அத்தியாயம் - 19
துறைமுகத்தில் மகிழுந்தில் ஏறுவதற்கு முன்பு வாகன ஓட்டி அவளது பெயரையும் ஊரையும் கேட்டதோடு சரி . அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை.
துறைமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணம்.
அவளும் எதைப்பற்றியும் கேட்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
மனம் முழுவதும் தந்தையின் உடல்நிலை சீராக வேண்டும். சீக்கிரம் புதிய நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வியாபித்திருந்தது.
விலையுயர்ந்த கார் அப்பிரம்மாண்டமான அரண்மனையின் வாசலில் வந்து நின்றது.
“ மேம்…வந்துட்டோம் நீங்க இறங்கலாம்."என்றார் ஓட்டுநர்.
சிந்தனையோட்டம் தடை பட மகிழுந்திலிருந்து இறங்கி சுற்றிலும் பார்த்தாள்.
கிட்டத்தட்ட சிறிய தீவு போலிருந்தது அந்த இடம்.
சிறிய ஊர் போலும். சுற்றிலும் கடற்கரை .
அதற்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த அரண்மனை.
‘கம்பெனி இங்க இருக்குற மாதிரியே தெரியலையே..? மாத்தி வந்துட்டோமா?’ என மனதினுள் நினைத்துக் கொண்டே தயங்கி நின்றவளின் மனதை படித்தவன் போல ஓட்டுநர் அவளைப் பார்த்து, "உள்ள சுகன்யா மேடம் இருப்பாங்க.அவங்க உங்களை கம்பெனிக்கு கூட்டிட்டு போவாங்க..” என்று கூறி விட்டு மகிழுந்தை ஓட்டிச் சென்றான்.
வெள்ளை பளிங்கினால் ஆன அந்த மாளிகையை நிமிர்ந்து பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்.
குளிரூட்டி இல்லாமலேயே சில்லென்று குளிர்ச்சியுடன் விசாலாமாக பரந்து விரிந்திருந்தது தரைத்தளம்.
ஆங்காங்கே வெல்வெட்டினால் ஆன நீள் சாய்விருக்கை போடப்பட்டிருந்தது.
காற்றோட்டமாகவும் அதே சமயம் குளிர்ச்சியாகவும் வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் இருந்தது அவ்விடம்.
பிரம்மாண்டமும் கலைநயமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது அரண்மனை எங்கும்.
ஒரு கணம் அதன் அழகைப் பார்த்து தலைச்சுற்றி தான் போனது நந்தனிக்கு.
அமர மனமில்லாமல் நின்றே கொண்டே இருந்தாள்.
அவள் மட்டுமே தனித்து நின்றிருந்தாள். இடமே நிசப்தமாக இருந்தது.
“ ஏய்…யார் நீ…? உனக்கு என்ன வேணும்? நீ பாட்டுக்கு திறந்த வீட்டுல ஏதோ வந்த மாதிரி வந்து நிக்கற?” என்றபடி வந்தார் மந்தாகினி..
இம்மாதிரியான பேச்சுக்களையெல்லாம் அவள் கேட்டதே இல்லையென்பதால் ஒரு பக்கம் கோபமாகவும் மறுபக்கம் அவமானமாகவும் இருந்தது.
“ கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம நீ பாட்டுக்கு மரம் மாதிரி நிக்குற?” மேலும் கூரிய வார்த்தைகளை வீசினார்.
“ அது..நான்…" என்றவளுக்கு அதற்கு மேல் பேச நா எழவில்லை. அழுகை வந்துவிடும் போல இருந்தது.
இதுவரை எல்லாரையும் மிரட்டியே பழக்கப்பட்டவளுக்கு இம்மாதிரியான சூழ்நிலை அசௌகர்யத்தை ஏற்படுத்தியது.
சூழ்நிலையை கையாளத் தெரியாமல் நின்றிருந்தாள்.
“ஏய்..என்ன திமிரு டி உனக்கு…பதில்..” என்று கூறி கொண்டு இருக்கும் போதே, "மந்தா அத்தை…” என்ற குரல் கேட்டதும் அவரது வாய் தானாகவே மூடிக் கொண்டது.
ஆளுமையான குரல் பழக்கப்பட்டதாக தோன்ற விலுக்கென்று நிமிர்ந்து மேல் தளத்தை பார்த்தாள்.
கண்களில் குளிர்கண்ணாடியுடன் கருப்பு நிற சட்டையும் அதே நிறத்தில் கால்சட்டையும் அணிந்து முற்றிலும் உடல்மொழியே மாறி மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அருண்மொழி.
