உலா வரும் வெண்ணிலா - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,483
113

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 12


"அஞ்சனாக்காக தான் இங்க நான் வந்தேனே!" என்ற அதிரன் சொல்லில் அசைய மறந்து அமர்ந்துவிட்டான் தாமஸ்.

"என்ன சார் சொல்றிங்க?" என்றவனுக்கு சுத்தமாய் அதை நம்ப முடியவில்லை.

"ஹ்ம்! அவளுக்காக தான் எல்லாமே. எனக்குன்னு அவ மட்டும் இருந்தா. இப்ப அவளை தேடி தான் நான் வந்திருக்கேன்!" அதிரன் சொல்ல, இமைக்க மறந்து அமர்ந்துவிட்டான் தாமஸ்.

"எப்படி எப்படிலாமோ வாழ நினைச்சேன். இப்படி இங்க நிக்குறேன். இது நல்ல அனுபவம் தான்னாலும் இங்க நான் வந்த காரணம் நல்ல அனுபவம் இல்ல தாமஸ். அதை நினைக்க கூட நான் விரும்பல!" என்றவனை இன்னும் நம்பவா வேண்டாமா என்று பார்த்தான் தாமஸ்.

"கண்ணா என் பெஸ்ட் பிரண்ட். இப்ப இல்ல காலேஜ்லேருந்து அவன் மட்டும் தான் எனக்கு பெஸ்ட் பிரண்ட். அவன் என்னை புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு யாருமே என்னை புரிஞ்சதில்ல.!" அதிரன் சொல்ல,

"அஞ்சனாக்கு உங்களை தெரியுமா? ஆனா அப்படி என்கிட்ட சொன்னதில்ல சார். நான் எதாவது உங்களை பத்தி பேசினா கூட அவ நின்னு பொறுமையா கேட்டதில்ல!" என்றான் தாமஸ்.

எப்படி எப்படி என்று அத்தனை வியப்பு தாமஸ்ஸிடம்.

"அஞ்சனாக்கு தெரியுமாவா? அவளை விட என்னை யாருக்கு நல்லா தெரியும்?" என்றவன் முகத்தில் சிறு புன்னகை.

"சார் நிஜமாவா சொல்றிங்க? என்னால நம்பவே முடியல" தாமஸ் அதிர்வு மாறாமல் கூறினான்.

"நான் ஏன் டா பொய் சொல்றேன் உன்கிட்ட? அதுவும் அஞ்சனா வச்சு? நீ என்கிட்ட கோச்சிகிட்டதால மட்டும் உன்கிட்ட சொல்லல. சொல்ல நேரம் இப்ப தான் அமைஞ்சிருக்கு!" என்றவன்,

"இதை தெரிஞ்சுக்க மதியம் என்னையும் அவளையும் விட்டுட்டு தனியா சாப்பிட்டு இருக்கல்ல நீ?" என்றவன் முறைப்பையும் அசையாமல் கண்டான் தாமஸ்.

"இந்த ஆள் நகருற மாதிரி இல்லை. நம்ம கூடவே தான் வருவார் போல. என்ன டா பண்ணலாம்?" அதிரன் தன் தந்தையைப் பார்த்து தாமஸ்ஸிடம் கேட்க,

"சார்! அஞ்சனா ஏன் அப்புறம் உங்களை தெரியும்னு சொல்லல. அப்புறம் நான் சொல்ற எதையும் அஞ்சனா கேட்கவும் இல்ல?" என்ற தாமஸ்ஸிற்கு தலை வலிக்கும் போலானது.

"அது என் விதி. என்னை விட்டு எங்க போய்டுவான்னு நினைச்சேன். கூட இருக்குறவங்களை கவனிக்காம விட்டுட்டேன். அவங்களை எல்லாம் அப்பவே கவனிச்சிருந்தா...." என்றவன் பல்லைக் கடித்து திரும்பி தொலைவில் இருந்த ஹரிச்சந்திரனைக் கண்டான்.

