மை டியர் ராவணா - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,509
113
Germany
அத்தியாயம் 6


வேக வேகமாக ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே இழுத்து வந்தாள் ராவணனை, சீதா..!!


" என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல ?? நீ பாட்டுக்கு என்னென்னமோ பண்ணிட்டு இருக்க.. ஹோட்டலுக்கு போய் வாய்க்கு ருசியா சாப்பிட்டால் அதற்கு நாம் பணம் கட்டணும் அது கூடவா உனக்கு தெரியல ?? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா ??நிஜமாகவே நீ பைத்தியமா இல்ல எல்லாரையும் பைத்தியமாக்கிட்டு இருக்கியா என்ன தான்யா வேணும் உனக்கு??", தலையில் அடித்துக் கொண்டு கத்த தொடங்கினாள் அவள்.


" அது இல்லை சீதா.. மிகவும் பசியாக இருந்தது.. யாரிடம் போய் உணவு கேட்பது என்று தெரியவில்லை நீ வேறு என்னை ஏதோ ஒரு இடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்து விட்டாய்.. அங்கிருந்த சிறை கைதிகளுடன் நானும் ஒரு கைதியாக இருந்தேன்.. அங்கு இருக்க பிடிக்காமல் தான் நான் தப்பித்து ஓடி வந்தேன் ஆனால் பசி வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை.. இங்கு எல்லோரும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. சரி பசிக்கிறது என்று நானும் போய் அமர்ந்தேன் அவர்கள் சாப்பிடும் வகைகளை நானும் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் ருசியாக இருந்தது அதில் ஜில்லிப்பாக ஒரு உணவை கொண்டு வந்து கொடுத்தான்.. வயிருக்கு இதமாக குளுகுளுவென்று இருந்தது அந்த கூழ்.. அந்த குளுகுளு கூழ் சாப்பிட்டதற்கு தான் அவன் என்னை இப்படி திட்டி விட்டானோ என்னவோ??", என்றான் அப்பாவித்தனமாக.


" யோவ்.. அது பேரு குளுகுளுக் கூழ் இல்ல ஐஸ்கிரீம்.."


" என்னது?? என்ன கூறுகிறாய் சீதா??"


" அது சரி உனக்கு விளங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் சரி வண்டியில் ஏறு.."


" குதிரைகள் இல்லா இந்த ரதத்திலா?? எனக்கு பயமாக இருக்கிறது இதில் என்னால் வர முடியாது.."


" ஒழுங்கு மரியாதையா இப்ப வண்டியில ஏறுறியா இல்லையா இதுக்கு மேலயும் உன்னை பப்ளிக் பிளேஸ்ல விட்டு வச்சிருந்தால் மக்களுக்கு தான் ஆபத்து.. சீக்கிரம் வண்டியில ஏறு", என்று அதட்டலாக அவள் கூறவும் வேறு வழி இல்லாமல் இரு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டு ஒரு வழியாக அமர்ந்து விட்டான் ராவணன்..


வேகம் எடுத்த அவளுடைய ஸ்கூட்டி நேராக அவள் இருக்கும் இருப்பிடத்திற்கு சென்றது..!!


பூட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தாள் சீதா..


" எமது அரண்மனை போன்று பெரிய இடமாக இல்லை என்றாலும் பரவாயில்லை.. இது குருவிக்கூடு போல கொஞ்சம் எளிமையாகவும் அழகாகவும் தான் இருக்கிறது உமது இல்லம்", என்றான் அவன்.


" இந்த எகத்தாளத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. நீ பண்ற வேலைக்கு உனக்கு அரண்மனை வேற கேக்குதா?? சாப்பிட்ட ஐஸ்கிரீமுக்கும் பொங்கல் புளியோதரைக்கும் பில் கட்டுறதுக்கு கூட உன்கிட்ட பணம் இல்ல இந்த லட்சணத்தில் நீ அரண்மனையில் வேற இருந்தியா?? கேட்கிறவ கேனச்சியா இருந்தா கேப்பையில் வெண்ணை வடியுதுன்னு கூட நீ சொல்லுவ", என்று பொரிந்து தள்ளினாள் அவள்..


" எதற்காக இப்படி கத்துகிறாய் சீதா என்னாயிற்று?? பாரு உனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது", என்று சொல்லியபடியே அவள் நெஞ்சின் மீது கை வைத்தான் அவன் எதார்த்தமாக..


அது பதார்த்தமாக மாறி அவனுடைய கை விரல்கள் அவளுடைய கனகத்தை தீண்டி விட்டது..!!


பஞ்சு போன்ற அவளின் கனகம் அவன் கை விரல்களில் தஞ்சம் புகுந்தது..!!


வாள் பற்றி இரும்பு மனிதனாக நின்று கொண்டிருக்கும் அவன் வலிய கரங்கள் அவளின் மென்பஞ்சு மேகங்களை தீண்டியதும் மின்சாரம் தாக்கியதை போல உணர்ந்தான் இந்திர ராவணன்..!!


அவளுக்கும் ஒரு நிமிடம் மூச்சு பேச்சே எழவில்லை.. அப்படியே சிலை போல் நின்று விட்டாள், இமைக்க மறந்து..!!


எல்லாம் ஒரு நிமிடம் தான்........!!


அடுத்த நிமிடமே துள்ளி குதித்து எழுந்து நின்றாள் அவள்..!!


" டேய் எம்புட்டு தைரியம் இருந்தா என் மேலயே நீ கை வைப்ப??", என்று சொல்லிக் கொண்டே அவனை அடிப்பதற்காக கை ஓங்கினாள் அவள்..


உடனே அவளுடைய கையை லாவகமாக பற்றி, அவளின் அடியிலிருந்து தப்பித்தவன் மேலும் அவளுடைய கையை பின் பக்கமாக முறுக்கி இழுத்து வைத்தான்..


" ஐயோ எனக்கு கை வலிக்குது கையை விடுடா படுபாவி.. இப்படி கரும்பு மெஷின்ல சிக்கின மாதிரியே ஆயிடுச்சே என்னுடைய நிலைமை கை வலிக்குது விடு", என்று அவள் அரற்றினாள்..


" எத்தனை திண்ணக்கம் இருந்தால் நீ என்னையே தாக்க முயல்வாய் பெண்ணே?? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறதே என்று பதட்டத்தில் தான் உன் நெஞ்சின் மீது கை வைத்தேன் அது தவறுதலாக எங்கோ பட்டு.. என்னை மன்னிக்கவும்.. எந்தவிதமான தவறான நோக்கிலும் நான் உன்னை தொடவில்லை.. உனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து பயந்து போய் தான் அப்படி செய்தேன் அதற்காக என்னை அடிப்பதற்கு கை ஓங்குவாயா?? பெண்ணிற்கு இது அழகல்லவே..", என்றான் அதே மிடுக்குடன்..!!


" இந்த வசனம் எல்லாம் பக்கம் பக்கமா பேசு ஆனா லூசு மாதிரி நடந்துக்கிற.. உன்னை வச்சுட்டு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல சரி இப்போதைக்கு கையை விடு கை வலிக்குது விட்டு தொலடா",என்று அவள் கத்தவும் ஒரு கட்டத்தில் அவளுடைய கைகளை விடுவித்தான் அவன்..


