பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
“கடந்த கால வாழ்க்கையா? அப்படி அவ இவ்வளவு இறுக்கமாக இருக்கிற அளவுக்கு என்ன நடந்திருக்கும் அவ வாழ்க்கையில!”

“அதான் எனக்கும் தெரியல ஆனால் அவளோட மௌனத்துக்கு பின்னாடி மிகப்பெரிய வலி இருக்கும்னு எனக்கு தோணுது!” என்று கூறினாள் ரஞ்சனா.


“என்னைக்காவது ஒரு நாள் நீ மித்ரா கிட்ட அவளோட கடந்த கால வாழ்க்கையை பத்தி கேட்டு இருக்கியா?” என்று பிரகாஷ் கண்ணா தன் சந்தேகத்தை கேட்க,

“ம்! நான் கூட எத்தனையோ முறை இந்த ரெண்டு வருஷத்துல என்னோட பேமிலியை பத்தி சொல்லி இருக்கேன், ஆனா ஒரு நாள் கூட அவ அவளோட ஃபேமிலியை பத்தி என்கிட்ட சொன்னதில்ல, நானும் அவகிட்ட அதை பத்தி கேட்டா பேச்ச மாத்திட்டு அவ எழுந்து போயிருவா? அதனாலயே பெரும்பாலும் அவகிட்ட எதுவும் கேக்குறதில்ல!” என்று ரஞ்சனா கூறினாள்.

“மாயமித்ரா வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. அப்படி எந்த பிரச்சனை நடந்திருந்தாலும் பரவால்ல, நான் இப்ப எப்படி அவளை காதலிக்கிறேனோ அதே மாதிரி அப்பயும் அவளை காதலிப்பேன்,

கண்டிப்பா இங்கே இருந்து வேலையை முடிச்சிட்டு போறதுக்கு முன்னாடி என் மனசுல உள்ள காதல அவகிட்ட வெளிப்படையா சொல்லி அவளோட சம்மதத்தை கேட்டு அவளை என் காதலியா தான் கூட்டிட்டு போவேன்!” என்று பிரகாஷ் கண்ணா நம்பிக்கையாக கூறினான்.


“சூப்பர் பிரகாஷ் முதல்ல அதை செய். கண்ணாலேயே படம் வரைகிறத ரெண்டு பேரும் நிப்பாட்டிட்டு வெளிப்படையா உன் காதல அவ கிட்ட சொல்லு, அப்போதான் அவ மனசுல என்ன இருக்குன்னு அவளும் உன்கிட்ட வெளிப்படையா சொல்லுவா?” என்று ரஞ்சனா சொல்லிக் கொண்டிருக்க

“சார் கிளம்புவோமா? நேரம் ஆகிக் கொண்டு இருக்கு” என்று அங்கு வந்த மேனேஜர் கேட்டார்.


“சரி ரஞ்சனா நேரமாகுது! மீதிய நேரம் கிடைக்கும்போது பேசுவோம் “என்று பிரகாஷ் சொல்ல இருவரும் வண்டியில் ஏற, டிரைவர் வண்டியை எடுத்தார். அவரவர் இருக்கையில் அனைவரும் அமர்ந்து கொள்ள அவர்களுடைய பயணம் கோயம்புத்தூரை நோக்கி இருந்தது.


சிறையில்,
தன்னுடைய விஐபி விசிட்டை முடித்துவிட்டு சிறைக்கு வந்தார் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்.


உள்ளே நுழைந்தவர் தன்னுடைய கேபினுக்குள் நுழைய, “ சார் உங்களை தேடி மாயமித்ரா வந்தாங்க, அவங்களோட டைரி ஒன்னு அன்னைக்கு சிறைக்கு வந்தப்ப காணாம போயிருச்சாம்.அது உங்க கிட்ட இருக்குதான்னு கேக்குறதுக்காக வந்தாங்க! நீங்க அத பத்தி சார் கிட்ட தான் கேட்கணும்னு நாங்க சொல்லவும் சரி நான் சார் கிட்ட பேசுகிறேன்னு!” சொல்லிட்டு போயிட்டாங்க என்று கூறினார்
அந்த காவலர்.


“சரி சரி அதுக்குத்தான் எனக்கு மாயமித்ரா போன் பண்ணுனாங்களா?
சரி நான் அவங்க கிட்ட பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய டேபிளில் இருந்த ட்ராவை திறந்து பார்க்க அங்கு நந்தன் கொடுத்த மாயமித்ராவின் டைரி இருந்தது .
உடனே தன் அலைபேசியை எடுத்து மாயமித்ராவிற்கு அழைப்பை விடுத்தார்.

மாயமித்ரா, செல்போன் டவர் கிடைக்காத ஏரியாவில் அவர்கள் பயணம் செய்யும் வாகனம் சென்று கொண்டிருந்ததால் மாய மித்ராவின் அலைபேசிக்கு ரிங் போகவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்க்க மாயமித்ராவின் அலைபேசிக்கு போகவில்லை.

