உலா வரும் வெண்ணிலா - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,480
113

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 16

"சார்!" என பேந்த பேந்த விழித்து நின்றான் தாமஸ்.

இவர்கள் குடும்ப விவகாரம் என புரிந்து எத்தனை ஒதுங்கினாலும் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என தாமஸை உள்ளே இழுத்துக் கொண்டே இருந்தான் அதிரன்.

இப்போதும் எழிலரசி கம்பெனி உள்ளே நுழையும் பொழுதே கண்டுவிட்ட தாமஸ் அது அதிரன் அன்னை என செக்யூரிட்டி மூலம் அறிந்து தன் வேலையை கவனிக்க சென்றிருக்க, அதிரனிடம் இருந்து அழைப்பு.

"சொல்லுங்க சார்!" என்று சொல்லி சாதாரணமாய் வந்து நின்ற தாமஸ் ஓரப் பார்வையால் எழிலரசியை கவனிக்கவும் மறக்கவில்ல.

"என்ன சொல்லுங்க சார்? ஏன் டா வெளில போர்டு மாட்ட சொன்னேனா இல்லையா? கண்டவங்களையும் ஏன் உள்ள விடுறிங்க?" என அத்தனை பேச்சு அதிரன் பேச,

'எனக்கும் இதுக்கும் என்ன டா சம்மந்தம்?' என விழித்து நின்றான் தாமஸ்.

செக்யூரிட்டியை அழைத்து பேசினால் கூட தகும். தன்னிடம் ஏன் காய்கிறான் என அவன் விழிக்க,

"நான் தான் அதி உன் அம்மானு சொல்லி பெர்மிஸ்ஸின் வாங்கி உள்ள வந்தேன்!" என எழிலர்சி சொல்லியுமே,

"ஓஹ்! யார் என் அம்மா அப்பானு சொன்னாலும் உள்ள விட்டுடுவீங்களா? என் பெர்மிஸ்ஸின் முக்கியம் இல்லையா?" என அதற்கு. தாமஸ்ஸை தான் கடித்தான் அதிரன்.

"இப்ப நீ என்கிட்ட பேச போறியா இல்லையா அதி? இதென்ன அசிங்கமா மூணாவது மனுஷங்க முன்னாடி பரேன்ட்ஸ்ஸை அசிங்கப்படுத்துறது? என் பையன் தானே நீ?" எத்தனை காரமாய் எழிலரசி கேட்க, இதோ அந்த வார்த்தையை கேட்டுவிட்டார் தானே என நக்கல் பார்வையும் சிவந்த கண்களுமாய் அவரைக் கண்டான் அதிரன்.

சொல்லிய எழிலரசி இன்னும் அவர் வார்த்தையை முழுதாய் உணரவில்லை. தாமஸ் கூட என்ன பேச்சு இது என அதிர்ந்து நிற்க,கண்களால் சைகை செய்து தாமஸ்ஸை வெளியில் அனுப்பிய அதிரன்,

"என்ன சொன்னிங்க?" என நேரே அன்னையை கேட்க,

"என்கிட்ட நேரா பேசுன்னு சொன்னேன்" என்றார் அவரும்.

"இல்லையே இன்னொரு வார்த்தை வந்ததே!" என்றவனை புரியாமல் அவர் பார்க்க,

"என் பையன் தானே நீ? கேட்டீங்கல்ல?" என்றதும் எழிலரசி துணுக்குற்றுப் பார்க்க,

"முன்னாடி சனா மேல தான் இந்த டவுட் இருந்துச்சு. இப்ப என் மேலயுமா? அப்போ நான் அப்பாக்கு...." என முடிக்கும் முன்,

"அதி!" என அதிர அழைத்துவிட்டார் எழிலரசி. உடலெல்லாம் வியர்த்து வந்துவிட்டது அந்த ஏசி அறையில் சில நொடிகளில்.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என அவர் பார்க்க,

"குத்துதா... ரொம்ப வலிக்குதோ? குடுக்கும் போது ஈஸியா இருக்கு. ஆனா வாங்கும் போது தெரியுது இல்ல?" என்றவனை நிலைகுத்தியப் பார்வையாய் அவர் பார்க்க,

