செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
pre final episode.
அத்தியாயம் 30.
நிலவனின் உயிரற்றச் சரீரத்திலேயே நிலை குத்தி நின்றது செந்தமிழின் நயனங்கள்..
அவளைச் சுற்றி என்னென்னவோ நடந்தது. அவளிடம் எதையெதையோ சொன்னார்கள் பிறர். எனினும் அசையவில்லை அவள். நிலவன் கடைசியாக
உச்சரித்த செந்துவே பெண்ணவளின் மனதில் எதிரொளித்துக் கொண்டிருந்தது.
எந்த ஒரு பெயரைப் பெண்ணவள் மந்திரம்போல வாய் ஓயாமல்
சொல்லிக் கொண்டிருந்தாளோ அந்தப் பெயர் தன்னுயிர்ப் பறவையைத் தொலைத்திருந்தது.
நிலவனை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவந்தது தொடங்கி, அவனது உடல் செந்நிலா முற்றத்துப் பூந்தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது வரை.
அனைத்தும் செந்தமிழின் அறிவுக்குப் புலப்பட்டதே தவிர எதுவுமே அவள் மனதைச் சென்றடையவில்லை.
மூளை கடத்திவிடும் செய்திகளைப் பெண்ணவளின் மணமானது ஏற்றுக் கொள்ள மறுத்தது.. தன் கையிலிருந்தக் கைப்பிடி மண்ணை நடுக்கத்துடன் நிலவனின் உடல்மீது தூவியவள்,
அங்கேயே தோய்ந்து அமர்ந்தாள்..
பயத்துடன் செந்தமிழைச் சூழ்ந்துகொண்டப் பெண்களிடம்
கீற்றுப்புன்னகையை வீசியவள்
யார் எத்தனைச் சொல்லியும் அங்கிருந்து அசையமறுத்தாள்.
"நான் கொஞ்சம் தனியா இருக்க ஆசைப்படுறேன்.
எல்லாரும் என்னப் புரிஞ்சுக்கோங்க."
என்றாள் தீனமான குரலில்.
ஏற்கனவே மகனது இறப்பில் உடைந்துபோயிருந்த அய்யாதுரை மருமகளின் நிலையைக் கண்டு நொறுங்கிப் போனார். இன்னும் எத்தனைத் துன்பத்தைத்தான் தங்களுக்கு இந்த வாழ்க்கை பரிசாக வழங்கக் காத்திருக்கிறது? இப்படித் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வதைப்பதற்குப் பதில்
தங்களை ஒரேடியாகக் கொன்றுவிட்டால் கூட பரவாயில்லை என்றுதான் தோன்றியது
அக்குடும்பத்தினருக்கு.
"சரிமா உனக்கு நாங்க யாரும் தொந்தரவு தரமாட்டோம்.
ஆனா ரொம்பநேரத்துக்கு இப்படியே உட்கார்ந்திருக்காம சீக்கிரம் உள்ள வந்துடு சரியா?"
என்ற அய்யாதுரை, அவளது தலையை வருடிவிட்டு மற்றவர்களுடன் வீட்டிற்குள் சென்றார். இந்தப் பெண்களாவது
தங்களது குமுறல்களெல்லாம்
கண்ணீரின் வழியாகக்
கறைத்துத் தீர்க்கவேண்டும் என்று
முயல்கிறார்கள்.
ஆண் என்பவன்மட்டும்
உயிர்ப் போகும் நிலையிலும்
திடமாகநின்று அனைத்தையும் தாங்கிப் பிடிக்கவேண்டும்
சூழலுக்கேற்ப அனைத்தையும் பக்குவமாகக் கையாளவும் வேண்டும். என்ற சமூகத்தின் ஆண்களின்மீதான ஓறவஞ்சனையை எண்ணி நொந்தவாறு,
இச்சமூகத்தின் சராசரி ஆணாகத்
தனது அத்தனை மன கிளேசங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டுக் குடும்பத்தினரைக் கவனிக்கத் துவங்கினார்.
"இனி எங்கிட்டத் திரும்ப வரவேமாட்டிங்களா நிலவன்? "
என விரத்தியுடன் அறற்றிய செந்தமிழ், காற்றுவெளியில் தன்னவனின் ஸ்பரிசத்தைத் தொழாத தொடங்கினாள்.
