அத்தியாயம் -25
கால் வலிக்க நடந்தவன் அரண்மனையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டான்.
மனம் முழுவதும் குழப்ப ரேகைகள் .
அவளை முத்தமிடும் போது தேவியை உணர முடியவில்லையே…யாரோ அந்நியப் பெண் போலதான் உணர முடிந்தது..
‘யாரிவள்?’ என்ற கேள்வி மனம் முழுவதும் எதிரொலித்து கொண்டிருந்தது.
“தேவி…தேவி…” என முணுமுணுத்துக் கொண்டே இருந்தவனுக்கு யாரோ இருவர் அங்கிருந்த பெரிய பாறைக்கு பின்புறம் பேசிக் கொண்டிருந்தது தெளிவாக கேட்டது.
இருவரும் உடைந்த ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ஹாய்…ஜான்…ரொம்ப நாள் கழிச்சு இந்தப்பக்கம் வந்துருக்க? என்ன விஷயம்.?”
“ ம்ம்…பணம் தீர்ந்து போச்சு…அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்துருக்கேன்…”
“ அப்படி யாரு…உனக்கு இங்க பணத்தை தர்றாங்க? வேலை செஞ்சா தானே பணம் கிடைக்கும்…நீயே ஒரு சோம்பேறி…” என்று கூறி விட்டு சிரித்தான் மற்றொருவன்.
“ டேய் ஹிமு….நான் வேலை செஞ்சு பணத்தை வாங்கிட்டு போக வரல டா. ஏற்கனவே செஞ்ச வேலைக்கு தான் பணம் வாங்கிட்டு போக வந்துருக்கேன்..”
“ புரியலையே…” என்றான் ஹிமு.
“ ஷ்ஷ்..கத்திப் பேசாத…இங்க யாருக்கும் விஷயம் தெரிஞ்சா வம்பு…கிட்ட வா ரகசியம் சொல்றேன்” என்றவன் மற்றொருவனை தன்னருகே வருமாறு அழைத்து ரகசியத்தை சத்தமாக கூற ஆரம்பித்தான்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அரண்மனையில இருக்குற மூத்தார் மருமக தேவி செத்துப் போச்சுல…”
“ ஆமாம்…கடல்ல மூழ்கி செத்துப் போச்சு…அந்த பொண்ணு…அதுக்கென்ன இப்ப?”என்றபடி சிகரெட்டை பற்ற வைத்தான் ஹிமு.
“ அந்த பொண்ணு தானா செத்து போகலை…நான் தான் கொன்னேன்…ஹா..ஹா.. அழுதுக்கிட்டே அந்த பொண்ணு கடற்கரையில நின்னுட்டு இருந்துச்சா..அரண்மனையில் இருக்குறவங்க அந்த பொண்ணை கொன்னுடுன்னு சொல்லி நிறைய பணத்தை குடுத்தாங்க.
அந்த பொண்ணை கடற்கரையிலேயே கொல்றதுக்கு ட்ரை பண்ணுனேன். .முடியல.. அதனால அந்த பொண்ணை விரட்டிட்டே இவ்வளவு தூரம் வந்து அதோ கடலுக்கு நடுவே அந்த பாறையிருக்கு பாரு..அங்க அவளோட தலையை பிடிச்சு மூழ்க வைச்சு கொன்னேன்….அலை அடிச்சிட்டு போனதா எல்லாரும் நம்பிட்டாங்க…எனக்குத் தேவையான பணமும் வந்துடுச்சு…நா ஜாலியா நைஜீரியால போய் செட்டில் ஆகிட்டேன். இப்ப கொஞ்சம் பணம் தேவைப்படுது..அதான் கொல்ல சொன்னவங்க கிட்டயே போய் ப்ளாக் மெயில் பண்ணி வாங்கப் போறேன்..பாவம் அந்த தேவி பொண்ணு அநியாயமா உயிரை விட்டுடுச்சு… அது செத்து என்னை வாழ வச்சிடுச்சு அந்த வேர்மனுக்கும் பைத்தியம் புடிச்சிடுச்சு” என்று கூறி இடிஇடியென சிரித்தவனின் கழுத்தை பிடித்திருந்தான் மாறவர்மன்..
