உறை நீர் - 25
சூர்யாவை அழைத்துக் கொண்டே அவள் அறைக்குள் கதவை தட்டி விட்டு உள் நுழைந்திருந்தாள் அரசி.. அங்கே அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து "அண்ணாஆஆஆ.." என்று அழைத்தவள் அடுத்த கணம் தலையை குனிந்து அந்தக் காட்சியை பார்க்க முடியாமல் திரும்பி நின்று விட்டாள்..
மறுபடியும் "அழகண்ணா.." என்று அவள் அழுத்தமாய் அழைக்க அப்போது தான் கண் விழித்தான் அழகன்..
கண் விழித்தவனுக்கும் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.. தன் மார்பில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவையும் அவளை தன் கைகள் அணைத்திருந்ததையும் கண்டவன் பதறி தன்னில் இருந்து அப்படியே அவளை பிடித்து தள்ளி எழுந்து அமர்ந்தான்..
மேல் சட்டையில்லாமல் சூர்யாவோடு அவ்வளவு நெருக்கமாக அவன் படுத்திருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை.. ஏதேனும் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறோமோ என்று தான் தோன்றியது அவனுக்கு.. சூர்யாவும் திடீரென உறக்கத்திலிருந்து தள்ளி விடப்பட்டதில் திடுக்கிட்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் திருதிருவென விழித்தாள்..
"ஏய்இஇ.. நீ எப்படி இங்க? கடைசில உன் புத்தியை காட்டிட்ட இல்ல..?" என்று கத்தியவனை முறைத்த சூர்யா
"ஹலோ.. மிஸ்டர். அழுக்கன்.. யாரு புத்தியை காட்டினா, அப்பவே அழகை காமிச்சு சம்பாதிக்கிறோம்னு நீங்க சொன்னப்பவே நான் உஷாராகி இருக்கணும்.. இப்ப இல்ல புரியுது உங்களை பத்தி.. எல்லார் முன்னாடியும் திட்டுற மாதிரி திட்டிட்டு நீங்க உங்க ஆம்பள புத்தியை காட்டிட்டிங்க இல்ல.."
"ஏய் என்னடி ரொம்ப பேசுற?" என்று கை ஓங்கியவனின் கையை அடிக்க விடாமல் தடுத்து முறுக்கிப் பிடித்தாள் சூர்யா..
"மேல கை பட்டுச்சு.. அப்புறம் கை உடைஞ்சுடும் பார்த்துக்க.." என்றவளின் பிடியோ அவ்வளவு வலுவாக இருந்தது.. ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு வலிமையா என்று மறுபடியும் ஆச்சரியப்பட்டு தான் போனான் அழகன்..
கட்டிலில் இருந்து எழுந்து வந்தவன் "அரசி மா.. இங்க என்ன நடக்குதுன்னே தெரியல.. இவ எப்படி என் ரூம்ல..?" என்றவன் அப்போதுதான் அது தன்னறையே இல்லை.. அவளுடைய அறை என்பதை கவனித்தான்..
அதில் விக்கித்துப் போனான். கட்டிலில் இருந்து எழுந்து அவன் அருகே வந்த சூர்யா "ஹலோ சார்.. நீங்க தான் என் ரூமுக்கு வந்து இருக்கீங்க.. பெரிய உத்தமன் மாதிரி பேசுனீங்க நேத்து.. அந்த மாதிரி இடத்துல இருந்து வந்தவ தானே? அனுபவிக்கிற வரைக்கும் அனுபவிக்கலாம்னு நெனச்சு தானே இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி இருக்கீங்க..?"
அப்படி ஒரு குற்றச்சாட்டை தாங்க முடியாமல் அவளை அறைய மறுபடியும் அவன் கை ஓங்க அதை முறுக்கி பின்பக்கம் இழுத்து சிறை செய்தாள் பெண்ணவள்..
ஆறடி ஆண்மகன் அவன்.. அவள் ஐந்து அடி இருப்பாளோ என்னவோ.. ஆனால் ஏதோ சண்டை பயிற்சி பழகியவள் போல எப்படி அவனை அசைய விடாமல் கிடுக்குப் பிடி போட முடிந்தது என்று ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான் அவன்.
