நின் மத்தம் : 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
அவன் கணிதத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவனை கேஸ் பழுப்பைக் கொண்டு அடி வெளுத்து எடுக்கும் போது அவன் மயங்கி விட்டான்.

தன் மகனை அந்த நிலையில் கண்டதும் சுசிலா அவர் காலில் விழுந்து எப்படியோ காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள், " உடம்பு முழுக்க அங்கங்க காயமாக இருக்கு, டொமஸ்டிக் வயலன்ஸ் பண்ண மாதிரி இருக்கு " என்று கேட்டார்.

சுசிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவர் சாதராணமாக, "ஆமா மார்க் கம்மியா எடுத்துட்டான் அதனால கொஞ்சம் கோவத்தில் அடிச்சிட்டேன்" என்றார்.

" உங்களுக்கு அறிவு இருக்கா, இல்லையா அவன் உங்க பையன் தானே" என்று கோவமாக கேட்டார்.

"ஹலோ கொஞ்சம் பார்த்து பேசுங்க அவன் என் பையன் நான் என்ன வேண்டுனாலும் பண்ணவேன்" என்று திமிராக சொன்னார்.


"ஓ அப்படியா இருங்க முதல்ல உங்க மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் அவங்க வந்து மீதியை சொல்லுவாங்க " என்றார்.

"சொல்லுங்க உங்களுக்கு யாரு சாட்சி சொல்ல வருவாங்க" என்று கேட்டார்.

"ஏம்மா நீங்க சொல்லுவீங்க தானே உங்க பையன் அடிச்சது யாருன்னு " என்று மருத்துவர் சத்தமாக கேட்க,

அவர் அதற்கும் அமைதியாக இருந்தார்.

வரதன் அவரை கண்களால் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்.

மருத்துவர் சுசிலாவை பார்த்து, " உங்க பையனை காப்பாத்தணுமா வேணாமா " என்று கேட்கவும், " இவர் தான் அடிச்சிட்டாரு" என்று சுருதியே இல்லாமல் சொல்ல அந்த மருத்துவர்
உடனே காவல்துறைக்கு அழைக்க சென்றார்.

சுசிலா அவரிடம் சென்று கையெடுத்து கும்பிட்டு, "அவர் ஏதோ அவன் மார்க் கம்மியா எடுத்துட்டான் என்கிற கோவத்துல அடிச்சிட்டாரு எப்பவும் இது மாதிரி அடிச்சதே இல்ல இதுதான் முதல் முறையாக அடிச்சிட்டாரு அவரை மன்னிச்சு விட்டுடுங்க மேடம் போலீஸ்கெல்லாம் போக வேண்டாம் " என்று கெஞ்சவும் சுசிலாவிற்காக விட்டுவிட்டார்.

மருத்துவர் அவனை பார்க்கச் சென்றதும், "என்னடி எல்லார்கிட்டயும் நான்தான் அடிச்சேன்னு சொல்லறதையும் சொல்லிட்டு காப்பாத்துற மாதிரி சிம்பதியும் கிரியேட் பண்ணி நீ நல்லவன்னு சீன் போட பார்க்கிறாயா?

நீ என்ன பண்ணாலும் எப்பவும் நீ இதே மாதிரி தான் இருப்ப உன்னை ஏன் எனக்கு சுத்தமா புடிக்காதுடி நான் லவ் பண்ண பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இவ்வளவு பிரச்சனையே இல்ல உன்னை எதுக்கு எனக்கு கல்யாணம் பண்ணாங்க, அடலீஸ்ட் உன் தகுதிக்கு என்னை வேண்டாம்ன்னு சொல்லி இருக்கணும்,

அதனால நீ வாழ்க்கை முழுக்க அனுபவிச்சு தான் ஆகணும்னு எனக்கு எப்பவுமே பிடிக்காது உனனையும் உன் பையனையும் எனக்கு சுத்தமா புடிக்காது..

ஏதோ எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் சுகத்துக்கு தான் உன்னை இவ்ளோ நாள் யூஸ் பண்ணிட்டு இருந்தேன் இனிமே அதுவும் கிடையாது.

நீயே உன் பையனை எப்படியாச்சும் உருட்டி பிரட்டி, இப்போ ஒருத்தி கால்ல விழுந்தியே அது மாதிரி வேற எவன் கட்டிலில்லாவது விழுந்து உன் பையனை காப்பாத்திட்டு வா நான் பணமும் தர மாட்டேன் ஒன்னும் தர மாட்டேன்" என்று சொல்லி சென்று விட்டார்.

சுசிலாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இவர் யாரையோ ஒருவரை விரும்பி தன்னை வேண்டாம் என்று சொன்னதும் அவருக்கு தெரியாது.
தன் தந்தையை கை காட்டிய பையனை அவர் திருமணம் செய்து கொண்டார்.

