கண்ணாமூச்சி 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
கண்ணாமூச்சி 6:

“மச்சான் ஏதும் பெருசா பிரச்சனையில்லயே?” முத்துவேல் கேட்டிட,

“இல்லைங்க மாப்பிள்ளை, பிரணியோட தங்கியிருந்த பொண்ணு சூசைட் பண்ணிருக்கு. ஏதோ கடன் தொல்லைன்னு. அந்த பொண்ணு இறந்ததை நம்ம பிரணிதான் மொதல்ல பாத்திருக்கு. அதான் விசாரணைக்கு கூட்டிட்டு போய்ருக்காங்க.

இப்பவும், விசாரணை எல்லாம் முடிச்சிட்டு, தேவைப்பட்டா கூப்பிடுவோம்னு சொல்லித்தான் அனுப்பியிருக்காங்க.”

“தீடிர்னு நைட்டு நீங்க கிளம்பி போனதும், மனசு கேக்கலை மச்சான். நாங்க அங்க வரவும் வேண்டாம் சொல்லிட்டீங்க. என்னமோ ஏதோன்னு பயந்துட்டு இருந்தோம். நம்ம பிரணிக்கு இதனால எந்த பிரச்சனையும் இல்லையே.” தங்கவேல் கேட்க,

“அந்த பொண்ணு லெட்டர் எழுதி வச்சிட்டு தான் தற்கொலை பண்ணிருக்கு. நம்ம பிரணிக்கு பிரச்சனை இல்லை, இருந்தாலும் இவ தான் முக்கியமான சாட்சி. கேஸ் முடியிற வரை நம்மளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.”

“பாவம் சின்னபிள்ளைன்னு வேற சொன்னீங்களேண்ணா, ஏன் இப்புடி முடிவு எடுக்குதுங்களோ? அவுங்க வீட்டுல என்ன பாடுபடுவாங்க. அப்புடி என்ன பிரச்சனை, கடன் தானே அதுக்காக உசுர விடனுமா என்ன?” விமலாவிற்கு மனம் ஆறாமல் புலம்பியது, அவரும் ஒரு பெண்பிள்ளையை வைத்திருக்கிறார் அல்லவா? சென்னையில் தங்கி படிக்கும் மகளை நினைத்து மனம் பதறியது இவருக்கு.

“என்னத்தை சொல்ல? இப்புடி அவசரமா முடிவெடுத்துட்டு போயிடுதுங்க” கவிதா பேச, அனைவரையும் பேசவிட்டு அமைதியாய் இருந்தார் பூர்வா.

“என்னாச்சு பூர்வா? அதான் பிரணிக்கு ஒண்ணும் இல்லையே. இன்னும் ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“அந்த போலீஸ் ஸ்டேஷன்ல பயத்துல என் பொண்ணு உசுரை பிடிச்சுட்டு உட்கார்ந்திருப்பாளே கவிதா அண்ணி. அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும். இதுல நேர்ல வேற பாத்திருக்கா, மனசுக்குள்ளயே துடிச்சிருப்பாளே.” என்றவரின் குரலில் பெண்ணை நினைத்து அத்தனை ஆதங்கம்.

“உண்மைத்தான் பூர்வா. எம்பொண்ணு நடுங்கிப் போய்தான் உட்காந்திருந்தா.” என்றவர் அவர் சென்றதும் முதல் அத்தனையும் கூற,

“என்ன அண்ணே சொல்றீங்க? நிஜமாவா? பிரணி உங்களை அப்பான்னு சொன்னாளா?” விமலா கேட்க, மற்ற அனைவரின் முகமும் அதனை தாங்கி நின்றது.

“ம்ம்ம் சொன்னா, அவளோட மணிப்பான்னு சொன்னா.” என்றவரின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

“ஆனா, அப்போதைக்கு அவ இருந்த நிலைமைல அவளையும் மீறி சொல்லியிருப்பா போலா.” என வருந்திய,

“சரி விடுங்க, சீக்கிரம் சரியாகிடும். கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க. ராகவனை வேற இன்னும் காணோம்?” பூர்வாவின் பார்வை நொடிக்கொரு முறை மாடியை தொட்டு மீண்டது.