"அப்போ இந்த கம்பெனி?" தாமஸ் கேட்க,

"என்னோடது தான். நான் தானே வாங்கிருக்கேன்.அப்போ என்னோடது தானே?" என்றவனை குழப்பமாய் தாமஸ் பார்க்க,

"இங்க தான் அஞ்சனா இருக்கா. அவளை தேடி வந்தேன். தேடி வந்தா மட்டும் போதாதே? அவ என்ன பன்றானு கவனிச்சப்ப தான் இங்க ஒர்க் பண்ணினது தெரிஞ்சது. பூபாலன் சார் இந்த கம்பெனியை விட்டுப் போற சிட்டுவேஷன். சோ வாங்கினேன்!" என்றவனை கூடிக் கொண்டே சென்ற அதிர்ச்சியுடன் தான் தாமஸ் பார்த்திருந்தான்.

"அஞ்சனாக்காக தான் இந்த கம்பெனியை கையில எடுத்தீங்களா?"

"ஏன் நம்ப மாட்டுற நீ? சத்தியமா அவளுக்காக தான். தினமும் பார்த்தாலாவது எதாவது முன்னேற்றம் அவகிட்ட வரும்னு நினைச்சேன்" என்றவனை புரியாமல் தாமஸ் காண,

"அங்க இருக்குறாரு இல்ல? அவரு காசுல தான் இந்த கம்பெனியை டேக்ஓவர் பண்ணிக்கிட்டேன். நான் இருக்குற வீட்டுக்கு வாடகை, மெய்ட்க்கு சம்பளம், நான் யூஸ் பண்ற கார் எல்லாம் அவரோட பணத்துல தான்!" என்று சொல்ல,

"நீங்க சொல்ற எதுவும் எனக்கு புரியல சார். அவங்க உங்க அப்பால்ல? அப்போ அவர் பணம்ன்றிங்க?" தாமஸ் கேட்க,

"என் வீட்டுல இருக்க வேண்டாம் வெளில போன்னு சொன்னவர் பணத்தை தான் எடுத்து யூஸ் பண்ணிட்டு இருக்கேன்!" என்று அதிரன் சொல்லவும் வாயில் கைவைத்துவிட்டான் தாமஸ்.

"அப்படி சொன்னாலும் நீ சொன்ன மாதிரி அவர் என் அப்பா. அப்போ பணத்தை யூஸ் பண்ணிக்க எனக்கு ரைட்ஸ் இருக்கு ரைட்? இந்த பணத்தை வச்சு இவங்க ஆடின கேம் இருக்கே!" என்றவனை,

"சார்! கொஞ்சம் தெளிவா சொல்றிங்களா?" என நேரே கேட்டுவிட்டான் தாமஸ்.

"அஞ்சனாக்கு உடம்பு சரி இல்ல தாமஸ். அவ இப்ப டிரீட்மென்ட்ல இருக்கா!" என்று அதிரன் சொல்லவும் தாமஸ் அதிர,

"அஞ்சனா அவ பேமிலியை எவ்வளவு நாளா உனக்கு தெரியும்?" என்றான் அதிரன்.

"கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலா தெரியும் சார்!" தாமஸ் சொல்ல,

"ஹ்ம்! அவ என்னை மறந்து ஒரு வருஷம் ஆகுது!" என்று அதிரன் சொல்ல புதிர் மேல் புதிர் தான் அனைத்தும் தாமஸ்ஸிற்கு.

"அப்படினா?"

"அதான் சொன்னேனே! டிரீட்மென்ட்ல இருக்கா. என்னையும் என்னோட சேர்ந்த உலகத்தையும் மொத்தமா மறந்துட்டாளாம். டாக்டர்ஸ் சொல்றாங்க!"

சுமக்க முடியாத வலி அதிரனின் கண்களை நிறைக்க, சொல்லியவன் மௌனமாய் எங்கோ பார்வையை வைத்தான்.

"சார்? என்னாச்சு சார்? எப்படி? மறந்துட்டான்னா? பழைய எதுவும் அவளுக்கு இப்ப நியாபகம் இல்லையா? ஏன் சார்? அச்சிடேன்ட்டா?" தாமஸ் கேள்விகள் அத்தனைக்கும் ஒரே பதில் தான்.