அவ்வளவுதானே அவருக்கு தெரியும் இதுநாள் வரை அவருக்கு உண்மையான மனைவியாக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதை நினைத்து கண்களில் கண்ணீர் வந்தாலும் அதை இப்போது நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை தன்னுடைய மகனை காப்பாற்றியாக வேண்டி அந்த மருத்துவரிடம் சென்று, " இப்போ என் பையனுக்கு எப்படி இருக்கு " என்று கேட்டார்.

"அவன் இப்போ நல்லதா ம்மா இருக்கான் தூங்கிட்டு இருக்கான் நல்லா தூங்கி எழட்டும் அதுக்கப்புறம் போய் பாருங்க " என்றார்.

"ரொம்ப நன்றிங்க என் பையனை காப்பாத்துனதுக்கு ஹாஸ்பிடல் பில் எவ்வளவுன்னு சொல்லுங்க என்கிட்ட இப்ப காசு இல்லைங்க நான் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து விடுவேன் "என்றார்.

"ஏம்மா தடிமாடு மாறி உங்க வீட்டுக்காரர் இருந்தாரு அவரு எங்க ஒரு சின்ன பையனை இரக்கமே இல்லாம அடிக்க தெரியும் அவனை காப்பாத்துறதுக்கு மட்டும் காசு கொடுக்க தெரியாதா அந்த ஆளுக்கு" என்று கத்தினார்.

சுசிலா அதற்கும் அமைதியாகவே நிற்க, " உங்களை பார்த்தாலும் பாவமா இருக்கு" என்று தன் கையில் உள்ள பணத்தை கொடுத்து "முன்னாடி போய் பீஸ் கட்டிடுங்க ரெண்டு நாள் மட்டும் தங்கி இருக்கட்டும் அதுக்கு அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்றார்.

தன் மகனை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லி சென்று வரதனின் மீது கோபம் உண்டு ஆனால் அதை அந்த கோபத்தை அவரால் வெளி காட்ட முடியவில்லை தன் மகன் பணம் கட்ட முடியாமல் என்ன ஆவானோ என்று நினைத்திருந்த வேளையில் ஒரே ஒரு நொடியில் யார் என்று தெரியாத

இந்த மருத்துவர் பணம் கொடுக்கவும் அந்த நேரத்தில் அவருக்கு கடவுள் போலவே காட்சியளிக்க அவரை கையெடுத்து கும்பிட்டு, "ரொம்ப நன்றிங்க எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

"எனக்கு நன்றி எல்லாம் சொல்றதை விட்டுட்டு பையனை நல்லபடியா பார்த்துக்கோங்க போங்க" என்று அனுப்பி வைக்கவும் அவர் முன்னாடி வரவேற்புரைக்குச் சென்று பணத்தை கட்டி விட்டு அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்த வேளை ஒரு செவிலியர் வந்து, " உங்க பையன் கண்ணு முழிச்சிட்டான் போய் பாருங்க " என்று சொன்னதும்,

தன் மனக்குமுரல்கள் தன்னுடைய வேதனைகள், எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு 16 வயது இளம் குமரி போல் உள்ளே சென்று தன் மகனை பார்க்க அவன் மெல்ல கண்ணைத் திறந்து " அம்மா " என்று அழைத்தான்.

அதில் அவனை பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைந்து, "கண்ணா இப்ப எப்படி இருக்கு" என்று கேட்டு அவன் சிகையை கோதி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார்.

அவனும் அந்த அன்பை ஆழ்ந்து சுவாசித்து உள்வாங்கிக் கொண்டான்.

பின்னே வரதன் வராததால் கதவு வரை எட்டி பார்த்துவிட்டு, "எங்க அம்மா அந்த ஆளு " என்று கேட்டான்.

அவர் அடிக்க கையை ஓங்கிவிட்டு "அடி வாங்குவ ராஸ்கல் அப்பான்னு சொல்லு" என்றார்.

"அட போம்மா அடிவாங்கி அடி வாங்கி உடம்பெல்லாம் மறுத்து போச்சு இனிமே அடி வாங்குறதுக்கும் தெம்பு இல்லை இதுல அப்பான்னு வேற கூப்பிடனும்" என்று சலித்துக் கொண்டான்.

"மார்க் நல்லா எடுத்துட்டா அப்பா ஏன்டா அடிக்க போறாரு " என்று கேட்டார்.

"நல்லா படிக்க வந்தா படிச்சு மார்க் எடுக்க மாட்டேனா " என்று சலித்துக் கொண்டான்.

"சரி அம்மா உன்னை டியூஷன் சேர்த்து விடுறேன் படிக்கிறியா" என்று கேட்டார்.

"நான் படிக்கவே இல்ல போமா" என்றான்.

