❤❤ தழலை அணைக்கும் அமுதகமே...❤❤
அத்தியாயம் 01
"ஆதி... " என்ற தன் சித்தியின் குரலில் குளித்து விட்டு கண்ணாடி முன் நின்று கொண்டைப் போட்டுக் கொண்டிருந்தவளோ அவசரமாக சமையல் கட்டை நோக்கி ஓடினாள், அங்கு அவளின் சித்தியான சித்ராவோ சமைத்துக் கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் நுளைந்தவள் "சொல்லுங்க சித்தி, என்ன பண்ணனும்... " என்று கேட்டபடியே அவரின் அருகில் வந்து நின்றிருந்தாள்...
சித்ராவோ "இந்த காய்கறி எல்லாம் நறுக்கிட்டு, சிக்கன் குழப்பையும் பண்ணு, நான் போய் சித்தப்பாக்கு டீ கொடுத்துட்டு வாரேன்... " என்றப்படி அவர் டீ கப்புடன் வெளியேறி விட பெண்ணவளும் புன்னைகையுடன் அவரை பார்த்து தலையாட்டி விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்திருந்தாள்...
இவள் தான் நம் கதையின் கதாநாயகி ஆத்யா ஷாலினி, ஆத்யாவிற்கு ஏழு வயது இருக்கும் போதே அவளின் பெற்றோர்கள் ஒரு கார் விபத்தில் இறந்து விட, பெண்ணவளோ கூடப்பிறந்தவர்கள் என்று கூறுவதற்கு கூட யாரும் இன்றி அனாதையானாள்...
அப்படி தனித்து விடப்பட்டவளை எடுத்து வளர்த்தவர்கள் தான் சித்ரா மற்றும் ராஜேந்திரன் தம்பதியினர், அவர்களிற்கு அப்போது தான் திருமணமாகி இரண்டு வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருக்க, ஆத்யாவை யாருமே பார்த்துக் கொள்ள முன் வராத போது வேறு வழி இன்றி ஆத்யாவின் தாயின் சித்தி மகளான சித்ரா தான் அவளை பொறுப்பேற்றுக் கொள்ள முன் வந்தார்...
அப்போதிலிருந்து பெண்ணவள் அவர்களுடனே வளர ஆரம்பித்திருந்தாள், ஆரம்பத்தில் சித்தி சித்தி என சித்ராவின் பின்னே தான் பெண்ணவள் சுற்றிக் கொண்டிருப்பாள், சித்ராவோ இரட்டை பெண் குழந்தைகளை வைத்து சிரமப்பட்டுக் கொண்டிருக்க ஆத்யாவை கவனிக்க முடியாத நிலையாகி போனது, பெண்ணவளும் காலப்போக்கில் தன் நிலை உணர்ந்து அவளின் தேவைகளை அவளே பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்...
அவள் எதற்குமே அவளின் சித்தியையோ சித்தப்பாவையோ கஷ்டப்படுத்தாமல் தானே தனது தேவைகளை நிறைவேற்றுக் கொள்ள பழகி இருந்தாள், என்ன தான் சித்ராவிற்கு ஆத்யாவின் மேல் பாசம் இருந்தாலும் தான் பெற்ற பிள்ளைகள் மீதே அதிக பாசத்தையும் கவனிப்பையும் வைத்திருந்தார்...
ஆத்யாவும் அதை புரிந்துக் கொண்டு முக்கிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் சித்ராவை தொந்தரவு செய்ய மாட்டாள், அவளின் சித்தப்பாவாகி ராஜேந்திரனுக்கோ ஆத்யா தான் முதல் பிள்ளை அவளின் மேல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தார்...
பெண்ணவளோ வயது ஏற ஏற தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவள் தன் சித்தியிற்கு அனைத்து வேலைகளிலும் பக்க பலமாக இருப்பாள் சித்ராவின் இரட்டை குழந்தைகளாகியா சான்விகா, சாத்விகா இருவரையும் தன் சித்தி தன்னை வளர்த்தெடுத்தற்கு கைமாறாக அதே போல் தானும் தன் தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் இருவரையும் சித்ராவுடன் சேர்ந்து பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்...