"என்ன.. ஷாக்கா இருக்கா? என்னை மாதிரி ஒரு பொண்ணு வீக்கா இருப்பான்னு எதிர்பார்த்தியா? உன்னை மாதிரி நாலு தடிமாடுங்க அந்த விடுதியில ஒன்னா சேர்ந்து பாய்ஞ்சு அவங்க வீரதீரபராக்ரமத்தை எல்லாம் என் கிட்ட காட்டினாங்க.. அவங்களை எதிர்த்தே ஒரு மணி நேரம் போராடின அப்புறம்தான் அவனுங்களால என்னை அடக்க முடிஞ்சுது.. எனக்கு உடம்புல வலிமை இல்லாம இருக்கலாம் சார்.. ஆனா மனசுல ரொம்ப வலிமை இருக்கு.. நீங்கதான் பார்த்த உடனே ஜட்ஜ் பண்ணி எங்களை பத்தி ஒரு கதையை எழுதினவர் ஆச்சே.. உங்களுக்கு போய் இதெல்லாம் சொல்றேன் பாரு.. எப்படி புரியும் உங்களுக்கு இதெல்லாம்.." என்று பின்னே சிறை பிடித்து வைத்திருந்த அவன் கையை இழுத்து முன்னே தள்ளி விட்டாள் அவனை..
அவளின் இறுகிய பிடியில் அவன் கை தான் வலித்தது.. பேச்சற்றுப் போனான் அழகன்..
அதே நேரம் சுனிதா ரியா சிந்துவோடு அங்கே வர "ஐயோ.. இது என்ன..? மறுபடியும் சண்டை போட உன் ரூம் தேடியே வந்துட்டாரா வாத்தி.. ஆனா சண்டை போட வந்தவரு எதுக்கு சட்டை இல்லாம வந்திருக்கிறாரு..?" என்று கேட்க பதில் இல்லை அழகனிடம்.
அவன் பக்கம் திரும்பிப் பார்த்த அரசி "அண்ணா.. என்ன அண்ணா இதெல்லாம்?" என்று கேட்க
அதே நேரம் சிந்துவும் "அத்தான் என்னத்தான்.. நீங்க.. அதுவும் இவ ரூம்ல.." என்று நம்பமுடியாத அதிர்ச்சியோடு கேட்க
"இல்ல அரசி.. நான் எப்படி இங்கே வந்தேன்னு எனக்கும் தெரியல.. இவதான் ஏதாவது.." என்று சூர்யாவை காட்டி சொன்னவனை எரித்து விடுவது போல் முறைத்தாள் அவள்..
தமிழும் நவ்யாவும் கூட அங்கே வந்து விட்டார்கள் அப்போது..
சட்டென அறை கதவை தாழிட்டாள் நவ்யா..
"இங்க நடக்கிறது எதுவும் வெளியே தெரிய வேண்டாம்.. தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம்.. என்ன நடக்குது இங்க?" என்று கேட்டாள் அவள்..
"என்ன நடக்குது நவி.. இதோ இந்த பெரிய மனுஷன் வெளிய சண்டை போடுற மாதிரி போட்டுட்டு உள்ள வந்து சூர்யா கூட கசமுசா பண்ணி இருக்கிறார்.." என்றாள் சுனிதா.
"ஐயோ.. நான் எதுவும் பண்ணல.. என்ன நடந்துச்சுன்னே எனக்கு தெரியல.." என்றான் அழகன்.
"அப்போ நீங்க எப்படி சார் சூர்யா ரூம்ல வந்து படுத்து இருக்கீங்க..?" சுனிதா கேட்க
"அதுதான் எனக்கு தெரியலன்னு சொல்றேன் இல்ல.."
"அத்தான்.. இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை.. இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.." சிந்து கதவை திறந்து கொண்டு கோபமாய் வெளியேறி விட்டாள்..