அவன் சொன்ன அந்த வார்த்தையில் அவன் வாயை மூடிவிட்டு, "படிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லக்கூடாது கண்ணா நாம எந்த படிப்பு படிக்கிறோம் என்பதெல்லாம் முக்கியம் இல்ல படிப்பு எதுக்கு படிக்கிறோம் அறிவு வளர்த்துக்க தானே, ஒரு துறையில் அறிவு வளர்த்துக்கலைனா இன்னொரு துறையில் அறிவு வளர்த்துக்க போறோம் இல்லையா?

ஒன்னு பண்ணு அப்பாக்காக இதை மட்டும் முடிச்சிட்டு வெளியே வந்து உன்னால முடிஞ்சா காலேஜ் படிக்கும் போது அதை சைட்ல படிச்சு கத்துக்கோ அவ்வளவுதானே அம்மா உனக்கு காசு தரேன் சரியா" என்றார்.

"எங்க இருந்து காசு தருவ நானே 12 முடிச்ச உடனே வேலை பாத்துட்டு தான் படிக்கப் போறேன்" என்றான்.

"ஐயோ உங்க அப்பா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார் டா " என்றார்.

அப்போது சுசிலாவின் எண்ணிற்கு அழைப்பு வர அதை எடுத்துப் பார்க்க அது செந்தூரனின் நண்பன் இளங்கோவிடமிருந்து வரவும் அவனிடம் போனை கொடுத்தார்.

அவன் மெதுவாக, "சொல்லு மச்சான்" என்று கேட்டான்.

"எங்கடா இருக்க " என்று கேட்டான்.

"அட அதை ஏன் மச்சான் கேக்குற மேக்ஸ்ல மார்க் கம்மியாயிடுச்சு இல்ல அதனால எங்க அப்பா கிட்ட அடி வாங்கி ஹாஸ்பிடல் இருக்கேன்" என்றார்.

"அச்சச்சோ என்னாச்சுடா எந்த ஹாஸ்பிடலும் சொல்லு நான் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லவும் "இல்லடா நேரம் அதிகமாயிடுச்சு உங்க அப்பா திட்ட போறாரு நீ நாளைக்கு வந்து பாரு" என்றான்.

" அட உனக்குனா எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு டா நான் வரேன்" என்று சொல்லிவிட்டு செந்தூரனை பார்க்க இளங்கோவன் வந்தான்.

அவன் வந்ததும் "வா பா இளங்கோ " என்றார்.

அவன், " இதோ வரேன் மா" என்று அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தான்.

"என்னப்பா ஹாஸ்பிடல்ல சுற்றி பார்க்க வந்திருக்கிறாயா?" என்று கேட்டதற்கு, " இல்லம்மா மினி பட்ஜெட் எம்டன் எங்க இருக்கிறார் என்று பார்த்தேன்" என்றான்.

அதைக் கேட்டதும் செந்தூன் சிரித்து விட்டான் ஆனால் சுசிலாவிற்கு தான் ஒன்றும் புரியாமல், "என்னப்பா யாரை கேட்கிறாய் "என்று கேட்டதற்கு அவன், " அப்பாவ தான்" என்று சொல்ல என்று மூவரும் சிரித்தனர்.
இனி சிரிக்கவே முடியாது என்று தெரியாமல் மகிழ்ச்சியாக சிரித்தனர்.

சுசிலா நன்றாக சிரித்து முடித்த பின் நினைவு வந்தவராக, "ஐயோ! அவரை தான் சொல்றியா? "என்று பொய்யாக இளங்கோவை அடித்தார்.

அவரிடம் அடியை வாங்கியவன் திரும்பி தன் நண்பனிடம், "ஏன்டா அடிச்சா திருப்பி அடிக்க தான் முடியாது அடிக்கிறதுல இருந்து எஸ்கேப் ஆகி ஓடலாம் இல்ல" என்றான்.

"நான் ஓடிடுவேன் டா ஆனால் அம்மா எங்க இருந்து ஓடுவாங்க நான் ஓடும்போது அம்மாவை புடிச்சு அடிப்பாரு இல்ல அதனாலதான் எங்கேயும் போவதில்லை நம்மளே அடி வாங்கிக்கிறது" என்றான்.

"அது என்னவோ சரி தாண்டா மச்சான்" என்று மூவரும் வெவ்வேறு விஷயங்களை குறித்து பேசிவிட்டு இரண்டு நாட்கள் இளங்கோவும் பள்ளிக்குச் செல்லாமல் அவனை பத்திரமாக அழைத்து வந்து வீட்டில் விடும்போது கண்ட காட்சியில் மூவரும் உறைந்து நின்றனர்.

அதே நேரம் சுசிலாவிற்கு ஒரு அழைப்பு வந்தது....
அப்படி என்ன ஆச்சு பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்...
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
என்ன ஆச்சி?????வேற யாரையும் கூட்டி வந்து வெச்சி இருக்கா அந்த டாக்?????
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.