தகிக்காதே குளிர்நிலவே..!(23)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -23

“ப்ளீஸ்…வர்மன் புரிஞ்சுக்கோங்க…என்னால. உங்க கூட…இப்படி…இருக்க முடியாது….” என அவனது கைவளைவிலிருந்து கொண்டே கூறினாள்.

உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. எத்தனை நாள் தான் இவனிடமிருந்து தப்புவது.

உண்மையைச் சொன்னால் மூர்ககனாகி விடுவான் என பயந்து கொண்டே தோழமையுடன் பேசிப் பழக முயற்சித்தாள் பாரதி.

ஆனால் அவனோ கணவனென்ற உரிமையில் அவளை நெருங்க முயற்சிக்கின்றான்.

அவனது அணைப்பில் நெளிந்து கொண்டே இருந்தாள்.

அவளை தன் புறமாக திருப்பியவன் அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனது தீட்சண்யமான பார்வை மெல்ல அவளை உள்ளிழுத்துக் கொண்டது.

விழியகற்றாமல் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது இடையில் இறுக்கத்தை கூட்டியவன் தடுமாற்றத்துடன், "என்னை உனக்கு பிடிக்கலையா?” என்றான் குழந்தைத்தனமாக.

அவனது கூரிய பார்வைக்கும் பேச்சிற்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்தது.

தலையை குனிந்திருந்தவளின் நாடியை மெல்ல நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தான்
.
“ எனக்கு…எப்படின்னு சொல்லத் தெரியலை…உன்னை பார்த்தா மட்டும் என்னென்னவோ தோணுது…நீ…நீ…இங்க இருக்க…” என தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

“ உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்…நீ இப்படியே என கூடவே இரு…உன்னை பார்த்துட்டே…உன்னை இப்படி ஸ்மெல் பண்ணிட்டு இருக்கணும். நீ வேணும்…உன்னை கட்டிப்பிடிச்சிட்டு இன்னும் என்னென்னவோ பண்ணனும் தோணுதே ஏன்..?” என்றான்.

அவளோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அந்தரங்கத்தை இவ்வளவு நாசூக்காக அவன் வெளிப்படுத்திய விதம் அவளை மிரளச் செய்தது.

“இல்ல எனக்கு பயமா இருக்கு…இதெல்லாம் வே…வேண்டா..மே." என திக்கினாள்.

“ இல்ல பயப்படாதே…நான் இருக்கேன்…” என்றவன் அவள் சுதாரித்து விலகும் முன் அழுத்தமாக அவளிதழை சிறை பிடித்தான்.

அவள் விழிகள் இரண்டும் அதிர்ந்து விரிந்தது.

கைக்கொண்டு அவனை தடுக்க முயன்றவளின் கரங்களை தன் பின்னோடு இறுக்கிக் கொண்டு அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

நீண்ட முத்தம் இறுதியில் முடிவுக்கு வந்தது.

அவளை விட்டு விலகி நின்றவனுக்கு ஏதோ யோசனைகள்.

அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கி வந்தான்.

தெளிவாக சில குழப்பங்கள் அவனது மனதினை சூழ்ந்தது.

தனதறைக்குள் நுழைந்தவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

ஏதோ ஒன்று வித்தியாசமாகப்‌பட்டது. மனம் முரண்டிக் கொண்டேயிருந்தது.

மறுநாள் விடியற்காலையில் வீர ராஜசிம்மர் முன்பு நின்றிருந்தான் அருண்மொழி.

“என்ன சொல்ற அருண்..? தோட்டத்துல இருக்குற முல்லைப் பந்தல்ல ராஜநாகமா? அது வர்றதுக்கு வாய்ப்பேயில்லையே. அதுவும் இந்த பகுதியில ராஜ நாகம் வந்து போற அளவுக்கு சீதோஷ்ண நிலையும் சாதகமாவே இல்ல…ரெண்டு நாள் முன்னாடி தான் தோட்டத்தை சரி பண்ணச் சொன்னேன்…எப்படின்னு தெரியலையே…ம்ம்…” என யோசித்தார்.

“ தாத்தா…இது மூணாவது தடவை .. ஏற்கனவே ரெண்டு தடவை கண்டெய்னர் வச்சு என்னோட காரை இடிக்க பார்த்தாங்க. இப்ப பாம்பு…யாரோ பக்கத்துல இருந்தே நம்மளை வாட்ச் பண்ணுற‌ மாதிரி தெரியுது…” என்றான்.

“பாப்போம்…கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்..” என்று கூறி கொண்டு இருக்கும் போதே அந்த உயர் ரக கருப்பு நிற தார் ஜீப் உள்ளே நுழைந்தது.

அதிலிருந்து இறங்கினான் இளமாறன்…

காரின் பின்புறம் இருந்து இரண்டு அழகிகள் இறங்கினார்கள்.

ஆள்‌பாதி ஆடை பாதி என்பது போல இடுப்பிற்கு மேலே சிறிய துணியும் ‌இடுப்பிற்கு கீழே சற்றே தாராளமாக தொடை வரையிலான துணியும் அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இளமாறன் இரு அழகிகளுக்கு இடையே நடக்க. அவனது தோளினைப் பிடித்து தொங்கிக் கொண்டே நடந்தனர் இருவரும்.

அதனைப் பார்த்து விட்டு தலையில் வெளிப்படையாக அடித்துக் கொண்டார் ‌வீர‌ராஜ சிம்மர்.

“ என்ன தாத்தா…என்னாச்சு?”

“ அங்க பாரு…அவன் ‌பண்ற அக்கப்போரை…இவ்வளவு நாள் பொண்ணுங்களோட வெளிய தான் சுத்திட்டு இருந்தான்… இப்ப‌ என்னடான்னா… வீட்டுக்குள்ளேயே அவங்களை கூட்டிட்டு வர்றான்.இவனை ஏதாவது சொன்ன மந்தா சண்டைக்கு நிக்குறா...யாரு கிட்டயும் என்னால பேச முடியல…” என சலித்துக் கொண்டார்.

அருண்மொழியோ எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தான் .

இளமாறன் அழகிகளுடன் வீட்டினுள்ளே நுழையவும் ஆதிசேஷன் மற்றும் மந்தாகினி எங்கோ கிளம்புவதற்காக வெளியே வந்து கொண்டிருந்தனர்.

மகன் இரு அழகிகளுக்கு நடுவில் நின்று சிரித்தபடி பேசிக்கொண்டு வர மந்தாகினிக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

“ டேய்…டேய்…என்ன‌டா இது? என்ன கண்றாவி? சொல் பேச்சையே கேக்க மாட்டியா டா…இப்படியே ஊரைச் சுத்திக் கிட்டு ஊதாரித்தனமா இருந்தென்ன என்ன டா‌ செய்றது? ஏதாவது வேலைக்கு போகலாம்ல..? இருக்குற சொத்தை இந்த ஊர் அழகிகளுக்கு கொடுத்தே அழிச்சிடுவ போல…இப்படியே நீ பண்ணிட்டு இருந்ததுனால தான் அந்த அருண்மொழி வந்து எல்லா பொறுப்புகளையும் ஏத்துக்கிட்டான். எல்லாம் நம்ம கையை விட்டு போயிடுச்சு…. ஏதாவது பண்ணி உனக்கு அதிகாரத்தையும் பொறுப்புகளையும் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சா…நீ என்னடா இப்படியே பண்ணிட்டு இருக்க…கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்க இளா…” என கோபத்துடன் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தார் மந்தாகினி.

ஆதிசேஷனோ‌, "அம்மா சொல்றதை கொஞ்சம் கேளேன்‌டா கண்ணா…இந்த அழகிங்க கூடயெல்லாம் அப்பறமா ஜாலியா இருக்கலாம்.. கொஞ்சம் சம்பாதிக்குற வேலையாவது பாக்கலாம்…” என்றவர் அழகிகளை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டார்.

“இத்தனை வயசுல உங்களுக்கு பொம்பளை சோக்கு கேக்குதோ…?” என கணவரின் தலையில் ஒரு கொட்டு வைத்தார் மந்தாகினி.

“மாம்…டாட்…என்ன நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஒரே அட்வைஸ் மழையா பொழிஞ்சிட்டு இருக்கீங்க….ஐ டோண்ட்…லைக்..இட்.. எல்லாரும் சம்பாரிச்சிட்டே இருந்தா யார் தான் செலவு பண்ணுவா..நீங்க சம்பாதிங்க….நான் செலவழிக்கிறேன்… ஐ ஆல்வேஸ் வான்‌‌ டூ ஹேவ் ஃபன்‌ வித் கேர்ள்ஸ்…” என்றவன் அழகிகளின் இடையை தன்னுடன் இறுக்கிக் கொண்டு நடந்தான்.

நந்தினியும் சுகன்யாவும் ஏதோ பேசிக் கொண்டே வர, அவர்களைப் பார்த்தவன் , “ ஒன் செக் பேப்ஸ்…” என்று கூறி விட்டு இருவருக்கும் இடையே சென்று நின்றான்.

திடீரென அவன் வந்து நிற்கவும் இருவரும் பதறி‌ விலகினர்.

“ஹாய்…ப்ரிட்டி யங் லேடீஸ்…ஷேல் வீ ஹேவ் ரொமேண்டிக் நைட் டுடே..? பக்கத்துல இருக்குற சிங் ஐலேண்ட்க்கு (கற்பனை தான்) போகலாமா…செம்ம ப்யூட்டி ஃபுல்லா இருக்கும்…சுவிம் பண்ணிட்டே என்ஜாய் பண்ணாலாம்..” என்றபடி இருவரின் தோள் மீது கைகளை போட்டுக் கொள்ள‌ முயன்றவனது கைகளை தன் புறமாக பிடித்து இழுத்தான் அருண்மொழி.

கண்களிலிருந்த குளிர் கண்ணாடியை
கழற்றிக் கொண்டே , 'இவன்‌ ஒருத்தன் நந்தி மாதிரி.. தானும் அனுபவிக்க மாட்டான்…அடுத்தவனையும் அனுபவிக்க விட மாட்டான்…சரியான…ஃபான்டா கரடி…’ என நினைத்துக் கொண்டே, “என்ன ப்ரோ…இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை…? இப்படியே அடிக்கடி கேட் போட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்…? நானும் ரெண்டு மூணு பொண்ணை கரெக்ட் பண்ணி அதுல ஒண்ணை செலக்ட் செஞ்சு கல்யாணம் குட்டின்னு செட்டில் ஆக வேண்டாமா? சோல் ப்ரதர்ஸ்…நீங்க தான் நல்லது கெட்டதுன்னு ஒண்ணும் பாக்க மாட்டேன்றீங்க…என்னையும் ஏன்டா கேட் போட்டு தடுத்து நிறுத்துறீங்க?”என சலித்துக் கொண்டான்.

“ இங்க பாரு நீ எது பண்ணுனாலும் வீட்டுக்கு வெளியே பண்ணிக்கோ…வீட்டுக்குள்ள எதையும் கொண்டு வராத…அண்ட் லாஸ்ட்…இங்க இருக்குற பொண்ணுங்கள மேல கைப்பட்டுச்சு…அப்பறம் சாப்பிடறதுக்கு கை இருக்காது…”என அழுத்தமாக கூறியவன் , “ மிஸ் நந்தினி…மேல என்னோட ரூமுக்கு வாங்க…கொஞ்சம் அபிஷியலா பேசணும்” என்று கூறி விட்டுச் சென்றான்.

அருண்மொழி செல்லும் வரை அவனை முறைத்தவன் நந்தினியைப்‌ பார்த்து, "போம்மா..அவன் ரொம்ப நல்லவன்….ரூமுக்கு மட்டுந்தான் கூப்பிடுவான்...” என்றான் நக்கலாக.

“ ஹலோ…! மைண்ட்‌ யுவர் வேர்ட்ஸ்…” என அவனிடம் சீறி விட்டுச் சென்றாள்.

“ஹப்பா…என்னா சூடு…” என சிலிர்த்துக் கொண்டவன், முறைத்தபடி நின்றிருந்த சுகன்யா வை பார்த்து கண் சிமிட்டினான்.

“ ஹாய்…சுகன் பேபி…அந்த பொண்ணு போனா போறா…நீ எனக்கு கம்பெனி குடு… சில் பண்ணலாம் டியர்…” என்று கூறியபடி அழகிகளை உரசிக் கொண்டே நெருங்கி நின்றிருந்தான்.

காலில் இருந்த செருப்பினை கண் ஜாடை காட்டினாள் , "திருந்துறதா ஐடியாவே இல்ல ல? மரியாதையா வெளியே போயிடுங்க…”என்றாள் காட்டமாக.

“ ஹய்…என்ன ஆளாளுக்கு இன்னைக்கு இவ்வளவு டென்ஷனா இருக்காங்க.. ஓகே…நான் என்னோட கேர்ள்ஸை கூட்டிட்டு ஸ்விம் பண்ணப் போறேன்…கமான் பேபி..லெட் அஸ் என்ஜாய்…” என்று கூறி உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்து நிறுத்தினாள் சுகன்யா.

“ ம்ம்ச்…என்ன இப்ப உனக்கு பிரச்சினை? உள்ள போக விடு…”

“ முடியாது…நீங்க என்ன பண்ணினாலும் அரண்மனைக்கு வெளியே போய் பண்ணுங்க…உள்ள தேவையில்லாத அசிங்கத்தையெல்லாம் கொண்டு வராதீங்க…” என்றாள் எரிச்சலுடன்.

“ ஹேய்…எது டி அசிங்கம்…என்ன பாத்த நீ? நீ என்ன அரண்மனைக்கு எஜமானியா? ஆஃப்ட்ரால் காசுக்கு வேலை செய்யறவ…நீ யாரு டி..என்ன அதிகாரம் பண்ண?இல்ல தெரியாம தான் கேக்குறேன்….இந்த வீட்டுல இருக்குறவங்க சொல்லியே நான் கேட்கல…நீ சொல்லியா…நான் கேட்கப்போறேன்…நகரு எனக்கு வழிய விடு….” என்றவன் அவளது கரங்களை தட்டி விட்டுவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த பிரம்மாண்டமான நீச்சல் குளத்தில் அழகிகளுடன் இறங்கினான்.

வீர ராஜசிம்மரின் அறைக்கு ஏதோ கேட்கப் போனவள் மேலிருந்து நீச்சல் குளத்தைப் பார்த்தாள்.

அழகிகளுடன் சிரித்து கும்மாளமிட்ட படி இருந்தான்‌ இளமாறன்.

மீன் போல நீந்தி நீரின் மேலெழுந்து முகத்தில் வடிந்து கொண்டிருந்த நீரை இரு கரங்களால் துடைத்து விட்டு மேலே பார்த்தான்.

சுகன்யா அவனை தான் வலி மிகுந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்த அழகியை கவனிக்கத் தவறினான்.

அப்பெண் திடுமென்று அவனது முகத்தை தாங்கி இதழோடு இதழ் புதைத்து அவனுடன் நீரினுள் மூழ்கினாள்.

சுகன்யாவின் இதயத்தில் ஆயிரம் கத்தியை கொண்டு‌ சொருகிய வலி…

அத்தனை நேரமும் திமிராக அவனுக்கு பதிலடி கொடுத்து கொண்டிருந்தவள் இளமாறனின் இந்த செயலை காண சக்தியில்லாது கண்ணீரை உகுத்தாள்.

மெல்ல அவளது கரங்கள் நீண்டு கழுத்தினை தொட்டுப் பார்த்துக் கொண்டது.

அவன் அணிவித்த தாலி பத்திரமாக இருந்தது.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(23)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
எதே மனைவியா????
அப்ப இவனும் சும்மா நடிக்கரானோ????
தேவி மாறி இவ நிலைமையும் ஆக கூடாதுனு
 
  • Like
Reactions: STN46

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
ஆஹா இவர்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கா?
 
  • Like
Reactions: STN46