"சனாவை என்ன வேனா சொல்லுங்க. ஐ டோன்ட் கேர் அண்ட் ஐ டோன்ட் பிலீவ் இட் டூ. எனக்கு தெரியும் சனாவை. என் மேல காதல் இருந்தும் என்னை வேண்டாம்னு சொன்னவ அவ. எனக்காக மட்டுமே என்னை ஏத்துகிட்டவ அவ. அவளை எதாவது சொல்லிக்கிட்டு என்கிட்ட வந்திங்க...." என்றவன் பார்வையில் தான் கணவன் சொல்லியது நினைவில் வந்தது எழிலரசிக்கு.

'அத்தனை கோவத்துல இருக்கான். கண்ணெல்லாம் சிவந்து அந்த நேரத்துல நீ பார்திருக்கணுமே! அந்த பொண்ணைப் பத்தி பேசவே விட மாட்டுறான்!' ஹரிச்சந்திரன் சொல்லிய வார்த்தைகள் நினைவில் ஆடியது எழிலரசிக்கு.

"இப்படியே போனா கூட போய் நீங்க உங்க குடும்பம்னு நிம்மதியா இருக்கலாம். இல்ல என்னை சீண்டி தான் விடுவீங்கன்னா நானும் ரெடி. பார்த்துடுவோம்!" என்று பேசுபவன் நிச்சயம் முந்தைய தினங்களில் தான் பார்த்து வளந்த தன் மகனே அல்ல என்று புரிந்தது எழிலரசிக்கு.

'அவ்வளவுக்கு உன்னை மடக்கி வச்சிருக்காளா!' நினைத்து மட்டுமே கொண்டவர் வெளியில் கூறிடவில்லை.

"நீங்க போலாம்!" என வாசலை நோக்கி கை காட்ட, அடுத்து என்ன என்றே தெரியாமல் குழம்பியபடி தான் அங்கிருந்து அகன்றார் அவன் அன்னை.

"அவங்க பேசின எதையும் பெருசா நினைச்சுக்காத தாமஸ். அண்ட் நான் பேசினதுக்கும் சாரி!" என அடுத்த சில நிமிடங்களில் தாமஸ்ஸை அழைத்து மன்னிப்புக் கேட்டான் அதிரன்.

"என்ன சார் நீங்க போய்... அதெல்லாம் எதுவுமில்ல!" என்றவனுக்கு தொண்டை வரை வார்த்தைகள் வந்த போதும் விழுங்கிக் கொண்டான்.

"என்னனு சொல்லு!" அதிரனே கண்டு கொண்டதாய் கேட்க,

"அஞ்சனா வர்ல. போன் பண்ணேன் எடுக்கல அதான்..." என்று தாமஸ் சொல்ல,

"தலைவலி. ரெஸ்ட் எடுக்குறா வீட்டுல!" என்றவனை கேள்வியாய் பார்த்தான் தாமஸ்.

"அவ அண்ணன் சொன்னான் டா!" என்றதும் தான் 'ஓஹ்' என்ற முக பாவத்தை தாமஸ் கொடுக்க, அதிரன் முகத்திலும் மென்னகை.

'எனக்கு ஏன் இப்படி தப்பு தப்பா தோணுது!' என நினைவுகளில் போராடிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.

தலையை பிடித்தபடி இருந்தவளுக்குள் சில நாட்களாய் என்னென்னவோ மாற்றங்கள். அதிகமாய் தான் சிந்திக்கிறோம் என்று பழையதை நினைவுபடுத்த வேண்டாம் என்று கூட விட்டுவிட்டாள்.

ஆனாலும் என்னென்னவோ எண்ணங்கள் கற்பனைகள் என மனம் ஒரு நிலையில் இல்லை. கூடவே தீராத தலைவலி அவ்வபோது மூச்சு விடுவது சிரமம் என காலை எழுந்தது முதல் அத்தனைக்கு சோர்வு அவளிடம்.

