அத்தியாயம் 13
சீதாவின் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டவன் சில நிமிடங்கள் கண்ணிமைக்காமல் அவளை உற்றுப் பார்த்தான் ராவணன்..
அவளை பார்க்கும் பொழுது அவன் மனதிற்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை ஆனால் மிகவும் பரவசமடைந்து முகத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது..
அவளைப் பார்த்துக் கொண்டே அவன் என்னவோ சொல்வதற்காக வாய் எடுத்தான் ..
நன்றாக யோசித்து அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டதோ அதனால் தன்னுடைய விபரங்களை கூறப்போகிறானோ என்கிற ஆர்வத்தில் அவனுடைய முகத்தை அவளும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டேயிருக்க..
பேச்சு வராதவன் போல தடுமாறினான் பேசுவதற்கு..
" சொல்லு இந்தர்.. ஏதாவது ஞாபகம் வந்ததா சீக்கிரம் சொல்லு.. உன் நிஜமான பேர் என்ன ?? நீ எந்த இடத்தில் இருந்த ?? இங்க உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா சொல்லு", என்று அவள் ஒவ்வொரு கேள்விகளாக அவனைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்க அவன் முகத்தில் தெரிந்த பரவசம் கொஞ்ச நேரத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது..
மகிழ்ச்சி சந்தோஷம் என்று எல்லா உணர்ச்சிகளும் மறைந்து இப்பொழுது குழப்பம் பதட்டம் மட்டும் குடி கொண்டிருந்தது..
இம்புட்டு நேரம் நல்லா தானே இருந்தான் இப்போ என்ன மறுபடியும் முகம் ஜீரோ வாட்ஸ் பல்பு போல மாறிவிட்டது என்று அவளும் வருத்தப்பட்டாள்..
ஒருவேளை ஞாபகத்திற்கு வந்ததெல்லாம் நான் கேட்ட கேள்வியில் மொத்தமாக மறந்து போய் விட்டதோ இவனுக்கு என்று தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக் கொண்டாள்..
" என்னாச்சு சொல்லு ஏன் இப்படி முழிக்கிற??"
" நான்.. நான்.. அது வந்து அது..", என்று அவன் திணற..
" உனக்கு என்னமோ நியாபகம் வந்தது.. நல்லா திரும்பவும் ஞாபகப்படுத்தி சொல்லு நீ யாரு?? உன்னுடைய உண்மையான பெயர் என்ன?? எந்த ஊரிலிருந்து வந்திருக்க?? இல்ல இது தான் உன்னோட ஊரா?? இங்க உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா??"
"சொல்லுங்க சொல்லுங்க.. நீங்க யாரு நீங்க யாரு..", என்று திரைப்பட பாணியில் அவளும் எப்படி எல்லாமோ கேட்டு பார்த்து விட்டாள் ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை..
மீண்டும் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே மயக்கமாகி சரிந்து விட்டான் அவன்..
அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து போய் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்தாள்..
" இங்க பாரு உனக்கு ஒன்னும் இல்லை தானே?? என்னை பாரு இந்தர்", என்று சொல்லி அவனுடைய கன்னத்தை தட்டி எழுப்பினாள்..
மெதுவாக கண் திறந்து பார்த்தான் அவன்..
" இங்க பாரு உனக்கு ஒன்னும் இல்ல எந்திரிச்சு உட்காரு யூ ஆர் ஆல்ரைட்.. என்னை பாரு என்னை தெரியுதா உனக்கு அடையாளம் தெரியுதா இல்ல மறந்துட்டியா??"
" சீதா.. எனக்கு என்ன ஆயிற்று? என்னவோ எனக்கு தலை வலிக்கிறதே.. ", என்று சொல்லிக்கொண்டே தலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் அவன்.
" உனக்கு ஒரு பிரச்சனையுமில்ல நல்லா தான் இருக்க லேசான தலைவலி தான் சரியாகிவிடும் நீ வா படுத்து தூங்கு", என்று சொல்லி அவனை மெதுவாக அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்தாள்.
சிறிது நேரம் அவளுடைய கைகளை பற்றி கொண்டு அப்படியே படுத்திருந்தான் அவன்..