வர்மன் என்று கூற வராததால் வேர்மன் என்று உளறினான்.
“ என் தேவி சாகல…டா..பொய் சொல்லுற…என் தேவி சாகல…யாரோட தான் இருக்கா….நீ யாருடா…” என ஆத்திரத்துடன் அவனை அடித்து துவம்சம் செய்து விட்டான் .
கிழே கிடந்த ஹிமு அருகில் இருந்த கட்டையை எடுத்து மாறவர்மனின் காலில அடிக்கவே தடுமாறி கீழே விழுந்து விட்டான் வர்மன்.
அவனது தலையில் அடித்தான்.
மீண்டும் மாறவர்மன் எழுவதற்குள் கட்டையால் இரு முறை பலமாக அடித்து விட்டு தப்பியோடி விட்டனர் இருவரும்.
அரண்மனையில் நெடுநேரம் ஆகியும் மாறவர்மனை காணாமல் அனைவரும் பதறி போயினர்..
பாரதிக்கோ மனம் பதறி துடித்தது.
அன்று அவளை முத்தமிட்ட பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை மாறவர்மன்.
அவளுடன் பேச்சையும் குறைத்திருந்தான்.
அவளுக்கு தான் என்னவோ போலிருந்தது.
தினமும் காலையிலும் மாலையிலும் அவளது கரங்களை பிடித்துக் கொண்டே ஏதாவது பேசிக் கொண்டு கடற்கரையோரம் நடப்பான்.
அவள் எதுவும் பேச மாட்டாள். அவன் மட்டுமே முன்னுக்கு பின் முரணாக ஏதாவது பேசிக் கொண்டே வருவான்.
தீவிற்கு வந்த முதலில் இருந்து வெறுப்பும் சலிப்பும் காணாமல் போய் , அவன் மீது வாஞ்சையுடன் கூடிய அன்பு தோன்றியிருந்தது.
காதல் என்று கூறி விட முடியாது.
ஆனால் அவனை எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் பாரதி.
அன்று வேலை முடிய அதிக நேரமாகி விட்டதால் நந்தினியை தனது உயர் ரக பென்ஸ் காரில அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் வந்திறங்கினான் அருண்மொழி.
அவள் முன் பக்க சீட்டில் இருந்து இறங்கும். போதே பார்த்து விட்ட மந்தாகினி, “ என்ன அருண்…போயும் போயும் வேலை செய்யுற பொண்ணை இவ்வளவு காஸ்ட்லியான கார்ல உக்கார வச்சி கூட்டிட்டு வந்துருக்க…” என்றவரை அழுத்தமாக பார்த்தான்.
“அது சரி…என்னவோ போங்க…வேலை செய்ய வந்த ஆட்களுக்கு ரொம்பவே தான் சலுகை கொடுக்குறீங்க.. என்னன்னு தான் புரிய மாட்டேங்குது…” என முகத்தை சுளித்துக் கொண்டார்.
“நீங்க உங்க குவார்ட்டர்ஸூக்கு போங்க நந்தினி…” என்றவன் வீர ராஜ சிம்மரை காணச் சென்றான்.
அங்கு வந்த விஜயராணி,” அருண்…கொஞ்சம் இங்க வாப்பா..” என்றார்.
“என்ன சித்தி சொல்லுங்க..”
“வர்மனை சாயந்திரத்துல இருந்து காணோம் ப்பா…எல்லா இடத்துலயும் தேடி பார்த்தாச்சு…எங்க போனான்னே தெரியல…நீ கொஞ்சம் தேடிப் பாரு பா…”என்றார்.
“ என்ன சொல்றீங்க சித்தி …சாயந்திரத்துல இருந்து காணோமா? எல்லா இடத்திலையும் தேடிப் பாத்தீங்களா?”
“தேடிப் பார்த்தேன் ப்பா…காணோமே…” என்றார் கவலையுடன்.
“ சரி சரி கவலைப்படாதீங்க…நானும் இளமாறனும் தேடிப் பாக்குறோம்…ஆமா இளமாறன் எங்க?” என்றான்.