"அச்சிடேன்ட்க்கு காரணமானவரை தான் நீ இங்க அழைச்சு வச்சிருக்க. யார் முகத்துல முழிக்க கூடாதுன்னு வந்தேனோ அவர் தான் இப்ப என் கண்ணு முன்னால. அன்னைக்கு மட்டும் நான் இருந்திருந்தா இப்படி எதுவுமே நடந்திருக்காது. ஏதோ ஒரு மூலைல அவளோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்திருப்பேன்!" அதிரன் ஹரிச்சந்திரனைப் பார்த்தபடி சொல்ல, அவரும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

"உங்க அப்பா தான் எல்லாத்துக்கும் காரணமா?" என்ற தாமஸ் கேட்டவனுக்கு ஒவ்வொரு புது செய்தியும் அவ்வளவு அதிர்ச்சியினை கொடுத்துக் கொண்டிருந்தது.

"டைம் ஆச்சா தாமஸ்? நீ கிளம்பணுமா?" அதிரன் கேட்டவன் யோசனையாய் அமர்ந்திருந்தான். தான் இருக்குமிடம் தந்தைக்கு தெரிவதில் இப்பொழுது அவனுக்கு உடன்பாடில்லை.

"இப்படியே போனா சுத்தமா தூக்கம் வராது சார். அஞ்சனாவை கொஞ்ச மாசமா தான் தெரியும்னாலும் நல்லா பழக்கமான பொண்ணு சார். ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு இப்படினு என்னால இப்பவும் கற்பனையா கூட எதையும் நினைக்க முடியல!" என்றான் தாமஸ்.

"ஹ்ம்! எதையும் காட்டிக்க மாட்றா இல்ல? எப்பவுமே அப்படி தான். ஆனா என் மேல அவ்ளோ பாசம் காட்டினா" என்றவன் புன்னகையின் பின்னான வலியை உணர முடிந்தது கேட்டுக் கொண்டிருந்த தாமஸ்ஸிற்கு.

"அவ வேணும். அவளாவே வேணும். அவளைக் கஷ்டப்படுத்தாம கட்டாயப்படுத்தாம வேணும். எப்படினு தேடி தேடி தோத்துப் போய்ட்டு இருக்கேன். கண்ணன் மட்டும் இல்லைனா!" என்றவன் நினைத்தும் பார்க்க முடியாது என்பதாய் தலையசைத்துக் கொண்டான்.

அஞ்சனாவிற்காக ஒரு பக்கம் கவலை கொண்டாலும் அதிரனின் ஒவ்வொரு முக பாவத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் தாமஸ்.

அதுவே அவன் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு மேல் கேட்கவும் முடியாமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் விழித்த போது தாமஸ் பார்வையில் விழுந்தார் ஹரிச்சந்திரன்.

"நான் இந்த கம்பெனியை வாங்குற ப்ரோஸஸ்ல இருக்கறப்ப நான் வர்றதுக்கு முன்னாடியே கண்ணா உன்னை பத்தி என்கிட்ட சொல்லி இருக்கான். ஆனா உன்கிட்ட பிரண்ட்ஷிப் கேட்டதுக்கும் அதுக்கும் சத்தியமா சம்மந்தம் இல்லை டா" என்றான் அதிரன்.

"நான் அப்படி எதுவும் நினைக்கல சார்! ஆனா இதெல்லாம் எனக்கு நினைச்சுப் பார்க்கவே முடியல! உங்களை நினைச்சு கஷ்டமா இருக்கு" என்றான் தாமஸ்.

"நீ வேற! இதெல்லாம் ரொம்ப கம்மி! எனக்காக என்னால அஞ்சனாக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்பவும் சரி இப்பவும் சரி. என்னால மட்டும் தான் அவளுக்கு கஷ்டமே!" என்ற அதிரன்,

"அவளை என் கைக்குள்ள வச்சு பார்த்துக்கணும். அவ்வளவு தான் எனக்கு என்னோட ஆசை கனவு எல்லாமே." என்றான்.