அதே போல் சித்ராவிற்கு வீட்டு வேலைகள் அனைத்திலுமே உதவியும் செய்வாள், அவளை திட்டுவதற்கு யாருக்குமே மனம் வராது அந்தளவுக்கு சாந்தமானவளும் இரக்க குணம் உடையவளுமாக காணப்பட்டாள் ஆத்யா...
படிப்பை முடித்துவிட்டு ஹையர் ஸ்டடிகாக காத்துக் கொண்டிருக்கும் இருபத்தி ஐந்து வயது மங்கையாவாள் ஆத்யா, தோள்கள் வரை வளர்ந்த முடியுடன் ரொம்ப சிவந்த நிறமும் இல்லாது கருப்பு நிறமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்புடன் இருப்பவளின் அழகை மேலும் அழகு சேர்ப்பவை தான் அவளின் அழகான பெரிய கண்களும் அவள் நாடியின் வலபக்கமாக இருக்கும் சிறிய மச்சமும் ஆகும்...
தன் சித்தி கூறியவற்றை செய்து முடித்தவளுக்கு அங்கு சித்ரா பிசைந்து வைத்து விட்டு சென்ற சப்பாத்தி மாவு கண்களில் பட அதையும் எடுத்தவள் சப்பாத்தியையும் செய்ய ஆரம்பித்திருந்தாள்...
கடைசி சாப்பத்தியையும் சுட்டு முடித்து விட்டு அவள் அடுப்பை அணைக்கும் சமயம் சமையலறைக்குள் நுளைந்த சித்ராவோ அவள் அணைத்து வேலையையும் முடித்து வைத்திருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொண்டே "எதுக்கு எல்லாத்தையும் நீயே பண்ணின நானும் வந்து இருப்பேன்ல... " கேட்டப்படி சிறிய சப்பாத்தி துண்டு ஒன்றை பிய்த்து எடுத்து அதை குழம்பில் தொட்டு சாப்பிட்டு பார்த்தவர் ஆச்சரியமாக ஆத்யாவை பார்த்து "எப்டி ஆதி என்கிட்ட தான் சமையல் பழகின, அப்றம் எப்டி டி என்னை விட இவ்வளவு நல்லா சமைக்கிற..." என்று கேட்க, அதை கேட்டு சிரித்த ஆத்யாவோ "தெரிலயே சித்தி..." என்றப்படி உணவு பாத்திரத்தை எடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேசையை நோக்கி சென்றிருந்தாள்...
அங்கே ராஜேந்திரன் அமர்ந்திருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்க, அவரை பார்த்து புன்னகையுடன் "குட் மார்னிங் சித்தப்பா..." என்று கூறியப்படியே அவருக்கு சாப்பாட்டை பரிமாற ஆரம்பித்திருந்தாள்...
அவரும் மென் புன்னகையுடன் "குட் மார்னிங் டா குட்டி மா... " என்றப்படி அவள் வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தவர் அவளை பார்த்து "எப்பவும் போல இன்னைக்கும் டிபன் சூப்பர்..." என்று கூறி இருக்க, அதை கேட்டவளோ மென்மையாக புன்னகைத்திருந்தாள்...
அச்சமயம் ஆத்யாவின் இரண்டு பக்கங்களிலும் இருந்து அவளை இறுக்கமாக வந்து அணைத்திருந்தனர் ஆத்யாவின் செல்ல தங்கைகளான சான்விகா,சாத்விகா இருவரும்...
"அக்கா இன்னைக்கு எங்களுக்கு எக்ஸாம் நீங்க சொல்லி கொடுத்த போல தான் படிச்சோம் நல்ல மார்க் வரும்ல..." என்று சான்வி அவளின் முன் வந்து நின்று கேட்க, அதற்கு சாத்வியோ "நீ எங்க டி படிச்ச நான் தான் அக்கா சொன்ன போல படிச்சேன் எனக்கு தான் நல்ல மார்க் வர போகுது பாரு..." என்று கூறியப்படியே மேசையில் சென்று அமர, ஆத்யாவோ "சரி சரி இரண்டு பேருக்கும் நல்ல மார்க் தான் வரும், முதல்ல சாப்பிடுங்க..." என்றப்படி இருவருக்கும் பறிமாற அவர்களும் புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்...
அச்சமயம் அங்கு வந்த சித்ராவோ தனக்கும் ஆத்யாவுக்கும் இரு தட்டி உணவை போட்டுக் கொண்டே ஆத்யாவை அமர வைத்து விட்டு தானும் கதிரையில் அமர்ந்துக் கொண்டவர் "இந்த முறையாவது நல்ல மார்க் எடுப்பிங்களாடி... " என தன் இரு புதல்விகளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே வினாவ, இருவரும் ஒரே நேரத்தில் "ம்மா இந்த முறை நாங்க தான் க்ளாஸ் டாப்பரா வருவோம் பாருங்க... " என் கோரசாக கூற, அதை கேட்டவரோ "பார்ப்போம் பார்ப்போம்... " என்றப்படி சாப்பிட ஆரம்பிக்க, ஆத்யாவோ சாப்பிட்டுக் கொண்டே "இந்த முறை இரண்டு பேரும் நல்ல மார்க் எடுப்பாங்க சித்தி..." என்று அவருக்கு நம்பிக்கையாக கூறி இருந்தாள், சித்ராவோ "நீ சொல்லுறதுனால நம்புறேன்..." என்றார்..
சில நிமிடங்கள் கழித்து வீட்டிற்கு வெளியில் மணி ஒளிக்கும் சத்தம் கேட்க "எதோ லெட்டர் வந்து இருக்கு போலயே நான் போய் எடுத்துட்டு வாரேன்... " என எழ முயன்ற தன் சித்தப்பாவை தடுத்த ஆத்யா "நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன் சித்தாப்பா நான் போறேன் நீங்க சாப்பிடுங்க..." என்றப்படி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்திருந்தாள்...
ஆத்யா ஷாலினி என அவளின் பெயருக்கு தான் லெட்டர் வந்து இருந்தது. அதை யோசனையாக பார்த்துக் கொண்டே வாங்கியவள் என்னவென்று பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுளைந்தாள்...
அவள் தங்கை சாத்வியோ "யாருக்கு கா லெட்டர்? " என கேட்க, ஆத்யாவோ "எனக்கு தான் வந்து இருக்கு ஆனா என்ன லெட்டர்னு தெரிலயே..." என கூறிப்படியே அதை பிரித்து படித்தவளின் முகமோ நொடியில் பூவாக மலர்ந்திருந்தது...
"என்ன லெட்டர் ஆதி அது?" என சித்ரா கேட்க, ஆத்யாவோ சந்தோஷமாக "சித்தி வெளி ஊர்ல இருக்க ஒரு பெரிய கம்பனில இருந்து ஹயர் ஸ்டெடிஸ்கு ஸ்காலர்ஷிப் வந்து இருக்கு இரண்டு வருஷம் ஹையர் ஸ்டெடி பண்ணலாமாம் அதோட அந்த இரண்டு வருஷத்துல லாஸ்ட் சிக்ஸ் மந்த் இன்டர்ன்ஷிப்பும் அதே கம்பனிலயே பண்ணலாம் னு சொல்லி இருக்காங்க வித் செலரி, அதோட நம்ம வெர்க் நல்லா இருந்த அங்கயே தொடர்ந்து பர்மனென்டா வெர்க்கு பண்ணுறதுக்கும் வாய்ப்பு இருக்காம்..." என சந்தோஷமாக கூறினாள். அவள் கூறியதை கேட்ட அங்கிருந்தவர்களின் முகமும் சந்தோஷத்தை தத்தெடுத்துக் கொண்டது...
