சிற்ப பாவை - 32
"இனிமே நீ அழக்கூடாது. எப்பவும் அப்பா நமக்குத் துணையாக தான் இருப்பாரு. நீ சந்தோஷமா இருக்கணும். நீ சந்தோஷமா இருந்தா தான் மாமாவும் அங்க சந்தோஷமா இருப்பாரு."
வெண்பா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து நின்றார். அது ஆனந்தக் கண்ணீர். தன் மகளை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டாரோ, இன்று அவளுடைய வாழ்க்கையை நினைத்து அவ்வளவு நிம்மதி அடைந்தார்.
"பரமு, நாங்க எல்லாம் வெளியில் உட்கார்ந்து இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க," என்று சொல்லிவிட்டுக் கண்ணகியும் வெண்பாவும் வெளியே வந்தனர்.
"இப்பதான் என் மனசுக்கு நிறைவா இருக்கு. இவனுக்குக் கல்யாணமே ஆகாதோன்னு பயந்தேன், ஆனா இன்னைக்கு ஒரு தங்கமான பொண்ணு கிடைச்சிருக்கா," என்று கண்ணகி நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
"உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்க வந்து என் பொண்ணைக் கேட்கலைன்னா, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையே இல்லாம போயிருக்கும்," என்று வெண்பா அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச, அதற்குள் மொத்தக் குடும்பமும் அங்கே வந்து சேர்ந்தது.
அன்று முழுவதும் அனைவரும் அங்குதான் இருந்தனர். அது ஒரு சிறிய வீடு. அங்கே முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.
"அக்கா, நான் வீட்டுக்குக் கிளம்புறேன். இப்பதான் என் மனசுல இருந்த பாரமெல்லாம் குறைஞ்சிருக்கு," என்று சுடர் அக்காவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
"இனிமே எதையும் நினைச்சு வருத்தப்படாத. குழந்தையை நல்லபடியா பெத்துக்கோ," என்று அவர்களை வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.
உடன் பிறந்தவர்களும் மற்ற உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக கிளம்பினர்.
யாரும் நீண்ட தூரத்தில் இல்லை; அங்கேயே பக்கத்தில்தான் இருந்தனர். அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்பதால், அன்று அந்தப் புது தம்பதியருக்கு தனிமை கொடுக்க விரும்பி அனைவரும் விடைபெற்றனர்.
"அம்மா... நீ எந்த ஏற்பாடும் பண்ணாத. எப்பவும் போல இருக்கட்டும்," என்றான் பரமு.
"என்னடா இப்படிச் சொல்ற? பூ எல்லாம் வாங்கி வச்சிருக்கேனே."
"ஏம்மா காமெடி பண்ற? தயவு செஞ்சு நீ கம்முனு இரு," என்று அவன் சொல்ல,
"இவனை வச்சுக்கிட்டு..." என்று கண்ணகி சிரித்தபடி தலையில் அடித்துக் கொண்டார்.
"சரிப்பா உங்க விருப்பம். சாப்பாடு இருக்கு, பால் காய்ச்சி வச்சிட்டேன். நான் போய் வெண்பா கூடத் தங்கிக்கிறேன். நீங்க சந்தோஷமா இருங்க," என்று சொல்லிவிட்டு மருமகளைப் பார்க்கச் சென்றார்.
அதற்குள் நகை பட்டுப் புடவையை மாற்றி விட்டு, ஒரு சாதாரண சுடிதாருக்கு மாறியிருந்தாள்.
"நகை, நான் கிளம்புறேன். உனக்கு என்ன வேணுமோ எடுத்துச் சாப்பிடு. சந்தோஷமா இருங்க. உங்க வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பிக்கணும். எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. உனக்குத் தப்பான எதுவும் இங்க நடக்காது," என்று அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துவிட்டு, அந்தத் தாய் அங்கிருந்து கிளம்பினார்.
இரவு மெல்ல நகர்ந்து விடிவுக்காக காத்திருந்தது. ஒருவழியாக பொழுது சாய்ந்தது. நகை, அந்த அறையின் கனத்த மௌனத்திற்கு நடுவே கதவை மூடி விட்டு, படபடக்கும் நெஞ்சுடன் மெல்லச் சென்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.
வெளியே ஹாலில் பரமன் குறுக்கும் நெடுக்குமாகப் பெருமூச்சுகளுடன் நடந்து கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் ஆயிரம் போராட்டங்கள்.
ஒரு பெருத்த மௌனத்திற்குப் பிறகு, தவித்துக் கொண்டிருந்த தன் மனதைத் திரட்டி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல அறைக்குள் நுழைந்தான்.
அங்கே, சிலையாக அமர்ந்திருந்த நகை அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தினாள். அந்தச் சிரிப்பில் அத்தனை அர்த்தங்கள்.
