24. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறை நீர் - 24

அவன் முன்னே அவனுடைய மார்பளவே இருந்தாலும் நேராக நிமிர்ந்து நின்று அவனை எரித்து சாம்பலாக்குவது போல் கண்களுக்குள் அத்தனை கோபத்தோடும் திமிரோடும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவை பார்த்த அழகனின் பார்வையில் ஒரு நொடி அவளின் தைரியத்திற்கான மெச்சுதல் தெரிந்ததுதான்..

அடுத்த நொடி அவன் இதழ்களில் ஒரு இகழ்வான சிரிப்பு..

"என்னடி.. கண்ணகி மதுரையை எரிச்ச மாதிரி அப்படியே பார்வையாலேயே என்னை எரிச்சு சாம்பலாக்கிடுவியோ..? பெரிய பத்தினி இவ.. மொறைச்சுப் பார்த்ததும் நாங்க அப்படியே பத்திக்கிட்டு எரிஞ்சுருவோம்.." என்று அவளை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தபடி அவன் பேச

அவனை இன்னும் நெருங்கி வந்தவள் அவன் பார்வைக்குள் இன்னும் ஊடுருவி "ஆமாம்டா.. பத்தினி தான்.. எனக்கு தெரியும்.. நான் பத்தினி தான்னு.. அதை உன்னை மாதிரி கழிசடைக்கெல்லாம் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.." அவள் அவனுக்கு பதிலடி கொடுப்பது போல் அதே தோரணையில் பேச

"ஏய்.. யாரைப் பார்த்து கழிசடைன்னு.. மரியாதை இல்லாம டா போட்டு பேசுற..?"

"அப்படித்தான்டா பேசுவேன்.. நீ டீ போட்டு பேசுனா நானும் டா போட்டு தான்டா பேசுவேன்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்.." அவள் அழுத்தமாய் சொல்ல

"மரியாதையா? உன்னை மாதிரி போற வர்ற ஆளெல்லாம் அனுபவிக்கிற பொறம்போக்குக்கே என்னடி மரியாதை வேண்டி கிடக்கு..? அழகை காட்டி பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிற உனக்கு எதுக்குடி மரியாதை?"

"எப்படி எப்படி.. காசு சம்பாதிக்கிறதுக்காக நாங்க அழகை காட்டி வான்டடா இந்த தொழிலுக்கு வந்தோம்.. அதை நீ பார்த்த.. ஓ.. அப்ப நீதான் ஆள் கூட்டிட்டு வந்தியோ?"

அவன் பேச்சு எல்லை மீற சூர்யாவின் பேச்சும் எல்லா வரையறைகளையும் தாண்டியது..

"ஏய்.. சீ.. நான் ஒரு ப்ரொஃபசர்.. கௌரவமான ஒரு ப்ரொஃபஷன்ல இருக்கேன்.. ஒரு நல்ல ஃபேமிலில பொறந்து வளர்ந்திருக்கேன்.. அந்த ஈன பொழப்புக்கு எனக்கு எந்த அவசியமும் இல்ல..." அவன் பல்லை கடித்துக் கொண்டு சீற

"ஹாஹா.. ப்ரொஃபசர்.. ஹான்.. தெரியுமே.. அதுவும் மேக்ஸ் ப்ரொஃபசர்.. நம்பர்ஸ் வச்சு கணக்கு போட தெரிஞ்ச உனக்கு மனுஷங்களையும் அவங்க குணத்தையும் கணக்கு போட தெரியலயே.. நீ எல்லாம் ஒரு வாத்தியாரா இருக்குறதுக்கே லாய்க்கு இல்லை.. வாத்து மாதிரி யோசிக்கிறவன் எல்லாம் வாத்தியாரா இருக்கக் கூடாது டா.. உன்கிட்ட படிக்கிற பிள்ளைங்க உன்னை மாதிரியே கேவலமா யோசிக்கிறவங்களா தான் வருவாங்க.. உன்னை மாதிரி ஒரு கேவலமான வாத்து கிட்ட இருந்து அந்த கடவுள் தான் அவங்களை காப்பாத்தணும்... எங்களை பத்தி உனக்கு என்னடா தெரியும்? இதோட அடங்கு.. இந்தக் கல்யாணம் நடக்கும்.. நீ இவ்வளவு நேரம் கேவலமா பேசினியே அவதான் உனக்கு அண்ணியா வருவா.. நீ என்ன செஞ்சாலும் இதை தடுக்க முடியாது.. ஏன் தெரியுமா? உன் அண்ணன் அவ மேல உயிரையே வச்சிருக்கிறார்.. அரசியும் தமிழ் மாமாவும் உன் கூட பொறந்தவங்கங்கறதை நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு...."