“அவன் எங்கன்னு தெரியலை .”
“சரி பாக்குறேன்..” என்றவன் இளமாறனைத் தேடிப் புறப்பட்டான்.
இங்கோ சுகன்யாவின் இதழ்களை அழுத்தமாக சிறை பிடித்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
அவளது விழிகளோ கண்ணீரை சொரிய அவனது வன்மையான முத்தத்தில் தோய்ந்து போய் அவனது கரங்களிலேயே தஞ்சம் அடைந்தாள்.
.
அவளது முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "ஏன் டி…இப்படி என்னோட உயிரை வாங்குற? ஆனாலும் ரொம்பவே அழுத்தக்காரி டி …அது எப்படி டி…கொஞ்சம் கூட உனக்கு வருத்தமாவே இல்லையா? உனக்கு தான் சுகன்யா தாலி கட்டிருக்கேன் நான் ஜாலி டைப் தான் .ஆனா உன் விஷயத்துல நான் உண்மையா தான்டி இருப்பேன். ஏன் டி புரிஞ்சிக்காம உயிரை வாங்கிட்டு இருக்க?” என்றான் அவளை அணைத்தபடியே.
"தள்ளிப்போறீங்களா…கொஞ்சம். உங்க பணக்காரதனத்தை என் கிட்ட காட்டாதீங்க… இப்ப என்ன இந்த தாலி தானே உங்களுக்கு உறுத்துது…இதை இப்பவே கழட்டிடுறேன்…” என தாலியை கழட்டப் போனவளை பளாரென்று அறைந்து விட்டான் இளமாறன்.
“என்ன தான்டி உனக்கு பிரச்சினை..? சொல்லித் தொலை . விரும்பி தானே டி தாலி கட்டிக்கிட்ட…அப்பறம் ஏன் ?நீ என்ன வேணாலும் பண்ணிக்க…ஆனா நான் கட்டுன தாலியை மட்டும் கழட்ட நினைச்சன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். ஊதாரியா…பொம்பிளை பொறுக்கியா இருந்தவனை மாத்துனவ நீ…இந்த மூணு நாலு வருஷத்துல எந்தப் பொண்ணையும் தொட்டதில்ல…உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். நான் நினைச்சுருந்தா ஒரே நிமிஷத்துல உன்னை எடுத்துக்க முடியும் . ஆனா அதை நான் பண்ணல…ஏன்னா…நீயா என்னை புரிஞ்சிகிட்டு என்கிட்ட வரணும்னு வெயிட் பண்ணுறேன். இன்னும் எவ்வளவு நாளானாலும் வெயிட் பண்ணுவேன்..” என்று ஆத்திரத்துடன் கூறியவன் திரும்பிச் செல்ல முற்பட்ட போது அருண்மொழியை பார்த்து விட்டான்
அவனும் இருவருக்கிடையே நடந்த உரையாடலை முழுவதும் கேட்டு விட்டான்.
வேகமாக அவனருகே வந்தவன், "என்ன பண்ணிட்டு இருக்க இளமாறா?...ம்ம்ச்…இதைப்பத்தி அப்பறம் பேசலாம். வர்மனை சாயந்திரத்துல இருந்து காணோம். எங்க போனான்னே தெரியல..வா தேடிப் பாப்போம்..” என அவனை இழுத்துக் கொண்டு வேகமாக அரண்மனையை விட்டு வெளியே வந்தான்.
அதற்குள் உள்ளூர் மக்கள் சிலர் மாறவர்மனை தூக்கிக் கொண்டு அரண்மனை முன்பு வந்துவிட்டனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த மாறவர்மனை கண்டு அனைவரும் பதறினார்கள்.
விஜயராணி, "அய்யோ! என் புள்ளைக்கு என்ன ஆச்சு..? கடவுளே..!” என பதறித் கொண்டு முன்னே வர ,” சித்தி இருங்க…நான் கார் எடுத்துட்டு வர்றேன்…ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்…வந்து என்னன்னு விசாரிக்கலாம்.” என்றவன் தனது மகிழுந்தை எடுத்துக் கொண்டு வந்தான்.