அவனருகே பாரதியும் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தவளின் விழிகள் கலவையான உணர்வுகளை பிரதிபலித்தது.
குளிர் கண்ணாடி அணிந்திருந்ததால் அவளால் அவனது உணர்வுகளை படிக்க இயலவில்லை .
மெதுவாக கீழிறங்கி வந்து நின்றவன் குளிர் கண்ணாடியை கழற்றிவிட்டு அவளைப் பார்த்தான்.
“ நான் தான் அவங்களை வரச்சொன்னேன். நம்ப எஸ்.வி ஸ்டீல்ஸோட புது டைரக்டர் அவங்க. நான் பேசிக்குறேன். நீங்க போங்க” என்று கூறி விட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தாள்.
விழிகளால் அவனை அளவெடுத்து கொண்டிருந்தாள்.
மூன்றாண்டுகளில் எத்தனை மாற்றங்கள் அவனிடம்.
இளமைத் துள்ளலுடன் குறும்பும் கேலியும் நிறைந்திருக்கும் அவனது விழிகளில் வெறுமையும் ஒரு வித அழுத்தமும் இருந்தது.
இலகுத்தன்மை மறைந்து ஒரு வித கடினத்தன்மை வந்திருந்து.
இறுகிய தாடையும், கூரிய விழிகளும் ‘என்னை நெருங்காதே..!’ என்று சொல்வது போல் இருந்தது.
“ என்ன அப்படியே பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உங்களுக்கான ஆஃபர் லெட்டர் எங்க? அப்பறம் உங்களோட சர்ட்டிபிக்கேட்ஸை எல்லாம் சுகன்யா கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிடுங்க. நீங்க என்னென்ன பண்ணனும். எங்க தங்கணும் , வேலை நேரம் என்னங்கறதையெல்லாம் சுகன்யா சொல்வாங்க…” என்றவன் “தென் முன் அனுபவம் இருக்கா?” என மொட்டையாக கேட்டான்.
அவளோ , "வாட்...என்ன சொன்னீங்க?” என சீறினாள்.
அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ நா வெர்க் எக்ஸ்பீரியன்ஸை தான் சொன்னேன்…” என்றவன் குளிர் கண்ணாடியை கழற்றி ஊதி விட்டு அணிந்தவன் , "பாரதி வா போகலாம்…” என அவளை அழைத்து கொண்டு அலுவலக அறைக்குச் சென்றான்.
அவன் அலுவலக அறைக்குள் செல்லும் வரை இருவரையும் பின் தொடர்ந்தது நந்தினியின் பார்வை .
அதில் ஏக்கமா? கோபமா? ஏமாற்றமா?வலியா? என பிரித்தறியாத ஏதோ ஒன்று இருந்தது.
நந்தனியினருகில் வந்து நின்ற சுகன்யா அவளது தோளைத் தொட்டாள்.
“ ஐ யம் சுகன்யா மேடம்…நீங்க பின்னாடி இருக்குற கெஸ்ட் ஹவுஸ் ல என்னோட தங்கிக்கலாம். நாளைக்கு காலையில நம்ம கம்பெனிக்கு போகலாம். உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா என் கிட்ட கேளுங்க.” என்று கூறி கொண்டு இருக்கும் போதே, "ஹலோ…ஓ..ஓஓ…எனக்கு ஒரு டவுட் இருக்கு. நான் கேட்கலாமா? “ என்றபடியே இருவருக்கும் இடையே வந்து நின்றான் இளமாறன்.
நந்தினியை சற்று உரசியபடியே இளமாறன் நின்று கொண்டிருக்க, சுகன்யாவோ முகத்தை சுளித்தாள்.
நந்தினி அவனை முறைத்துக் கொண்டே சற்று நகர்ந்து நிற்க அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சுற்றி வந்தவன், "யாரிந்த ப்யூட்டி நம்ம சிட்டில?” என்றவன் விசிலடித்து கொண்டே சுகன்யாவின் அருகில் சென்றான்.
அவள் பதிலேதும் கூறாமல் அமைதியாக நிற்கவே,
“ ஏன் எனக்கு பதில் சொல்ல மாட்டீங்களா?” என்றான் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டே.
தொளதொளா கால்சட்டையும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் பூக்கள் போட்ட சட்டையும் , காதில் கடுக்கணும் அணிந்திருந்தான் இளமாறன்.
உல்லாச ப்ரியனான அவன் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதேயில்லை.