"அப்போ இப்போ உங்க அப்பா வந்து பிரச்சனையாகுறதுக்கு கூட நான் தான் காரணம் இல்ல சார்? அதுக்காக தான் என் மேல அன்னைக்கு அவ்வளவு கோபம் வந்துச்சா உங்களுக்கு? சாரி சார். இவ்வளவு பிரச்சனை பெருசுன்னு எனக்கு அப்ப தெரியாது!" தாமஸ் கவலையாய் சொல்ல,

"இப்ப அதை பேசி என்னாக போகுது தாமஸ். ஆல்ரெடி எனக்கும் கண்ணாவுக்கும் தெரியும் எப்படியும் எங்கப்பா என்னை தேடி வருவார்னு. ஆனா அது உன் ரூபத்துல நடக்கும்னு நான் நினைக்கல!" என்றான் சின்னதாய் சிரித்து.

"ஆனா ஆபீஸ் தேடி வருவார்னு நான் நினைக்கல. அஞ்சனாவை அவர் கண்ணுல காட்ட வேண்டாம் நினைச்சேன். ப்ச்!" என்றவன் கைவிரிக்க,

"இப்ப என்ன சார் பண்ண போறீங்க?" என்றான் தாமஸ்.

"என்ன பண்ண? உன் வீட்டுக்கும் இப்ப நீ போக முடியாது" என்று அதிரன் சொல்லவும் தாமஸ் கேள்வியாய் பார்க்க,

"இப்ப உன்னை ட்ராப் பண்ண நான் வந்தா பின்னாடியே அவரும் வருவார். அங்க அஞ்சனா கண்ணா எல்லாரையும் அவர் பார்க்க வேண்டியது வரலாம். அது சரி இல்ல. கொஞ்ச நேரம் பார்க்கலாம். இல்லை எதாவது பண்ணலாம்!" என்று அதிரன் சொல்ல,

"சார் அவர் நம்ம டேபிள் பார்த்து தான் வர்றார்!" என்றான் தாமஸ் ஹரிச்சந்திரனைக் கவனித்தவன்.

"ம்ம்ஹும்?" என்ற அதிரன் கண்டு கொள்ளாதவனாய் இருக்க,

"ஏன் டா இப்படி பண்ற? என்னை பார்த்தும் யாரோன்ற மாதிரி இருக்க? எப்ப இருந்து இப்படி மாறின நீ? என்னையும் அம்மாவையும் விடவா அந்த பொண்ணு உனக்கு அவ்வளவு முக்கியமா போய்ட்டா?" வந்த வேகத்தில் கேட்டு வைத்தார் ஹரிச்சந்திரன்.

"அஃப்கோர்ஸ்! அவ தான் முக்கியம். நீங்க எனக்கு யாரோ தான். மூணாவது மனுஷனே தான்!" என்றவனை ஹரிச்சந்திரன் பார்த்து நிற்க,

"ஏன்? நீங்க பண்ணினது எல்லாம் மறந்து போச்சா? இவ்ளோ ப்ளேம் பண்ற நீங்க என்ன பண்ணீங்கனு நான் நியாபகப்படுத்தவா?" என்றான் அதிரன்.

"இப்படி பேசுற நீ? ஏன் பணத்தை மட்டும் அக்கௌன்ட்ல இருந்து வித்ட்ரா பண்ணிருக்க? அதுவும் கொஞ்சமில்ல!" ஹரிச்சந்திரன் கேட்க,

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? பணம் நீங்க மட்டும் சம்பாதிச்சது இல்லையே! என் தாத்தாவோடதும் தானே? நானே இல்லைனு சொன்னாலும் நீங்க தானே என் அப்பா? வெறும் இனிஷியல் மட்டும் எனக்கெதுக்கு? உங்களால தானே எல்லாம்? அப்ப அதுக்கான எல்லாம் உங்களைதான் சாரும்!" என்று சொல்ல, அவன் கொஞ்சமும் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை முழுதாய் உணர்ந்தார் ஹரிச்சந்திரன்.
 

Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இந்த ஆள் என்ன செஞ்சாரோ தெரியல.... அதி வெச்சி செய்யறான்🤣🤣🤣🤣🤣