உறை நீர் - 29
மறுநாள் காலை எழுந்ததுமே ரியாவை பார்த்து "ரியா உன்னோட நான் கொஞ்சம் பேசணும் என்னோட வா" என்றான் தமிழ்
அவளை இந்த வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று அவளிடம் "உனக்கு ஆதிகேசவனை தெரியும் தானே?" என்றவன் கேட்ட கேள்வியில் அவள் கண்களில் ஒரு மிரட்சி..
"ஆதி கேசவனா? எந்த ஆதி கேசவன்?" என்று அவள் தடுமாற
"நடிக்காத ரியா.. இன்ஸ்பெக்டர் ஆதிகேசவன்.. உனக்கு அவனை தெரியும்னு எனக்கு தெரியும்.."
அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..
நடந்தது முழுவதையும் சொன்னாள்..
ஒருமுறை நண்பர்களுடன் அவள் ஒரு விடுதிற்கு சென்றிருந்தாள். இந்த ஆதிக்கேசவன் தான் அவளையும் அவளின் நண்பர்களையும் கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றவன் அவளுடைய நண்பர்களை விடுவித்துவிட்டு அவளை மட்டும் வேறு ஒரு வண்டியில் ஒரு பீச் ஹவுஸுக்கு கடத்திச் சென்றான்..
அங்கே அவளை ஒரு அறையில் அடைத்து அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயல அங்கே இருந்த கண்ணாடி குடுவையை எடுத்து உடைத்து இருந்தவர் அவன் முகத்திலேயே ஒரு பெரிய கோடாக கிழித்திருந்தாள்..
அவன் வலியில் துடித்து கீழே சுருண்டு விழுந்த இடைவெளியில் அங்கிருந்து தப்பி இருந்தாள் ரியா.. ஓரளவுக்கு அரசல் புரசலாக தமிழுக்கு டிபார்ட்மெண்டில் இருந்த நண்பர்கள் மூலம் இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் அந்தப் பெண் யார் என்று தெரியாது.. அப்போதைக்கு அதை கவனிக்காமல் விட்டிருந்தான்..
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ரியா யார் என்று ஆதிகேசவனுக்கும் தெரியாது.. வெறியோடு அவளைத்தான் பழிவாங்க தேடிக் கொண்டிருந்தான் அவன்..
ரியா மேலிருந்த அத்தனை கோபத்தையும் நவ்யா மேல் காட்டி இருந்தான் அந்த படுபாதகன்..
இரவு நவ்யா விஷயத்தை சொன்னதும் மதனுக்கு அழைத்து அந்த பெண் யார் என்று விசாரிக்க சொன்னான்.. அந்தப் பெண் ரியா தான் என்று சொன்னதில் அதிர்ந்து போனாலும் தன் வீட்டின் இரண்டு பெண்களின் மீது அந்த கயவன் கை வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் ரத்தம் தாறுமாறாக கொதித்தது அவனுக்கு.. அவனை அந்த நிமிடமே துண்டு துண்டாக வெட்டி வதம் செய்ய கைகள் துடித்தன..
ஆனால் அவ்வளவு எளிதில் அவனை சாக விடக்கூடாது என்று முடிவுக்கு வந்தவன் தன் மாமனை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.
அடுத்து ஒரு மாதம் வேகமாய் நகர நவ்யாவின் காயங்கள் பூரணமாக குணமாகி இருந்தன.. ஆனால் அந்த வடுக்கள் மட்டும்அ வள் பட்ட வலி வேதனையின் மிச்சங்களாக அப்படியே தங்கிவிட்டன..
புகழ் பெற்ற ஒரு சட்டக் கல்லூரியில் அவளுக்கும் சூர்யாவுக்கும் இடம் கிடைத்திருக்க கார்த்திக்கும் பள்ளிக்கு செல்ல தொடங்கி இருந்தான்.
சூர்யாவுக்கு அங்கு வரும்வரை எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் இருக்கவில்லை.. ஆனால் தமிழை பார்த்ததிலிருந்து அவளுக்கு ஒரு ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற வேட்கை தொற்றிக் கொண்டது.. தப்பு செய்தவர்களை அதுவும் பெண்களுக்கு கொடுமைகள் செய்யும் கயவர்களை முட்டிக்கு முட்டி தட்டி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அவளின் முக்கியமான லட்சியமாகிப் போனது..
ஜெகநாதனை பார்ப்பதையே நவ்யா தவிர்த்து இருந்தாள்.. ஆனால் வீம்புக்காய் சமையலறையில் போய் சமையல் செய்வது பூஜை அறைக்கு செல்வது என அவ்வப்போது கீழ் தளத்திற்கு வந்து ரியாவுக்கும் சிந்துவுக்கும் தன் தரிசனத்தை கொடுத்து அவர்கள் பிபியை ஏற்றினாள்..