இத்தனை நிகழ்ந்தும்
பெண்ணவளின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.
அவளது துக்கங்கள் அனைத்தும்
அவளது நெஞ்சத்தில் உறைந்து
பாறையாகிப் போயிற்று.
பெண்ணவளின் இதயக்கிடங்கினைப் போலவே
பெரும் ஆர்ப்பரிப்போடு மழைக் கொட்டத் துவங்கியது.
மழைநீரில் தொப்பலாக நனைந்தும் கூட செந்தமிழ்
அங்கேயே அமர்ந்திருந்தாள்.
அந்த மழையேனும் தனது மனதைக்
கொஞ்சமாவது தணித்துவிடாதா என்ற நப்பாசையில்.
குடையுடன் வந்த தெய்வானை ஆச்சிதான் செந்தமிழை உருட்டி மிரட்டிச் செந்நிலா முற்றத்திற்குள் அழைத்துச் சென்றார். அறைக்குவந்த செந்தமிழ்
தன்னைச் சீர்படுத்திக்கொள்ளக் கூடத் தோன்றாமல் அப்படியே அறையை வெறித்துக் கொண்டுநின்றாள். அவன் இல்லாத அறை
அவளைப் பார்த்துச் சிரித்தது.
தன் உடலே தனக்குப் பெருஞ்சுமையாகத் தோன்ற,
கட்டிலில் சறிந்தாள் செந்தமிழ்.
கணவனின் பாசத்தைத் தனக்குள் நிறப்பியிருந்த அந்தப் படுக்கை,
பெண்ணைப் போராட்டக் கடலில் தள்ளியது. உயிர் வேண்டு
தன்னைச் சமன்படுத்திக் கொள்ளும் வழியறியாமல் அள்ளாடினாள் பெண்.
அன்றைய நள்ளிரவு வேலையிலேயே செந்தமிழுக்கு இடுப்பு வலி வர, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். கணவனும் மனைவியும் எதிர்பார்த்ததைப் போலவே ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்
முத்தான இரண்டு குழந்தைகளை
ஈன்றெடுத்தாள் செந்தமிழ்.
பர்வதம் பாட்டி மற்றும் தெய்வானை ஆச்சியின் உதவியுடன் குழந்தைகளைத் தூக்கினாள் செந்தமிழ்.
அவளது மனமோ பெரும் பரிதவிப்புடன் கணவனின் நினைவுகளையே சுற்றிவந்தது.
"நம்மக் குழந்தைகளப் பாக்குறீங்களா நிலவன்?
நம்மளோடக் குழந்தைகள நிச்சயம் நாம நல்லா வளக்கணும்.
என்ன உங்களோட சந்தோஷத்தத்தான் என்னால நேர்ல பார்க்க முடியாமப் போச்சு."
என்று தன்னைப் போல கணவனுடன் உரையாடத் துவங்கினாள் செந்தமிழ்.
என்னவோ நிலவனின் நினைவுகளை நெஞ்சுமுட்ட நிறப்பிக்கொண்டு, அவனுடன் இப்படி உரையாடுவதுகூட
செந்தமிழுக்குப் பிடித்திருந்தது.
அவளுக்கு எந்த வகையிலாவது நிலவன் அவளோடு இருக்கவேண்டும் அவ்வளவுதான்.
ஒருவழியாக
எல்லாவற்றிலிருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளத் துவங்கினால் பெண்.
அன்று மீராவின் உதவியுடன் குழந்தைகள் இருவருக்கும் பால் புகட்டித் தூங்கவைத்துவிட்டு
மனதால் கணவனுடன் உரையாடிக்கொண்டிருந்த செந்தமிழ், எதேச்சையாகத்
தனது கைபேசியை இயக்கிப்
புலனத்தைத் திறந்தாள்.
அப்போதுதான் நிலவன் இறப்பதற்கு முந்தைய நாளிலிருந்து,
அவனது மரணத்திற்குச் சிலமணி நேரங்களுக்கு முன்புவரையிலும்
அவனது குறுஞ்செய்திகள்
அவளுக்கு வந்திருந்ததைக்
கவனித்தாள் பெண்.
