அத்தியாயம் 7
"என்ன அபி!! கண்ணு வியர்க்குது போல??"
"என்ன கொழுப்பா!! ஆனா ஒன்னுடி நான் அவளை கூட நம்பிடுவேன் உன்ன மட்டும் நம்பவே மாட்டேன் டி குள்ளச்சி கூடவே இருந்துட்டு சேம் சைடு கோல் போடுறியா??"
"நான் என்னடா பண்ணேன்?" அப்பாவியாக உதட்டை பிதுக்கினாள் சரண்யா..
" ஏய் உனக்கு தெரியாது அவளை நான் எத்தன வருசமா காதலிக்குறேன்னு.. "
"தெரியுமே!!"
" பின்ன அவ அந்த நித்திக்க காதலிக்கிறேன்னு உன்கிட்ட சொல்லிருக்கா நீயும் அதுக்கு ஒத்து ஊத்திட்டு இருக்க?"
"வேற என்ன செய்ய சொல்ற??"
"ப்ச்!! நான் இப்போவே போயி அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன்."
" ஆஹா அபி!! கொஞ்சம் வெயிட் பண்ணுடி செல்லம்.. இப்பவே நீ போய் உன் காதலை சொன்னா அத அவ மதிக்க கூட மாட்டா. ஆனால் அதுவே அவ லவ் ஃபெயிலியர் ஆகி சோகத்துல இருக்கும் போது நீ உன் காதலையும் கூடவே கொஞ்சம் ஆறுதலையும் சேர்த்து சொன்னா உடனே ஓகே சொல்லிடுவா அதுக்காக வெயிட் பண்ணு. "
" லூசு அவளுக்கு எப்படி லவ் ஃபெயிலியர் ஆகும்?? "
" நீதான்டா லூசு, நித்திக் சார் தான் வேற ஒரு பொண்ண லவ் பண்றாரு தானே?"
" இது என்ன புது புரளியா இருக்கு?!"
"ஓஓஓஓ!! உனக்கு இன்னும் அந்த கதை எல்லாம் தெரியாதுல்ல.. அன்னைக்கு அவ போய்ட்டு வந்து என்னைய ராத்திரி முழுசும் தூங்கவிடாம பாடா படுத்தினா அதனால எனக்கு தெரியுமே!!. "
" ஏய் புரியிற மாதிரி பேசுறியா இல்ல சாவடி அடிக்கவா. "
" அட அவசரத்துக்கு பொறந்தவனே கொஞ்ச நேரம் உட்காரு. "
என்ற சரண்யா நித்திக்கின் காதல் கதை பற்றியும் இப்பொழுது ஏனோ அவர்கள் அம்மா அதற்கு ஒத்துக்கொள்ளாததை பற்றியும் கூடவே நித்திக்கின் குறையை பற்றியும் அனைத்தையும் கூறி முடிக்க விஷமமாக சிரித்தான் அபிஷேக்..
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெண்ணிலா வேலை பார்த்தாலும் அவள் நினைவை நித்திக் ஆக்ரமிக்க, வெண்ணிலா போன் அடித்தது..
"ஹலோ!!"
"லஞ்ச் முடிச்சுட்டு ஹாஸ்பிடல் வர போகணும்.."
"எதுக்கு?? என்னாச்சு??"
" ஒன்னும் ஆகல நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டத அம்மா பார்த்ததுக்கு அப்புறம் தான் ஆஞ்சியோ ஆப்பரேஷன் பண்ண ஒத்துக்கிட்டாங்க அவங்களுக்கு சக்சஸ் புல்லா ஆபரேஷனும் நடந்து இப்போதான் நினைவு திரும்பியிருக்காங்க.. நினைவு திரும்புனதும் அவங்க நம்மள தான் பாக்க ஆச படுறாங்க.. சோ மதியம் போலாம்னு.. "
"அய்ய்ய் போலாமே!!" என்றவள் குரல் குதூக்களிக்க, இவன் அந்த கண்ணாடி வழியே எட்டி இவள் இருக்கையை பார்த்தான்.. அவன் பார்க்கும்போது வேலை பார்ப்பது போல முகத்தை இயல்பாய் மாற்றிக்கொண்டாள் வெண்ணிலா..
நித்திக் சரண் அழைப்பை தூண்டித்ததும், "ஸ்ஸ்ஸ்ஸ் எப்ப்பா சிடுவன் செம ஷார்ப்!!" மனதுக்குள் கூறிக்கொண்டவள் கையை மடக்கி வெற்றி குறியீடு போட்டுவிட்டு நிமிர நித்திக் இவளை புருவம் சுருக்கி யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தான்..
மதியம் உணவு இடைவெளி முடிந்ததும் அவ்வளவாக வேலை இல்லை.. வெண்ணிலா எப்பொழுதும் அந்தந்த நாளின் வேலையை அந்தந்த நாளிலேயே முடித்து விடுவாள் அதை தவிர நித்திக் மதியம் வெளியே வேற செல்ல வேண்டும் என்று கூறவும் காலையிலேயே சுறுசுறுப்பாக இந்த பக்கம் அந்த பக்கம் நிமிர்ந்து கூட பார்க்காமல் அத்தனை வேலையும் முடித்து வைத்திருந்தாள்..
"கிளம்பலாமா??"
"இருங்க ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்!!"
" உனக்கு நேரம் கொடுத்துட்டு தானே நான் லஞ்ச் சாப்பிட போனேன் இவ்ளோ நேரத்துல ரெஸ்ட் ரூம் போயிட்டு வர முடியாதா?? "
"அட ஏன் கோவப்படுறீங்க.. அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்.."
என்றவள் சொன்னதுபோல ஐந்து நிமிடத்தில் வந்தாள்.. வந்தவள் முகம் நீரில் பளபளத்தது..
" எங்க அம்மாவ பாக்க நீ எதுக்கு மேக்கப் போட்டுட்டு வர?? "
" மேக்கப் எல்லாம் ஒன்னும் போடல ஜஸ்ட் ஃபேஸ் வாஷ் பண்ணி, சன் ஸ்கிரீன் மட்டும் தான் போட்டு இருக்கேன். "
"அப்போ இது??" என்றவன் அவள் தலை வகுட்டை காட்ட அதில் குங்குமம் ஜொலித்தது..
"பின்ன கல்யாணம் பண்ணிட்டு புருஷன் பொண்டாட்டியா மொதோ மொதோ போறோம்.. இதெல்லாம் வைக்க வேண்டாமா அப்போ தானே அவங்க நம்புவாங்க. " என்றவள் உள்ளுக்குள் கிடந்த தாலியை தூக்கி பகிரங்கமாக ஆடை மீது போட இவனோ ஜெர்காகி சுற்றி பார்த்தான்.. யாரும் இவர்களை கவனிக்கவில்லை என்றதும் தான் நிம்மதி வந்தது..
"ப்ச்!! சரி வா.." என்றவன் முன்னே நடக்க இவளும் அவன் பின்னாலே சென்றாள்.. கைபேசியில் டாக்டரிடம் எதோ முக்கியமாக பேசிக்கொண்டு வந்தவன் அங்கு வாசலில் கதவின் கீழ் நீட்டி கொண்டிருந்த கூர் கம்பியை கவனிக்காமல் காலை வைத்துவிட அந்த கம்பியோ அவன் ஷூவை இழுத்து இடறி விட்டது.. அதுவும் அவனின் சற்று குறைந்த கால்.. அதனால் நிலை தடுமாறியவன் கதவை பிடித்துக்கொள்ள அந்த வங்கி முழுவதும் கிசுகிசுக்க ஆரம்பித்தது..
நித்திக் அப்போது தான் பார்த்தான் ஷூ முழுமையாக கலண்டு அந்த கூம்பிய கால்கள் அந்தரத்தில் தொங்குவது தெரிந்தது.. நித்திகின் இந்த கால்களை பற்றி அறிந்தவள் வெண்ணிலா மட்டுமே வெண்ணிலா எதார்த்தமாக சரண்யாவிடம் பகிர்ந்து கொள்ள சரண்யாவோ அபிஷேக்கிடம் உளறி கொட்ட அவனோ அவன் வேலையை காட்டிவிட்டான்..
"அய்யயோ!! என்னடி இது நம்ம மேனேஜர் கால் இப்புடி இருக்கு.. பாவம்.. ஹ்க்கும் நல்லா வேணும்.. அய்ய அருவருப்பா இருக்கு டி.. இன்னைலருந்து என் க்ரஷ் லிஸ்ட்லருந்து இவர நீங்குறேன்.. இந்த மாதிரி பையன கட்டிக்கிட்டு என்னத்த சந்தோசமா வாழ்றது!!"
நரம்பில்லா நாக்குகள் நர்த்தனம் ஆடியது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அந்த காலை பார்த்துக் கொண்டிருக்க, வெண்ணிலாவிற்கு மனதுக்குள் வழி ஏற்பட்டாலும் அவன் நிற்கவே தடுமாறுகிறான் என்று புரிந்தவள் வேகமாக தேடி அந்த காலின் ஷூவை எடுத்து வந்த அவள் காலில் மாட்டி விட அவனோ அவளை முறைத்துக்கொண்டே சென்றான்..
"நான் என்னடா பண்ணேன்!!' என்னும் விதமாக வெண்ணிலா பார்வை இருந்தாலும் ஒன்றும் கேட்காமல் அவன் பின்னாடி ஓடினாள்..
இருவரும் அவரவர் வண்டியில் தான் வந்தார்கள் தனி தனியாக ஆனால் மருத்துவமனை உள்ளே செல்லும்போது நித்திக் அவளை பார்த்து புன்னகையிக்க, இவ்ளோ திரும்பி, "யார பார்த்து சிரிக்குறான் இந்த சிடுவன்!!" என்று தேட அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்..
"ஓஹோ!! ட்ராமா ட்ரிப் வச்சு நடத்துறான் போலயே.. அர செகண்ட்க்கு ஒரு ஆக்ட் குடுக்குறான்!!" என்று வாய் சொன்னாலும் அந்த நடிப்பில் அவள் மனம் துள்ளி குதித்தது..
"அம்ம்மா!!"
"ம்ம்ம்ம்!" மெல்ல கண்ணை திறக்க எதிரே சிரித்த முகமாக நின்றிருந்தாள் வெண்ணிலா.. இவரும் புன்னகையித்து அவளை அழைக்க,
"அத்த எப்புடி இருக்கீங்க??"
"நல்லாருக்கேன் மா.. நீங்க.."
"எனக்கென்ன அத்த.. உங்க பையன் நல்லா பாத்துக்குறாரு.." என்றவள் நித்திகை ஒட்டி நிற்க அவன் அன்னைக்கு தெரியாமல் அவளை முறைத்து பார்த்தான்..
யசோதா எதுவோ பேச வர, " அம்மா ஸ்டைன் பண்ணிக்காதீங்க நீங்க பாக்கணும் சொன்னிங்க அதுதான் இவள கூட்டிட்டு வந்தேன் உங்க மருமக இங்கே தான் இருப்பா எங்கையும் போயிட மாட்டா நீங்க ரெக்கவர் ஆகி வந்துட்டு பொறுமையா பேசலாம்!!" சிரித்த முகமாக கூற அவரும் சரி என்று தலையை ஆட்டினார்..
அப்போது தான் பழம் வாங்கி வந்த லாவண்யா, இவர்களை முறைத்துக்கொண்டே யசோதாவிற்கு ஜூஸ் போட, "ஆத்தி இது யாருன்னு தெரிலையே.. கண்ணுலயே எரிச்சிடுவாங்க போல.. பேசாம நம்ம வீட்ல சிலிண்டர் தீரப்போகுது இந்த அம்மாவ கூட்டிட்டு போயி பார்க்க வச்சே சமைச்சுடுவோமா?!" என்ற தீவிர யோசனையில் வெண்ணிலா இருந்தாள்..
"பாப்பா!! அவங்ககிட்ட இந்த ஜூஸ் குடு!!" என்று சாரு கையில் ஓரு கப்பை லாவண்யா திணித்தாள்..
அவளும் டங்கு டங்கு என்று நடந்து வெண்ணிலா கையில் ஜூஸ் கைப்பை வைக்கங்குள் அவள் ஆடையில் பாதி சிந்திருந்தாள்.. நிலைமை புரிந்த வெண்ணிலா அதையும் புன்னகையுடன் வாங்கி குடித்தவள், "லொக், லொக்!!" இருமினாள்..
படுக்கையிலிருந்த யசோதா பதறி எழும்ப பார்க்க, "அம்மா நீங்க இருங்க நான் பாக்குறேன்" என்ற நித்திக்கு வெண்ணிலா அருகே சென்று பார்த்து குடிக்க தெரியாதா என்று பல்லிடுக்கில் வார்த்தையை அறைத்தாலும் அன்னைக்காக அவனின் ஒரு கை அவளின் தலையை நீவி விட மற்றொரு கை முதுகை நீவிவிட்டது..
"என்ன பாக்குற பொறுமையா குடி!!" சிரித்த முகமாக நித்திக் கூறினாலும் அவனின் கண்கள் அவளை தீயாக முறைத்துக் கொண்டிருந்தது..
அடுத்த வாய் ஊற்றியவள் மீண்டும் இருமினாள், "அய்யோ கொலைகார குடும்பம் ஒரு ஜூஸ் கொடுத்தே என்னை போட்டு தள்ளிடும் போலையே அந்த ஆன்ட்டி என்ன கடுப்புல இருக்காங்களோ ஜூஸில் சர்க்கரை போடுறதுக்கு பதிலா உப்பு அள்ளி கொட்டி வச்சிருக்காங்களே!!"
என்றவள் நித்திக்கிடம் கண்ணாலே ஏதோ செய்கை செய்ய, புரிந்துகொண்டு தன் அத்தையை பார்க்க அங்கே இருவரும் இவர்களை முறைத்து பார்த்தார்கள்..
"கொஞ்சம் தானே இருக்கு வாயெடுக்காம குடி!!"
"எதே!!" அலறினாலும் வெண்ணிலா பார்வை யசோதாவை தொட அவரும் கண்ணில் கணிவோடு இவளை பார்க்க உடனே முழுதாக குடித்தவளுக்கு மீண்டும் இருமல் வர,
"ஏய் போதும் சும்மா நடிக்காத!!"
"இல்லங்க சார் தொண்டைலருந்து நெஞ்சு வர எரியுது!!"
என்றவள் கண்கள் கலங்கிருக்க, என்ன நினைத்தானோ வெண்ணிலா நெஞ்சை இவன் நீவி விட பதறி போனாள் பெண்பாவை..
"அடேய் நடிப்பா இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையாடா?" நெளிந்து கொண்டே அவனிடமிருந்து விலகி அவள் தண்ணீர் பாட்டிலை கண்ணை காட்டினாள் அவனும் புரிந்துகொண்டு தண்ணீரை எடுத்து கொடுக்க குடித்து தன்னை சரி செய்தாள்..
அன்னையிடம் கூறிக்கொண்டு இவர்கள் வெளியே செல்ல நித்திக் டாக்டரை பார்த்து வருகிறேன் வெயிட் பண்ணு என்று ஓடினான்..
ஓடும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா பக்கத்தில் வந்து நின்றாள் லாவண்யா.. நெஞ்சில் உரிமையாக ஊசலாடும் தன் மருமகன் கட்டிய தாலியையே பார்த்தவர்,
"என்ன என் மருமகன் கூட ரொம்ப ஒட்டி உறவாடுற??"
"இல்லம்மா.. அது..."
"ப்ச் இங்க பாரும்மா!! உன்ன என்னென்னவோ திட்ட தான் வந்தேன்.. ஆனா அம்மானு சொன்ன உன்ன கேவலமா பேச மனசு வரல எனக்கு.. அம்மான்னு கூப்பிடுற புள்ளைய திட்ட கூட முடியாத அளவுக்கு தாய் பாசம் உள்ள பொண்ணு நான் அப்போ பெத்த பொண்ணு நல்லாருக்க என்னெல்லாம் செய்வேன்னு யோசிச்சுக்கோ.. இந்த நாடகம் இந்த கருமம் எல்லாம் வேணாம்ன்னு மருமகன்கிட்ட தல பாடா அடிச்சுக்கிட்டேன் ஆனா என் புருஷனும் மருமகனும் சேர்ந்து தான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்னால வேற ஒன்னும் சொல்ல முடியல என் மவ எனக்கு ரொம்ப முக்கியம் இப்போ உப்பு கலந்த ஜூஸ் கொடுத்த எனக்கு என் மவ வாழ்க்கைக்காக அதுல என்ன வேணாலும் கலக்க முடியும் புத்திசாலி புள்ளன்னு நினைக்கிறேன் புரிஞ்சுக்கோ.. "
என்றவர் பார்வை சொல்லியது அவர் கொண்ட கோபத்தின் அளவை.. பின்னே ஒரு மாதமாக ஓயாமல் மகள் அழுகும் அழுகையை எந்த தாயால் தாங்கிக்கொள்ள முடியும்..
Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: புது மங்கல சௌபாக்கியம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: புது மங்கல சௌபாக்கியம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.