நின் மத்தம் : 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
வரதன் போலி பத்திரங்களில் சொத்துக்களை எழுதி வைத்து இவனை மாட்டி விடலாம் என்று யோசித்திருக்க இவனும் சார்பதிவாளரை பிடித்து ஒரிஜினல் பத்திரங்களை அவருக்கே தெரியாமல் தயாரித்து அவன் சொத்துக்களை அவருக்கு தெரியாமலேயே பறித்து விட்டான்.

இதுவரை எத்தனையோ டெண்டர்களை அவரை அடித்து இவன் வாங்கியிருந்தாலும் அப்போது கூட வராத களிப்பு இன்று அவர் சொத்துக்களை வாங்கியதால், மட்டும் அல்ல அவரை நின்று எதிர்கொண்டதால் வந்த களிப்பில் வீட்டுக்கு வர மான் விழி வாசலிலேயே நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் தான் நினைவு வந்தவனாக, " ஐயோ ரெண்டு நாளா வீட்டுக்கு வரலையே ராட்சசி என்ன பண்ணுவாளோன்னு தெரியவில்லையே" என்று பயந்து கொண்டே கீழே இறங்கி வந்தான்.

அவள் அவனை முறைத்துக் கொண்டு நின்றாளே தவிர ஒரு வார்த்தை கூட பேச வில்லை....

அவன் வந்து அவள் கன்னங்களை கிள்ளி "செல்லம், பட்டு" என்று கொஞ்சினான்.

அவள் அதை தட்டி விட்டு எதுவும் பேசாமல் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அதில் கோவம் இல்லை ஒரு நொடி கூட அவனை பிரிந்திருக்க முடியாமல் இருக்கும் ஏக்கம் அதை புரிந்துக் கொண்டவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிற்க வைக்க அவள் மீண்டும் வந்து அவனிடமே ஒட்டிக்கொண்டாள்.

" ஏய் அம்மு நம்ம வெளிய நிக்கிறோம் டா " என்றான்.

"பரவாயில்லை " என்றாள்.

"மிஸ் பண்ணியா" என்றான்.

குழந்தையைப் போல் "ஆமாம்" என்றாள்.

அவனுக்கு இந்த அன்பின் அடைமழையில் நனைவது கடினமாக இருக்க மெல்ல அவளை நிமிர்த்தி தனக்கு பிடித்த அவள் கண்ணாடியின் மேல் விழும் அந்த ஒற்றை முடியை ஒதுக்கி விட்டு அவள் மூக்கை பிடித்து ஆட்டி "நானும் தான் மிஸ் பண்ணேன்" என்றான்.

"பொய் சொல்லாத டா கொரில்லா, நீ மிஸ் பண்ணி இருந்தா போன் பண்ணி இருப்ப இல்லை" என்றாள்.

அதில் கிறங்கியவன் கன்னங்களை கிள்ளி கண்களை நேராக பார்த்து "இங்க பாரு நான் உனக்கு போன் பண்ணலைனா அதைவிட எவ்வளவு முக்கியமான வேலையில் இருந்திருப்பேன் என்று உனக்கு புரியலையா? என் முகத்தை பாரேன் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் இந்த சந்தோஷத்துக்கு காரணமே நீதான்டி " என்றான்.

அவள் தன் முட்ட கண்ணை விரித்து "நானா" என்றாள்.

"ஆமா டி என் செல்லம், நீதானே அன்னைக்கு யாரை எல்லாம் உங்களுக்குப் பார்க்க கஷ்டமா இருக்கும் அவங்களை முதலில் அந்த இடத்தில் வந்து பேஸ் பண்ண கத்துக்கோங்கன்னு இன்னைக்கு நான் தைரியமா அதை ஃபேஸ் பண்ணிட்டு வந்து இருக்கேன்

அதுக்கு காரணம் நீதான் " என்று அவள் கன்னங்களை விடும்போது அவள் அப்படியே அவன் மீது மயங்கி சரிந்தாள்.

