தகிக்காதே குளிர்நிலவே..!(14)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -14

நீண்ட நேரத்திற்கு பிறகு
கண்விழித்தான் அருண்மொழி.

பாரதியும் அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

கண்விழித்து பார்த்தவனின் எதிரே பாரதியும்‌ நந்தினியும் அமரந்திருந்தனர்.

கண்களை மிகவும் சிரமப்பட்டு விழிகளை திறந்து பார்த்தான் அருண்மொழி.

நந்தினி அவனருகே செல்வதற்கு முன்பே பாரதி பதட்டத்துடன் அவனருகே சென்று,” என்ன அருண் என்னாச்சு.? என்ன‌டா உடம்பு முழுசும் இவ்வளவு காயம்? அந்தாளோட அடியாட்கள் இப்படி அடிச்சி போட்டுட்டு போயிருக்காங்க?போலீஸ் ல இன்ஃபார்ம் பண்ணுனியா?” என படபடவென்று பேச அவளை கையமர்த்திய நந்தினி, ” இப்ப தானே கண் முழிச்சிருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணு . அவர் கொஞ்சம் நார்மல் ஆகட்டும் . அப்பறமா பேசிக்கலாம். இருக்குற இருப்புக்கு அவங்க தான் இவர் மேல கேஸ் கொடுத்து உள்ள தள்ளணும்.” என்றாள் கடுப்பான.

“மேடம்…” என்று குரலை உயர்த்திய பாரதி நந்தினியை அழுத்தமாக நந்தனியைப்‌ பார்த்தாள்.

“ என் கிட்ட கத்தி பிரயோஜனயம் இல்ல. இதெல்லாம் தேவையா இவருக்கு? இவரு பண்ணுன வேலைக்கு உள்ள தள்ளாம வெளியே விட்டு வச்சிருக்கறதே பெரிய விஷயம்.அமுதனும் குழலியும் கிடைக்கற வரை அவங்க ஓயமாட்டாங்க. எனக்கென்னவோ இவர் தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுட்டு வந்துருக்காருன்னு தோணுது. “ என்றாள்.

காயத்துடன் படுத்திருக்கும் அவனருகே வந்தவள்,
“ஒரு விஷயம் செய்யும்‌ போது எல்லாத்தையும் யோசிச்சு செய்ய மாட்டீங்களா? பெரிய ரவுடின்னு நினைப்பா உங்களுக்கு ? பத்து இருபது பேர் சூழ்ந்து நின்னா எல்லாரையும் பறந்து பறந்து அடிக்க இதன்ன சினிமாவா? ஆஃப்ட்ரால் சாதாரண ஆள் நீங்க. அந்த பையில்வான்களை எதிர்த்து எப்படி நிக்க முடியும்? உங்களை தேடிட்டு என்னோட ஆஃபிஸ்க்கே அந்த ரவுடிங்க வந்து நின்னா என்னப் பண்றது? ஆஃபிஸை டேமேஜ் செஞ்சா ..?" என‌ படபடவென பொரிந்தவளை அருண்மொழி பரிதாபமாக பார்த்தான்‌ என்றால் பாரதியோ முறைத்துத் தள்ளினாள்.

அருண்மொழியினருகே நெருங்கி நின்ற‌ பாரதி, “மேடம் கொஞ்சம் அமைதியா பேசுங்க. இது ஹாஸ்பிட்டல். உடம்புல கட்டோட படுத்திட்டு இருக்கறவரை ரொம்பவே ஹர்ட் பண்ணுற மாதிரி பேசுறீங்க.. இதெல்லாம் சரியேயில்லை…” என்றாள் அவனது கைகளை பிடித்துக் கொண்டு.

அதை பார்த்தவளின் ஆத்திரம் இன்னும் அதிகமானது.

அருண்மொழிக்கு பாரதி தனனுடைய கைகளை பிடித்துக் கொண்டிருக்கின்றாள் என்ற சொரணையே இல்லை.

வலியின் காரணமாக அமைதியாக இருந்தான்.

கோபத்தை கட்டுப்படுத்தியவள் பல்லைக் கடித்துக்கொண்டு,” ஐ யம் சாரி…அருண். உங்க ரிலேடிவ்ஸ் யாராவது இருந்தா சொல்லுங்க. இன்ஃபார்ம் பண்ணுறேன்.“என்றாள் எரிச்சலுடன்.

“அவருக்குன்னு யாரும் இல்லை சோ…நானே அவரைப் பாத்துக்குறேன்…”என்றாள் பாரதி அவசரமாக.