குரல் பதிவுகள் சிலவற்றுடன்,
கோப்புகள் இரண்டும் அவளுக்கு அவனால் பகிரப்பட்டிருந்தன.
அந்தக் குரல் பதிவுகளைக் கண்டமாத்திரத்தில் பரபரப்பானாள் செந்தமிழ். உணர்வுகளின் ஆதிக்கத்தால் பெண்ணிற்கு வியர்த்துக் கொட்டியது.
நடுங்கிய விரல்களை சிரமப்பட்டு நகர்த்தி நெஞ்சம் படபடக்கக் குரல் பதிவுகளை இயக்கினாள்.
"செந்துமா." வார்த்தைகளில் வடிக்கவியலா நேசத்தைத் தாங்கியிருந்தக் கணவனின் அழைப்பு,
செந்தமிழின் உயிரைத் தொட்டது.
தன்னை எப்போதும் கட்டிப் போடும் அந்தக் காந்தக் குரலில், அதில் ததும்பிவழிந்தக் கனவில்
நிலைகுலைந்துபோனாள் பெண்.
கிட்டத்த்தட்ட மூன்றுமாதங்களுக்குப் பிறகு செந்தமிழின் செவியைத் தீண்டிய நிலவனின் குரல், அவளை வசமிழக்கச் செய்தது.
சட்டென அந்தக் குரல் பதிவினை
இடைநிறுத்தம் செய்துவிட்டுத்,
தனது நெஞ்சை நீவிக் கொடுத்தாள் பெண்.
அப்போது பெண்ணவளின் விரல்களை முத்தமிட்ட
அந்தப் பொன் சங்கிலியும்
தன்னவனைத்தான் நினைவுபடுத்தியது. பிறைநிலாவிற்குள் வாழ்ந்தமாக அடங்கிக் கிடந்த
செந்து, தன்னவனின் கைகளுக்குள் புதைந்துகிடந்த நாட்களைப் பெண்ணவளின் அகத்திறைக்குக் கொண்டுவந்தது.
"நிலவன்;" என்று கணவனின் பெயரை உச்சரித்த செந்தமிழின் குரல், பெரும் பரிதவிப்புடன் வெளிவந்தது. ஒருகணம் கண்களை இறுக மூடித் திறந்தவள், மீண்டும் அந்தக் குரல் பதிவினை இயக்கினாள்.
"செந்துமா எப்படி இருக்கடா?
நம்மக் குழந்தைங்க எப்படி இருக்காங்க? ரெண்டுபேரும் சேர்ந்து உன்னத் தொந்தரவு பண்றாங்களா இல்ல சமத்தா இருக்காங்களா?
நீ இப்போ எந்தமாதிரியான மனநிலையில இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா.
நான் எதுக்காக வந்தனோ,
அந்த விஷயங்களெல்லாம் சீக்கிரத்தில் நடந்திடும்.
எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுட்டுக் கூடிய சீக்கிரத்துல
இந்த நிலவன் அவனோட செந்துவப் பாக்க வந்துடுவான். நீ நம்மளோடக் குழந்தைகளப் பெத்தெடுக்கும்போது நிச்சயம் நான் உன்கூட இருப்பேன்.
என்னன்னே தெரியல செந்து மனசுக்கு ஏதோ ஒரு மாதிரியிருக்கு. என்ன மாதிரின்னும் சரியா எனக்குச் சொல்லத் தெரியல.
அதான் இங்க நடந்த விஷயங்களப் பத்தி
உங்கிட்டச் சொல்லனும்னு தோணுது." என்றவன் நிகழ்ந்த அனைத்தையும்
செந்தமிழிடம் விரிவாகக் கூறினான்.
"நிலவனின் குரல் பதிவுகளைக் கேட்கக் கேட்க, செந்தமிழுக்குள் பற்றி எரியத் துவங்கியிருந்த
வேட்கையொன்று
அவளது என்ன ஓட்டங்களை வேறு பாதைக்கு வழிநடத்திச் சென்றது.
"நிலவனுடைய குரல் பதிவுகள வச்சுத்தான்
சமூகத்துல நடக்குற அத்தன அவலங்களுக்குப் பின்னால
ஒரு சதிகாரக் கூட்டமே இயங்கிக்கொண்டிருக்குனு எனக்குத் தெரியவந்துச்சு.