" என்னை விட்டு எங்கேயும் சென்று விடாதே சீதா என் கைகளை பிடித்துக் கொண்டு இப்படியே இரு நான் சற்று நேரத்தில் உறங்கி விடுவேன் அதுவரைக்கும் என் கைகளை விட்டு விட்டு விலகிச் செல்லாதே..", என்று அரை மயக்கத்தில் அவன் கேட்கவும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவள் சற்று நேர யோசனைக்கு பிறகு..
" சரி நீ நல்லா தூங்கு நான் பார்த்துக்கிறேன் நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கேயே உன் பக்கத்திலேயே இருப்பேன் சரியா நீ நிம்மதியா எந்த யோசனையும் இல்லாமல் தூங்கு", என்று சொல்லி அவனுடைய தலை முடியை வருடி கொடுத்தவள் அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றி கொண்டாள்..
குழந்தை பயத்தோடு தன் தாயை விடாமல் கைபிடித்து கொண்டு உறங்குவது போல் அவன் உறங்கிக் கொண்டிருந்தான்..
தூக்கத்தில் கூட அவன் கம்பீரம் ஒரு சதவீதம் கூட குறையவில்லை..
காற்றாடியின் வேகத்திற்கு ஏற்ப அவனுடைய தலை முடி அசைந்தது அங்குமிங்கும் முன் நெற்றியில்..
சிறிது நேரம் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு கைகளை மெதுவாக அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்..
" யாருடா நீ?? எங்கிருந்து வந்த ??உன் பேர் என்ன?? நிஜமாக இதுதான் உன் பேரா ?? இல்லை ஞாபக மறதியில் எதையாவது பிதற்றுகிறாயா?? இல்லை மனநலம் கோளாறா?? அப்படி என்னதான் உனக்கு பிரச்சனை ?? எதுவுமே எனக்கு தெரியலையே நீ சொல்றத என்னால் நம்பவும் முடியல..
இந்த காலத்தில் எங்கடா ராஜாக்கள் இருக்காங்க?? அப்படியே இருந்தாலும் யாராவது இப்படி மன்னன் போல டிரஸ் போட்டுக்கிட்டு திரிவாங்களா ரோட்டுல, அதுவும் நடு ரோட்டில்?? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ?? பாக்குற எல்லாரும் உன்னை பைத்தியக்காரன் அப்படின்னு சொல்றாங்க ஆனால் என்னால் உன்னை அப்படி நினைக்கவே முடியல.. பைத்தியக்காரனா இருந்தா எப்படி இத்தனை கண்ணியத்தோடு நடந்துக்க முடியும்?? யாருக்காவது பிரச்சனை என்றால் எப்படி ஓடி வந்து உதவ முடியும்?? இத்தனை தெளிவாக எப்படி அறிவோடு பேச முடியும்?? அத்தனை சுவையாக எப்படி சமைக்க முடியும்?? உன் கண்களில் தெரியும் கூர்மையான பார்வையும் தெளிவான பேச்சும் பார்க்கும்போது எப்படி உன்னை பைத்தியம் என்று சொல்ல முடியும்?? நிச்சயமாக கிடையாது.. நீ நல்லவன் தான் புத்தி கூர்மை உடையவன் தான் இதை நான் நம்புறேன்..
ஆனால் நீ யார் என்று தான் எனக்கு தெரியல.. கூடிய சீக்கிரமே நான் உன்னை கண்டுபிடிப்பேன் நிச்சயமாக கண்டுபிடித்தே தீருவேன், என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் தனக்குத்தானே அவள்..
அந்த நேரம் பார்த்து அவளுடைய போன் ஒலிக்கவும், இந்த நேரத்தில் யாருடா அது கூப்பிடுறது என்று நினைத்துக் கொண்டு போனை எடுத்துப் பார்த்தால் அதில் அவளுடைய அன்னையின் மொபைல் எண் தென்பட்டது..
இந்த நேரத்தில் அம்மா போன் பண்றாங்க எதுவும் முக்கியமான விஷயமா இருக்குமோ?? என்று யோசித்துக் கொண்டே போனை அட்டென்ட் செய்தாள்.