“என்னனு தெரியல, அவங்களோட போன் நம்பருக்கு அழைப்பு போகவே மாட்டேங்குது! கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணி அவங்களோட டைரி எங்கிட்ட தான் இருக்குன்னு நான் சொல்லிக்கிறேன். நீங்க உங்க வேலைய பாருங்க!” என்று அசோக் சொல்ல காவலர் அங்கிருந்து விடை பெற்றார்.

அப்போது அவனைப் பார்ப்பதற்காக நந்தன் வெளியில் நின்று கொண்டிருந்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று நந்தன் சொல்ல,

“உள்ள வா நந்தன் என்ன விஷயம்?” என்று அசோக் கேட்டார்.

“சார் ரெண்டு வாரம் விடுமுறையில பர்சனல் வேலை பார்க்க போறதா சொன்னிங்களே? இன்னும் போகலையா? அத பத்தி கேட்கிறதுக்காக வந்தேன்” என்று நந்தன் சொல்ல,


“ஆமா நந்தன் போகணும்! அதுக்கு முன்னாடி சிறையில பிரச்சனை ஆகிட்டு ரெண்டு நாளுக்கு முன்னாடியே நான் கிளம்பி இருக்கணும், இங்கு நடந்த பிரச்சனையால லீவ் எடுக்கிறது ரெண்டு நாள் தாமதம் ஆயிருச்சு, நாளைக்கு லீவ் சொல்லிட்டு என்னோட பர்சனல் வேலைய பாக்க போறேன் ரெண்டு வாரம் கழிச்சு தான் இங்கே வருவேன்!” என்று அசோக் கூறினார்.

“சரி சார்! அதான் அந்தப் பொண்ண பத்தி மறக்காமல் விசாரிச்சுருங்கன்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.... “ என்று நந்தன் தயங்கியபடி கூறினான்.


“கவலப்படாத நந்தா, அது எப்படி மறப்பேன்! கண்டிப்பா என்னோட வேலையை முடிச்சிட்டு, அந்தப் பொண்ணோட ஊருக்கு போயி அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கு, அந்த சம்பவம் நடந்ததுக்கு அப்புறம்
என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் விசாரிச்சிட்டு வாரேன்!” என்று சொல்ல நந்தனின் முகத்தில் சிறு புன்னகை வந்து சென்றது.


“எட்டு வருஷமா, அந்தப் பொண்ண பார்க்கணும்னு உனக்கு இல்லாத ஆசை ஏன் திடீர்னு இப்போ?” என்று அசோக் தன் சந்தேகத்தை கேட்க,

“தெரியல சார்! ஒருமுறையாவது அந்தப் பொண்ண பார்த்து அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டால் தான் என் மனசு நிம்மதியா இருக்கும்னு தோணுது! அதனாலதான் அந்த பொண்ண பார்க்கணும்னு ஆசைப்படுறேன்!”
என்று நந்தன் கூறினான்.


“எனிவே, அந்த பொண்ண பார்த்து மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் உன் மனசுல உள்ள குற்ற உணர்ச்சி எல்லாம் மறைஞ்சு நீ பழையபடி சந்தோசமா வாழ ஆரம்பிச்சால் எனக்கும் சந்தோசம் தான்! ரெண்டு வாரம் மட்டும் பொறுத்துக்க,
நான் விசாரிச்சுட்டு வந்து உன்கிட்ட சொல்றேன்!” என்று அசோக் சொல்ல,


“ரொம்ப நன்றி சார், இந்த உதவிய என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று நந்தன் கூறினான்.


“நீ செஞ்ச உதவியால தான் இன்னைக்கும் என் வாழ்நாள் நீளுது. இல்லைனால் அந்த சம்பவம் நடந்த அன்னைக்கே முடிந்து இருக்கும்!” என்று புன்னகையுடன் கூறினார் அசோக்.

‘நந்தன் கண் அசைவிலேயே ஏன் சார் இப்படி பேசுறீங்க’ என்று கேட்க, “உண்மைய சொன்னேன் நந்தன்” என்று கூறினார் அசோக்.

சிறிது நேரம் பேசிவிட்டு நந்தன் அங்கிருந்து செல்லவும், “ உன்னோட ஊருக்கு போய், உன்னால பாதிக்கப்பட்ட அந்த பொண்ண பத்தி கண்டுபிடிச்சு உன்கிட்ட சொல்றேன்னு ‘ நான் சொன்ன ஒரு வார்த்தையில் உன் முகத்துல தோணுன அந்த புன்னகைக்காகவே, கண்டிப்பா அந்த பொண்ண பத்தின எல்லா தகவலையும் சேகரிச்சுட்டு வந்து உன்கிட்ட கொடுத்து உன் முகத்துல தோணுற அந்த புன்னகைய பார்த்து நான் சந்தோஷப்படுவேன் என தன் மனதில் நினைத்துக் கொண்டார் அசோக்.


டேபிளில் இருந்த மாய மித்ராவின் டைரி சீலிங்கில் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் உதவியால் அதன் பக்கங்கள் காற்றில் திறக்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ, அதை திறந்து பார்க்காமலே எடுத்து மீண்டும் தன்னுடைய டிராவில் வைத்து விட்டார்.