"ஏய்.. நிச்சயமா இந்த கல்யாணத்தை நிறுத்திக் காட்டறேன்டி.. நிறுத்தலன்னா என் பேரு அழகன் இல்ல.." சவால் விட்டான் அழகன்..

"ஹூம்.. இப்படி அழுக்காய் யோசிக்கிற உனக்கு அழகன்னு பேரு.." என்றவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி "உனக்கெல்லாம் அழுக்கன்னு பெயர் வச்சிருக்கணும்.. இதை கூட எல்லாருக்கும் கேக்கற போல சத்தமா சொல்லி இருப்பேன்.. ஆனா உனக்கு பேர் வச்ச உங்க அம்மா அப்பாக்கு அவமானமா இருக்கும் இல்ல..? அதுக்கு தான் ரகசியமா உனக்கு மட்டும் கேக்குற மாதிரி சொல்றேன்.." என்று ரகசியம் பேசியவள்
"நீ எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தங்கறதையும்
பாக்கலாம் டா.. உன்னால முடிஞ்சதை பண்ணு.." என்று அவளும் அவனை எதிர்த்து சவால் விட்டாள்..

அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த தமிழ் அவன் முன்னே வந்து நின்று "அழகா.. நீ ரொம்ப லிமிட் தாண்டி பேசிக்கிட்டு இருக்கே.. நீ பேசறது எனக்கு பொண்டாட்டியாக போறவளை பத்தியும் அவ ஃபிரெண்டை பத்தியும்.. சூர்யா பத்தி உனக்கு தெரியலன்னா கூட நவ்யா நம்மளோட மாமா பொண்ணு.. மாமாவோட ரத்தம் அவ உடம்புல ஓடுது... கொஞ்சமாவது அவ அப்படிப்பட்ட பொண்ணா இருப்பாளான்னு யோசிச்சியா? ஏன்டா இப்படி..? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. அவதான் எனக்கு பொண்டாட்டி.. வேற யாரையும் என் வாழ்க்கையில அனுமதிக்க முடியாது.. நீ என்ன வேணா பண்ணிக்க.. இந்த கல்யாணம் நிக்காதுடா.."

"ம்ம்.. சரிதான்.. ஆனா நம்ம மாமாவோட ரத்தம் மட்டுமா அவ உடம்புல ஓடுது.. அந்த கேடு கெட்ட சீதாவோட.."

அவன் பேச ஆரம்பிக்கும் போதே அவன் முன்னே வந்து சுட்டு விரல் நீட்டி கர்ஜித்தார் ஜெகந்நாதன்.. அவரை யாரும் இதுவரை அப்படி ஒரு ருத்ர கோலத்தில் பார்த்ததில்லை..

"நீ இத்தனை நேரம் என் பொண்ணை பத்தி பேசுனப்பவே ரொம்ப சிரமப்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தேன்.. நீ இப்படி என் பொண்டாட்டியையும் கேவலப்படுத்தணும்னு நினைச்சே என் அக்கா மாமா இருக்காங்கன்னு கூட பாக்க மாட்டேன்.. பேசற வாயை உடைச்சுடுவேன்டா.." என்றார்.

அமைதியான மனிதர் அவர்.. அவருக்கே கோவம் வர வைத்திருந்தான் அழகன்.