“போய் ரெஸ்ட் எடுங்கண்ணா.” தங்கைகளும் வற்புறுத்த, மறுக்காது சென்றார். பிள்ளைகளும் தூங்குவதாக சென்றுவிட, கவிதாவும், விமலாவும் பிறகு வருவதாக கூறி அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தனர்.

ராகவனின் அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை, கண்டவனின் மனம் கனிந்துப் போயிற்று.

வெகு நேரம் அவனால் அமர முடியாமல் போக, அவளிற்கு சற்று தள்ளி அவனும் படுத்து விட்டிருந்தான். அவளின் முழிப்பிற்கு காத்திருந்தவனுக்கு உள்ளுக்குள் சிறு பயம் இருக்கத்தான் செய்தது.

காலையில் அவள் உணர்வின்றி இருந்ததால் இங்கே அழைத்து வந்ததற்கு எந்தவித பிரச்சினையும் செய்யவில்லை. இல்லையென்றால், இந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்திருப்பாளா என்ன? அவளின் ஆழ்ந்த உறக்க நிலையை கண்டுக் கொண்டவன், கீழிறங்கி சென்றிருந்தான்.

துரைமுருகன் மட்டுமல்லாது அவர்களது குடும்பமே கிளம்பி வந்திருந்தது. பூர்வா தான் அழைத்துச் சொல்லியிருந்தார் விசயத்தை, அந் நேரத்தில் தங்கையின் போனை எதிர்பார்க்காதவர், கொஞ்சம் குழம்பிதான் போனார்.

பின், விசயத்தை கேள்விபட்டு அவர் அந்நேரமே கிளம்ப முயல, உடன் ஆகாஷ் முதற்கொண்டு அனைவரும் வருவதாக அடம்பிடித்திட, அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

மாணிக்கத்தின் வீட்டின் முன் கார் நிற்க, ஏற்கனவே பவுனம்மாள் அழைத்துப் பேசியிருந்ததால், பூர்வா அவர்களை வரவேற்க வாசலிலே நின்றிருந்தார்.

“அம்மா!” என்றபடி பூர்வா ஓடி சென்று பவுனம்மாளை கட்டியணைத்தவர்,
“வாங்கண்ணி, வாங்கண்ணா” என அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, துரைமுருகன் சில நொடிகள் தயங்கினார்.

வேண்டாத நினைவுகள் எல்லாம் அவ்வீட்டை பார்த்ததும் எழ, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவர், உள்ளே நுழைந்திருந்தார். வந்தவர்களை எதிர்கொண்ட ராகவன்,
அவர்களை வரவேற்றுவிட்டு,
“அத்தை, அவ நல்லா தூங்குறா, கதவு லாக் பண்ணலை. வீடு வரைக்கும் போய்ட்டு வரேன் பாத்துக்கோங்க.”அவன் கிளம்பி விட,

துரையின் பார்வை அனிச்சை செயலாக ஒரு இடத்தை பார்க்க, அந்த போட்டோ இன்னும் அங்கேயே தான் இருந்தது. பார்த்ததும் மனம் கலங்கிட, அந்த போட்டோவில் இருப்பவரை ஆசை தீர பார்த்திருந்தார். அவரை தொடர்ந்து அனைவரது கண்களும் ஒரு நொடி அந்த படத்தை தொட்டுதான் மீண்டது.

அவர்களுக்காக ஒதுக்கியிருந்த அறையை காண்பித்து விட்டு, மாணிக்கத்திடன் அவர்களது வருகையை சொல்ல சென்றிருந்தார் பூர்வா.

மெல்ல, உறக்கம் கலைய எழுந்தமர்ந்தவளுக்கு நினைவுகளை மீட்பதற்கு சில நொடிகள் தேவைப்பட்டன. ராகவனை தேடியவளுக்கு அவன் இல்லாது போகவும், மீண்டும் பயமும் பதட்டமும் வந்து ஒட்டிக் கொள்ள, முயன்று நிதானித்தவள், தான் இருக்கும் இடத்தினை மனதில் பதிய வைக்க முயன்றாள்.