அவளைப் பொறுத்தவரை அவனுக்கென்று யாருமில்லை என்றே நினைத்திருந்தாள்‌.

“ அப்ப நீங்க ஆஃபிஸ்க்கு வரலையா? இவரையே பாத்துட்டு இருந்தா உங்களுக்கு சேலரி கிரெடிட் ஆகிடுமா? இல்ல இவரு உங்களுக்கு அதுக்குன்னு தனியா சம்பளம் போட்டுத் தருவாரா?” என்றாள் எள்ளலுடன்…

அவளுடைய பேச்சில் பாரதிக்கு எரிச்சலாக வந்தது..

‘வார்த்தைக்கு வார்த்தை கூரிய ஆயுதத்தால் குத்துவதைப் போல எப்பொழுதும் பேசுகிறாளே..!’ எனக் கோபமாக வந்தது.

நந்தினிக்கோ பாரதியை பேச விடாமல் வாயடைக்க வைத்ததில் திருப்தி .

எரிச்சலுடன் பாரதி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அருண்மொழி நந்தினியை தன்னருகே வருமாறு அழைத்தான்.

அதில் சற்று கோபம் தணிந்தவள் அவனது முகத்தருகே குனிந்து, "சொல்லுங்க..” என்றாள்.

“ என்…என்னோட தாத்தாவோட நம்பர் இது. இவருக்கு கால் பண்ணி இன்ஃபார்ம் பண்…பண்ணிடுங்க.” என்றவனின் உதடுகள் லேசாக அவளது கன்னத்தை உரசிக் கொண்டுச் சென்றது .

அதில் சற்றே சிலிர்த்து அடங்கியது அவளது தேகம்.

குனிந்து கொண்டே இருத்தவளின் தோளினைத் தட்டினாள் பாரதி.

அதில் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவனை விட்டு விலகி நின்றாள் நந்தினி.

“பா..பாரதி நீ வேலைக்கு போ…ஸஸ்…நா..நான் பாத்துக்குறேன்” என்றவனின் முகம் வலியில் சுணங்கியது.

தன்னையறியாமல் அடியெடுத்து வைத்தவளின் கால்கள் பின்னடைந்தது பாரதியின் அழுத்தமான வார்த்தைகளில்.

"அருண்…ப்ளீஸ் டா..!உங்க தாத்தா வர்ற வரைக்குமாவது உன்னை நான்‌ பாத்துக்குறேனே…வீண் பிடிவாதம் பிடிக்காத…! யார் உன்னையும் பாத்துப்பா? அமுதனும் இங்க இல்லை. பக்கத்துல இருந்து உன்னை கவனிச்சுக்க ஆள் வேணுமே டா..இப்ப தான் லவ் சொல்லிருக்கோம். அதுக்குள்ள இப்படி ஆச்சே..! “என்றாள் நந்தினியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

இருவருக்கும் நடக்கும் வார்த்தை யுத்தத்தை பார்த்தவன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.

இருவரும் மூலைக்கொருவராக முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

மருத்துவர் அவனுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வருமாறு மருத்துவ சீட்டினை நீட்ட இருவருமே அதனை வாங்கினர்.

பாரதியோ நந்தினியை அனலென‌ முறைக்க, நந்தினியின் கைகள் தானாகவே விலகிக் கொண்டது.

யாரையும் நிமிர்ந்தும் பாராமல் உடனடியாக வெளியேறினாள்.

பாரதி அருண்மொழயினருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமரந்தாள்.

“அருண்…அமுதனும் குழலியையும் பத்திரமா டெல்லிக்கு அனுப்பி வச்சாச்சு. கொஞ்ச நாளைக்கு உன் கூட பேச வேண்டாம்னு சொல்லிருக்கேன். நீயும் அவங்கள கான்டாக்ட் பண்ணிடாத…! என்னோட நம்பரை தான் அவங்களுக்கு கொடுத்திருக்கேன். அங்க அவங்களுக்கு தேவையானதெல்லாம் நீ ஆல்ரெடி ஏற்பாடு பண்ணிட்ட தானே? குழலியோட அப்பா கண்டுபிடிச்சிட மாட்டாரு தானே? உங்க தாத்தா வந்ததுக்கப்பறம் நம்ப கல்யாணத்தை பத்தி பேசிடு அருண். எனக்கு என்னவோ பயமாகவே இருக்குது” என்றாள்

ஏதோ எண்ணங்கள் முட்டி மோத.
“ இ.. இல்ல பாரதி சங்கரனால குழலியும் அமுதனும் இருக்குற கண்டுபிடிக்க முடியாது…நா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். தலையெல்லாம் வலிக்குது.” என்றபடி விழிகளை மூடிக் கொண்டான்.