ஜெகந்நாதனுக்கு அங்கிருந்து நீலகிரிக்கு மாற்றலாகி இருக்க அவர் இந்த இறுதி ஆறு மாதங்களை அந்த இடத்தில் தான் கடத்த வேண்டி இருந்தது.. அந்த மாத இறுதியில் அவர் அங்கிருந்து புறப்பட்டார்..
நவ்யாவிடம் பேச வேண்டும் அவர் என்று கேட்டபோது முற்றிலும் மறுத்துவிட்டாள் அவள்..
நவ்யாவிற்கு படிப்பதற்கு என்னவெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அதை எல்லாமே தமிழ் செய்தான்.. அவள் பாடம் படிக்கும் வேளையில் அவளுக்கு ஆசிரியனாகவும் மற்ற நேரங்களில் அவள் தாயுமானவனாகவே மாறி அரவணைத்தான்..
ஜெகந்நாதன் கிளம்பி சென்ற பிறகு அந்த ஆறு மாதங்களும் மெல்ல நகர்ந்தது..
நீலகிரியிலேயே ஒரு உல்லாச விடுதியில் முழு பாதுகாப்போடு அவருக்கு பணி ஓய்வுக்கான பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது..
வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையுமே அந்த விடுதிக்கு அழைத்து வந்து அவர்களை நான்கு அறைகளில் தங்க வைத்து இருந்தார்கள்.. பூமா ஜகந்நாதன் ஒரு அறையிலும்.. தெய்வானை சிவனேசன் ஒரு அறையிலும்.. சிந்து ரியா ஒரு அறையிலும் நவ்யா சூர்யா கார்த்தி அரசி சுனிதா ஐவரும் ஒரு அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.. சோமசுந்தரம் டிபார்ட்மெண்டில் இருந்ததால் அவரும் அங்கு வந்திருந்ததால் சுனிதாவும் அவர்களோடு இணைந்து வந்திருந்தாள்..
விழா முடிந்ததும் அவர்கள் அனைவரையும் ஊரை சுற்றி காட்ட அழைத்து போவதாக கூறி இருந்தார்கள்.
ஆதி கேசவன் அந்த பகுதியில் தான் இன்ஸ்பெக்டராக இருந்தான்.. அதனால் அவனும் அந்த விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த டீமில் ஒருவனாய் இருந்தான்.. அவனும் அந்த விடுதியில் அன்று தங்கி இருந்தான்..
ஜகந்நாதன் குடும்பத்தில் இருந்தவர்கள் அன்று இரவு அவரவர் அறையில் இருக்க ஜகந்நாதன் ரியாவிடம் ஏதோ பேச வேண்டும் என்று வரவேற்பறைக்கு அழைத்திருந்தார்.
ரியாவும் அங்கே செல்ல அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட் ஒரு அறை எண்ணை சொல்லி ஜெகந்நாதன் அவளை அங்கே வர சொன்னதாக சொன்னாள்..
இதே நேரம் தன் நண்பன் ஒரு அறைக்கு தண்ணி அடிக்க வர சொல்லி இருக்க ரியா இருந்த அதே அறைக்கு வந்து சேர்ந்தான் ஆதி கேசவன்.
அங்கு ரியாவை பார்த்ததும் திகைத்துப் போனான்.. அடுத்த நொடி அந்த திகைப்பு ஆத்திரமாக மாற ரியாவின் முடியை கொத்தாய் பிடித்து
"உன்ன தாண்டி ஊர் முழுக்க தேடிட்டு இருந்தேன்.. என் கண்ணில படாம தப்பிச்சு போயிட்டு இருந்த இல்ல..? மூணு மாசமா பைத்தியக்காரன் மாதிரி உன்ன தேடி அலைஞ்சுகிட்டு இருந்தேன்.. இன்னிக்கு நல்லா மாட்டிகிட்டியா? இன்னைக்கு உன்னை என்கிட்டே இருந்து காப்பாத்த யார் வராங்கன்னு நானும் பாக்குறேன்.." என்றவன் அவளை கட்டிலில் பிடித்து தள்ளி அவள் மேல் படர ஏதோ ஒரு கனமான பொருள் தலையில் அடித்த அடுத்த நொடி கீழே கிடந்தான் ஆதி கேசவன்.