ஜெகந்நாதனின் கையை பிடித்து பின்னால் இழுத்த சிவனேசன் "ஜகா நீ விடு.. நான் அவனை பார்த்துக்கிறேன்.." என்றவர்

அழகனிடம் "இங்க பாரு.. நாங்க எல்லாரும் அந்த பொண்ணை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்கிட்டோம்.. உன்னால அமைதியா இந்த கல்யாணத்தை அட்டென்ட் பண்ண முடியும்னா இங்க இரு.. இல்லன்னா இப்பவே நீ இங்க இருந்து கிளம்பி போயிட்டே இரு.." என்றார்.

அதிர்ந்து "அப்பாஆஆ.." என்றவனை கையமர்த்தியவர் "வேற எதுவும் உன்கிட்ட இருந்து எனக்கு கேட்க வேண்டாம்.. ஏற்கனவே நீ நிறைய பேசிட்ட.. இனிமேலும் நீ என் புள்ளையா இருக்கணும்னா அமைதியா உன் ரூமுக்கு போ.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கடைசி ரூம் உன்னோடது.." என்றவரை முறைத்துப் பார்த்தவன் வெறுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்து விட்டான்..

அடுத்த நாள் காலை திருமணம்.. இரவு உணவுக்கு முன் அவன் அறைக்குள் நுழைந்தாள் ரியா..

"அத்தான்.." என்று அவள் அழைக்க நிமிர்ந்து பார்த்தவன் "நீ எதுக்கு இங்க வந்த.? உன்னை இப்படி டிரஸ் பண்ணாதன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ எல்லாம்..?" என்று அவளுக்கும் திட்டு விழுந்தது அவனிடமிருந்து..

"அத்தான் ப்ளீஸ்.. உங்க லெக்சர் எல்லாம் உங்க மேத்ஸ் கிளாஸோட நிறுத்திக்கோங்க.. தயவு செஞ்சு என்கிட்ட வேண்டாம்.. இந்த கல்யாணத்தை நிறுத்த ஒரு சூப்பர் ஐடியாவோட வந்து இருக்கேன்.. " என்றவளை கேள்வியாய் அவன் பார்க்க

"நைட்டு டின்னர்ல அந்த நிலாவோட ட்ரிங்க்கை ஸ்பைக் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன்.. நிலா மட்டும் இல்ல.. உங்களை அவ்ளோ கேவலமா எதுத்து எதுத்து பேசினாலே அந்த சூர்யாவையும் தான்.. அப்புறம் என்னோட பாய் ஃப்ரெண்ட்ஸ்.."

"என்னது பாய் ஃபிரண்ட்ஸா.. நீ ஏன் இவ்வளவு.." என்று ஏதோ சொல்ல வந்தவனை இடை மறித்தவள்

"ஐயோ அத்தான் இந்த திட்டை எல்லாம் அப்படியே சேர்த்து வச்சுக்கோங்க.. அப்புறமா நிதானமா திட்டலாம்.. இப்ப நான் சொல்றதை முழுசா கேளுங்க.." என்றவள்

"அந்த பசங்க தங்கி இருக்கிற ரூம்ல சூர்யாவும் நிலாவும் நைட் இருக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன்.. காலைல அந்த ரூம்ல அவங்க இருக்கிற நிலைமையை பார்த்து தன்னால இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க எல்லாரும்.."
அவள் சொன்னதை கேட்டவனுக்கு இன்னும் எரிச்சலாய் தான் வந்தது.. அவன் எப்படியும் தான் சொன்ன விஷயத்தை கேட்டு பாராட்டுவான் என்று நினைத்தவள் எண்ணத்தில் லாரி மணலை அள்ளி கொட்டினான் அழகன்..