அவள் கன்னங்களை தட்டி அவள் எழாமல் போக அவனுக்கு தன் உயிரே ஒரு நிமிடம் நின்று விட்டது போல் ஆகி, "அம்மா" என்று அந்த வீடே அதிரும் படி கத்தினான்.

அந்த சத்தம் கேட்டு அவர்கள் வந்து "என்னாச்சுப்பா ஏன் கத்தின" என்று கேட்டதற்கு, " என்கிட்ட பேசிட்டு இருந்த அம்மா அப்படியே மயங்கிட்டா என்ன ஆச்சுன்னு தெரியலமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று சொன்னான். அதை அவன் சொல்லும்போது அவன் முகத்தில் அத்தனை பயம் தன்வளுக்கு என்ன ஆனதோ என்ற பயம்,,

தன் மகனுக்கு இப்போது தான் காதல் என்று உணர்வே வந்திருக்கிறது. என்று மகிழ்ச்சியடைந்தாலும் இப்போது தன் மகனை சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணியவர் தன்னை சமாதானம் செய்துக் கொண்டு,

"ஒன்னும் இல்ல செந்தூரா " என்று அவன் முகத்தை துடைத்துவிட்டு "அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவோம் எல்லாம் சரியா போகும் காரை எடு" என்று மீனாட்சியும் சுசிலாவும் அவளை மடியில் கிடத்திக்கொண்டு

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதித்துச் விட்டு அங்கு காத்திருக்கும் அந்த சிறு வேளையில் என்னென்னவோ தோன்ற அப்போது மருத்துவர்கள் உள்ளே அழைத்து அமர வைத்து விட்டு, "கங்கிராஜுலேசன் மிஸ்டர் செந்தூரன் நீங்க அப்பாவாக போறீங்க" என்றனர்.

அதில் அவனுக்கு வார்த்தைகளை வரவில்லை வார்த்தைகள் கூட கண்ணீராக வெளிவந்து அவரை நன்றியுடன் பார்க்க, "ஷி இஸ் ஆல்ரைட் ஒரு 15 மினிட்ஸ்ல கண்ணு முழிச்சிடுவாங்க நீங்க கூட்டிட்டு போங்க கொஞ்சம் வெயிட் தூக்காம பத்திரமா பாத்துக்கோங்க ஸ்ட்ரெஸ் ஆகாம பாத்துக்கோங்க அவ்வளவுதான் அவங்களே டாக்டர் அவங்களுக்கு எல்லாமே தெரியும் பாத்துக்கோங்க" என்று சொல்லி சென்று விட்டார்.

அவள் அருகில் சென்று அவன் முழிக்கும் வரை காத்திருந்தான் அவள் கண் முழித்து தன்னை பார்ப்பதே தவம் என்று இருந்தான்.

அவள் கண் முழித்து கண்டது அவன் கண்ணீருடன் இருக்கும் கோலத்தை தான், "ஏன் நீங்க அழுகுறீங்க என்ன ஆச்சு " என்று கேட்டாள்.

"நமக்கு பா பாப்பா வரப் போகு தாம் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றான்

"ஓ " என்றாள்.

"என்னடி இவ்ளோ சாதாரணமா சொல்ற என்றான்.

"நான் காலையிலேயே டெஸ்ட் பண்ணிட்டேன் அதை சொல்றதுக்கு தான் உங்களுக்கு எத்தனை முறை கால் பண்ணனேன் நீங்க எடுக்கவே இல்ல அதனால் தான் நான் கோவமா இருக்கேன் போங்க" என்றாள்.

"சரி என்னை மன்னிச்சிடுவியாம் உன் பட்டு இல்லை " என்று அவள் கைகளை பிடிக்க அவன் கைகள் ஈரமாக இருந்தது.

அதிலேயே தெரிந்து கொண்டாள் அவன் எவ்வளவு நடுக்கத்தில் இருக்கிறான் என்பது அதனால், " எனக்கு ஒன்னும் இல்ல வீட்டுக்கு போகலாமா? " என்று சொல்ல அனைவரும் வீட்டுக்கு வந்தவளை அவளின் கால் கூட தரையில் படாமல் தாங்கு தாங்கு என்று தாங்கினான்.