இளமாறன் மற்றும் மேலும் சில பாதுகாவலர்கள் மகிழுந்தில் ஏறிக் கொள்ள வாகனத்தை எடுத்தான் அருண்மொழி .
மற்றொரு மகிழுந்தில் விஜயராணி மற்றும் சுதர்சன ராஜசிம்மரும் கிளம்பினார்கள்.
இளமாறன் சென்ற பிறகு சுகன்யாவிற்கோ அழுகையாக வந்தது.
கல்மேசையில் அமர்ந்திருந்தாள்.
அவளருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.
நந்தினி தான் நின்றிருந்தாள்.
வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“ இன்னைக்கு லேட்டாகிடுச்சா மேடம்…?”
“ ம்ம்.. கொஞ்சம் லேட்டாகிடுச்சு… நீ...தப்பா நினைக்கலன்னா உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா?”
“ ம்ம்…கேளுங்க மேடம்…”
“உண்மையிலேயே இளமாறனை நீ கல்யாணம் பண்ணிகிட்டியா?”
சுகன்யா அமைதியாக இருந்தாள்.
“ ஐ யம் சாரி…உனக்கு விருப்பம் இல்லன்னா நீ சொல்ல வேண்டாம்…” என்றாள் அவசரமாக.
“ அதெல்லாம் ஒண்ணுமில்லை மேடம்…நான் ஆஷ்ரமத்துல வளர்ந்தவ. எம்.பி.ஏ கோல்ட் மெடலிஸ்ட். ஆனா சரியான வேலை கிடைக்கல. எப்பவும் படிச்சு முடிச்சுட்டா ஆஷ்ரமத்தை விட்டு வெளியே போயிடணும். அது தான் ரூல். ஆனா நான் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதனால ஆஷ்ரமத்துல கொஞ்ச நாள் தங்கிக்க சரின்னாங்க. அப்ப தான் அருண்மொழி சாரும், ராஜசிம்மரும் எங்க ஆஷ்ரமத்துக்கு வந்தாங்க. அருண்மொழி சார் தன்னோட பிறந்தநாளை எப்பவும் ஆஷ்ரமத்துலயோ.
இல்ல ரோட்டோரமா இருக்குற ஆதரவற்றங்கவளுக்கு உதவி செய்தோ தான் கொண்டாடுவாரு. நான் ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்குறதை பார்த்து என்னை அவங்க அரண்மனையோட அட்மினிஸ்ட்ரேஷன் சைடுக்கு செலக்ட் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தாங்க. இங்க இருக்குற கம்பெனில ட்ரைனிங் குடுத்துட்டு இருந்தப்ப தான் இளமாறனோட பழக்கமாச்சு.. முதல் ஒரு வருஷம் என்னை சுத்தி வந்து ரொம்பவே தொந்தரவு பண்ணுனாரு. ஒரு நாள் ரொம்பவே கோபப்பட்டு செருப்பை கழட்டி அவரை அடிச்சிட்டேன்…முதல்ல ரெஸ்பான்சிபிலா நடந்துக்கோங்க…அப்பறமா காதலிக்கலாம்னு சொன்னேன். நான் சொன்ன வார்த்தை அவருக்குள்ள என்ன மாற்றத்தை கொண்டு வந்துச்சோ தெரியல…ஆனா தன்னோட நடவடிக்கை எல்லாத்தையும் மாத்திக்கிட்டாரு. ஆறு மாசம் என்னை திரும்பி கூட பாக்கல…அவரு பாக்க தான் ஜாலியான பேர்வழி மாதிரி இருக்காரு. ஆனா இந்த நாட்டோட கப்பல்படையில நல்ல பதவில இருந்தாரு.. மெரைன் இன்ஜினியர் அவர். அவரோட பொறுப்பை பாத்துட்டு என் மனசு அவர் புறமாக சாய ஆரம்பிச்சிடுச்சு. நானும் அவரும் பழக ஆரம்பிச்சோம். எனக்கு பிரீயட்ஸ் டைம்ல பயங்கரமா வயிறு வலிக்கும். ஒருநாள் நான் துடிக்குறதை பாத்துட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் டெஸ்ட்டுக்கு குடுத்துட்டு வந்தாரு. டெஸ்ட் ரிசல்ட் வர்றதுக்குள்ள