தகிக்காதே குளிர்நிலவே...!(26)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -26

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தான் மாறவர்மன்.

இத்தாலிய மொழியில் பேசிக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள்.

“தலையில பலமா அடி பட்டுருக்கு.. ஸ்கேன் செஞ்சு பாத்துட்டு ஃபர்தரா ட்ரீட்மென்ட்டை புரோசீட் பண்ணலாம். ஹெவி ஃப்ளாட் லாஸ் ஆகியிருக்குறதுனால. ஃப்ள‌ட் ஏறிட்டு இருக்கு. டூ டேஸ் எங்களோட அபசர்வேஷன்லயே இருக்கட்டும்…அப்பறம் என்ன பண்றதுன்னு டிசிஷன் எடுத்துக்கலாம்…” என்று அருண்மொழியிடம் கூறினார்.

“போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா?” என்ற இளமாறனை முறைத்தான் அருண்மொழி.

“ஹலோ…! சும்மா சும்மா முறைக்காத…நீ எதுக்கு முறைக்குறன்னு எனக்குப் புரியுது…வர்மனும் போலீஸ் தான்…
((பொலிசியா டி ஸ்டேட்டோ (polizia d statao)) இல்லைங்கல… அவன் இப்ப டிபார்ட்மெண்ட் ல இல்லைன்னாலும் அவனோட உயிருக்கும் ஆபத்து வந்திருக்கு தான?” என்றான்.

ஆம்..! மாறவர்மன் இத்தாலி நாட்டின் இருக்கும் முக்கிய காவல்துறை பிரிவில் ஒன்றான மாநில காவல்துறையில் உயர் பதவியில் இருந்தவன்.

மனநிலை பாதிப்பின் காரணமாக ஆறு வருடங்களுக்கு முன்பாக பணியிலிருந்து வர்மனை விலக்கி வைத்து விட்டனர்.

இளமாறனின் கேள்விக்கு அருண்மொழியிடம் பதிலில்லை.

யோசனையுடன்,” சரி இன்ஃபார்ம் பண்ணிடலாம். கேப்ரியல் அங்கிள் கிட்ட பேசிடுறேன்” என்றான்.

அரண்மனையில் தவிப்புடன் அமர்ந்திருந்த பாரதிக்கு மாறவர்மனின் முகமே மனக்கண்ணில் இம்சித்தது.

வீர ராஜசிம்மர் மட்டும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

வேகமாக அவரருகில் சென்றவள் , "வர்மன் இப்ப எப்படி இருக்காரு? கண்ணு முழிச்சிட்டாரா?” என்றாள் படபடப்பாக.

அவளது முகத்தில் தெரிந்த தவிப்பைக் குறித்து கொண்டவர், "இல்லமா…இன்னும் மயக்கத்துல தான் இருக்கான். தலையில நல்ல அடி. நிறையவே ஃப்ளாட் லாஸ் ஆகிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க…ஸ்கேன் பண்ணி பாத்துட்டு சொல்றேனுக்காங்க…” என்று கூறி விட்டு தனது அறைக்குச் சென்று விட்டார்.

பத்து நாட்கள் கடந்திருந்தது.

அருண்மொழி நிறுவனத்திற்கு செல்லவில்லை.மாறவர்மன் அருகிலேயே இருந்து அவனைப் பார்த்துக் கொண்டான்.

நந்தினியிடம் வேலைத் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மூத்த அதிகாரி அலெக்ஸூடம் கேட்குமாறு கூறியிருந்தான்.

இடையில் ஒருநாள் பாரதி மருத்தவமனைக்கு வந்து வர்மனை பார்த்து விட்டுச் சென்றாள்.

புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தவன் எதுவும் பேசவில்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தவனை அருண்மொழியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

மருத்துவ பரிசோதனையில் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறி விட்டனர்.

“ வர்மா…இன்னைக்கு உன் கிட்ட ஆபிஸர்ஸ் வந்து சில கேள்விகள் கேப்பாங்க…அதுக்கு கோபப்படாம நீ பதில் சொல்லணும்… நான் சொல்றது உனக்கும் புரியுதா? “ என்று கூறி விட்டு அவனது முகத்தை பார்த்தான்.

வர்மனின் பார்வை கூர்மையடைந்தது.

“ எந்த ஆபிஸர்ஸ்?” என்றான் தெளிவாக.

“ பொலீஸ் ஆபிஸர்ஸ்.."

“யாரு…கேப்போ டெல்லா பொலிசியால ( capo della polizia) (காவல்துறை தலைமை) இருந்தா?”

“ ஆமா..டா…கேப்ரியல் அங்கிளும் எலியோ அங்கிளும் வர்றாங்க…நீ அவங்க கேக்குறதுக்கு கொஞ்சம் யோசிச்சி பதில் சொல்லு…உன்னை அடிச்சவங்க யாருன்னு அட்லீஸ்ட் அடையாளம் காட்டவாவது முடி…யு..மாஆஆஆ.” என்றவனது வார்த்தை பாதியிலேயே நின்றது.