நிலவன் அனுப்பி வச்சிருந்தக் கோப்புகளையும் காணொளிகளையும் கூட
மதுராவும் நானும் ஆறாஞ்சு பாத்தோம். இவங்களோடக் கீழ்த்தனமான செயல்கள் எங்களோடத் தூக்கத்தப் பறிச்சுச்சு. எல்லாத்தையும் ஒன்னு சேர்த்துப் பார்க்கும்போது
நிலவனுக்கு நடந்த விபத்து ஏன் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா
இருக்கக்கூடாதுங்குற கேள்வி
எனக்குள்ள வந்ததும்
என்னாலத் தாங்கிக்கவே முடியல.
நான் நினைக்கிற மாதிரி எதுவும்
நடந்துருக்கக் கூடாதுன்னு
தமிழன்னைக்கிட்ட வேண்டுனன்.
ஆனா இந்த மனுஷங்கங்குற வார்த்தைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாத அந்த அறக்கக் கூட்டம்தான் என்னோட நிலவனத் திட்டமிட்டுக் கொல செஞ்சுச்சுன்னு
தெரியவந்தபோது நான் கையில எடுத்த முடிவுதான் இது.
அங்கயிருந்துதான் கொள்கை சார்ந்த என்னோடப் பயணம் ஆரம்பமாச்சு.
மதுராவும் என்கூட இணைஞ்சா.
இளவஞ்சியும் இந்தக் குழுவுல சேந்தாங்க. எங்களோடப் பெண்கள் மறுவாழ்வு மையத்துல இருந்தப் பெண்கள் சிலரும்
இந்த எழுச்சிமிகுந்த பயணத்துல கலந்துக்க முன்வந்தாங்க.
அந்தச் சமயந்தான் பிறைசூடன் அண்ணாவையும் நான் பாத்தேன். நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து
ஓட்டைகள் நெரஞ்ச சட்டத்துக்கு முன்னாடிப் போய் கண்ணக் கசக்கிக்கிட்டு நிக்காம எங்களுக்கு என்ன தேவையோ அத நிறைவேத்திக்கத் தொடங்கினோம்.
தடயங்களே இல்லாமக்
குற்றங்கள நிகழ்த்த அவங்களுக்குத் தெரியும்போது
அந்தக் குற்றச் செயல்கள விவேகத்தோடக் கருவறுக்க எங்களுக்குத் தெரியாதா?
ரொம்ப ரொம்ப நிதானமாச் செய்யவேண்டிய எல்லாத்தையும்
நேர்த்தியாத் திட்டமிட்டுச் செயல்படுத்தத் துவங்கினோம்.
அடிக்கடி நேருல சந்திச்சு
எதிராளியோட கவனத்த ஈர்க்க நாங்க விரும்பல.
அதனால புலனக் குழு வாயிலாகவோ கூட்டுக் காணொளி அழைப்பின் வாயிலாகவோ
தகவல்களச் சுருக்கமாப் பகிர்ந்துகொள்றோம். அந்த வரிகளோட பொருள
அவ்வளவு லேசுல யாராலையும் கண்டுபிடிக்க முடியாதபடி
அமைச்சுக்கிட்டோம்.
மதுராதான் மார்த்தாண்டத்தோட அலுவலகத்த ஆறாயத் துப்புத் துளக்கி,
நிலவனோட கொல விஷயத்தக் கண்டுபிடிச்சா.
எனக்குள்ள நிறைஞ்சிருந்த
அந்தத் தனி அத வைக்கத் தடயமே இல்லாம
கனக்கச்சிதமா இத்தனக் கொலைகளயும் செய்யவெச்சது.
எத்தனையோ அப்பாவி உயிர்களக் கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாம
அவங்களோட பணத்தாசைக்கு இறையாக்குன
இந்தப் பணப் பெயிங்களுக்கு
சாவோடக் கோறமுகத்தக் காட்டியேத் தீரனும்ங்கற ஆச வந்துச்சு எனக்கு. கொஞ்சமாவது நாங்க அனுபவெச்ச வலிகளுக்கு நியாயம் கிடைக்கவேணாமா?