அவனைப் பற்றியும் ,அவன் எப்போது வருகின்றான் போகின்றான்? என்ன செய்கின்றான்? என தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை.
அதுவும் வீர ராஜசிம்மருக்கு அவனைக் கண்டாலே கோபம் உச்சத்தை தொடும்.
மந்தாகினி மட்டுமே அவனை திட்டிக் கொண்டே இருப்பார்.
அவற்றையெல்லாம் அவன் செவிமடுத்தே கேட்பதில்லை.
இளமாறன் கேட்ட கேள்விக்கு
இருபெண்களுமே பதில் கூறாமல் நின்றிருந்தார்கள்.
கடுப்பான இளமாறன் நந்தினியின் அருகில் சென்று ," ரொம்பவே அழகா இருக்க ப்யூட்டி . ஃப்ரீயா இருந்தா டேட்டிங் போகலாமா? இங்க பக்கத்துல குட்டி குட்டித் தீவா நிறைய இருக்கு. வீ கேன் ஹேவ் ஃபன் யா..”என்றபடி அவளது தோளில் கையைப் போடப் போக சட்டென்று அவனது கரத்தை பிடித்து இழுத்தது ஒரு கரம்.
நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அலட்சியம் தெரிந்தது.
“வந்துட்டியா நீ. ஏன்டா…உனக்கு ஏன் டா புகைச்சல்? நான் பாட்டுக்கு ஜாலியா லைஃப்பை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்.அதான் தாத்தா உனக்கு இந்த ராஜ பரம்பரையோட அதிகாரத்தையும் எல்லாத்தையும் கட்டிக்காக்குற பொறுப்பையும் குடுத்துருக்காருல.. அதைப் போய் பாரு. தேவையில்லாம ஏன்டா என் வழியில குறுக்க வர்ற? எனக்குத் தான் அதிகாரம் பொறுப்பு இதுலயெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்லிட்டு விலகிட்டேன்ல…நீ பாட்டுக்கு போய் இந்த தீவுல உள்ள மக்களுக்கு நல்லது பண்ணு, கம்பெனிய எல்லாம் நிர்வாகம் பண்ணு. நா ஏதாவது கேக்குறேனா? அது போல நான் இந்த மாதிரி ப்யூட்டி ஃபுல் கேர்ள்ஸ் கூட ஃப்ளர்ட் பண்ணும் போது நீ வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காதே மேன்…கொஞ்சம் கூட மேனர்ஸ். இல்லாம…” என முகத்தை சுளித்துக் கொண்டே சுகன்யாவை பார்த்துக் கண்ணடித்தான்.
அவளோ காலிலுள்ள செருப்பை கண்களால் ஜாடை காட்ட . அவனோ இதழ் குவித்து முத்தமிடுவது போல சைகை செய்து விட்டு நந்தினிக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக கொடுத்து விட்டு சென்றான்.
அன்று இரவு சுகன்யா மற்றும் அங்கு பணிபுரியும் சில பெண்களுடன் உணவு உண்டுவிட்டு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகள் சென்றாள் நந்தினி.
ஊழியர்களுடன் ஊழியராக தானும் உணவருந்தி விட்டு வந்தது ஒரு மாதிரியாக இருந்தாலும் அதெல்லாம் அவளது சிந்தைக்குள் பதியவில்லை.
அவளது மூளையை குடைந்து கொண்டிருந்த ஒரே கேள்வி.
இத்தனை கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் சகல வசதியுடன் இருப்பவன் எதற்காக ஒரு சாதாரண ஊழியனாக தன்னுடைய நிறுவனத்தில் வந்து பணிபுரிய வேண்டும் என்பது தான்..
அவனை தான் நடத்திய விதம் வேறு நினைவுக்கு வந்து மனதை பிசைந்தது.
யோசனையுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவளினருகே வந்து நின்றாள் சுகன்யா.
“என்ன மேடம் ..? தூங்கலயா?”
“புது இடம்.. அதான் தூக்கம் வரல..” என்றாள்.
இருவரிடமும் சில கணங்கள் மௌனம்
அருண்மொழியை பற்றி எவ்வாறு இவளிடம் கேட்பது? குடும்ப விஷயங்களை பேசுவது சரியாக இருக்குமா ?’ என்ற யோசனை அவளுக்கு.
“என்ன யோசிக்கிறீங்க?” என்றாள் சுகன்யா.
“ஒண்ணுமில்லை…இந்த ஊர்ல இப்படி ஒரு தீவா? அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவங்க அந்த இடத்துல இப்படி ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில இக்காங்களே.? இவங்க எல்லாம் எவ்வளவு நாளா இங்க இருக்காங்க?" என்றாள்.
“இந்த தீவே இவங்களோடது தான். ராஜசிம்மர் அய்யாவோட அப்பா வியாபார விஷயமாக இந்த பக்கம் வந்திருந்தப்ப இந்த இடம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சி போயிருக்கு. கொஞ்ச நாள் இங்கேயே தங்கியிருந்துட்டு போலாம்னு நினைச்சப்ப இந்த தீவில இருக்குற மக்கள் ரொம்ப பசி பட்டினி வறுமைன்னு கஷ்டப்பட்டுருக்காங்க. ஆனா ரொம்பவே திறமைசாலிகளா இருந்தாங்க. இங்க நஷ்டத்துல ஓடிட்டு இருந்த கம்பெனிய அவங்க வாங்கி சில மாறுதல்களை செஞ்சு நல்லவிதமா லாபத்தை கொண்டு வந்தாரு. அதுக்கு சில வருஷங்கள் ஆச்சு… இதுக்கு நடுவுலயே இங்க இருக்குற மக்களுக்கு படிப்பறிவு, அடிப்படை வசதி, எல்லாம் தன்னோடு சொந்த செலவுல செஞ்சி வச்சாரு. இங்க இருந்த ஏழைப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அது அவங்களோட அப்பா அம்மாவுக்கு பிடிக்காம போச்சு. அதனால அவருக்கு உண்டான சொத்துக்களை மட்டும் பிரிச்சு கொடுத்து அவரை விலக்கி வச்சிட்டாங்க.அவரோட சொத்துக்களை வச்சும் தெரிஞ்ச நண்பர்களோடு உதவியாலும் இங்கயே வீடு கட்டி குடியேறிட்டாரு. இந்த ஊரோட கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டாரு. தன்னோடு சொத்துக்களை வச்சி பள்ளிக்கூடம், ஹாஸ்பிட்டல்ன்னு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செஞ்சி கொடுத்தாரு. அவரோட குணம் ரொம்பவே பிடிச்சு போய் அவரை கொண்டாட ஆரம்பிச்சாட்டாங்க. தன்னோட திறமையால இன்னும் ரெண்டு மூணு கம்பெனி ஆரம்பிச்சு இந்த இடத்தோட நிலைமையை மாத்திட்டாரு. முதல்ல சாதாரணமான வீடா தான் இந்த அரண்மனை இருந்தது. ஊர்ல அவங்க அம்மா அப்பா அப்பறம் அவரோட ஒரே அண்ணனும் இறந்துட்டதுனால எல்லா சொத்துக்களும் ராஜ சிம்மர் அய்யாவோட அப்பாவுக்கு வந்துடுச்சு…மக்கள் செல்வாக்குல தனக்குன்னு ஒரு சின்ன ஊரையே உருவாக்கி அதை ஆள ஆரம்பிச்சிட்டாரு. இந்த ஊர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் எல்லாமே செஞ்சிட்டு இருக்காரு. ராஜ சிம்மர் அய்யாவும் இங்க தான் பிறந்தாங்க. அவருக்கு கல்யாணம் ஆகி மந்தாகினி அம்மாவும் இங்க தான் பொறந்தாங்க. என்ன தான் இந்த ஊர் பழக்கவழக்கங்கள் தெரிஞ்சிருந்தாலுமே எல்லாருமே நம்மோட கலாச்சாரத்தை தான் பாலோவ் பண்ணுவாங்க. ராஜசிம்மர் அய்யாவும் திறமையானவரு. இங்கயும் தமிழ்நாட்டுலயும் ரெண்டு மூணு கம்பெனி அவங்களுக்கு சொந்தமா இருக்கு. இங்க முக்கியமானதே ஸ்டீல் அண்ட் மெஷினரி கம்பெனி தான். ஆனா நாளைக்கு நீங்க ஜாயின் பண்ணப்போறது அருண்மொழி சாரோட ஸ்டீல் மேனுபேக்சரிங் கம்பெனில தான். நீங்க டைரக்டா அவருக்கு தான் மேடம் ரிப்போர்ட் பண்ணனும். மேக்சிமம் அவரு அங்க தான் இருப்பாரு.அப்பப்ப மெஷினரீஸ் கம்பெனிக்கும் போயிட்டு வருவாரு.” என்றாள்.
'சுத்தம்…அருண்மொழி கிட்டயே நேரடியா ரிப்போர்ட் பண்ணனுமா?’ என நொந்து தான் போனாள்.

Last edited:
Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே...!(19)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.