"இந்த மாதிரி டிஸ்கஸ்டிங் ஐடியாஸ் எல்லாம் உனக்கு யார் சொல்லிக் தர்றது? உனக்கு வெக்கமா இல்ல..? எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற? முதல்ல காலேஜ் படிக்கிற உனக்கு எதுக்கு இவ்வளவு பாய் ஃப்ரெண்ட்ஸ்.. முதல்ல நீ சரியா இருந்தா தானே உன் எண்ணமும் சரியா இருக்கறதுக்கு.. எவ்வளவு கேவலமா யோசிக்கிற? நான் கல்யாணத்தை நிறுத்தறேன்னு சொன்னது தமிழுக்கும் இந்த வீட்ல இருக்குற பெரியவங்களுக்கும் அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நாம என்னென்ன கோன்சிக்வென்ஸஸ் எல்லாம் ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கும்ன்னு சில ஃபேக்ட்ஸை புரிய வச்சு நிறுத்தறேன்னு சொன்னேன்.. இந்த மாதிரி கேவலமான பிளான் பண்ணி எல்லாம் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு எனக்கு அவசியம் கிடையாது.. முதல்ல என் ரூமை விட்டு வெளியில் போ நீ.. உன் காத்து கூட இந்த ரூம்ல படக்கூடாது.. சிந்து மாதிரி ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு தங்கச்சி.." என்று தலையில் அடித்துக் கொண்டு விரட்டினான் அவளை..

அவன் சொன்னதைக் கேட்டு எச்சில் விழுங்கினாள் ரியா.. இன்னும் பூமாவின் விஷயம் அவனுக்கு முழுதாய் தெரியாது.. அவனிடம் சொல்லி இருந்த கதையே வேறு.. அது தெரிந்தால் அவனுடைய கோவம் தங்கள் பக்கம் மொத்தமாய் திரும்பக் கூடும் என்று பயம் வந்தது அவளுக்கு..

சிந்துவின் வாழ்க்கையே இதனால் கேள்விக்குறியாக கூடும் என்றும் தோன்றியது.
அமைதியாய் வெளியே வந்தவள் தன் திட்டத்தை மட்டும் கைவிடவில்லை..

அடுத்த நாள் காலை சூர்யா வின் அறையில் இருந்த கட்டிலில் தன் வெற்று
மார்பில் சூர்யா தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்க அவளை அணைத்து படுத்திருந்தான் அழகன்..

நீர் உறையும்..
 
Last edited:

Author: STN - 72
Article Title: 24. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

வாத்து மாதிரி யோசிக்கிறவன் எல்லாம் வாத்தியாராய் இருக்கக் கூடாதுடா 🤣🤣🤣🤣🤣🤣அச்சோ அம்மா சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல 🤣🤣🤣 சூர்யா சொன்னது போல அழுக்கு மனசுக்காரனுக்கு எதுக்கு அழகன்னு பேரு 😏😏😏😏
ரியா போட்ட பிளான் ல அழகன் sir மாட்டிட்டாரு போலவே 🤔🤔🤔🤔
 
  • Haha
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
வாத்து மாதிரி யோசிக்கிறவன் எல்லாம் வாத்தியாராய் இருக்கக் கூடாதுடா 🤣🤣🤣🤣🤣🤣அச்சோ அம்மா சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல 🤣🤣🤣 சூர்யா சொன்னது போல அழுக்கு மனசுக்காரனுக்கு எதுக்கு அழகன்னு பேரு 😏😏😏😏
ரியா போட்ட பிளான் ல அழகன் sir மாட்டிட்டாரு போலவே 🤔🤔🤔🤔
அதே அதே.. ரியா ப்ளான் புஸ்வாணம் ஆயிருச்சு..😂😂
 
  • Haha
Reactions: Sudhakar

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
ஆக என்ன அற்புத வளர்ப்பு பூமா.....ரியாவே போதும் உங்க குடும்ப லட்சணம் தெரிய.....

இவளோ பேசின இல்ல உனக்கு சூர்யா தான் டா கரெக்ட்
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
ஆக என்ன அற்புத வளர்ப்பு பூமா.....ரியாவே போதும் உங்க குடும்ப லட்சணம் தெரிய.....

இவளோ பேசின இல்ல உனக்கு சூர்யா தான் டா கரெக்ட்
ரொம்ப சரி.. அவளுக்கு தனி கதை வரும்.. வாந்தியை வச்சு செய்ய வேணாமா?
 
STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
*

*வாத்தியை..