• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 2

Vishakini

Moderator
Staff member

சென்னை
இரவு 11:30 மணி மகிழினி பேலஸ் அனைத்து அறையிலும் இருள் சூழ்ந்து இருக்க இவள் அறையில் மட்டும் விளக்குகள் அணைக்கப்படவில்லை
எத்தனை முறை அந்த கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தால் என்று அவளுக்கே தெரியாது இதுதான் அவன் இவளுக்கு எழுதிய கடைசி கடிதம் அதன் பின் ஆறு மாதங்கள் கடந்து விட்டன.
எந்த ஒரு கடிதமும் வரவில்லை இரண்டு ஆண்டுகளாக ...இரண்டு வாரத்திற்கு ஒரு கடிதம் என்று தவறாமல் எழுதி விடுவான் ,எத்தனை வேலை இருந்தாலும் ஒரு பக்கமேனும் எழுதி அனுப்பி விடுவான் கடிதத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் போது கிடைக்கும் சுகமே அலாதி என்பான் .

இந்த ஆறு மாதங்களாக அவனுக்கு இவள் எழுதும் கடிதங்கள் அனைத்துமே திரும்பி வந்தன ஏன்? முகவரி மாறிவிட்டானா? என்னிடம் சொல்லாமலா? என்று பலவாறு தன்னிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டே நிலவை வெறித்தபடி நின்றவளின்
கண்களில் நீர் நிரம்பி இருந்தது.

எத்தனை மணி நேரம் கடந்ததோ தெரியவில்லை அவள் கைப்பேசி வெளிச்சத்தில் தான் அவள் கவனம் களைந்தது மெல்ல புன்னகையுடன் கைபேசியை எடுத்து "சொல்லு" என்றாள்.

மகிழினி நீ அழுது கொண்டிருக்கிறாயா? என்றா அவளின் உயிர்த்தோழி அட்சயா எல்கேஜி முதல் இன்று வரை தொடரும் நட்பு மகிழினியின் ஒவ்வொரு பார்வைக்கும் பொருள் இவளுக்கு மட்டுமே தெரியும்

"நீ அழுதா எல்லாம் மாறிவிடுமா சொல்லு நானும் சேர்ந்து உன்னுடன் அழுகிறேன்." என்ற தோழியின் பேச்சில் உள்ள கோபம், மகிழினியை மௌனம் கொள்ள வைத்தது

"நம்மால் முடிந்த அளவு விசாரித்து விட்டோம் பலன் தான் இல்லை ,அவன் வீட்டுக்கு சென்றால் வீட்டில் யாரும் இல்லை, யாரோ அவர்களை கூட்டிட்டு போயிட்டாங்கன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க ,
நாளைக்கு அவன் வேலை பார்த்த எம் எம் மருத்துவமனை போய் ஏதாவது விஷயம் தெரிகிறதா பார்ப்போம்" என்றால் அட்சயா
ம்.ம்...என்ற பதில் மட்டுமே வந்தது மகிழினி இடம்
சரி சரி போய் தூங்கு அண்ணாக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க குட் நைட் நாளை காலை வீட்டுக்கு வரேன் ரெடியா இரு என்றாள் அட்சயா
விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தது தான் தெரியும் எப்பொழுது தூங்கினால் என்று அவளுக்கே தெரியாது

காலை 8 மணி மகிழினி பேலஸ் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வாட்ச்மேனுக்கு புன்னகைடன் ஒரு குட் மார்னிங் ஹவ் எ நைஸ் டே என்றபடி பேலஸ்குள் நுழைந்தால் அட்சயா

நேராக கிச்சன் சென்றவள் சச்சிமா வாசம் வாசல் வரைவருது மட்டனா என்றபடி பாத்திரத்தை திறந்து பார்க்க ஆரம்பித்தார் இடியாப்பம் மட்டன் பாயா என் ஐட்டம் என்றபடி சரஸ்வதியின் தோளில் சாய்ந்து கொண்டே மகிழினி எங்க சச்சுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே வாலு வந்தாச்சா மட்டன் வாசத்துக்கு மூக்கு வியர்த்து விடுமே என்றபடி தன் சட்டையின் கையை மடித்து விட்டபடி படியில் இறங்கி வந்து கொண்டிருந்தான் விஜய வர்மன்

"அண்ணா நான் சாப்பிட ஒன்னும் வரல என் பிரண்ட பாக்க தான் வந்தேன்" என்றவளை பார்த்து சிர்த்தபடி டைனிங் டேபிளில் வந்து சேரில் அமர்ந்தபடியே "சச்சுமா சாப்பாடு ரெடியா நான் கொஞ்சம் ஆபீஸ் வர போகணும்" என்றான்

அட்சயாவைபார்த்து"ஏ வாலு உன் வீட்டுக்கு உன்னை வராதேனு சொல்ல முடியுமா ? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஏதாவது பிளான் வச்சிருப்பீங்களே?

என்ன பிளான்? "என்றபடி ஒரு தட்டில் இரண்டு இடியாப்பம் மட்டன் பாயாவை ஊற்றி சூடா சாப்பிடு என்று அவளிடம் கொடுத்தான் விஜய்

தட்டை கைகளில் வாங்கியபடியே மேலே உள்ள மகிழினியின் அறையைபார்த்தாள் அட்சயா
அதனை கவனித்த விஜய் அவளை எழுப்பி விட்டுட்டு தான் வந்தேன் சாப்பிடு வந்து விடுவாள் என்றபடி தனக்கும் தட்டில் இடியாப்பத்தை எடுத்துக்கொண்டு சேரில அமர்ந்தான்

மெல்லிய கொலுசு சத்தம் அவள் தங்கை வரவை சொல்ல இன்னும் இரண்டு இடியாப்பத்தையும் எடுத்துக் கொண்டு அவளை நோக்கி திரும்பினான் வந்தவள் அண்ணனிடம் "குட் மார்னிங் அண்ணா கொஞ்சம் லேட்" என்றபடி அவன் அருகில் இருந்த சேரில அமர்ந்து அவன் கையில் இருந்த முதல் இடியாப்பதுண்டை தன் வாயில் வாங்கிக் கொண்டால் மகிழினி எனக்கு என்றபடி அட்சயா போட்டி போட்டு சாப்பிட ஆரம்பித்தாள் இவன் ஊட்டுவதும் புதிதல்ல இவர்கள் சண்டையிடுவதும் புதிதல்ல

சச்சிமா இவர்களின் சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்

அண்ணா மகிழினிய வெளிய கூட்டிட்டு போறேன் ரெண்டு மணி நேரத்துல வந்து விடுவேன் என்று சொல்ல சச்சிமா மதியம் சாப்பிட வந்து விடுவாள் என்று உங்களுக்குத்தான் சொல்கிறாள் என்று அவளை நக்கல் செய்ய சிரித்தபடியே எம் எம் மருத்துவமனை நோக்கி சென்றனர் இருவரும்.

அங்கே அந்த மருத்துவமனை தரைமட்டமாக இருப்பதை அறியாமல்.











 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom