• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 3

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு
அத்தியாயம் 3

ஜெர்மனி

அதிகாலை 5 . 30 மணி சேரமான் நடைபயிற்சிக்கு தயாராகி வர , அவரை எதிர்பார்த்து காத்து நின்றான் ஆதித்ய நெடுமாறன் அவனை கண்டதும் சேரன் " இரவு லேட்டாக தான் வந்தாய்... கொஞ்சம் ஓய்வு எடுக்கக் கூடாதா? இன்று சண்டே தானே" என்றார்

தாத்தா "பழகிப்போச்சு என்ன செய்ய?" என்ற படி இருவரும் தோட்டத்தின் புல் வெளியில் நடக்கத் துவங்கினர் ,"உன்கிட்ட கொஞ்சம் பேசணும், ஃப்ரீயா இருக்கியா? எங்கயாவது போக வேண்டியது இருக்கா? என்றார் சேரன் தாத்தா.

நடந்து கொண்டிருந்த மாறன் சில நொடிகள் தடுமாறி நின்று, பின் தன் நடையை தொடர்ந்தான், அவனுக்கு தெரியும் தாத்தா எதை பற்றி பேச போகிறார் என்று ஆனாலும் என்ன செய்ய முடியும்? சில முடிவுகளை துணிந்து எடுத்தாயிற்று கூடுமானவரை யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கடந்து செல்ல தானே நினைக்கின்றான் சரி... தாத்தா இன்று காலை 10 மணி அளவில் ஹெட் ஆபீஸ் போவோம். அங்கு போய் பேசலாம் என்றவன் தாத்தாவின் கையை மெல்ல பற்றினான் அவர் முகத்தை நேராக பாராத்தான் பின் உங்கள் வளர்ப்பு ... என்றான்

தாத்தாவின் முகம் யோசனையாக சுருங்கியது ...மாறா மருத்துவத்துறை என்பது கரணம் தப்பினால் மரணம் என்பது போல அதனால் தான் செழியனுக்கு இது சரி வருமா என்று யோசித்தேன், அவன் எதிலும் வியாபார நோக்கத்துடன் செயல்படுவான் , அவன் உன்னைப் போல பொறுமைசாலி இல்லை, எதிலும் தராதரம் பார்ப்பவன் நட்பு கூட ஸ்டேட்டஸ் அளவு சமமாகதான் இருக்க வேண்டும் என்பான் அதனால் தான் யோசிக்கிறேன் என்ற அருகில் இருந்த கல்பெஞ்சில் அமர்ந்தார்.

அரசி. பத்மினி இருவரும் கையில் சத்துமாவு கஞ்சியுடன் வந்தனர் சேரன் கையில் அரிசி கஞ்சியை கொடுத்தார்.

மாறன் பத்மினியை பிடித்து கல்பெஞ்சில் அமர வைத்து என் மீது கோபமா..
மா சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது அம்மா என்றான் மாறன். "ஜெனிபர் தான் அதிக கோபப்படுவாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் என்னை புரிந்து கொண்டாள்"என்றவன் தாயின் அருகே அமர்ந்தான், அவன் திருமணம் ஏற்பாடு எல்லாம் தள்ளி வைத்து இதுவரை நாம் யாரும் செல்லாத நாட்டிற்கு அவனை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றால்... காரணம் இல்லாமல் இருக்குமா?.

அரசி என்ன சொல்ல தெரியல இந்த முறை அவன் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பின்னால அவனிடம் ஏகப்பட்ட மாற்றம் ,சிரித்து பேசுகிறான், பிள்ளைகளோடு விளையாடுகிறான் என்றாள்

ஒரு பெரிய பெருமூச்சை விட்டபடி ...குளியலறை நோக்கி செல்கிறான் மாறன்

டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது.. ஜெனிபர் மாறா.. இன்று நான் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அம்மா வீடு வரை சென்று வருகிறேன் ...சோபி தான் என்னை வரச்சொன்னாள் போய் வரட்டுமா ? என்று கேள்வியை மாறனிடம் தொடங்கி பாட்டி அரசியிடம் முடித்தாள்.

அரசி ஜெனி... உனக்கு சோபி எவ்வளவு முக்கியமோ அதேபோல மாறனுக்கு செழியன் முக்கியம் ...இருவருக்கும் திருமணம் முடிக்க முதலில் ஆசைப்பட்டவன் மாறன் தான் அவனுக்கு பிரியா எப்படியோ அது போலதான் சோபியும் .. அவனே அவர்களின் கல்யாணத்தை தள்ளி வைத்திருக்கிறான் என்றால் ஏதோ ஒரு பெரிய காரணம் கண்டிப்பாக இருக்கும். அதனை உன் அம்மாவிடம் பேசி புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு ...சோபியை எம்எஸ் படிக்கச் சொல்லு இரண்டு மூன்று மாதங்கள் கடக்கட்டும், பின் என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம் என்றபடி .தன் அறைக்கு நடந்து சென்றாள் அரசி.

பிள்ளைகளை கூட்டிக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு புறப்பட்டாள் ஜெனி, நான் உன்னை உங்க அம்மா வீட்டில் விட்டு விட்டு ஆபீஸ் செல்கிறேன் என்றபடி தன் கோட்டை சரி செய்தபடி நடந்து வந்தான் மாறன் ஆத்விக் ,ஆதிரன் ரெடியா? சீக்கிரம் என்றான் மாறன்,

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது மாறானினின் தோளில் மெல்ல சாய்ந்து, உன்னை நம்புகிறேன் மாறா ..யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு .. எதையும் யோசித்து முடிவு செய் என்றாள்ஜெனி அவனும் மெல்ல சிரித்துக் கொண்டே முயற்சிக்கிறேன் என்றபடி அவளை வீட்டு வாசலில் இறக்கி வட்டு கிளம்பினான்.

அங்கு ஜெனியின் அம்மாஎஸ்தர் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் முகம் ஏதோ யோசனையில் இருந்தது உள்ளே வந்த ஜெனியை பார்த்து வா..மா.. மாப்பிள்ளை எங்கே என்று வாசலை எட்டி பார்தார்...பின் ஜெனியிடம் எனக்கு என்னவோ இந்த திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையே இல்லை மாப்பிள்ளை எதாவது சொன்னாரா?என்று கேட்டபடி, தன் பேரக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றார் பிள்ளைகளின் ,சத்தம் கேட்டதும் ஓடி வந்த சோபி அக்கா ...வா ...வா என்று தன் அக்காஜெனியை நோக்கி ஓடி வந்து தன் அறைக்கு அழைத்துச் சென்று கதவை வேகமாக அடைத்தாள் சோபி
.
 

Gowri Karthikeyan

Active member
மாறன் - ஜெனி...லவ் மேரேஜ் ஆ?????
ஜெனி தங்கச்சி சோபியை செழியனுக்கு கட்டணுமா?????
ஆன மாறன் தள்ளி வெச்சி இருக்கான்.....
ஏன்????
இவங்க இன்ன வரை இந்தியா வந்ததே இல்ல.....
இப்ப செழியன் போயிட்டு வந்த வெளிநாடு எது?????
அவன் மாற்றம் மகிழினியால் வந்ததா????
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom