அத்தியாயம் -21
நடந்த நிகழ்வினை ஏற்றுக் கொள்ள மனமில்லாத பாரதி உடனே இந்தியா திரும்ப வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றாள்.
ஆனால் ஆதிரையும் அருண்மொழியும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அரண்மனையில் தங்க சம்மதித்திருந்தாள்.
அருண்மொழியின் கண்முன்னே மாறவர்மனின் மனைவியாக வலம் வருவது மிகுந்த வேதனையளித்தது.
செய்தவதறியாது திகைத்து தான் போனாள்.
மாறவர்மனின் அன்புத் தொல்லை தாங்காமல் ஒரு நாள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாள்.
அதனால் எழுந்த கோபத்தில் அவனிடம் ,"ஐய்யோ..! ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ணுறீங்க…நான் ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி உங்க மனைவி தேவி இல்லை. என் பேரு பாரதி…மனைவிக்கும் மற்ற பொண்ணுக்கும் உங்களால வித்தியாசம் கண்டுபிடிக்க முடியலயா? தயவு செஞ்சு என்னைய விட்டுடுங்க…” என ஆத்திரத்தில் கத்தி விட்டாள்.
அவளது பேச்சைக் கேட்டு ஆக்ரோஷமடைந்த வர்மன், "நீ என்னோட தேவி இல்லையா…? நீ என்னோட தேவி இல்லையா…? பொய் சொல்ற..பொய் சொல்ற….” என்று கூறிக் கொண்டே கத்தியால் தனது மணிக்கட்டை ஆழமாக வெட்டிக் கொண்டான்.
இரத்தம் பீய்ச்சியடிக்க கீழே சரிந்த ஆறடி ஆண்மகனை கண்டு பதறி விட்டாள் பாரதி.
அதன் பின்னர் அவனை காப்பாற்றி சமாதானம் செய்வது பெரிய கதையாகிப் போனது.
பாரதியிடம் தன்மையாக பேசி அவளை அரண்மனையில் இருக்க வைத்து விட்டனர்.
அறைக்குள்ளேயே அடங்கியிருந்த மாறவர்மன் பாரதியின் வருகைக்குப் பிறகு தினமும் அவளைத் தேடி அவளுடைய அறைக்கே வர ஆரம்பித்து விட்டான்.
மாறவர்மனிடம் கடமையே என பேச்சு கொடுத்து கொண்டிருப்பாள் பாரதி.
பகல் நேரங்களில் எப்படியோ சமாளித்து விட்டதால் இரவு நேர தொல்லையை சகித்துக் கொள்ள முடியவில்லை.
அமிழ்ந்து கிடந்த உணர்வுகள் எல்லாம் பாரதியை கண்ட பிறகு கட்டவிழ்ந்து ஓடத் தொடங்கி விட்டன.
ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை அமைதிப்படுத்த தன்னவளால் மட்டும் முடியும் என்ற உரிமையுடன் மஞ்சத்தில் மோக கவிதை எழுதிட துடித்தான் மாறவர்மன்.
அதன் விளைவு தினமும் இரவில் அவன் அறியாமலேயே தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவனை உறங்க வைத்தனர்.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் அருண்மொழி.
இங்கு வந்த மூன்று வருடங்களில்
பெரும்பான்மையான நேரம் பாரதியை மாறவர்மனிடம் காப்பற்றுவதே பெரும் சவாலாக இருந்தது அருண்மொழிக்கு.
எனவே அருண்மொழியின் அறைக்கு எதிரே அவள் தங்க வைக்கப்பட்டாள்.
சுகன்யாவின் அழைப்பில் அருண்மொழியின் சிந்தனை தடைபட்டது.
“ வாங்க சுகன்யா..என்ன விஷயம்?”
“ சார் நாளைக்கு காலையில நந்தினி மேடத்தை எத்தனை மணிக்கு கம்பெனிக்கு அழைச்சிட்டு வரணும்?.அவங்களுக்கான டைமிங் என்ன? அதுக்கேத்த மாதிரி கார் ட்ரைவரை வரச் சொல்லணும் சார்..” என்றாள்.
“ம்ம் .மார்னிங் டென் ஓ க்ளாக் அங்க இருக்குற மாதிரி பாத்துக்கோங்க…ஈவினிங் செவன் ஓ க்ளாக் வரை அவங்களோட வெர்க்கிங் டைம். என் கிட்டயே அவங்க டைரக்ட்டா ரிப்போர்ட் பண்ணட்டும். “ என்றான்.
“ஓகே சார்…” என்று கூறி விட்டு திரும்பிவளை ,” ஒரு நிமிஷம் சுகன்யா…” என்றான்.
“ சார்…” என்று கூறி அவனது முகம் பார்த்து நின்றாள்.
“அவ…ம்ம்க்கூம்.. அவங்களை கொஞ்சம் பாத்துக்கோங்க…எதையும் வாய் திறந்து கேக்க மாட்டாங்க. அவங்களுக்கு தேவையானதை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுக்கங்க” என்றான்.
ஒரு கணம் அவனை ஊன்றி பார்த்து விட்டு, “ஒகே சார்.. பாத்துக்குறேன்…” என்று கூறி விட்டு வெளியே வந்தவளுக்கு மெல்லிய புன்னகை இதழில் தோன்றியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நந்தினியை பற்றிய தகவல்களை சேகரித்து அவனிடம் கொடுப்பது தான் சுகன்யாவின் முக்கிய வேலை.
அனைத்தும் இழந்து அவர்கள் நின்ற போது தனது நிறுவனத்திற்கான நிர்வாக இயக்குனர் பணியிடத்தின் விண்ணப்பத்தை அவளுக்கு மட்டும் அனுப்பி வைத்தான்.
வேறு சில மூத்த அதிகாரிகளை வைத்து காணொளி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அவளை தேர்வு செய்து தீவிற்கு வரவழைத்தான்.
இவற்றையெல்லாம் அறியாத நந்தினி மறுநாள் காலையில் அருண்மொழியின் நிறுவனத்திற்கு கிளம்பினாள்.
அவனது தனிப்பட்ட அறையில் அமர வைக்கப்பட்டிருந்தாள்
என்ன செய்வது என்பது புரியவில்லை.
இம்மாதிரியான சூழ்நிலை வரும் என்று கனவிலும் நினைக்காதவள் தனது நிலையை எண்ணி மனம் சோர்ந்து நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.
புயலென கதவினை திறந்து கொண்டு உள்ளே வந்தவன், "சி.இ.ஓ ரூம்ல உக்காந்துட்டு நகத்தை கடிக்கக் கூடாதுன்னு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா மிஸ்…நந்தினி? ம்ம்..மிஸ் தான? இல்ல மிஸர்ஸா?” என்றபடியே சுழலும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான்.
அவனை நேருக்கு நேராக சந்திக்க தெம்பில்லாமல குனிந்து அமர்ந்திருந்தவள் தலையை நிமிர்த்தாமலேயே, "சாரி…சார்..” என்றாள்...
“ ம்ம்…உங்க பயோடேட்டவை கொடுங்க மேடம்..” என்றான் .
கோப்பில் இருந்த தனது சுயவிவர குறிப்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதனை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு., "இதென்ன ஒரே ஒரு பக்கம் தான் இருக்கு.நோட்டீஸ் பேப்பர் மாதிரி. முன்ன பின்ன வேலை பார்த்து பழக்கமில்லையா? . அப்ப இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சிட்டு இருநதீங்க?”
“அதுலயே மென்ஷன் பண்ணிருக்கேன் சார்…நல்லா பாருங்க” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே.