இங்கு கோயம்புத்தூரை வந்தடைந்தனர் அனைவரும்...!


“ எல்லாரும் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க. கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் பண்ண போற சைட்ட பார்க்க போகணும்!”என்று பிரகாஷ் கண்ணா சொல்லிவிட்டு தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறைக்கு சென்றான்.

சில மணி நேரங்கள் அனைவரும் குளித்து ரெடியாகிவிட்டு சைட்டை பார்ப்பதற்காக தயாராகி வந்தனர்.


மயில் வண்ண சேலையில், பச்சை நிற ஆரி ஒர்க் பிளவுஸ் அணிந்து அதற்கேற்ற ஆபரணங்களை அணிந்து அழகு நங்கையாக நடந்து வந்து கொண்டிருந்தாள் மாயமித்ரா.

அவளின் அழகில் ஒரு கணம் ஆடிப் போன பிரகாஷ் கண்ணா வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்துக் கொண்டிருக்க,

“என்ன இவங்க சைட்டுக்கு தானே போறோம்! என்னமோ கல்யாண வீட்டு விருந்துக்கு போற மாதிரி ரெடியாகி வந்து இருக்காங்க, அதையும் பாத்துட்டு இந்த சாரு அப்படியே மெய் மறந்து நிக்கிறாரு! என்னத்த சொல்ல!” என்று பக்கத்தில் இருந்த காயத்ரியிடம் சொல்லி கீர்த்தி சலித்துக் கொள்ள,


“உன் மனச தொட்டு சொல்லு! மாயமித்ரா மேம் இந்த சேலையில அழகா இல்லையா? “ என்று காயத்ரி கேட்டாள்.


“அது வந்து... அழகா இல்லைன்னு நான் சொல்லல! சைட் சேலை உடுத்திட்டு வர்ற இடம் கிடையாதே!” என்று கீர்த்தி மாயமித்ராவின் மீது குறை கூறினாள்.

“அவங்க எங்க எந்த டிரஸ் உடுத்திட்டு போகணும்னு அவங்க தான் முடிவு பண்ணுவாங்க! அது அவங்களோட இஷ்டம் அதப்பத்தி நம்ம கருத்து சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் நீ நடந்துக்கிற விதமே சரியில்ல!” என்று காயத்ரி சூசகமாக கூற,

“அப்படியெல்லாம் இல்லடி! என்னோட ஒப்பினியன சொன்னேன் அவ்வளவுதான். அவங்க என்ன சேலை கட்டிட்டு வந்தா எனக்கு என்ன?” என கோபமாக கூறினாள் கீர்த்தி.


“ஏய் சூப்பர் டி! இந்த சேலையில நீ எம்புட்டு அழகா இருக்க தெரியுமா? என் கண்ணே பட்டுரும் போல! உனக்கு சுத்தி தான் போடணும்” என்று சொல்லிவிட்டு ரஞ்சனா தன் கைகளை மாயமித்ராவின் நெற்றியில் வைத்து நெடிக்க அதிக சத்தம் கேட்டது.


“பாத்தியா இப்பதான் நீ அறைய விட்டு வெளியில் வந்து இருக்க, அதுக்குள்ள எவ்வளவு கண் திருஷ்டி பட்டு இருக்கு!” என்று ரஞ்சனா சொல்ல, காயத்ரி கீர்த்தியை பார்த்தாள்.

காயத்ரி தன்னை பார்ப்பது எதற்காக என்பதை புரிந்து கொண்ட கீர்த்தி காயத்ரியை முறைக்க மெல்லமாய் சிரித்தாள் காயத்ரி.

“ரஞ்சனா நீ வேற! நம்ம சைட்டுக்கு பக்கத்துல பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இருக்கு, அதான் முதல்ல கோயிலுக்கு போயிட்டு, இந்த கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நல்லபடியா நடக்கணும்னு வேண்டிட்டு அப்புறம் சைட்டுக்கு போகலாம்னு நெனச்சு இந்த புடவையை கட்டிட்டு வந்தேன்” என்று மாயமித்ரா சொல்ல, காயத்ரி கீர்த்தியை நோக்கி கண் ஜாடை காட்டினாள்.


“அப்புறம் நம்ம நாளைல இருந்து தான வேலையை தொடங்குவோம். இன்னைக்கு சும்மா சைட்ட விசிட் பண்ற வேலை தானே பார்க்க போறோம், அதனால எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு புடவை கட்டிட்டு வந்தேன்!” என்று மாயமித்ரா சொல்ல, “தெரிஞ்சிருந்தா நானும் பட்டு வேஷ்டி சட்டை கட்டிட்டு வந்திருப்பேனே!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல மாயமித்ரா அதிர்ந்து பார்த்தாள்.


இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் வாசகப் பெருமக்களே...





 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இந்த கமிஷனரும்.....அந்த பெண்ணை பத்தி விசாரிக்கிறதா சொல்லி இருக்கார்.....பட் name கூட தெரியாம எப்படி