" என்னம்மா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க??"
" பண்ணாம என்னடி பண்ண சொல்ற?? எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது நீ பாட்டுக்கு யாரோ ஒருத்தனை கூட்டிட்டு வந்து வீட்ல உட்கார வச்சிருக்க இங்க நான் எப்படி நிம்மதியா இருப்பேன்?? ஒழுங்கு மரியாதையா ஒன்னு நீ ஊருக்கு கிளம்பி வர இல்ல நான் அங்கே கிளம்பி வந்துடுவேன் இது ரெண்டில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நீ சம்மதம் சொல்லு இல்லன்னா என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது", என்று தாய்மைக்கே உரிய பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தார் அவர்.
" அம்மா நீ நினைக்கிற மாதிரி இங்க எந்தவித பிரச்சனையும் கிடையாது அவன் ரொம்பவே நல்லவன்.."
" அவன் நல்லவனா கெட்டவனா அப்படின்னு நான் கேட்கல அவன் எவ்வளவு பெரிய நல்லவனா இருந்தாலும் சரி ஊர் உலகத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது அவ கூட இன்னொரு ஆம்பளையும் வந்து தங்கினா அதை ஊர் உலகம் தப்பா தான் பார்க்கும் தப்பா தான் பேசும்.. இந்த மாதிரி பேச்செல்லாம் என்னுடைய மகள் வாங்க கூடாது அதை நான் விரும்பவும் மாட்டேன்..", என்று கண்டிப்போடு அவர் கூறி விட இவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..
அவருடைய பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சொல்லும் நியாயங்கள் அனைத்தும் உண்மைதான்..
பெற்றவர்களுக்கு தானே தெரியும் இந்த பதட்டம் பயம் எல்லாம்..
அவரை சொல்லி குற்றமில்லை என்று உணர்ந்து கொண்டவள் அமைதியாக இருந்தாள் எந்த பதிலையும் பேசாமல்..
" என்னடி நான் பாட்டுக்கு பேசிகிட்டிருக்கேன் நீ வாய் திறந்து எதுவும் பதில் சொல்ல மாட்டேங்குற இப்ப நீ அவனை அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறியா இல்ல நான் கிளம்பி அங்கே வரட்டுமா அதுக்கு மட்டும் பதில் சொல்லு"
" அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்.. கொஞ்சம் அமைதியா இரு நீ சொல்ற மாதிரி நான் நடந்துக்கிறேன்.. அதுக்கு கொஞ்சம் எனக்கு டைம் கொடு.."
" என்னடி டைம்?? என்ன டைம் வேண்டி கிடக்கு உனக்கு??"
" சில முக்கியமான வேலைகள் இருக்கு நான் சில விஷயங்களை கண்டுபிடித்தாகணும் அதுக்கு எனக்கு கொஞ்சம் நேரம் தேவை அதனால கொஞ்ச நாளைக்கு அமைதியா இருங்க எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. என்னை நம்புங்க.. கொஞ்ச நாள் எனக்கு டைம் கொடுங்க அதுக்குள்ள எல்லா பிரச்சனையும் சரி பண்ணிடுறேன் அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்", என்று கெஞ்சி கூத்தாடி மன்றாடினாள் தன் தாயிடம்..
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வாய் திறக்காமல் அமைதியாகவே இருந்தார் ஏதோ யோசனையில்..
" நீ சொல்ற மாதிரியே நான் உனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுக்கிறேன் ஆனால் அதுக்குள்ள நீ எல்லா பிரச்சனையும் சரி பண்ணனும் சரியா?? அதேபோல அவன் அந்த வீட்டில் இருக்கக் கூடாது கொஞ்ச நாள் தான் டைம் அதுக்குள்ள எல்லாம் நான் சொன்னபடி நடக்கணும் இல்லன்னா நான் அங்கே வந்துடுவேன் இல்ல நீ இங்க வரணும்"
" நிச்சயம் நீ சொன்ன மாதிரியே நான் நடந்துக்கிறேன் கொஞ்ச நாள் மட்டும் பொறுத்துக்கோ", என்றாள் அவள்.