“ டேய்….வர்மா…..இப்ப என்ன சொன்ன... ? திரும்பச் சொல்லு…?” என்றான் படபடப்புடன்.

“ ம்ம்ச்…என்னடா அருண்…என்னத்தை திரும்பச் சொல்றது?” என்றான் சலிப்புடன்.

“ டேய்…அண்ணா..! நான் கேக்குறதுக்கு நீ கரெக்டா பதில் சொல்லிட்டு இருக்க டா..” என்றான் ஆச்சர்யத்துடன்.

“ ஏன்…இத்தனை நாளும் எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருந்தது.?” என்றான் நக்கலாக.

ஏதோ கூற வந்தவன் அவனது தெளிவான பேச்சில் அமைதியாக நின்றான்.

“ என்னடா அருண்..? என்னாச்சு ஏன் அமைதியா கிட்ட? கேப்ரியல் அங்கிள் எதுக்கு என்ன பாக்குறதுக்கு வர்றாங்க. எதுக்கு நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்?” என்று கூறி கொண்டு இருக்கும் போதே மூத்த காவல் துறை அதிகாரிகள் வந்துவிட்டனர்.

(அவர்களது உரையாடல் தமிழில்)

“ ஹாய்…யங் மேன்…ஹவ் டூ யூ டூ? எல்லாம் ஓகே வா? வர்மன் இப்ப எப்படி இருக்காரு?”

“வாங்க அங்கிள்…வர்மன் இஸ் ஃபைன்…”

“ நாங்க விசாரிக்கலாமா? அவரோட உடல்நிலை இப்ப சரியா இருக்கு தானே?”

“ நீங்க தாராளமா விசாரணை பண்ணலாம்…” என்றான் அருண்மொழி.

“ ஹலோ…! கோப்ரியல் ஹாய்…எலியோ! ஹவ் ஆர் யூ..? “ என்று ஆரம்பித்த சாதாரணமாக பேசிக் கொண்டே இருந்த வர்மன்
கடைசியாக அவன் விசாரணை மேற்கொண்ட வழக்கினைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

இரு அதிகாரிகளும் திகைத்து போய் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவ்வழக்கு முடிந்து ஆறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

முடிந்து போன வழக்கினைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தவனிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை.

அவர்கள் இருவரும் அருண்மொழியை பார்த்தனர்.

அவர்களை சற்று நேரம் அழைப்பதாக கூறி வெளியே அனுப்பியவன் தேவியின் இறப்பிற்குப் பிறகு நடந்தவற்றை தனக்கு தெரிந்த வரையில் அவனுக்கு எடுத்துக் கூறினான்.

அவனது முகம் குழப்பத்தை தத்தெடுத்தது.

“வர்மா…உன்னை அடிச்சி போட்டவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா? யாருன்னு உனக்கு அடையாளம் காட்டவாவது முடியுமா? யாரோ நம்ப பக்கத்துலயே இருந்து வாட்ச் பண்ணிட்டு தான் இவ்வளவும் செய்றாங்க. யார்னு கண்டு பிடிக்கணும்.” என்றவன் பாரதிக்கு அவன் தேவியின் திருமாங்கல்யத்தை அணிவித்ததை மட்டும் கூறவில்லை.

தாடையை தடவியவன், "அருண்…எனக்கு அவங்க யாருன்னு நியாபகம் வர மாட்டேங்குது. பட் இதை நானே கண்டுபிடிககிறேன்…நம்ம வீட்ல இப்ப புதுசா யாராவது வந்துருக்காங்களா? “ என பாரதியை மனதில் வைத்துக் கொண்டு கேட்டான்.

அருண்மொழியோ நந்தனியை நினைத்துக் கொண்டு, “ ஆமா…நந்தினின்னு ஒரு பொண்ணு வந்துருக்கா…நல்லா இருந்த குடும்பம் திடீர்னு ரொம்பவே நொடிஞ்சி போயிட்டாங்க…தனியா கம்பெனியை வச்சி ரன் பண்ணிட்டு இருந்தா… இப்ப இங்க வேலைக்கு வந்துருக்காங்க…அது மட்டுமில்ல…அந்த பொண்ணை தான் நான் விரும்புறேன்…கல்யாணமும்‌ பண்ணிக்கப்‌ போறேன்..” என பட்டென்று விஷயத்தை உடைத்தான்‌.

அவனது வார்த்தையில் திகைத்து போய் பார்த்தான் வர்மன்.

‘தேவியை போல அச்சு அசலாக இருக்கும் பெண் இவனது காதலியா? ஆனால் தன்னை ஏன் பார்க்க வந்தாள்?’ என பலவகையாக யோசித்து குழப்பிக் கொண்டான்.

கேப்ரியல் மற்றும் எலிவோ வர்மனின் அறையினுள் நுழைந்து அவனிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.

மாறவர்மனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் மனநிலையும் உடல்நிலையும் சீராக உள்ளதென்று கூறினார்கள்.

பலத்த அடியின் காரணமாக தலையில் ஏற்பட்ட அதிர்வில் அவனது பழைய நியாபகங்கள் மெல்ல திரும்பியுள்ளது என்றனர்.