பரமன் அவளைப் பார்த்தபடி, தழுதழுத்த குரலில் சொன்னான், "பாப்பு... இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்."
அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து, குறும்பும் காதலும் கலந்த குரலில், "நான் மறக்கல... நீங்கதான் மறந்துட்டீங்க போல" என்று கிண்டலாகக் கூறினாள்.
அவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். அவளது அருகாமை அவன் நரம்புகளை முறுக்கேற்றியது.
"மறக்கல... ஆனா உனக்கு ஓகேவான்னு தெரியலையே, அதான் ஒரு தயக்கம்... திடீர்னு யோசிச்சு நின்னுட்டேன்" என்றான் தடுமாற்றத்துடன்.
நகை அவன் கண்களை நேராகப் பார்த்து, "நான் உங்களுக்காக ரூமுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கேன். நீங்க என்கிட்ட வந்து எதுவுமே கேட்காம அங்கேயே நின்னுட்டு இருந்தா எனக்கு எப்படித் தெரியும்?" என்று ஆதங்கமும் உரிமையுமாகப் படபடத்தாள்.
உடனே அவளைத் தன் தோளோடு சேர்த்து ஆசைதீர அணைத்துக் கொண்டான் பரமன். அந்த அணைப்பில் இத்தனை கால ஏக்கமும் அடங்கியிருந்தது. அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து, தன் தீராத காதலை அந்த ஒற்றை முத்தத்தில் வெளிப்படுத்தினான்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு நகை அவன் மார்பில் சாய்ந்தபடி கேட்டாள், "உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்... ஏன் என்னை எப்பவும் பாப்புன்னு கூப்பிடுறீங்க?"
அவன் அவள் முகத்தைப் பார்த்து, "ஏன்... உனக்கு பிடிக்கலையா?" என்று மென்மையாக வினவினான்.
"ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா அது என்ன வித்தியாசமா பாப்பு'?"
அவன் பழைய நினைவுகளில் மூழ்கிச் சிரித்தான். "நீ குழந்தையிலிருந்து பருப்புதான் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவ. உன் அப்பா அடிக்கடி சொல்லுவார்... பருப்பு சாப்பிட்டு சாப்பிட்டு இவ இப்படி கொழு கொழுன்னு இருக்கான்னு. குண்டு பாப்பான்னு கிண்டல் பண்ணுவேன். காலப்போக்கில் அதை சுருக்கி பாப்பு பாப்பு'ன்னு சுருங்கிப் போச்சு. ஏனோ அந்தப் பெயர் என் மனசுல அப்படியே ஒட்டி போயிடுச்சு. அதை மறக்கவே முடியல.
ஒரு காலத்துல உன்னை இப்படி உரிமையா கூப்பிடவே முடியாதுன்னு நினைச்சேன்... ஆனா இன்னைக்கு நீ எனக்கு மொத்தமா சொந்தமாகிட்ட பாப்பு!"
நகை ஒரு நிமிடம் உறைந்து போனாள். அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுடன் அவன் முகத்தைப் பார்த்தாள். "பரமா... நீங்க இத்தனை வருஷமா என்னைக் காதலிக்கிறீங்களா?"
பரமனின் கண்கள் மெல்லக் குளம் கட்டின. அந்த அழுகை பல வருட வலி சுமந்தது. "உன்னை ஒரு நொடி கூட நான் மறக்கல பப்பு. குழந்தையிலிருந்து நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏன், எதனாலன்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது... ஆனா அவ்வளவு பிடிக்கும். யாராவது உன்னை ஏதாவது சொன்னா என் இரத்தம் கொதிக்கும், அவங்ககிட்ட சண்டைக்குப் போவேன். ஆனா காலப்போக்கில் எங்க நிலைமை தலைகீழா மாறிடுச்சு. என் அப்பா எங்களை விட்டுட்டு ஓடிப்போயிட்டாரு. எங்க குடும்ப நிலைமை ரொம்பக் கீழ போயிடுச்சு. அதனால நான் உன்னை நெருங்க முடியாம ஒதுங்கிக்கிட்டேன். நீயும் பிரனேஷ் மேல ஆசை வச்சிருந்தியா... நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்னுதான் நான் நினைச்சேன்."
நகையின் கண்கள் அருவியாய் கொட்டின. பிரனேஷை விரும்பியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று காலம் அவளுக்குப் புரிய வைத்திருந்தது. அந்த நினைவு அவள் மனதை இப்போதும் சுட்டுக் கொண்டே இருந்தது.
"ஆமா பரமா... எனக்குப் பிரனேஷைப் பிடிச்சிருந்தது உண்மைதான். அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அது காதல் எல்லாம் கிடையாது பரமா... அந்த வயசுல உருவாகுற ஒரு சின்ன ஈர்ப்புதான் அது."