அடித்தது வேறு யாரும் அல்ல நவ்யா தான்.. அங்கு பக்கத்திலிருந்த ஒரு வெங்கல சிலை எடுத்து அவன் தலையிலேயே ஓங்கி அடித்திருந்தாள் அவள்.. தமிழ் அவளை அந்த அறைக்கு வரச் சொல்லி அழைத்திருக்க அந்த அறை அருகே வந்து கதவை தட்டியவள் தட்டிய வேகத்தில் கதவு தானாய் திறக்கவும் உள்ளே தயங்கி தயங்கி தான் நுழைந்திருந்தாள்..
அங்கே ஆதி கேசவன் நின்று இருப்பதை பார்த்து அதிர்ந்தவள் ஒரு நொடி அப்படியே திரும்பிப் போய் விடலாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் ரியாவோடு அவன் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளை கேட்டு பத்திரகாளியாகவே மாறி இருந்தாள்..
அடுத்த நொடி ரியா மேல் அவன் படர எதையுமே யோசிக்கவில்லை அவள்.. அருகில் கையில் கிடைத்த வெண்கல சிலையௌ எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்திருந்தாள்..
அந்த இடைவெளியில் சுதாரித்த ரியா "ஹே நவீ இந்த டைம்க்கு சேவியர் மாதிரி வந்த.. வா போகலாம்.. என்று அவள் கை பிடித்து இழுக்க நகராமல் நின்றிருந்தாள் அவள் அதே இடத்திலேயே..
அதற்குள் அடி பட்டதில் மூளை கலங்கி கீழே விழுந்து இருந்த ஆதி கேசவன் தலையை உலுக்கிக் கொண்டு எழ முயல அந்த வெண்கல சிலை மீண்டும் அவன் உடலில் பல்வேறு பாகங்களையும் பதம் பார்த்தது..
வெறி கொண்டு அவனை வதம் செய்ய முனைந்திருந்தாள் நவ்யா.. ரியாவால் அவளை அடக்கவே முடியவில்லை..
"ஏய் ஏதாவது ப்ராப்ளம் ஆயிட போகுது.. நிறுத்துடி.." என்று எவ்வளவோ அவள் தடுத்து பார்த்தும் நவ்யா அடங்குவதாய் தெரியவில்லை..
"இவனெல்லாம் உயிரோட இருந்தா எந்த பொண்ணையும் நிம்மதியா வாழ விட மாட்டான்.. இவன் எல்லாம் அழிய வேண்டியவன் ரியா" என்று மேலும் மேலும் அவனை தாக்கிக் கொண்டே இருக்க சட்டென சுதாரித்தவன் அவள் கையை பிடித்து எழுந்து நின்று அவளை அறையப் போக அதே நேரம் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தான் தமிழ்..
கதவை திறந்தவன் தன் ஷூ காலால் எட்டி ஆதிகேசவனின் உயிர் நாடியில் உதைத்தான். வலியில் முகம் சுருங்கி தன் அடியைப் பிடித்துக் கொண்டு சுருண்டு சுவற்றில் சாய்ந்தான் ஆதிகேசவன்..
"அத்தான்.. ஏற்கனவே அவளே அந்தாளை அடிச்சு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கா.. இதுல நீங்க வேற அவனை உதைக்கிறீங்க? செத்து கித்து போயிடப்போறான்.."
"சாகட்டும் ரியா.. இவன்லாம் பூமிக்கு பாரம்" என்றவன் நவ்யா கூட சேர்ந்து அவனும் ஆதிகேசவனை எட்டி உதைக்க நவ்யாவோ தமிழோடு சேர்ந்து அவனை உண்டு இல்லை என்று செய்துவிட்டாள்.
தான் பாக்கட்டில் வைத்திருந்த ஒரு பேனாக்கத்தியை எடுத்து மயங்கும் நிலைக்குப் போய் இருந்தவனின் கையில் காலில் மார்பில் வயிற்றில் முதுகில் என எல்லா இடங்களிலும் ஆழமாய் குத்தி கிழித்து விட்டான் தமிழ்..
ரியாவுக்கும் அவன் மேல் கோபம் உண்டு.. ஏற்கனவே அவளிடம் தவறாக நடக்க முனைந்தவனை காயப்படுத்தி விட்டு வந்தவள் தானே..? இப்போது அவளும் சேர்ந்து அடித்து துவைத்தாள் அவனை..
அப்போது தன் காலால் அவன் உயிர் நாடியை எட்டி உதைக்க போன நவ்யாவை பிடித்து தடுத்தான் தமிழ்.. அவள் அவனை நிமிர்ந்து பார்க்க "ஒரு நிமிஷம் இரு.." என்றவன் ரியா பக்கம் திரும்பி "ரியா அதோ அங்க விழுந்து கிடக்குதே உன்னுடைய ஹை ஹீல்ஸ் ஷூ அதை கொண்டு வந்து கொடு.." என்க
அவளும் அதை அவனிடம் கொண்டு வந்து தந்தாள்.. கீழே அமர்ந்து நவ்யாவின் காலில் அதை மாட்டிவிட்டு "இப்போ உதை.. அவன் உயிர் நாடி தெரிச்சு போகணும்.." என்று மிரட்டலாய் சொன்னவனை பார்த்த நவ்யாவுக்கும் அந்நேரம் அவன் முகத்தில் இருந்த ரௌத்திரம் கொஞ்சம் பயத்தை ஊட்டியது..
"அத்தான்.." என்று இழுத்தவளை கண்ணுக்கு நேராக பார்த்து முறைத்தவன் "இப்ப நீ உதைக்கிறியா? இல்லனா நான் அவனை ஒரேயடியா போட்டு தள்ளிடவா?" என்று கேட்க அவளோ விக்கித்து போனாள்..
தன் காயங்களும் வலிகளும் அவனை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள் அவள்.. கண் கலங்க அவனைப் பார்த்தவள் "பரவால்ல அத்தான்.. போய் தொலையட்டும்.." என்றாள்..
"ம்ம்.. போய் தொலையட்டும்.. ஆனா ஒரேயடியா பரலோகம் போயிடுவான் என் கையால.. பரவாயில்லையா..?" அவன் கேட்கவும் ஆதி கேசவன் உயிர் நாடியில் ஓங்கி எட்டி உதைத்தாள் நவ்யா.. அந்த இடமே காணாமல் போனது போல் ஆனது அந்நொடி.. கிட்டத்தட்ட உயிரே போய் இருந்தது ஆதிகேசவனுக்கு..
கஷ்டப்பட்டு எழுந்து நவ்யாவின் காலிலேயே விழுந்திருந்தான் அவன்..
"அம்மா.. என்னை விட்டுடுமா.. இதுக்கு மேல என்னால முடியாது.. என்னால எழுந்து நிற்க முடியல.. கை, கால் எல்லாம் உடைஞ்சு போச்சு.. உயிர் மட்டும் தான் கொஞ்சம் ஊசலாடிட்டு இருக்கு.. அதை விட்டுடும்மா.. நான் செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." என்றவனை
"அத்தான்.. விட்டுடலாம் அத்தான்.." என்க
"விட்டுடலாமா அப்படியா சொல்ற.. சரி விட்டுடலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி.." என்று அவன் இழுக்க கண்ணில் உயிர் பயத்துடன்
"சார் நிறுத்த சொல்லுங்க சார்.. இதுக்கு மேல அடிச்சா தாங்க மாட்டேன் சார்.. என்னை விட்டுருங்க.. இப்பயே காலம் முழுக்க இன்னொருத்தரை நம்பி தான் நான் பொழப்பே நடத்தணும்.. என்னால தனியா எதுவுமே பண்ண செய்ய முடியாது போல.. "
ஆம்.. அவன் கை கால்கள் இடுப்பு என அத்தனையும் செயல் இழந்து போய் இருந்தது.. அதில் பூரண திருப்தியோடு அவனை பார்த்து
"ம்ம்.. எனக்கு பயங்கர ஹேப்பி.. எனக்கு இது போதும்.. ஆனா வெளியில ஒருத்தர் இருக்கிறார்.. அவர் உன்னோட பேசணுமாம்.. என்னன்னு கேளு.." என்று சொல்லி தன் கைபேசியை அவனிடம் கொடுக்க கையை தூக்க கூட முடியாமல் கையை தூக்க முயல வலி உயிர் போனது
"த்சு..த்சு.. கைய தூக்க முடியலையா? பரவால்ல.. ஸ்ட்ரெய்ன் பண்ணாத.. நானே உனக்கு ஃபோனை கொடுக்கிறேன்.." என்று சொல்லி அவன் கையில் அந்த கைபேசியை வைத்தவன் இடவலமாக தலையை ஆட்டி.. "ஐயோ மறந்துட்டேன்.. உன்னால ஃபோனை எடுத்து காதுல கூட வைக்க முடியாது இல்ல..? கை தான் உடைஞ்சு போயிருக்கே.. கொஞ்சம் இரு.." என்றவன் கைபேசியை அவன் காதருகே வைக்க அதில் பேசிய குரலைக் கேட்டு உயிர் நாடி வரை நடுங்கினான் ஆதிகேசவன்.
ஜெகநாதன் கைபேசி வழியே கர்ஜித்தான்..
நீர் உறையும்..

Author: STN - 72
Article Title: 29. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.