அந்த நியாயத்த இந்தச் சட்டம் எங்களுக்குச் செய்யுங்குற
நம்பிக்கலாம்
எப்பவோ இத்துப் போச்சு.
ஒருவேள எங்களோடப் பிரச்சனைகளத்
தீத்துவெக்கச்சொல்லி நாங்க இந்தச் சட்டத்த நாடிவந்தா,
இந்தச் சட்டத்தால பெருசா எங்களுக்கு என்ன பண்ணிட முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனாத் தப்பு செஞ்சவனுக்கு ஒரு பத்துவருஷம் சிறை தண்டனைத் தருவீங்க.
அவனும் சிறையில இருக்குறப் பொறுப்பாளர்கள் கிட்ட ஒரு கத்தப் பணத்தக் கொடுத்துட்டு சொகுசாப் போய் அங்க ஒக்காந்துருப்பான்.
அதேமாதிரி இன்னும் ரெண்டு கத்தப் பனத்த ஒரு வக்கீல் கிட்ட விசிறிப் போட்டா
ஊர் உலகத்துல இருக்குற அத்தனத் தில்லுமுல்லுத் தனத்தையும் பண்ணி அவனுக்கு விடுதலைய வாங்கிக் கொடுத்திடுவாரு.
இதுதான காலங்காலமா நடக்குது? அதவிட
இந்தச் சட்டத்தத் தாங்கிப் பிடிக்கவேண்டிய முக்கியப் பொறுப்ப வகிக்கிறவங்களேக்
குற்றவாளிகளாத் திகழ்றப்ப அந்தச் சட்டத்துக்கு என்ன மதிப்பு? அப்பறம் நான் இந்தச் சட்டத்தவேற மதிக்கணும்னு நீங்க எப்படி எதிர்பார்க்குறீங்க?
ஒரு பொண்ணுமேல தப்பான நோக்கத்துக்காக ஒருத்தரோட
வெரல்நுனிப் பட்டாக் கூட
அந்த வெரல வெட்டிப் போடணும்.
இனி ஒருமுற பொம்பளப் புள்ளைங்க மேல கைய வைக்கிறது பத்தி
நெனச்சுப் பாக்கக் கூட அவன் பயந்து நடுங்கணும்.
பெண்களச் சதப் பிண்டமாப் பாக்குற ஒவ்வொரு ஓநாய்களையும்
வீதியில நிறுத்திச் சுட்டுக் கொல்லனும் .
தப்புப் பண்ணிட்டு
காசு இருக்குற மமதையில
தைரியமாச் சமூகத்துல நடமாடுற
ஈனப்பிறவிகளோடத் தலைய
பாதிக்கப்பட்டக் குடும்பமே வெட்டி வீசணும். பிஞ்சு குழந்தன்னுகூட பாக்காம அதுகிட்டப் போயி
தன்னோட இச்சையத் தீர்த்து
அந்தச் சிசுவத் துடிக்கத் துடிக்கச் சாகடிக்கிற வக்கிறக்குணம் பிடிச்ச
ஜென்மங்களோட
உயிர்நாடிய அறுத்தெறியனும்.
அப்பதான் தண்டனைகளுக்குப் பயந்தாவது அவன் வாலச் சுருட்டிக்கிட்டு ஒக்கார்ந்திருப்பான்.
இதையெல்லாம் உங்களோட மகத்துவமான சட்டம் எப்பச் செய்யப் போகுது?
குற்றங்களுக்குத் தண்டனைகள்
கடுமையாக்கப்படும் வரையில
இந்தமாதிரியான குற்றங்களும் ஓயப்போறதில்ல.
சாமானிய மக்களுக்கு நியாயமும் கிடைக்கப்போறதில்ல.
இது இப்படியே தொடர்ந்துகிட்டிருந்தா என்னமாதிரி பல சொந்தங்கள இந்தச் சட்டம் சந்திக்கவேண்டியிருக்கும்.
அத யாராலையுமே தடுக்கமுடியாது. "
விழிகளில் கனல் பறக்கக்
கூறிய செந்தமிழின்
கம்பீரக் குரல் அந்த அறையின் நாலாப் பக்கமும் எதிரொலித்தது.

Author: நிதனிபிரபு
Article Title: செந்தமிழ் - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.