அவரு கல்யாணம் பண்ணிக்கலாம்…அப்பறமா வீட்டுல சொல்லிக் கலாம்னு என்னை கம்பெல் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. மந்தாகினியும் ஆதிசேஷனும் நிச்சயமா கல்யணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம பாத்துகிட்டாரு.. டெஸ்ட் ரிசல்ட் பத்தி அவரு மறந்தே போயிட்டார். நான் போய் ரிசல்ட் வாங்கினேன். அந்த லேடி டாக்டர் என்னோட கர்ப்பப்பையில ஃபைப்ராய்டு கட்டி பத்து சென்டிமீட்டர் அளவுக்கு இருக்குன்னும் இம்மீட்டியட்டா கர்ப்பப்பையை எடுக்கணும். அதுவும். ஒவரீஸோட சேர்த்து எடுத்திடணும்னு சொன்னாங்க. ஆனா ஓவரீஸ் எடுத்துட்டா தாம்பத்தியத்துல ஈடுபட முடியாது. அதுல நாட்டம் வர்றதுக்கு வாய்ப்பு ரொம்பவே குறைவுன்னு சொல்லிட்டாங்க. கர்ப்பப்பையை எடுத்துட்டா கண்டிப்பா குழப்பத்தையும் பெத்துக்க முடியாது..தாம்பத்தியமும் வச்சிக்க முடியாதுன்னு எனக்குத் தெளிவா தெரிஞ்சு போச்சு. கண்டிப்பா இதை எந்த தாயும் ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் மந்தாகினி ஒத்துக்கவே மாட்டாங்கன்னு அவரை விட்டு விலக நினைச்சேன்…அவரே அதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துட்டார். கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் கூட பிசிக்ல் ரிஷலேஷன்ஷிப் வச்சிக்க ஆசைப்பட்டாரு. இதுவே சாக்கா வச்சு அவரை பொறுக்கி, ஏமாத்துக்காரர், வுமனைசர்ன்னு கண்டபடி பேசிட்டேன். அவர் எவ்வளவோ பேசி புரிய வைக்குற துக்கு ட்ரை பண்ணினாரு…ஆனா நான் அவரை பேசவே விடல. கண்டபடி திட்டினேன். அதுல அவருக்கு ரொம்பவே கோபம் வந்துட்டு...நீ சொல்ற மாதிரி நான் பொறுக்கி தான், வுமனைசர் தான்னு சொல்லிட்டு என் கண்ணு முன்னாடியே தினமும் பல பெண்களோட பழையபடி சுத்த ஆரம்பிச்சிட்டார். அவருக்கு வேற நல்ல லைஃப் அமையணும்னு ஆசைப்பட்டு தான் விலகினேன். ஆனா நிலமை தலைகீழா மாறிடுச்சு..” என சோர்வுடன் கூறினாள்.
“ரொம்ப படிச்சிட்டதனாலேயே நிறைய நேரங்கள்ல நாம முட்டாளாகிடுறோம். எனக்கு என்னவோ நீ மறுபடியும் ஒரு தடவை இளமாறன் கிட்ட உண்மையை சொல்லி பாக்கலாமேன்னு தோணுது…உன்னை கம்பெல் பண்ணல..”என்றபடி அவளை கூர்ந்து பார்த்தாள்.
“நடக்காததுக்கு என்னைக்குமே நான் ஆசைப்பட்டது இல்லை மேடம். டைம் ஆச்சு …வாங்க குவார்ட்டர்ஸூக்கு போகலாம்…” என்றபடி எழுந்தாள்.
மருத்துவமனையில் தீவிரமாக மாறவர்மனுக்கு சிகிச்சை அளிக்கப்ப்டடது.
அருண்மொழியுடன் இளமாறனும் நின்று கொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் ஒரு வித தீவிரம் இருந்தது.
மாறவர்மனை அடிக்கும் அளவிற்கு யாருக்குத் தைரியம் என்ற கேள்வி எழுந்தது.

Last edited:
Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே ..!(25)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.