"நான் பாத்துக்குறேன். இன்னைக்கு ஆபீஸ் லீவ் சொல்லிடுறேன்!" என கண்ணன் சொல்ல,

"நான் வீட்டுல தானே டா இருக்கேன். நான் பார்த்துப்பேன். நீ கிளம்பு!" என்றுவிட்டார் ராஜேஸ்வரி.

"தலைவலின்னு சொல்றா. பயமா இருக்கே ம்மா. டாக்டர்க்கு கால் பண்ணினா அவர் அவுட் ஆப் ஸ்டேஷன். நாளன்னைக்கு தான் அவரை. பிடிக்கவே முடியும்!" என கண்ணனுக்கு அத்தனை கவலை தங்கையை நினைத்து.

"எதுவும் இருக்காது. மாத்திரை குடுத்துருக்கேன். தூங்குறா நான் பாத்துக்குறேன்!" என பலமுறை சொல்லி தான் கண்ணனை அனுப்பியே வைத்தார் ராஜேஸ்வரி.

சில நிமிடங்கள் முன் தான் மகளை அவளறைக்கு வந்து பார்த்து அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து தானும் சில நிமிடங்கள் தூங்கி எழலாம் என அவர் சென்றிருக்க, அதற்குள் எழுந்து அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டிருந்தவள் எண்ணம் கற்பனை என அவளையே திடுக்கிட வைத்துக் கொண்டிருந்தது.

அன்றும் அடுத்த நாளும் என அப்படியே தான் சென்றது. உறங்குவதும் உறக்கம் கலைந்தால் தலைக்குள் என்னவோ சுழல்வதும் என்னென்னவோ உருவங்கள் மட்டுமான நிகழ்வுகளும் என தலைவலி உயிரை வாங்கியது. மாத்திரைகளை இப்படி தொடர்ந்து எடுத்தும் கூட பல நாட்களாகி இருக்க, இப்பொழுது என்ன என ராஜேஸ்வரியும் பயந்து போயிருந்தார்.

"என்ன டா ஆச்சு? எப்படி இருக்கா? ரெண்டு நாள் ஆச்சு. இன்னும் தலைவலினா வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் தானே?" என கண்ணனிடம் கேட்டான் அதிரன்.

"நாளைக்கு ஈவ்னிங் டாக்டர் வந்துடுவாங்க அதி. அதோட கூப்பிட்டும் பார்த்தேன். ஒண்ணுமில்ல அந்த டாக்டர் வரட்டும்னு அஞ்சானவே சொல்லிட்டா. அவர் தான் எப்பவும் பாக்குற டாக்டர். அதான் நானும் பாக்குறேன்!" என்று கண்ணன் சொல்ல,

"பயமா இருக்கே கண்ணா. எப்பவாச்சும் இப்படி வந்திருக்கா?" என்ற அதிரன் குரலிலும் அந்த பயத்தை கண்டு கொள்ள முடிந்தது.

"இல்ல. அந்த அச்சிடேன்ட் அப்ப இப்படி இருந்தது தான். அப்புறம் கொஞ்ச நாள்ல சரியாகிடுச்சு!" என்று அவன் சொல்ல,

"நாளைக்கு நானும் ஹாஸ்பிடல் வர்றேன்!" என்றிருந்தான் அதிரன்.

என்னவோ அவனுக்கும் மனதே சரி இல்லை. அன்னை வந்து அவன் கோபத்தோடு தன்னையும் பழைய வலிகளை கீறி விட்டிருக்க, அவளை பார்க்க வேண்டும் என அத்தனை ஏக்கம் அவனிடம்.

இரண்டு நாட்களாய் தீரா வலியோடு சுற்றி வந்த அஞ்சனா அடுத்த நாள் காலை அப்படியே அமைதியாகிவிட்டாள்.

அன்னை கேட்பதற்கு மட்டும் தலையாட்டி வைத்து அமைதியாய் இருக்க,

"எதாவது வேணுமா அஞ்சனா? தலை ரொம்ப வலிக்குதா?" என அத்தனை கனிவாய் கேட்ட கண்ணனை நிமிர்ந்தும் பாராமல் தலையை மட்டும் அவள் அசைக்க, அவள் கண்ணீர் அவனுக்கு புலப்படவில்லை.