மீண்டும் மீண்டும் சுசியின் உயிரற்ற உடலே கண்முன் வர, அவளை மீறியும் கண்ணீர் பெருகியது.

‘நான் உன்னை தனியா விட்டுப் போய்ருக்க கூடாது சுசி. அநியாயமா உன்னை சாக விட்டுடேனே, இப்புடி ஒரு குற்றவுணர்ச்சிய காலம் முழுக்க எனக்கு குடுத்துட்டு போய்ட்டியேடி. நான்தான் உனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேனேடி, என்னை நம்பலையா நீ?’ என அழுகையில் கரைந்தவளுக்கு, அவளையே மன்னிக்க முடியவில்லை.
மேலும் எத்தனை நிமிடங்கள் அவளையே குற்றவாளி ஆக்கி கொண்டாளோ,

கீழே கேட்ட பேச்சுக்குரலில், மெல்ல அதிலிருந்து விடுபட்டவள், நிதானித்து பேச்சுக்குரலை கேட்க, நொடியில் துரையின் குரலை கண்டுக்கொண்டவள், கிட்டதட்ட எழுந்து ஓடியிருந்தாள்.

இவள் சென்ற நேரம், அனைவரும் ஹாலில் இருக்க, இவளை முதலில் கண்ட ஆகாஷ்,

“பிரணி!” என்றபடி ஓடி வந்தவன் அவளை இறுக அணைத்திருக்க, உடன் ஷர்மியும்.

“ஆகாஷ், ஷர்மி” பதிலுக்கு அவர்களை அணைத்தவளின் விழிகளில் நீர் பெருகியது.

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணோம் பிரணி.”

“நானும் தான்டா.” அவர்களது தலைகோதியவளை கண்டு, இரட்டையர் இருவருக்கும் ஏக்கம் பிறந்தது. தங்கள் அக்கா தங்களிடம் இப்படி எப்போது நடந்துக் கொள்வாள் என்று.

“ஆகாஷ், ஷர்மி போதும் விடுங்க.” துரையின் குரலில் அவர்கள் விலக,

“மாமா!” என்றபடி வேகமாய் வந்து அவரை அணைத்துக் கொள்ள,

“மாமா வந்துட்டேன்டா, ஒண்ணுமில்லை.”

“மாமா, மாமா சுசி…சுசி நான் அவளை சாக விட்டுட்டேன் மாமா, அவளை தனியா விட்டுட்டு நான் போயிருக்க கூடாது.”

“பிரணி, அந்த பொண்ணு பண்ணத்துக்கு நீ என்னடா பண்ணுவ?”

“நான் இருந்திருந்தா அவளை காப்பாத்திருப்பேன்ல மாமா.”

“அடியே, கோட்டிக் கழுதை. நீ காப்பாத்திடக் கூடாதுன்னு தான், அந்த பிள்ளை திட்டம் போட்டு பண்ணிருக்கா. எப்படான்னு காத்திருந்திருந்திருக்கா, நல்லவேளை உன்னை சிக்க வைக்காமா, லெட்டர் எழுதி வச்சாளே அதுவரைக்கும் சந்தோசம் தான்.” பவுனம்மாள் பேச,

“அத்தை, இறந்த பொண்ணை பேசாதீங்கத்தை. நமக்கு அந்த பாவம் வேண்டாம்.”

“போன மவராசிய பேசக்கூடாதுன்னு புரியுது திலகா. ஆனா, முடியலையே எம்பேத்திய இப்புடி அழுக வச்சிட்டு போய்ட்டாளே, அந்த பிள்ளை செத்ததை பாத்த அதிர்ச்சியில இவளுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா? என்ன பண்ணிருப்போம். தனியா, அந்த ரூம்ல பயந்தோட தான் இருந்திருப்பா.
அதுல இருந்து அவ்வளவு சீக்கிரம் இவளை வெளியக் கொண்டு வந்திட முடியுமா?” என்றவரின் குரலும் அழுகையில் கரகரத்து வர, அதனை கண்டவளிற்கு மேலும் அழுகை பெருகியது.

“பிரணிதா!” என ஓங்கி அதட்டியபடி, அவளருகே வந்த ராகவன்.