இருக்கையில் இருந்து எழுந்தவன் நடந்து கொண்டே, " ஓகே வெல்..நீங்க என்னவா வேணாலும் இருந்துட்டு போங்க. தட்ஸ் தன் ஓப் மை பிசினஸ். பட் வெர்க்ல சின்சியாரிட்டி ரொம்ப முக்கியம். உங்களோட ஜாப் ரெஸ்பான்சிபிலிட்டீஸ் எல்லாம் எக்ஸ்ப்ளையன் பண்ணிடுறேன்..தென் யூ கேன் கோ டூ யுவர் ப்ளேஸ்..” என்றவனிடம் , ‘அதுக்கூட தெரியாம என்னோட கம்பெனியை எப்படி ரன் பண்ணிருப்பேன். எல்லாம் என்னோட நேரம்…’ என கத்திக் கூற துடித்த நாவை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
அவளுக்கு பின்னால் நின்றிருந்தவன் அவளது எண்ணவோட்டத்தை அறிந்து அவள் புறம் குனிந்து, “ நீங்க ஒரு கம்பெனியை கட்டி ஆண்டிருந்தாலும்.. இப்ப ஒரு சாதாரண எம்ப்ளாயி தான். அதை நியாபகம் வச்சிக்கோங்க. நீங்க ரன் பண்ணுனது சாஃப்ட்வேர் கம்பெனி…இது மேனுஃபேக்சரிங் யூனிட். ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது கூட தெரியாம தான் இந்த வேலைக்கு வந்தீங்களா..? சரி விடுங்க உங்களுக்கு தெரியாததை…ஐ மீன் என்ன டவுட்னாலும் என் கிட்ட நீங்க தாராளமா கேட்டுக்கலாம். ஆனா நான் சொல்றதை மட்டும் தான் நீங்க செய்யணும்…காட் இட்..” என்றவனது சூடான மூச்சுக் காற்று அவளது கன்னத்தில் மோதி சிலிர்க்க வைத்தது.
வேகமாக அவன் புறம் திரும்பியவளின் இதழும் நாசியும் ஒரு இன்ச் இடைவெளியில் தப்பித்தது.
அத்தனை நெருக்கத்தில் அவனது முகம்.
கண்களில் குளிர் கண்ணாடி அணிந்திருந்ததாலும் ஒரு விதமான இறுக்கத்துடன் தான் இருந்தது அவனது முகம்.
அத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்த்ததில் அவளது இதயம் தாளம் தப்பித் துடித்தது.
ஒரு கணம் அவளை கூர்ந்து பார்த்துவிட்டு விலகி நின்றான்..
“யூ மே கோ நவ்..” என்றான் .
அதில் சற்றே அலட்சியம் தென்பட்டதோ எனத் தோன்றியது அவளுக்கு.
“ ஓகே..சார்..” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.
கையில் பேனாவை சுழற்றும் கொண்டே சுழல் நாற்காலியில் சுழன்றான்.
வெளியேறிய பெண்ணவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழில் மெல்லிய புன்னகை.
தனக்கென்று ஒதுங்கியிருந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆயாசமாக தான் இருந்தது.
அவனுடைய இடத்தில் தானும், தன்னுடைய இடத்தில் அவனும் இருக்கும் நிலையை எண்ணி உள்ளம் வெதும்பி போனது.
முதல் நாள் என்பதினால் பெரிதாக வேலை எதுவும் இல்லை அவளுக்கு.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல வேலைப்பளூ அதிகரித்தது.
தயாரிப்பு நிறுவனம் என்பதால் ஆயிரம் சந்தேகங்கள் வந்தது அவளுக்கு .
ஒவ்வொரு நாளும் பத்து பதினைந்து தடவை அவனது அறைக்கு செல்வதும் வருவதுமாக இருந்தாள்.
“ ஒரு சாதாரண எம்ப்ளாயியா இருந்து முன்னேறி மேல வந்திருந்தா இவ்வளவு டவுட்ஸ் வந்திருக்காது மிஸ் நந்தினி..எடுத்த எடுப்பிலேயே மேல போய் உக்காந்துட்டா இப்படி தான் எதுவும் தெரியாம நிக்கணும்..” என்றான் எள்ளலாக.
அவனது வார்த்தையில் இருந்து உண்மை அவளைச் சுட்டது.
பாவமாக அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் நந்தினி

Last edited:
Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(21)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.