"ஈவினிங் டாக்டர் வந்துடுவாங்க. நாம போகலாம். உனக்கு என்ன பண்ணுதோ அதை அப்படியே எதையும் மறைக்காம அவங்ககிட்ட சொல்லு மா!" என ராஜேஸ்வரி சொல்லி இருக்க, கண்ணனும் அலுவலகம் சென்றவன் மதியமே வந்துவிட்டான் தங்கையை அழைத்து செல்ல என்று.

"தாமஸ்! இங்க கொஞ்சம் பார்த்துக்கோ. சனா ஹாஸ்பிடல் போயிருக்கா. நான் என்னனு பார்த்துட்டு வர்றேன்!" என்று சொல்லி அதிரனும் கம்பெனியில் இருந்து விரைவாய் கிளம்பி சென்றுவிட்டான்.

அனைவருக்குமே அத்தனை பயம் எதனால் இப்படி என. அவ்வபோது தலையை பிடித்துக் கொண்டு தான் இருந்தாள் இப்பொழுதுமே.

மருத்துவரைப் பார்த்துவிட்டு அஞ்சனாவை பரிசோதிக்க தனியே அழைத்து செல்ல, வெளியில் கண்ணன், ராஜேஸ்வரி நிற்கும் சமயம் அவர்கள் முன் வந்து நின்றான் அதிரன்.

பார்த்ததும் அதிர்ந்து மகனை ராஜேஸ்வரி பார்க்க, அவனும் கெஞ்சலாய் பார்த்து வைத்தான் அன்னையை.

எதுவும் சொல்ல முடியவில்லை அவரால். கோபமோ, ஆதங்கமோ, ஆத்திரமோ, அதிர்ச்சியோ எதையும் காட்டும் முன் கண்ணீர் தான் கண்களை நிறைக்க, "ம்மா!" என அவர்முன் மண்டியிட்டு அமர்ந்துவிட்டான் அதிரன்.

எந்தவித பேச்சு வார்த்தைகளும் இல்லை. கண்ணன் அதிரனை தூக்க, ராஜேஸ்வரியை விட்டு நகரவே இல்லை அதிரனின் பாதங்கள்.

அவனை குறை சொல்லியோ கோபம் கொண்டோ எதுவும் மாறப் போவது இல்லையே என ராஜேஸ்வரி நிற்க, அன்னை கைகளைப் பற்றிக் கொண்டு நின்றான் கண்ணன்.

"டாக்டர் கூப்பிடுறாங்க!" செவிலியர் வந்து சொல்லி செல்ல, அவர்களோடு அதிரனும் உள்ளே நுழைந்தான். அங்கே மருத்துவருக்கு எதிரில் அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

"அஞ்சனாம்மா!" என ராஜேஸ்வரி அவளிடம் செல்ல, அன்னையை அண்ணனை எனக் கண்டவள் கண்கள் அதிரனைக் காண, அதிரனும் அவளை தான் பார்த்து நின்றான்.

அதை கவனிக்கும் நிலையில் இல்லை மற்றவர்கள். "டாக்டர்! எதுவும் பிரச்சனை இல்லை தானே?" கண்ணன் மருத்துவரிடம் கேட்க,

"பிரச்சனைனு இல்லை!" என்று சொல்லவும் தான் நிம்மதியே. ஆனாலும் என்ன சொல்ல போகிறாரோ என மற்றவர்கள் பார்க்க, அஞ்சனா தன்னைப் பார்த்த, பார்த்துக் கொண்டிருந்த விதத்தில் கண்களை சுருக்கி அவளைப் பார்ப்பதும் மருத்துவரை கவனிப்பதுமாய் இருந்தான் அதிரன்.

அதிரன் உள்ளுக்குள் என்னவோ உடைவது போலவும் சுவாசம் தடைபடுவது போலவுமாய் மனம் ஒருநிலையில் இல்லை அஞ்சனாவின் பார்வை கொடுத்த பதற்றத்தில்.
 

Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இவளுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வாதிட்டா?????
அது தான் இந்த அமைதியா???