“சும்மா, சும்மா கண்ணு நிறைஞ்சிச்சுன்னு வையி, கொன்றுவேன்டி. என்ன தப்பு பண்ண நீ? இப்புடி அழுகுறதுக்கு? அந்த பொண்ணு எடுத்த முட்டாள்தனமான முடிவுக்கு நீ எப்புடி பொறுப்பாவ? நீயா சாக சொன்ன? வாழ்க்கை எதிர்கொள்ள பயந்து அந்த பொண்ணு கோழைத்தனமா பண்ணதுக்கு அந்த பொண்ணு மட்டும் தான் பொறுப்பு.

சும்மா, சும்மா எல்லா பழியையும் உன்மேல தூக்கி போடுற வேலையை வச்சிக்காதே, சொல்லிட்டேன்.” என்றவன் மிரட்டிட, எப்போதும் அவளிற்கு சப்போர்ட்டிற்கு வரும் மாணிக்கம் கூட அமைதியாக தான் இருந்தார். அவர்கள் அனைவருக்கும் பிரணிதா எப்படியாவது இந்த விஷயத்தில் இருந்து வெளிவந்து விட வேண்டும் என்பதுதான் எண்ணமாக இருந்தது.

ராகவனின் அதட்டல் வேலை செய்தது அவளிடம். அழுகையை அடக்கி கொண்டவள், அமைதியாய் நிற்க, அவளருகே வந்து நின்றனர் ஆகாஷூம், ஷர்மியும்.

“எதுக்கு சும்மா பிரணிய அதட்டுறீங்க? அவ்ளோ பெரிய இஸ்ஸூல இருந்து எப்புடி அவளால சீக்கிரம் வெளிய வர முடியும். டைம் வேண்டாமா?” ராகவனை முறைத்த வண்ணம் ஆகாஷ் கேட்க,

“ஆகாஷ்!” ஒருசேர அதட்டியிருந்தனர், துரையும், பிரணிதாவும்.

“என்னடா வாய் நீளுது? பெரியவங்ககிட்ட இப்புடித்தான் பேசுவியா? அவ்ளோ பெரியவனாகிட்டியா, பெரியவங்க விசயத்துல தலையிடுற அளவுக்கு.” துரை அதட்ட,

“நான் என்னப்பா, தப்பு பண்ணேன். பிரணிய ஏன் திட்டனும்?” அப்போதும் அவன் வாதாட,

“டேய் அறைஞ்சேன்னா… வாயை மூடு ஆகாஷ்.” துரை அதிக கோபத்துடன் அவனருகே வர,

“அட சித்தப்பா இருங்க.” ராகவன் அவரை தடுத்திட,

“மாமா, என்ன இது? அவன்தான் ஏதோ புரியாம பேசுறான்னா. விடுங்க அவனை நான் பார்த்துக்கிறேன். ஆகாஷ் நீ வா.” அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள் அவள்.

“அது, அவனுக்கு பிரணின்னா உயிரு, வீட்டலயும் கூட, பிரணியா ஒரு வார்த்தை பேச விடமாட்டான். அதான், அவுங்க பாட்டிக்கிட்ட சண்டை போடுற மாதிரி உன்கிட்ட பேசிட்டான் ராகவா, சின்னப்பிள்ளை தப்பு தான். நான் சொல்லி மன்னிப்பு கேட்க சொல்றேன்.”

“விடுங்க சித்தப்பா, பேசட்டும். எனக்கொண்ணுமில்லை. நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்க சொல்லாதீங்க, இன்னும் கோபமாகவும் அவனுக்கு, நான் டீல் பண்ணிக்கிறேன்.”

“அப்படி என்னடா கோவம் உனக்கு? எத்தனை தடவை சொல்லிருக்கேன். நீ இன்னும் சின்னப்பிள்ளை தான் ஆகாஷ். எல்லா விசயத்துலயும் தலையிடக் கூடாது.” என ஆகாஷை அவள் கடித்துக் கொண்டிருக்க, அவர்களை பின்தொடர்ந்து இரட்டையர்களும் வந்துவிட்டனர் அங்கே.