"ஐய் அக்கா செம்ம சூப்பர்..." என்றப்படி சாத்விகா,சான்விகா இருவரும் ஓடி வந்து பெண்ணவளை அணைத்திருக்க ஆத்யாவும் இருவரையும் அணைத்துக் கொண்டாள்...
சித்ராவோ "ஆ போதும் போதும் உங்க அக்காவ கொஞ்சினது, நீங்களும் ஆதி போல இப்டி வேலைக்குலாம் போக வேணாம? லேட் ஆகுது முதல்ல இரண்டு பேரும் காலேஜ்கு கிளம்புங்க..." என இருவரையும் கல்லூரிக்கு அனுப்பி விட்டவர்,ஆத்யாவின் முன் வந்து "எப்போ கிளம்பனும் ஆதி..." என சித்ரா வினாவ, அவளோ "இன்னும் ஒரு வாரதுல சித்தி..." என கூறினாள், அச்சமயம் ராஜேந்திரனோ ஆத்யா ஷாலினியின் அருகில் வந்து "படிப்புக்கு மட்டும் தானே அவங்க ஸ்காலர்ஷிப் தந்து இருக்காங்க, தங்க இடம் , சாப்பாடு எல்லாம் நாம தானே ஏற்பாடு பண்ணனும், ஒரு வாரத்துக்குள்ள ஏற்பாடு பண்ணிடலாம் குட்டிமா..." என்று அவளின் தலையை வருடியப்படியே அவர் கூறினார்...
சித்ராவின் முகமோ அதை கேட்டு யோசனையில் சுருங்கி விட்டிருந்தது, ஆத்யாவோ அதை கவனித்து விட்டு தன் கையில் இருந்த கடிதத்தை ஒரு கணம் பார்த்தவள் "இல்ல சித்தப்பா தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாமே அவங்களே தந்துடுவாங்க, நாம எந்த செலவும் பண்ண தேவல..." என கூறினாள், ராஜேந்திரனோ அவள் கூறியதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே "உண்மையாவா, பரவாலயே ரொம்ப நல்ல கம்பெனி தான் போல..." என வியந்து கூற, அவளும் புன் சிரிப்புடன் ஆம் என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டாள்...
அதை கேட்டதும் சித்ராவின் முகமும் தெளிந்து விட, அங்கு மேசையில் இருந்த சக்கரையை எடுத்து வந்து ஆத்யாவின் வாய்க்குள் போட்டவர் "வாழ்த்துக்கள் ஆதி..." என புன்னகையுடன் கூறி இருந்தார், ஆத்யாவும் தன் சித்தியை பார்த்து சினேகமாக புன்னகைத்திருந்தாள்...
அவர்கள் இருவருடனும் பேசி விட்டு தனது அறைக்குள் புன்னகையுடன் வந்தவளோ அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டே நின்றிருந்த சமயம், சட்டென அவளின் கண்களிலில் இருந்து ஒரு துளி கண்ணீர் கீழே விழுந்திருந்தது, அதை தன் கைக்கொண்டு துடைத்துக் கொண்டவளோ ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துவிட்டுக் கொண்டே "எப்போ என்ன நடந்தாலும் அது எல்லாமே உன் நன்மைக்கு தான் ஆத்யா, எப்பவும் சந்தோஷமா இருக்கனும்..." என்று தன்னை பார்த்தே சொல்லிக் கொண்டவளின் முகமோ நொடியில் புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள, மெதுவாக அவளின் முன் இருந்த கண்ணாடியில் சாய்ந்துக் கொண்டாள்...
அது தான் ஆத்யா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை நன்மையாகக் கடந்து வர நினைத்து அதில் வெற்றியும் காண்பாள்...
தொடரும்…

Last edited:
Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 01
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.