பரமன் அவளை இன்னும் ஆழமாகப் பார்த்தான். "எனக்கு உன்னை நல்லா தெரியும் பாப்பு. நான் அதைப் பெருசாவே நினைக்கல. என் கண்ணு முன்னாடி நீ கஷ்டப்படும்போது, என்னால உனக்கு உரிமையா வந்து ஒரு உதவி கூட செய்ய முடியலையேன்னு தான் நான் ரொம்ப வேதனைப்பட்டேன். 'நான் இருக்கேன், நீ கவலைப்படாத'ன்னு உன்கிட்ட ஓடி வந்து சொல்ல முடியலையேன்னு தவிச்சேன்."
கடந்த காலத்தின் வலிகளைப் பேசி மாளாது என்று அவன் உணர்ந்தான். இத்தனை காலம் தூரத்தில் இருந்தே அவளைத் தன் தேவதையாய் நேசித்து வாழ்ந்தவன் அவன். நகை உணர்ச்சிப் பெருக்கில் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் காற்று கூட நுழைய இடமில்லாமல் போனது.
தன் உயிர் அவனை தீண்டியதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான் பரமன். அவள் எலும்புகள் முறிவது போன்ற ஒரு இறுக்கமான அணைப்பை அவளுக்குப் பதிலுக்குத் தந்தான்.
"நான் இப்படி சாதாரணமா இருக்கறதுல உனக்கு எந்த மனக்கஷ்டமும் இல்லையே பரமு? நான் வெறும் சுடிதார் தான்..."
"நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும் பப்பு. நீ அப்படித்தான் இருக்கணும், இப்படித்தான் இருக்கணும், புடவைதான் கட்டணும், தலை நிறையப் பூ வச்சிருக்கணும் இல்ல ஜீன்ஸ் தான் போடணும்னு எந்த எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. உன் குணம் மாறாமல் நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். நீ என்னுடைய உயிர்... நேரத்துக்குத் தகுந்த மாதிரி உயிரை மாத்திக்க முடியுமா?"
நகையின் இதயம் விம்மியது. இப்படி ஒரு ஆத்மார்த்தமான கணவனை அடையத்தான் தான் இத்தனை சோதனைகளைக் கடந்தோமோ என்று நினைத்தாள்.
ஒருவிதத்தில் ஆனந்தி தனக்கு மிகப்பெரிய நன்மையைச் செய்திருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் கண்ணீரை உணர்ந்த பரமன், அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தினான்.
"இனிமேல் நீ அழக்கூடாது. உனக்காக நான் இருக்கேன்... உனக்காக எதையும் செய்வேன். என் பாப்புவை ஒருநாளும் கலங்க வைக்க மாட்டேன்" என்று கூறி, அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மென்மையாக அவள் இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான்.
இரு இதழ்களும் தங்களின் நீண்ட காலக் காதலை மௌனமாகப் பரிமாறிக் கொண்டன. அந்த முத்தம் மெல்ல மெல்ல உடல் தீண்டலாக மாறி, இருவரும் இரு வேறல்ல, ஓர் உயிர் என்று நிரூபிக்கும் வண்ணம் ஒன்றிணைந்தனர். பரமன் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றான். நகை தன் காதலின் முழுமையான அரவணைப்பில் கரைந்து போனாள்.
உண்மையான காதல் ஒருபோதும் தோற்பதில்லை; உண்மையான பாசம் ஏமாந்து போவதுமில்லை. பரமனின் பல வருடக் காதல் இன்று கைகூடியது. நகையின் நம்பிக்கை ஒரு மாபெரும் விருட்சமாக அவன் அணைப்பில் வளர்ந்து நின்றது.
மறுநாள் காலை... நகைதான் முதலில் கண் விழித்தாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனை இமைக்காமல் ரசித்தாள். அவன் நெற்றியில் ஒரு மெல்லிய முத்தமிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தவள், குளித்து முடித்துவிட்டு வாசற்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அங்கே தெருவில் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். கத்திரி வெயிலின் அனல் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நகை ஒரு துடைப்பத்தை எடுத்துத் தன் வீட்டு வாசலைப் பெருக்கத் தொடங்கினாள்.
ஊரே அவளை வியப்புடன் பார்த்தது. "என்ன நகை... நீ போய் இந்த வேலை எல்லாம் செய்ற?" என்று ஒரு அத்தை கேட்க,
"நான் செய்யக்கூடாதா அத்தை? இது என்னுடைய குடும்பம், என் வீடு. இங்கே எல்லா வேலையும் நான் தான் செய்யணும்" என்றாள் உறுதியாக.
"ஆனா நீ ஆர்மியில இருக்க பொண்ணு?"
"அது என்னுடைய வேலை அத்தை, இது என்னுடைய குடும்பம்" என்று மிகச் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு, வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சத் தொடங்கினாள்.