மூன்று வீடுகளும் ஒரே காம்பவுண்ட்டில் என்பதால், முன்பக்கம் நிறையவே இடம் இருந்தது. அதன் வலப்பக்கம் சிறு தோட்டம் போல் அமைத்திருந்தனர். அந்த தோட்டமும் இவளது விருப்பம்தான். இன்றுவரை அதனை பராமரித்து வருகின்றனர்.

“ஹாய் நான் நிரஞ்சன், இவ என் தங்கச்சி யாழினி.” என்றபடி ஆகாஷிடம் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்
கொள்ள,

‘இருந்துட்டுப் போ’ எனும் தோரணையில் தான் அமர்ந்திருந்தான் ஆகாஷ். தனக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தவனை கண்டு நிரஞ்சனின் முகம் சுருங்கிற்று. அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாதவன்,

“யாழி வா, நம்ம போய் விளையாடலாம்.” என தங்கையையும் அங்கே நிற்க விடாது, அழைத்துக் கொண்டு செல்ல முற்பட, ஒரு நொடி அவனின் செயல் ராகவனை நினைவுப்படுத்தியது பிரணிக்கு.

அவனும் இப்படிதான், அவளை எந்நேரமும் அடைகாத்து கொண்டிருப்பான். இடுப்பில் தூக்கி வைக்காத குறையாக எந்நேரமும் அவளை தூக்கி கொண்டு சுற்றுவான்.

நிரஞ்சனின் வாடிய முகம் கண்டு பிரணிக்கு என்னவோ போல் இருக்க,
“ஷர்மி போய் பேசு அவுங்ககிட்ட, போ. ஆகாஷ் நீயும் போ, இப்புடி மரியாதை இல்லாம பண்ணக் கூடாது என்ன பழக்கம் இது.” என கடிந்துக் கொள்ள, அவளின் பேச்சிற்கு மதிப்பளித்து இருவரும் அவர்களிடம் சென்றவர்கள்,

“ஹாய், நான் ஷர்மி இது என் அண்ணன் ஆகாஷ். நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாமா?” என்றபடி ஷர்மி கையை நீட்ட, ஆகாஷும் நீட்டியிருந்தான். நிரஞ்சன் யோசித்தப்படி அமைதியாய் நிற்க,

“நிரஞ்சன்!” என்ற பிரணியின் குரலில் முகம் மலர திரும்பியவன், வேகமாய் அவளருகே ஓடிவந்து நின்றவன்,
“அக்கா!” என ஆவலாய் அவள் முகம் பார்க்க,

அவனின் மலர்ந்த முகம் உள்ளுக்குள் என்னவோ செய்ய, தன்னை சமாளித்துக் கொண்டவள்,
“ஆகாஷ் பண்ண தப்பையே நீயும் பண்ணாத, சேர்ந்து விளையாடுங்க.” என்றதும், மீண்டும் வேகமாய் அவர்களிடம் ஓடியவன், “ஃப்ரெண்ட்ஸ்” என கையை குலுக்கியிருந்தான்.

பின் அவர்கள் தங்களது உலகிற்குள் நுழைந்து விட, அவர்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பிரணிதா. அமைதியாய் இருந்தவளின் மனம் மீண்டும் நேற்றைய இரவு நடந்தவை எல்லாம், அசைப்போட தலையிலடித்துக் கொண்டாள்.

‘என்ன பிரணி பண்ணி வச்சிருக்க? இப்புடி போய் அவரை கட்டிப்பிடிச்சிருக்கியே? போச்சு கையோடு கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறாரு, எப்போடான்னு இருந்த மனுசனுக்கு நல்ல வாய்ப்பக் கொடுத்திருக்க. இனி நீ ஜென்மத்துக்கும் அவரை விட்டு விலக கனவுல கூட நினைக்க முடியாது.’ என நினைத்தவளிற்கு, விலகவும் அவள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

மாணிக்கத்தை அவள் அழைத்திருந்த விதமும் அவளிற்கு நன்கு நினைவில் இருக்க, உதட்டை கடித்தாள் அவள். அவ்வளவு வீம்பு பிடித்துவிட்டு, மீண்டும் இந்த வீட்டிற்கே வந்திருப்பதை நினைத்து அவளிற்கு முகம் கசங்கிற்று.

இனி இந்த வீட்டை விட்டு அவளால் வெளியேற முடியுமா? ராகவன் தான் அதற்கு விட்டுவிடுவானா?

இதோ அவளின் அறை, பல வருடங்களுக்கு முன் அவள் பயன்படுத்தியே அதே அறை. அவள் எப்படி விட்டுச் சென்றாலே, அப்படியே நேர்த்தி மாறாமல் இருக்கிறது. அந்த அறையின் தொடர்புடைய இனிய நினைவுகள் அவள் மனதினில் மேலெழும்பிட, அதன் தாக்கம் தாளமால் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

இதற்குத்தானே! இதற்குத்தானே அவள் பயந்தது, அவள் மனதோடே அவளால் போராட முடியாது என்றுதானே இவர்களை விட்டு விலகியிருந்தது. இனியும் அப்படி இருக்க முடியுமா? அவளால். இனி தினம் தினம் அவள் மனதோடும் அவள் மறக்க நினைத்த நினைவுகளோடும் அவளது போராட்டம் நடைபெற போகிறதே.’ என சிந்தனையில் அவள் மூழ்கி இருக்க,

உணவு உண்பதற்காக இவர்களை அழைக்க வந்த ராகவன், பிள்ளைகள் சற்று தள்ளி விளையாடியபடி இருக்க, அவர்களை அனுப்பவிட்டு, இவளிடம் வந்தான்.

ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்திருந்தவள் அருகே அமர்ந்தவன்,
“யுகா! என தோளை தொட, அதில் திடுக்கிட்டவள், நெருக்கமாய் அமர்ந்திருந்தவனை கண்டு, விதிவிதிர்ந்தவள் வேகமாய் எழ, அதே வேகத்தில் மீண்டும் அமர்ந்திருந்தாள். ம்ஹீம் இல்லை, இழுத்து அமர வைக்கப்பட்டிருந்தாள் ராகவனால்.

“என்ன பண்றீங்க? பசங்க முன்னாடி?” அவள் கடிய,

“ரொம்ப பண்ணாதடி, கைய தானே பிடிச்சேன். பசங்க எப்பவோ உள்ள போய்ட்டாங்க. நேத்து நீ என்னை அவ்வளவு இறுக்கமா கட்டிப்பிடிச்சப்போ நான் என்ன உன்னை மாதிரியா கோபப்பட்டேன்.” சிரித்தப்படி அவளை சீண்ட,

என்ன சொல்வாள்? வேறுபக்கம் பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்.

“சொல்லு…சொல்லு உன்னை மாதிரி குறுகிய மனப்பான்மை கொண்டவன் இல்லை நானு? நல்லா தாராள மனசுக்காரன் தான். இப்பவும் நீ கட்டிப்பிடிச்சா, நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். டிரை பண்ணி பாக்குறியா?” அவள் முகத்தை தன்பக்கம் திருப்ப முயற்சித்தவாறு அவன் பேச, அவளிற்கு சிரிப்பு வரும் போலனது.

‘ஆமாமா ரொம்ப தாராள மனசுக்காரர் தான் இவரு’ என நினைத்தவளுக்கு அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லை. அதற்கு மேல் அவளை சீண்டாது,

“உன்னோட திங்க்ஸ் எப்போ போய் எடுத்துக்கலாம்.” என்றதும், அவள் உடல் தானாய் நடுங்கி விறைத்திட,

“இப்போ, எதுக்குடி உடனே உன்னோட பாடிலாங்க்வேஜ் மாறுது? நார்மலாகு மொதல்ல.”

“இல்லை நான் வரலை.”

“வராமா, எப்புடி திங்க்ஸ் எடுக்கிறது?”

“அங்கே சரசு ஆன்ட்டிகிட்ட சொன்னா எடுத்து தருவாங்க.”

“பைத்தியமாட்டி உனக்கு? போலீஸ் கேஸ் ஆகியிருக்கு. அப்புடி எல்லாரையும் உள்ள விட மாட்டாங்க. நீதான் போயகனும்.”

“ப்ளீஸ்ங்க!”

“அப்புடியே அறைஞ்சேனா, என்னைக்கா இருந்தாலும் நீ இதை பேஸ் பண்ணித்தான் ஆகணும். நம்ம போறோம் ஈவ்னிங், நீ வந்துதான் ஆகணும். நானும் கூட வருவேன்.”

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க,

“போதும், இதை பத்தி இனி நீ என்ன சொன்னாலும், நான் அதை கேக்குறதா இல்லை. இப்போ வா சாப்பிட போகலாம்.”

“எனக்கு பசிக்கலை!” அங்கு உண்பதை அவள் தவிர்க்க பார்க்க, அதை கண்டு கொண்டவன்,

“எத்தனை நாள் இப்புடி பட்டினி கிடக்குறதா எண்ணம்? யாரை பழி வாங்கனும்?”

“நான் யாரையும் பழி எல்லாம் வாங்கலை. எனக்கு பசிக்கலை அவ்ளோதான்.”

“என்னை டென்ஷன் பண்ணாத யுகா. இனி நீ இங்கதான், திரும்ப போகணும்ன்ற எண்ணம் எல்லாம் இருந்தா, அதை அப்புடியே குழி தோண்டி புதைச்சிடு. இது தான் உன் வீடு, இங்கதான் இனி உன்னோட இருப்பு, அப்போ எத்தனை நாள் சாப்பிடமா இருப்ப,

அப்புடி இங்கிருந்து வெளியே போகணும்னா ஒரு வழி இருக்கு..” என்றவன் நிறுத்த, ஏதோ குதர்க்கமாய் கூற போகிறான் என்ற அவளது எண்ணத்தை பொய்யாக்காமல்,

“சிம்பிள், நம்ம கல்யாணம் முடிஞ்சிட்டா, ஆட்டோமெட்டிக்கா இங்கிருந்து வெளியேறி, நம்ம வீட்டுக்கு போய்டலாம். அதான் உனக்கிருக்கிற ஒரே ஒரு ஆப்சன்.” என்றவனை கண்டு பல்லை கடிக்க மட்டும்தான் முடிந்தது அவளால்.

‘இதோ அவள் நினைத்து பயந்து விசயத்தை கூறிவிட்டான் அல்லவா?’ என நினைத்து அவள் பயந்தாலும், உள்ளுக்குள் சிறு நிம்மதி பரவுவதை தெரிந்தே அனுபவித்தாள் அவள்.

அதற்கு மேல் அவளை பேச விடாது இழுத்துக் கொண்டு சென்றிருந்தான் ராகவன். உள்ளே சென்றவளுக்கு சட்டென நினைவு வர, வேகமாய் திரும்பி அந்த சுவற்றை பார்க்க, அவளை ஏமாற்றாது அங்கே இருந்தது அந்த புகைப்படம். அதை கண்டவளின் விழிகளில் முணக்கென நீர் வந்திட, அசையாது அந்த போட்டோவில் இருப்பவரை பார்த்தவளின் முகம் மென்மையானது.

அழகிய வெள்ளை நிற சிரிப்பில், பிரணியை தூக்கி வைத்திருந்த அந்த மனிதரின் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்? பிரணியின் முகமும் அதற்கு போட்டி போட்டுக் கொண்டு சிரிப்பில் மின்னியது. பின்னே இருக்காதா? தகப்பனின் கைவளைவுக்குள் இருக்கும் பிள்ளையின் முகம் பூரித்து தானே கிடக்கும்.

தகப்பனா? ஆம் அந்த போட்டோவில் இருந்தது பூவரசன். பிரணியின் பிறப்பிற்கு காரணமானவர், அத்தோடு துரையின் பிரியத்திற்குரிய நண்பர்.

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thanga then mozhi

Active member
May 6, 2026
159
130
43
Cheyyar

பிரணி அப்பாதான் இறந்து அம்மா இரண்டாவது கல்யாணம் பண்ணி இருக்காங்கலா
 
  • Love
Reactions: STN - 35

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
Aww.... பூர்வா தான் அம்மாவா?????
செகண்ட் மேரேஜ் வரை தான் யோசிச்சேன்......பட் அம்மா அப்படின்னு நினைக்கல......
Unexpected twist