு நடப்பதில் சிறிது சிரமம் இருந்தது

இளமாறனும் சுகன்யாவும் அவளுக்கு நடைப்பயிற்சி அளிப்பதை பார்த்துவிட்டு சித்தார்த்தும் தினமும் சத்யாவிற்கு நடைப்பயிற்சி செய்ய உதவிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த வித்யா, “ டேய்.. சித்தார்த்..என் கூட விளையாட வாடா…” என்றாள்.

“ நீ போ…வித்து…நான் அப்பறமா வர்றேன்…நம்ப சத்யா இப்ப நடந்துட்டு இருக்கா…அவளோட நான் இருக்கேன்… செழியன் வந்ததுக்கு அப்பறமா நாம விளையாடலாம்…” என்றான்.

தான் கூறியவுடன் சித்தார்த் வராததால் கோபத்துடன், “போடா… நான் உன் கூட க்கா…” என முகத்தை திருப்பிக் கொண்டு போனாள் வித்யா.

ஆறாண்டுகளுக்கு முன்பே இரட்டை பெண் குழந்தைகளை தத்தெடுத்திருந்தனர் இளமாறன் சுகன்யா தம்பதியினர்.

ஒரு குழந்தை எவ்விதமான பிரச்சனையுமின்றி இருந்தது. அவள் தான் வித்யா.

மற்றொரு பெண் குழந்தை காலில் ஏற்பட்ட நரம்பு பிரச்சனையின் காரணமாக நடப்பதற்கு சற்று சிரமப்படலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனாலும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தி சத்யாவிற்கு சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

இளமாறன் சுகன்யாவிற்கு அடுத்து அதிக அக்கறையுடன் அவளைப் பார்த்துக் கொள்வது அருண்மொழியின் மகன் சித்தார்த் மட்டுமே.

இளமாறன் மற்றும் மாறவர்மன் விடுமுறையை கழிக்க இந்தியாவிற்கு வந்திருந்தனர்.

வயது மூப்பின் காரணமாக வீர ராஜசிம்மர் அவர்களின் தீவிலேயே இருந்து கொண்டார்.

சிறை தண்டனை முடிந்து வந்த ஆதிசேஷன் கொஞ்சமும் திருந்தாதால் அவரை அரண்மனையிலிருந்தே விரட்டி விட்டனர்.

மந்தாகினிக்கு வருத்தமாக இருந்தாலும் அவரை அரண்மனைக்குள் அனுமதித்தால் மற்றவர்களின் உயிருக்கு மீண்டும் ஆபத்து வர வாய்ப்பிருந்தது என்பதால் பேசாமல் இருந்து கொண்டார்.

சித்தார்த் சத்யாவை மெல்ல அழைத்துக் கொண்டு மாறனின் அருகே அமர வைத்தான்.

சிறிது நேரத்தில் செழியன் அருண்மொழியுடன் வந்துவிட..

குழந்தைகள் அனைவரும் ஒன்று கூடி விளையாட ,பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டீங்களா? தியேட்டருக்கு போய் சின்ன பையன் மாதிரி விசிலடிச்சு டிக்கெட்டை கிழிச்சி போட்டு ஆட்டம் போட்டுட்டு இருக்கீங்க? நீங்க கெட்டது பத்தாதுன்னு செழியனையும் கூட்டிட்டு போய் கெடுக்குறீங்க… கொஞ்சமாவது கம்பெனி சி.இ.ஓ மாதிரி நடந்துக்கோங்க…” என படபடவென பொரிந்தாள் நந்தினி.

வெட்டி வைத்த கேரட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே, “ சும்மா கத்தாத நந்தினி…பீ..கூல்.. லைஃப் ல சில விஷயங்களை என்ஜாய் பண்ணிடனும். கம்பெனி சி.இ.ஓ வா இருந்தா லைஃப்பை என்ஜாய் பண்ணக்கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா என்ன? எப்ப பார்த்தாலும் அடுப்புல வைச்ச சுடு தண்ணி மாதிரி கொதிச்சிட்டே இருக்காத…அதோ அந்த வானத்துல இருக்குற நிலா மாதிரி குளிர்ச்சியா கூலா இரு…இப்ப உன்னை நான் கூல் பண்ணவா…” என்றவன் அவளது இதழை நோக்கிக் குனிய , “ டேய் நாங்கெல்லாம் இங்க தான்‌ டா இருக்கோம்…இதெல்லாம் ரூம்ல போய் வச்சிக்கோங்க…” என ஒரு சேர அனைவரும் கத்த வெட்கத்துடன் விலகி நின்றாள் நந்தினி..

வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த முழுமதி அந்த இரவிற்கு குளிர்ச்சியையும் இனிமையையும் தந்து இதத்தை பரப்பிக் கொண்டிருந்தது.

அது போல இவர்களது வாழ்வும் இனிமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்தி விடை பெறுவோமாக...


நன்றி 🙏 ❤ ❤
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(எபிலாக்)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
613
475
63
Pondicherry
கதை நன்றாக இருந்தது.. எல்லோர் வாழ்க்கையும் அழகாக அமைந்துவிட்டது ❤️.. வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
  • Like
Reactions: STN46

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
உங்களது விமர்சனத்திற்கு ரொம்பவே நன்றி மா 🙏 ❤
 
Last edited:

EswariSasikumar

Active member
Nov 21, 2018
409
236
43
Chennai
கதை ஆரம்பத்துல கொஞ்சம் போர் அடிக்குதேன்னு தோணுச்சி...போகப்போக ஜெட் ஸ்பீடு தான் 😝 அருமையான கதை.. நிலையான முடிவு... வாழ்த்துக்கள் மா 💞 💞 💞 💞 💞
 
  • Like
Reactions: STN46

Kalai Karthi

Active member
Sep 21, 2025
405
138
43
Madurai
கதை அருமை. காதல் பாசம் துரோகம் சஸ்பென்ஸ் நட்பு கலந்து சூப்பராக போனது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
 
  • Like
Reactions: STN46