அவளுக்கு ஏழு மாதம் இருக்கும் போது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வரும் நேரம் இளங்கோவிடம் இருந்து அழைப்பு வந்தது அதை எடுத்து காதில் வைத்து "சொல்லு மச்சான்" என்றான்.

"மச்சான் பிராசஸ் சக்சஸ் அதுக்கப்புறம் ஃபர்தரா என்ன பண்ணனுமோ அதை பண்ணலாம்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

எந்த நொடிக்காக காத்திருந்தானோ அந்த தருணம் நிகழ அவளை வீட்டில் விட்டுவிட்டு, "இங்க பாரு நான் வர ஒரு ரெண்டு நாள் ஆகும் பயப்படாமல் பேனிக்காமல் இரு" என்று சொல்லி அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.

அவளும் அதை புரிந்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

அவன் காவல்துறைக்கு அழைத்து கூடுவாஞ்சேரில் இருக்கும் போதை பொருள் குடோனை பற்றி விவரமாக எடுத்துச் சொல்ல அவர்களும் அங்கு விரைந்து சென்றனர்.

வரதன் எப்போது அங்கு வருவான் என்று எல்லா திட்டங்களையும் முன்கூட்டியே போட்டு வைத்திருந்ததால், அங்கு அவன் இருக்கும் நேரமே காவல் துறையுடன் செல்ல அவனை கையும் களவுமாக பிடித்தனர்.

முதல்முறையாக வரதன் வாழ்க்கையில் தன் மகனிடம் தோற்றுப்போய் அடிபட்ட பார்வை பார்த்தார்.

அவன் சற்றும் சலிக்காமல் திமிராக நிமிர்ந்து நின்றான்.

கைதாகி வரும்போது அவனிடம் வந்து, "நீ இந்த விஷயத்தை போலீஸ் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி தானே என்கிட்ட எல்லாம் சொத்தையும் எழுதி வாங்கின அப்புறம் ஏன் சொன்ன" என்று ரகசியமாக கேட்டார்.

"அது நீ உண்மையாகவே அந்த சொத்தை எழுதி கொடுத்து இருந்தா நான் சொல்லி இருக்க மாட்டேன் நீ போலி பத்திரம் தானே எழுதி கொடுத்த உன்னை பத்தி எனக்கு தெரியாது நினைச்சியா?" என்றான்.

"அதையும் கண்டுபிடிச்சிட்டியா" என்று கேட்டார்.

"நான் உங்க பையன் அதை ஞாபகம் வச்சுக்கோங்க உங்களை விட மூளை எனக்கு அதிகமாக வேலை செய்யும்...

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்றேன் அதையும் கேட்டுட்டு போங்க நீங்க எனக்கு கொடுத்த பத்திரம் எல்லாமே ஒரிஜினல் ஏன்னா நீங்க போலி பாத்திரத்தில் தான் எனக்கு சொத்து எழுதி தர போறீங்கன்னு தெரிஞ்சு ரெஜிஸ்டர் மூலமாகவே ஒரிஜினல் பத்திரத்தை உங்களோட கையெழுத்தை வாங்கிட்டேன் நொவ் யுவர் ஸிரோ" என்றான்.

அதில் தன் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோவமுற்று அவன் கழுத்தை எட்டிப் பிடிக்க அதை அவன் தடுத்து விட்டு கூட்டிட்டு "போங்க சார் " என்றான்.

போதை பொருள் வியாபாரம் மற்றும் பத்திரத்தால் மோசடியென இரண்டிலும் கைது செய்து சிறை தண்டனை கிடைத்தது அப்போதும் அவர் திருந்தாமல் வன்மத்துடன் அவனைப் பார்த்தார்.

இவன் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவன் வழியில் சென்று விட்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர அவளுக்கு ஒன்பது மாதம் ஆக, "ஏய் உனக்கு எப்படி டி இந்த பங்க்ஷன் வேணும்" என்று அவள் காலுக்கு சொடக்கு எடுத்துக் கொண்டே கேட்டான்.