“ சரி டா…ரெஸ்ட் எடு " என்றவள் அலைப்பேசியை நோண்டத் துவங்கினாள்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நந்தினியின் மனமோ நத்தையாக சுருண்டு போனது.

எதற்கெடுத்தாலும் அழையா விருந்தாளியாக வந்து மூக்கின் மேல் அமர்ந்து கொள்ளும் கோபத்தையும் திமிரையும் அவளால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.

அருண் கொடுத்திருந்த அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து விஷயத்தை கூறினாள்.

அருணின் தாத்தா மிகவும் பதறி தான் போனார்.

பெயருக்கு ஆறுதலாக ஓரிரு வார்த்தைகளை கூறி விட்டு வைத்தாள்.

நான்கு நாட்களாக பாரதி அருண் அருகிலேயே இருந்து அவனைப் பார்த்துக் கொண்டாள்.

ஐந்தாம் நாள் காலையில் அருணின் தாத்தா வந்து விட்டதால் அவள் அலுவலகத்திற்கு வந்து விட்டாள்.

பாரதி மற்றும் அருணின் நெருக்கத்தை காணப் பிடிக்காது மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விட்டாள் நந்தினி.

பத்து நாட்கள் கடந்திருந்தது.

அவனது வீட்டிலேயே அவனது தாத்தாவும் தங்கியிருந்தார்.

சிறு வயதிலிருந்தே இருவருக்குமே புரிதலோடு கூடிய தோழமையான உறவு இருந்தது.

அன்று பாரதி அருணைக் காண அவனது வீட்டிற்கு வந்திருந்தாள்..

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வந்தவள் அழைப்பு மணியை அடித்து விட்டு வெளியே நின்றிருந்தாள்.

கதவை திறந்த அருணின் தாத்தா கண்ணாடியை சரி செய்து கொண்டே அவளை பார்த்தபடி , "யார் மா…நீ? உனக்கு…” என்றவரின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது.

“ஹாய் தாத்தா…ஐ யம் பாரதி. அருண் கூட வெர்க் பண்றேன். உள்ள வரலாமா? அருண் இருக்கானா?” என படபடவென பேசினாள்.

அவளை யோசனையுடன் பார்த்தவாறே,” ம்ம்…உள்ள‌ வா ம்மா…அவன் குளிச்சிட்டு தான் இருக்கான்” என்றார்.

அவளைப் பற்றிய விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டவரின் புருவம் யோசனையில் சுருங்கியது ‌

அப்பெரியவரின் எதிரே அமர்ந்திருந்தாள் பாரதி.

அவரிடம் வளவளவென்று ஏதோ வம்படித்துக் கொண்டிருந்தவள் பேச்சுவாக்கில் பட்டென்று தனது மனதில் உள்ளதை அவரிடம் வெளிப்படுத்தி விட்டாள்.

அருண்மொழியை தான் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் நேரிடையாக அவரிடம் கூறி அவரை அதிர வைத்தாள் பாரதி..

அவளது அதிரடியில் சற்றே திகைத்து தான் போயிருந்தார் பெரியவர்‌.

அவரது திகைத்த முகத்திற்கு நேராக கையை ஆட்டியவள், “என்ன தாத்தா? ரொம்ப படபடன்னு பேசி மார்டனா இருக்காளே குடும்பத்துக்கு ஒத்து வருவாளான்னு யோசிக்கிறீர்களா? இல்ல இவளுக்குன்னு யாருமில்லையே..அனாதைப் பொண்ணை கட்டினா கல்யாணத்தை யாரு பண்ணி வைப்பாங்கன்னு யோசிக்குறீங்களா? என்னோட கல்யாணத்துக்கான சேவிங்ஸை நானே சேர்த்து வச்சிருக்கேன் தாத்தா…சோ…நோ…வொர்ரி…என்ன சொல்றீங்க?” என கேட்டு அவரை வாயடைத்து போக வைத்திருந்தாள் பாரதி.

நந்தினியின் முன்பு அருண்மொழியை ஞ திருமணம் செய்து கொண்டு அவளது ஈகோவையும் திமிரையும் உடைக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவளுக்கு.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(14)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
டேய் அவ ரொம்ப ஸ்பீடா போறா.....இது உனக்கு தேவையா டா அருண்
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
என்னம்மா பாரதி இவ்வளவு ஸ்பீடு ஆகாதும்மா