அதன் பிறகு சரி என்று ஒற்றை வார்த்தையை கூறிவிட்டு அவர் போனை வைத்து விட்டார்..
இப்படியே எத்தனை நாட்களுக்கு அம்மாவை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் இது.. கூடிய சீக்கிரமே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வர வேண்டும்.. அப்படியென்றால் இவனைப் பற்றிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இவனிடம் கேட்டால் எதுவும் வேலைக்காகாது ஒண்ணு இவனைப் பத்தின எல்லா விஷயத்தையும் இவன் மறந்திருக்கணும் இல்ல மறக்கப்பட்டிருக்கணும்..
இது இரண்டில் ஏதோ ஒன்று தான் நடந்திருக்கணும் அதனால் தான் இவனுக்கு எதுவும் தெரியல ஆனால் இவன் சொன்ன இரண்டே விவரங்கள வச்சிட்டு இவனை பத்தி நாம எப்படி தேடுவது..??
பெயர் இந்திர ராவணன் ஊர் மங்களாபுரம்.. இதை மட்டும் வச்சு ஒருத்தனை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது..
இந்த ஊரில் இந்த பெயரில் இப்படி ஒருத்தன் வாழ்ந்தானா அப்படின்னு யாரை போய் கேட்கிறது ?? முதலில் இந்த பெயரில் இப்படியொரு ஊர் இருக்கா இல்லையான்னே தெரியல.. அததான் முதலில் கண்டுபிடிக்கணும் யார்கிட்ட போய் கேட்கிறது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் அவள்.
வெகு நேர யோசனைக்கு பிறகு அவளுக்கு மண்டைக்கு பின் ஒளிவட்டம் எதுவும் மிளிர்ந்ததோ என்னமோ தெரியவில்லை வேக வேகமாக எழுந்து சென்று அங்கே இருந்த கணினியை உயிர்ப்பித்தாள்..
தொழில்நுட்ப வளர்ச்சி எத்தனையோ வளர்ந்த பிறகு நாம் ஏன் இருந்த இடத்திலிருந்து கொண்டே கவலைப்பட வேண்டும் உள்ளங்கைக்குள் உலகமே அடங்குமளவிற்கு மொத்த தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து விட்டது அப்படி இருக்கும் பொழுது நான் யாரையும் போய் கேட்டு கெஞ்சி இவனைப் பற்றி விவரங்களை சேகரிக்க வேண்டிய அவசியமே கிடையாது..
இவனை பற்றிய விஷயங்களை வலைதளத்தில் தேடினால் நமக்கு தேவையான தகவல்கள் தானாகவே கிடைத்துவிட போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் உடனே கணினியில் அவள் தேட வேண்டிய விஷயங்களை டைப் செய்து அதற்குண்டான பதில்கள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள்..
கடவுளே, எந்த நம்பிக்கையில் இதை செய்றேன்னு தெரியல.. இருந்தாலும் இவன் சொன்னதை வச்சு ட்ரை பண்ணுவோம்.. இப்போ நான் தான் பைத்தியக்காரியா மாறிட்டேன் போல, என்று நினைத்து கொண்டாள் மனதினுள்..
ஆரம்பத்தில் வெறும் இந்திர ராவணன் என்று டைப் செய்து பார்த்த பொழுது அந்த பெயருக்குண்டான ஆட்களின் விவரங்கள் மிகவும் குறைவாக கிடைத்தது..
அதுவும் இவள் எதிர்பார்த்தது போன்ற தகவல்கள் அதுவும் நம்பிக்கையான தகவல்களாக அவை இல்லை..
அதனால் அவன் சொன்ன மங்களாபுரம் என்கிற வார்த்தையை சேர்த்து அவன் பெயரை அதில் பதிவிட்டாள்..
அடுத்த அது தர போகும் பதிலுக்காக ஆர்வத்துடன் கைகளை பதட்டமாக டேபிளில் தட்டிக் கொண்டு அவள் காத்திருக்க..
சிறிது நேரத்தில் கணினியில் சில விவரங்கள் வரிசை கட்டி வரலாயின..
அதைப் பார்த்தவளின் இதயம் ஒரு நொடி நின்று பிறகு துடித்தது.....!!
- தொடரும்..