நீ வந்து தங்கிய நெஞ்சில் - நிதனிபிரபு
இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்லட்டும்? இன்றைய காலத்தில் இன்றைய தலைமுறையில் நடக்கும் ஒரு சிக்கல்தான் கதை. புதிது கிடையாது. பழைய கருதான். எப்போதும்போல் என் பாணியில் எழுதப்போகிறேன்.
சமீபத்தில் போன ஒரு நீயா நானாவைப் பார்த்தபோது, ‘அம்மாடி, நான் யோசிச்ச கருவை ஒட்டி வருதே’ என்று இருந்தது. அதே நீயா நானாவில் வந்த பெண் யாமினி என்னை மிகவுமே பாதித்தார்.
எல்லோருமே அடுத்தவரின் தவறைச் சொன்னபோது அவர் மட்டும் தன் தவறுகள் குறித்துப் பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்தது. தம் குறைகளை, தம் தவறுகளை தாமே கண்டறிகிறவர்கள் எப்போதுமே தம்மை மேம்படுத்திக்கொள்கிறவர்களாக இருப்பார்கள். அதனாலேயே அவரின் பெயரையே இந்தக் கதையின் நாயகிக்குப் பெயராக்கிவிட்டேன்.
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் கதையின் நாயகியின் பெயரும் யாமினிதான். என் மச்சாள் பெயர் யாமினி. எனக்கு மிகவுமே பிடித்த பெயர். நாயகனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வைத்துக்கொண்டு வருகிறேன்.
அடுத்ததாக ஆட்டநாயகன் முடிந்த நேரமே இதைச் சொல்லியிருக்க வேண்டும். தளப் பிரச்சனையால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையிலேயே நான் அப்போது இருக்கவில்லை. அதனால் இப்போது அறிவிக்கிறேன்.
என் ஒவ்வொரு தொடராக வரும் நாவலின்போதும் லைக்கிட்டு கருத்திடும் வாசக உறவுகள் ஐவருக்கு அந்தப் புத்தகத்தையே பரிசாகக் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன்.
அந்த வகையில் ஆட்டநாயகன் புத்தகத்தைப் பரிசாகப் பெருகிறவர்கள்.
தளத்தின் வாயிலாகப் பரிசு பெருகிறவர்கள்:
@Chanmaa
@sesupraba
@Sumathi siva
@தங்க
நம் ஃபேஸ்புக் குரூப்பின் வாயிலாகப் பரிசு பெருகிறவர்கள் மூவர்:
Akalya Muruga
Sujatha Karthikeyan
Sanjhanaa Kaarthick
மிகவும் சந்தோசம் மக்களே. அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.
விரைவில் நீ வந்து தங்கிய நெஞ்சில் முதலாவது அத்தியாயத்தோடு சந்திக்கலாம்.
அழகென்ற சொல்லுக்கு அவளே புத்தகம் பரிசாகப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மக்களே. ஏப்ரல் மாதம் அந்தக் கதை புத்தகமாக வெளிவந்திருக்க வேண்டும். ஆட்டநாயகன் எழுதியபோது என்னால் அங்கிங்கு என் சிந்தனையைத் திருப்பவே முடியாமல் இருந்தது. அதனால் இப்போது அந்தக் கதை அத்தனை வேலைகளும் முடிந்து, பதிப்புக்குப் போகக் காத்திருக்கிறது. ஜூன் மாதம் புத்தகமாக வெளிவரும். அப்போது உங்களுக்கு அனுப்பிவைப்பேன். சரியா?
எப்போதும் அளப்பரிய அன்பையும் ஆதரவையும் தரும் உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
விரைவில் சந்திக்கலாம்.
நட்புடன் நிதனிபிரபு

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - அறிமுகமும் அறிவிப்பும்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.