"மிஸ்டர். அழகு சுந்தரம்.. ஒருவேளை இந்த ரியா..?" என்று ரியாவை காட்டி சுனிதா இழுக்க அப்போதுதான் முதல் நாள் மாலை அவள் சொன்னதெல்லாம் அவனுக்கு நினைவில் வந்தது..
"ர்ர்ரியாஆஆஆஆஆ.." என்று பல்லைக் கடித்து அவளை நோக்கி பாய்ந்தான் அவன்..
"அத்தான்.. நான் சூர்யாவுக்கு தான்.." என்றவளை எரித்து விடுவது போல் முறைத்தான் அவன்.
அங்கிருந்த நவ்யா சூர்யா அரசி எல்லாருமே சுனிதாவை அதிர்ந்து போய் பார்த்தார்கள்..
இது எல்லாமே சுனிதாவுடைய வேலை என்று அவர்கள் எல்லோருக்குமே புரிந்தது..
முன்னாள் மாலை நிகழ்வுகள் முடிந்த பிறகு தெய்வானை அழகனிடம் பேசினார்.. என்ன இருந்தாலும் அவனுடைய அண்ணன் விரும்பும் பெண்ணை அவன் அப்படி தரக்குறைவாக பேசி இருக்கக் கூடாது என்று கண்டிப்போடு சொன்னார்..
சூர்யா அவனை அவ்வளவு தரை குறைவாக பேசும்போது அவர்கள் எப்படி வாய் மூடி இருந்தார்கள் என்று அவன் கேட்க
"உன்கிட்ட இருந்து வார்த்தை நல்லபடியா வந்திருந்தா சூர்யாவும் அப்படி பேசியிருக்க மாட்டா.. அவளை பாத்து பத்தினி கண்ணகின்னு முதல்ல தாறுமாறா பேசுனது யாரு? நீதானே? நாம என்ன பேசறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும் அழகா.. அதுக்காக அவ பேசுனதெல்லாம் சரின்னு நான் சொல்லல.. அவளும் கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டா.. ஆனா அப்ப நான் பேசியிருந்தேன்னா பிரச்சனை ரொம்ப பெருசாகி இருக்கும்.. இந்த வீட்டு பெரியவங்க எல்லாருமே அப்ப வாயை மூடிட்டு இருந்தது பிரச்சனையை அதோடு முடிச்சு வைக்கணும்னு தான்.. உங்க அப்பாவும் அதனாலதான் உன்னை எதுவும் பேசாம ரூமுக்கு அனுப்பினார்.. இங்க பாரு.. உனக்கு நவியை பிடிக்கலைன்னா அவ கிட்ட இருந்து தள்ளி இரு.. ஆனா உங்க அண்ணன் அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு எந்த ரைட்டும் இல்ல.. அவனுக்கு பிடிச்ச பொண்ணை தான் அவன் கல்யாணம் பண்ணிக்குவான்.. சூழ்நிலையால மாட்டிகிட்டு ஏற்கனவே கொடுமையை அனுபவிச்ச பொண்ணை வார்த்தையால மேல மேல வதைக்கக்கூடாது அழகா.. நீ பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார்.. உனக்கு இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.. உன் தகுதி அறிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க.. நேத்து நீ பேசின பேச்சு நாங்க பெத்த புள்ளையா நீன்னு எங்களுக்குள்ளே எங்களை கேள்வி கேட்க வெச்சிருச்சு.. இனிமே இது திரும்ப நடக்காம பார்த்துக்கோ.." சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார் அவர்..
அங்கிருந்து நேராக அவர் சென்றது சூர்யாவிடம் தான்..