"நீ என் கூடவே இருக்கணும் அது எந்த மாதிரியா இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை..." என்றாள்.

"சரி" என்றான்.

"நான் எது சொன்னாலும் கேட்பீயா டா" என்றாள்.

அதற்கு அவன் அவள் கைகளை மெதுவாகப் பிடித்து, "இந்த நிமிஷம் என்னை செத்து போன்னு சொன்னா கூட அதை செய்வேன்." என்றான்.

அதை கேட்டவளுக்கு நாம அப்படி என்ன செஞ்சிட்டோம் இவனுக்கு இவன் தான் எனக்கு எல்லாமே செஞ்சிருக்கான் என யோசித்தவளுக்கு கண்ணீர் வந்தது அவள் கண்கள் கலங்கியதும் அவன் மனமே கலங்கி அவள் கண்களில் துடைத்து, "அழாதடி " என்று அவள் நெற்றியில் முட்டினான்.

அவள் அதில் கரைந்து, "ஒரு வேளை நான் பிரசவத்தில் செத்து போய்ட்டா நம்ம பாப்பாவை நல்லா பார்த்துக்கோ கொரிலா " என்றாள்.

அதில் அவன் அவள் வாயில் ஒரு அடியை போட்டு விட்டு, " பாப்பாவை நான் பார்த்துபேன் ஆனால் என்னை யாரும் பார்த்துப்பா அதனால் ஒழுங்கா என்கிட்ட வந்து சேர்ந்துடு அப்படி நீ வரலைனா ஒன்னு நான் உன்கிட்ட வந்துடுவேன் இல்ல உன்னை என்கிட்ட கூட்டிட்டு வந்துடுவேன் உனக்கு எது வேணும்னு நீயே பார்த்துக்கோ" என்றான்.

அந்த வார்த்தை அவளை வதைக்க அவனை அணைத்து ஒரு முத்தம் வைத்தாள்.

அவன் நிமிர்ந்து, "பத்தல" என்றான்.

"நானாவது அது தரேன் நீ அதுக் கூட தர மாட்டேங்குற" என்றாள்.

"அது தான் எனக்கும் சேர்த்து நீயே தரீயே " என்றான்.

"உன்கிட்ட தான்டா பேச கத்துக்கணும்" என்று அவள் திட்டினாலும் அவனை அணைத்து முத்தமிட்டு, "டேய் நான் உன்னைய கம்பெல் பண்ணல ஆனால் நான் சாகறதுக்குள்ள ஒரு முறை எனக்கு ஒரே ஒரு முத்தம் குடு டா" என்றாள்.

"நீ என்கிட்ட அடி வாங்க போற வா போகலாம்" என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.

இரண்டு நாட்களில் மான் விழி தனது மேடிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு நின்றிருக்க செந்தூரன் குனிந்து அவள் சேலையை சரி செய்துக் கொண்டிருந்தான் அவளின் ஒன்பதாவது மாத விழாவிற்கு

அந்த விழா கோலகாலமாக நடந்தது செந்தூர அவளின் அருகிலிருந்து எங்கும் நகராமல் அவளுக்கு முதல் ஆளாய் நலங்கு வைத்து வளையல்கள் பூட்டி அவள் அருகிலேயே இருந்தான்.

சுசீலாவிற்கும் மீனாட்சி, சுந்தரத்திற்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது அவளும் சிரித்த முகமாக இருந்தாள்.

அந்த விழா நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர அவளுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்திருப்பதாகவும் அதை அவள் வந்தால் தான் குணமாகும் என்று கூறவும் வீட்டில் அனைவரும் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் மருத்துவமனைக்குச் செல்ல, செந்தூரனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அவள் வந்த வேலை முடிந்ததும் செந்தூரன் அவளை அணைத்து கூட்டி வந்து அவளை மருத்துவமனை வாயில் படியிலேயே நிறுத்திவிட்டு காரை கொண்டு வந்து அங்கு நிறுத்த அவள் அங்கு இல்லை...

எங்கே சென்று இருப்பாள் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்.....
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty