தகிக்காதே குளிர்நிலவே..!(10)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -10

“ அப்பா…இப்படியே ஊர்ல இருக்குறவங்களுக்கே எல்லாத்தையும் அள்ளிக் கொடுத்துட்டு இருந்தீங்கன்னா எங்க நிலைமை என்ன ஆகுறது? “ என சற்று உரக்கமாகவே கேட்டார் மந்தாகினி .

அருகில் பாவமான முகத்துடன் அவரது கணவர் ஆதிசேஷன் நின்றிருந்தார். மனைவியை மீறி ஒரு வார்த்தை பேச மாட்டார்.

“ மந்தா…கொஞ்சம் சும்மா இரு..! யாருக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். ராஜ வம்சத்தோட அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஏத்துக்கணும்னு நினைச்சா மட்டும் பத்தாது. அதுக்கேத்த மாதிரி நடந்துக்கணும். உன் பையன் ஊர்ல இருக்குற அழகிங்க கூட கும்மாளம் போட்டு சொத்தை அழிக்கறதை விட தானம் தர்மம் பண்றதுல ஒண்ணும் என் சொத்து குறைஞ்சிடாது…” என வெடுக்கென்று கூறினார்‌‌.

ஏனோ மகளது பேச்சு எரிச்சல் மூட்டியது அவருக்கு.

அவரது பேச்சினை கேட்ட விஜயராணியோ வாய்மூடி சிரிப்பினை அடக்கிக் கொண்டார்.

இப்போது மந்தாகினியின் வாய் தானாகவே மூடிக்கொண்டது.

மேலும் மேலும் ஏதாவது பேசி தந்தையின் வெறுப்பினை சம்பாதிக்க விரும்பவில்லை அவர்.

வீர ராஜசிம்மர் தனஞ்ஜெயரிடம் வந்து,” உன் பையனோட ஆசை தான் முக்கியம். இப்ப உன்னோட மனசுல என்ன ஓடுதுங்கறது எனக்குத் தெரியும் . அவனோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடு. அவ்வளவு தான் சொல்லுவேன்.” என்று அவரது தோளினைத் தட்டிக் கொடுத்து விட்டு சென்றார் .

ஆதிரையோ தனஞ்ஜெயரிடம், "என்னங்க மாமா இந்த வருஷமும் இப்படி சொல்லிட்டு போறார். எந்த சாங்கியமும் செய்ய வேண்டாம்ங்கறார். நீங்களாவது கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே..?” என்றார் இறைஞ்சுதலாக.

அவரை நிமிர்ந்து பார்த்தவர், "அப்பாவை மீறி என்னால எதுவும் பேச முடியாது ஆதிரை. அப்பா எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும். நல்லதுக்கு தான் சொல்வார். இந்த வருஷம் எந்த இடத்துக்கு போய் உதவி செய்யணும்ங்கறதை நம்ம சுகன்யா கிட்ட கேட்டுக்கலாம். அவளுக்கு தான் எல்லா இடமும் அத்துப்படி.” என்று கூறி விட்டு சென்றார்.

அவர் செல்வதையே பார்த்திருந்த ஆதிரை அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது மகனின் ஆளுயர புகைப்படத்தை பார்த்தார்.

திருமணமாகி ஏழாண்டுகள் கழிந்து பிறந்த செல்வ மகன் வாழ வேண்டிய வயதிலேயே இவ்வுலகை விட்டு சென்றது சொல்லொண்ணா துயரத்தை தந்தது.

மீளும் மார்க்கம் அறியாது தினம் தினம் இழந்த மகனை எண்ணி தவியாய் தவிக்கின்றது பெற்றத் தாயின் மனம்.

தாயை அணைத்துக் கொண்டு அவரது கன்னத்தில் முத்தமிடுவது போலிருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது.

புகைப்படத்தின் அருகில் நின்றவர் வாஞ்சையுடன் அவனது பாதங்களைத் தொட்டு,” என்னைய‌ இப்படித் தவிக்க விட்டுட்டு போயிட்டியே கண்ணா….!” என்று கூறி கண்ணீர் வடித்தார் .

பாரதி கணினியில் முக்கிய தொகுப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

காலையிலிருந்தே உடல்நலம் சரியில்லாதது போல தோன்றியது.

நேரம் செல்லச் செல்ல வயிற்றுவலி அதிகமாகியது. அவளது மாதவிடாய்
‌வர இன்னும் ஒரு வாரம் இருந்தது.

ஏனோ அசௌகரியமாகவே உணர்ந்தாள்.

சற்று நேரத்தில் திடீரென அதிக உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது.

அன்றைய தினம் வெள்ளை நிற கால் சட்டை அணிந்து அதற்கு தோதான வெள்ள நிற முழுக்கை நிற சட்டையும் அணிந்திருந்தாள்.

வயிற்று வலியும் முதுகு வலியும் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது.

அவளால் எழவே முடியவில்லை.

வயிற்றைப் பிடித்து கொண்டு மேசையில் தலை கவிழ்ந்து விட்டாள்.

எப்பொழுதாவது அவளுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும். அன்று முழுவதும் படாதபாடு பட்டு விடுவாள்.

“ஹேய்…ப்ரூஸ் லீ..! என்ன காலையிலேயே தூக்கமா? “ என்றபடி அவளது மேசையைத் தட்டினான் அருண்மொழி.

அவளால் நிமிர்ந்து கூட அவனைப் பார்க்க முடியவில்லை. தலை கவிழ்ந்தே படுத்திருந்தாள்.

அவள் தலை நிமிராததை பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

“ஏய்…பாரதி..! என்ன ஆச்சு? “ என்றான் அவளது தோளைத் தட்டிய படி.

“ஒண்ணுமில்லை டா…நீ போ “ என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே.

“ ம்ம்ச்…பாரதி நிமிர்ந்து என்னைப் பாரு…. என்னன்னு சொன்னா தானே தெரியும்?"

“சொன்னா புரிஞ்சிக்க அருண்..நீ‌ போ..” என்றாள் மீண்டும்.

“ நீ எழுந்திரு…” என அவளது கையைப் பிடித்து நிற்க வைத்தவன்‌ நாற்காலியில் ஒட்டியிருந்த உதிரத்தை கண்டு திகைத்தான்.

“பா...பாரதி…என்னது…இரத்தம்?” என்றவனது வார்த்தைகள் தடுமாறியது.

“ ம்ம்ச்….போய் தொலையேன் டா…பீரியட்ஸ் ஆகிடுச்சு. ப்ளீட் ஆகுது.‌ இன்னைக்குன்னு பார்த்து எதுவும் கொண்டு வரல…நீ வேற‌ ஏன்டா வந்து வந்து நொய்யு.. நொய்யுங்குற. எப்படி எழுந்துக்கறதுன்னு தெரியாம தான் உக்காந்துட்டு இருந்தேன். நீ வேற…போய் தொலை. வயிறு வேற வலிச்சு தொலையுது…அம்மா…” என வேதனையில் கத்தி விட்டு வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.

அருகிலிருந்தவர்கள்‌ என்னவென்று எட்டிப் பார்த்தனர்.

அவளை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது.

“ ப்ரீத்தி…. கொஞ்சம் இங்க‌ வாயேன்..” என்றழைத்தவன் அவளிடம் விஷயத்தை கூறி அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வரச் சொன்னான்.

அலுவலகத்திற்கு அருகிலேயே மருந்தகம் இருந்ததால் ப்ரீத்தி வாங்கி வந்து விட்டாள்.

அவளே பாரதியை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு கழிப்பறைக்கு கூட்டிச் சென்று வந்தாள்.

அவள் அமர்ந்திருந்த நாற்காலியை எவ்விதமான முகச்சுளிப்புய் இல்லாமல் அருகிலிருநத பழைய துணியை எடுத்து சுத்தம் செய்து கிருமி நாசினி கொண்டு துடைத்தான்..

வெளியே நடப்பதனைத்தையும் தனதறையிலிருந்து பார்த்த நந்தினி பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருந்தாள்.

பாரதியின் மனமோ மொத்தமாக அருண்மொழியிடம் சரணடைந்தது.

அவளது கால்சட்டையின் பின்புறம் முழுவதும் உதரத்தினால் நனைந்திருந்ததை அவனால் உணர முடிந்தது.

இப்படியே அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது என நினைத்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது சட்டையை கழட்டி அவளிடம் கொடுத்து அணியச் சொல்லி விட்டு, “டேய் அமுதா…நந்தினி மேடம்‌ கிட்ட எனக்கு ஒரு ஒன் ஹவர் பர்மிஷனும் பாரதிக்கு லீவும் சொல்லிடு” என்று கூறி விட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பாரதிக்கு தாய் தந்தை என யாரும் இல்லை ஆஷ்ரமத்தில் வளர்ந்தவள்.

ஸ்காலர்ஷிப்பில் நன்றாகப் படித்து கல்லூரி மூலமாக கேம்பஸில் தேர்வாகி வந்திருந்தாள்.

அருண்மொழி பணிக்குச் சேர்ந்த வருடம் தான் அவளும் புதிதாக சேர்ந்திருந்தாள்.

ஆரம்பத்திலிருந்தே இருவரது எண்ண அலைகள் ஒத்துப் போனதால் அவனுடன் நல்ல நட்புணர்வு அவளுக்கு இருந்தது.

நல்ல நண்பனாக மட்டுமே பார்க்க ஆரம்பித்திருந்தவளின் பார்வை அவளையறியாமலேயே காதலாக மாறியிருந்தது..

அவனது அன்பும்‌ பாசமும், அனைவருடனும் பழகும் முறையும் கண்ணியம் தவறாத அவனது பார்வையும், குறும்பு‌ப்பேச்சும்‌ , அலட்டல் இல்லாத இளமைத் துள்ளும் அவனது அழகும் அவளை வெகுவாக கவர்ந்து விட்டது.

ஆனால் என்ன செய்வது அவன் தான் நந்தினியின் பெயரை தாராக மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருக்கின்றனே..! அவளது காதல் உள்ளுக்குள்ளே புதைக்கப்பட்டது.

அவ்வபோது உள்ளுக்குள் இருக்கும் காதல் தலை தூக்கி அவளை நிலை குலைய தான் செய்யும்.

அவனிடம் சாதாரணமாக பேசுவதற்குள் அவளுக்கு போதும்போதுமென்றாகி விடும்.

மற்ற ஆண்களிடம்‌ எகிறிக் கொண்டு வரும் பாரதி அருண்மொழியிடம் மட்டும்‌ அமைதியாகி விடுவாள்.

அவனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவளுக்கு பல்வேறு எண்ணங்கள் அலைகழிக்க. ஒரு. வழியாக தன்னுடயை வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

வரும் வழியில் ஒரு கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வேறு சட்டையை வாங்கி அணிந்து கொண்டான்.

அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் என அனைத்தும் வாங்கிக் கொண்டான்.

“ஏய்…ப்ரூஸ் லீ…நீ இப்படி டல்லா இருக்குறது நல்லாவே இல்லை. டேப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு. மதியத்துக்கு ஏதாவது ஆர்டர் போட்டுடுறேன். நல்லா சாப்டுட்டு திரும்பும் தூங்கு. நாளைக்கு முடிஞ்சா வா. இல்லைன்னா ரெஸ்ட் எடு . நான் கிளம்புறேன். பை…” என்று கூறி வாகனத்தை இயக்கினான்.

“அருண்…” என மெல்லிய குரலில் அழைத்தாள்.

அவனோ அவள்‌ யாரையோ அழைக்கின்றாள் என நினைத்து தனக்கு பின்னால் திரும்பிப் பார்க்க, அவனது தோளினைத் தட்டியவள், "உன்னை தான் கூப்பிட்டேன் ..” என்றாள்.

“ ஓ….என்னைய நீ தான் கூப்பிட்டியா? சாஃப்ட்டா கூப்ட்டியா…அதான் கன்ஃபியூஸ் ஆகிட்டேன். யாரோ மாதிரி இருந்தது. நீ‌ ப்ரூஸ் லீ மாதிரி கூப்பிட்டா தான் நல்லா இருக்கு.இந்த டல் ஃபேஸ் உனக்கு செட் ஆகலை…” என்றான்.

“ டேய்‌‌…எருமை என்னைய கொஞ்சம் பேச விடுடா..” என்றாள் கடுப்புடன்.

“ஹான்…என்ன சொல்லு..எதுக்கு கூப்பிட்ட?” என்றான் ஹெல்மெட்டை மாட்டியவாறே.

அவனை காதலுடன் பார்த்தவள், "ரொம்ப தேங்க்ஸ் டா. யூ ஆர் சோ கேரிங்.. திரும்பவும் சொல்றேன் உன்னைய கட்டிக்கப் போறவ ரொம்ப கொடுத்து வச்சவ டா…” என்றாள்.

ஹெல்மெட்டை லேசாக தூக்கி அவளை பார்த்தவன் சின்னச் சிரிப்புடன் ,“தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட். நீன்னு இல்ல வேற யாரா இருந்தாலும் ஹெல்ப் பண்ணிருப்பேன். பலனை எதிர்பார்க்காம உதவி செய்யணும். அது நாம செய்யற உதவிக்கு அழகு. ஓகே….பை.டேக் கேர்.” என்றவன் தனது ராயல் என்ஃபீல்டை கிளப்பிக் கொண்டு சென்றான்.

அவன் சென்ற திசையையையே பார்த்துக் கொண்டிருந்தவள் சிறிய புன்னகையுடன் வீட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அலுவலகத்திற்கு வந்த அருண்மொழி அன்று முடிக்க வேண்டிய வேலைகளை மளமளவென ஆரம்பித்தான்.

அவனது தனிப்பட்ட அலைப்பேசி இணைப்பிற்கு அழைத்தாள் நந்தினி.

“ கம் டு மை கேபின் அருண்மொழி “ என்றாள்.

“எஸ் மேம்…” என்றவன்‌ எழுந்து அவளறைக்குச் சென்றான்.

அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவனை மேலும் கீழுமாக பார்த்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ மேடம் நா என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன். இப்படி குறுகுறுன்னு பாக்குறீங்க” என்றான் சிரியாமலேயே.

அவனை அலட்சியமாக பார்த்தவள் , "நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம நேத்து ஃபார்ட்டில ட்ரிங்க்ஸ் எடுக்க நீங்க ஹெல்ப் பண்ணிருக்கீங்க. தேவையில்லாம அதை நான் குடிச்சி தலைவலி வந்தது தான் மிச்சம். யாரைக் கேட்டு இதெல்லாம் ஏற்பாடு பண்ணிருந்தீங்க? அப்பறம் ரொம்ப நல்லவரு மாதிரி என்னை கொண்டு வந்து வீட்டுல விட்டாச்சு. பண்ணுன தப்பை மறைக்க என்ன‌ வேணாலும் பண்ணுவீங்க போல. ஸ்டாப்ஃஸ் முன்னாடி என் ‌மானமே போச்சு. எல்லார் முன்னாடியும் அசிங்கமா போச்சு . உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணுறீங்க. இதை இப்படியே விட்டா சரி பட்டு வராது. உங்களை ஒன்‌ மன்த் சஸ்பென்ட் பண்ணுறேன். போதும் நீங்க வேலை பார்த்த லட்சணம் . சஸ்பென்ஷன் லெட்டரை உங்க மெயிலுக்கு அனுப்புறேன். இப்ப நீங்க போகலாம். உங்களோட எந்த விளக்கமும் எனக்கு தேவையில்ல .” என்றாள்.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(10)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
யாரா இருந்தாலும் அ‌வர்கள் பக்கம் சொல்கிற வாதத்தை கேட்க வேண்டும். இந்த நந்தினி இப்படி செய்யலாமா. அவளுக்கு டூரிங்ஸ் அடிச்சது பெரிது இல்லை அவன் பாரதியை டேக் கேர் பண்றது தான் காரணம்
 
  • Like
Reactions: STN46

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
யாரா இருந்தாலும் அ‌வர்கள் பக்கம் சொல்கிற வாதத்தை கேட்க வேண்டும். இந்த நந்தினி இப்படி செய்யலாமா. அவளுக்கு டூரிங்ஸ் அடிச்சது பெரிது இல்லை அவன் பாரதியை டேக் கேர் பண்றது தான் காரணம்
ஆமாம்