"அம்மாடி சூர்யா.. என் பையன் உன் கிட்ட நவியை பத்தியும் உன்னை பத்தியும் பேசுனது தப்புதான்.. ஆனா திடீர்னு அண்ணனுக்கு கல்யாணம் நடக்குதுன்னும் நவ்யா இருந்த இடம் பத்தியும் தெரிஞ்ச உடனே அந்த ஷாக்ல பேசி இருக்கான்.. அவன் பேசுனது சரின்னு நான் சொல்லல.. ஆனா அதுக்காக நீ அவ்வளவு வரம்பு மீறி அவனை பேசி இருக்கக்கூடாது.. அவன் ஒரு ப்ரொஃபஸர்.. பொண்ணுங்க இப்படித்தான் இருக்கணும்னு அவனுக்குள்ள ஏற்படுத்தி இருக்கிற வரைமுறை ரொம்ப தப்பானது தான்.. எனக்கும் தெரியும்.. அதை மாத்த நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணி இருக்கோம்.. ஆனா அது அவனுக்குள்ள பதிஞ்சு போயிருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தணும்.. ஆனா அதுக்காக எங்க புள்ளைய எங்க முன்னாடியே நீ அவ்வளவு கேவலமா பேசுனதை பார்த்துகிட்டு நாங்க அமைதியா இருக்கமுடியாதுல.. உன்னை நிறுத்த சொல்லணும்னு தோணுச்சு.. ஆனா அப்ப நாங்க பேசி இருந்தா நீயும் நவியும் ரொம்ப ஹர்ட் ஆகியிருப்பீங்க.. ஏன்னா அவன் பேசுனது ரொம்ப தப்பு.. ஆனா அதை சொல்ற முறைன்னு ஒன்னு இருக்கே.. அதுவும் அவ்வளவு பேர் முன்ன.. நிச்சயமா நீ பேசுனதும் சரி கிடையாதுடா.."
"ஆன்ட்டி வார்த்தைக்கு வார்த்தை உங்க புள்ள நாங்க அழகைக் காட்டி.."
அவளை கை நீட்டி தடுத்தவர் "இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசுனதை பத்தி திரும்ப பேசி மறுபடியும் அந்த கசப்பான நிமிஷங்களை நினைவுபடுத்த நான் விரும்பல.. இதுக்கு அப்புறம் இப்படி பேசாத.. இப்பவும் அவன் பேசுனதுக்கு என் புள்ளைய நான் கண்டிச்சுட்டு தான் வந்து இருக்கேன்.."
தெய்வானை அரசியிடம் "உன் அண்ணா அவன் பேசுனதுக்கு நிச்சயமா நவி கிட்டயும் சூர்யா கிட்டயும் சாரி கேக்கணும்.. சாரி கேட்டான்னா சூர்யாவும் அவ பேசினதுக்கு சாரி கேட்கட்டும்.. ரெண்டு பேரும் கொஞ்சம் சமாதானம் ஆகிட்டாங்கன்னா அவங்க தள்ளி இருந்தாலும் குடும்பத்துக்குள்ள கொஞ்சம் அமைதியும் மரியாதையும் இருக்கும்.." என்றார்.
"சரிமா நான் போய் அண்ணா கிட்ட பேசுறேன்.." என்றாள் அரசி..
சுனிதாவையும் அழைத்துக் கொண்டு அழகனிடம் பேசுவதற்காக அவன் அறைக்கு சென்றவர்கள் உள்ளே ரியாவின் குரல் கேட்டு அப்படியே நின்றார்கள்..
இருவரும் பேசியது அனைத்துமே தெளிவாக காதில் விழுந்தது.. பக்கத்து சுவற்றில் இருவரும் மறைந்து கொள்ள வெளியே வந்த ரியா "நீங்க என்ன சொன்னாலும் சரி அத்தான்.. நான் இந்த பிளானை நடத்தி முடிக்கத் தான் போறேன்.. அந்த நிலாவையும் சூர்யாவையும் இந்த வீட்டை விட்டு துரத்திட்டு தான் எனக்கு மறு வேலை.." என்று சொல்லிவிட்டு சென்றவளை பிடித்து நான்கு அறை விடலாம் என சுனிதா பாய்ந்து செல்ல அவளை பிடித்து தடுத்திருந்தாள் அரசி..
ஆனால் இப்போது ரியாவின் திட்டத்தையே அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக மாற்றி இருந்தாள் சுனிதா..
நீர் உறையும்..

Last edited:
Author: STN - 72
Article Title: 25. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.