ஏற்கனவே அவனுக்கு அளித்த கொண்டிருந்த தீவிர சிகிச்சையின் முன்னேற்றத்தினாலும் மனப்பிறழ்விலிருந்து நன்றாகவே மீண்டு வந்து விட்டான் என்றார்.

இனி அவனால் பழைய நியாபகங்களை
ஒன்றன் பின் ஒன்றாக கோர்வையாக நியாயப்படுத்த முடியும் என்று கூறி விட்டனர்.

மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை முழுமையடைந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பலாம் என்றனர்.

சுதர்சன ராஜசிம்மர் மற்றும் விஜயராணியின் புறமும் சிறிதும் மாறவர்மன் திரும்பவில்லை.

அவர்கள் அவனிடம் பேச முயன்றனர். ஆனால் அவர்களின் பேச்சை கேட்கும் நிலையில் அவனில்லை.

“ உங்க டார்ச்சர் தாங்காம தான் அவ மனசு வெறுத்து போய் வீட்டை விட்டு வெளியே போனா. அன்னைக்கு நீங்க அவளை கண்டபடி பேசாம இருந்துருந்தா என் தேவி எனை விட்டு போயிருக்க மாட்டா…என் தேவியை என்னால மறக்க முடியல…அவ நினைப்பு இருக்குற வரைக்கும் உங்க கிட்ட என்னால பேச முடியாது.உங்களை மன்னிக்கவும் மாட்டேன்.” என் முகத்தில் அறைந்தார் போல பேசிவிட்டான்.

கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டிற்கு வந்தவர்கள் வீர ராஜசிம்மரிடம் மாறவர்மனுக்கு நினைவு திரும்பியதையும் அவன் தங்களிடம் கூறியதையும் கூறினர்.

“ இப்ப என்ன பண்றது மாமா? அவனால நிச்சயமா தேவியை மறக்க முடியாதுன்னு நினைக்குறேன்‌. நாம தான் மாமா அந்த பொண்ணு பாரதியோட வாழ்க்கையை பாழ் பண்ணிட்டு இருக்கோம்னு நினைக்குறேன் . பேசாம அந்த பொண்ணை தாலியை கழட்டி வச்சிட்டு இந்தியாவுக்கு கிளம்பச் சொல்லுங்க…அந்தப் பொண்ணாவது வேற நல்ல வாழ்க்கை அமைச்சுகிட்டும். அவன் மனசுல தேவி மட்டும் தான் இருக்கா…. இனியும் இருப்பா..தேவையில்லாம பாரதியை தேவின்னு சொல்லி நடிக்க வைக்க வேணாம். உண்மைத் தெரிஞ்சா வர்மன் கோபப்படுறதுக்கு அதிகமா வாய்ப்புகள் இருக்கு.” என்றார் விஜயராணி.

ஏதோ கேட்பதற்காக வந்த பாரதியின் காதில் விஜயராணி பேசியதைனைத்தும் விழுந்து விட்டது.

அவர் பேசியதை மட்டும் கேட்டவளுக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வர சத்தமின்றி இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

வீர ராஜசிம்மரோ , "விஜயா..! கொஞ்சம் அமைதியா இரு…தேவையில்லாததை பேசி குழப்பம் பண்ணாத. பொறுமையா நாம மாறவர்மன் கிட்ட பேசுவோம். அவனுக்கு விருப்பமா இருந்தா அந்த பொண்ணு பாரதியையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்…அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத.. ஏற்கனவே தேவி விஷயத்துல நீ நிறைய பண்ணிட்ட…திரும்பவும் ஏதாவது பண்ணி பிரச்சினை பண்ணிடாத…அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்று கூறி விட்டுச் சென்றார்.

சில நாட்களில் மாறவர்மன் மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்கு வந்துவிட்டான்.

காயங்கள் ஓரளவிற்கு ஆறிவிட்டது..

தோட்டத்திற்கு வந்தவனது பார்வையில் விழுந்தனர் பாரதி மற்றும் அருண்மொழி.

பாரதி ஏதோ பேசிக்கொண்டிருக்க அருண்மொழி அவளது தலையில் கொட்டி ஏதோ கூற கண்களில் நீர் வர அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.

சிரிக்கும் போது தேவியைப் போலவே அவளுக்கும் கன்னத்தில் குழி விழுந்தது .

அதைத் தொட்டு பார்க்க துடித்த கரங்களை இறுக மூடிக் கொண்டு வேகமாக மீண்டும் அறைக்குள்ளே வந்துவிட்டான்.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே...!(26)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kalai Karthi

Active member
Sep 21, 2025
405
138
43
Madurai
அருண் நீ பண்ணுகிற வேலையை எல்லோரையும் வருத்தப்பட வைக்குது.பாரதியை பற்றி வர்மனுக்கு சொல்லவில்லை நந்தினியிடம் பாரதி பற்றி சொல்லவில்லை டூ மச்.
 
  • Like
Reactions: STN46

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அட குழப்பத்துக்கு பிறந்தவனே.....
ஏன் டா இப்படி எல்லாரையும் குழப்பி எடுக்கற😔😔😔😔