இவனை எங்கேயாவது கொண்டு போய் விடலாம் என்றால் அங்கேயும் போய் வம்பு செய்துவிட்டு எங்கேயாவது தப்பித்து ஓடி விடுகிறான்.. பார்க்கவும் ஒரு பக்கம் பாவமாக இருக்கிறது நிஜமாகவே இவனுக்கு சுய நினைவு இல்லையா இல்ல பைத்தியமா?? இல்லன்னா உண்மையாவே இவன் நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசனா?? நிச்சயமாக அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது இந்த காலத்தில் ராஜாவாவது மன்னனாவது?? இவன் ஏதோ புத்தி பேதளித்து போய் உளறி கொண்டிருக்கிறான் அவ்வளவு தான்.. அதனால இவனுடைய பேச்சை எல்லாம் நம்ப முடியாது.. இப்போதைக்கு இவனை வெளியே எங்கேயும் விடாமல் நம்ம கூட தான் வச்சுக்கணும் போலருக்கு.. போற இடத்துல எல்லாம் வம்பிழுத்திட்டு வந்துட்டா என்ன பண்றது?? அதுக்கு பேசாம அவன் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும்.. என்று இன்னொரு பக்கம் அவளுடைய மனம் அவனுக்காக பரிந்துரைத்தது..!!


வேறு வழி இல்லாமல் அவனை பாவமாக ஒரு பார்வை பார்த்தாள் அவள்..


அதாவது அவன் மீது பாவப்பட்டு அல்ல , இனி இவனோடு ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்க போகிறோமோ தன்னுடைய நிலை என்னவாக போகிறதோ என்று தன்மீதே பாவப்பட்டு இரக்கம் கொண்டாள்..


மாலை 6 மணி..


அடுப்படிக்குள் சென்று இருவருக்கும் காபி தயாரித்தாள் சீதா..


அதைக் கொண்டு வந்து ராவணனிடம் அவள் கொடுக்க..


" அடடே இது என்ன ஆவி பறக்க இருக்கிறது இந்த உணவு?? இதன் பெயர் என்னவோ??"


" காபி"


" காப்......பியா அப்படி என்றால்??"


" இதுக்கெல்லாம் உனக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது சீக்கிரமா சாப்பிடு"


சொட்டு சொட்டாக அந்த காபியை ருசி பார்த்தவன்..


" அடடே என்ன ருசியாக இருக்கிறது உன் கைபட்டால் அனைத்தும் இனிக்கிறது சீதையே..", என்றான் அவன் இயல்பாக.


ஆனால் அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் அவளுக்குள் தான் சில மாற்றங்கள் உண்டானது..


பெரிய விருந்தெல்லாம் அவள் ஒன்றும் செய்யவில்லை ஆனால் அவள் போட்ட காபியை ருசி பார்த்து விட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவன் மனதார பாராட்டியதும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..


வருஷக்கணக்காக தன்னுடைய கணவனுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து சமைத்து போட்டிருக்கிறாள் அவள் அன்னை, ஆனால் ஒரு நாள் கூட அவளுடைய தந்தை அவரை பாராட்டி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது.. மனதார பாராட்டி ஒரு வார்த்தை கூறி இருந்தால் மேலும் தன் அன்னை மகிழ்ச்சியாக வலம் வருவாளோ என்று ஒரு நிமிடம் அவளுடைய மனம் கற்பனை செய்து பார்த்தது..


நிஜம்தானே..??


இந்த உலகில் உள்ள அனைத்து பெண்கள் மனதிலும் இருக்கும் ஒரு சிறிய நப்பாசை இது மட்டும்தான் தாங்கள் விரும்பி சமைக்கும் அனைத்து உணவையும் பாராட்டி கூறவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவர்களுக்காக நாம் பார்த்து செய்யும் ஒரு சில விஷயங்களிலாவது நன்றாக இருக்கிறது , அருமை என்று சில வார்த்தைகளை சொன்னால் குறைந்தா போய் விடுவார்கள்?? அதைக் கேட்டு மேலும் நன்றாக அவர்கள் சமைப்பதற்கு வாய்ப்பு இருக்கும் அல்லவா ??..


என்னவோ பல ஆண்கள் இதைக் கூற மறந்து விடுகிறார்கள் போல..


ஆனால் இவன் மறந்தும் அதைக் கூற மறக்கவில்லை..


ஒரு கோப்பை காபிக்கு அவன் இப்படி பாராட்டுகிறானே என்று அதிசயமாக அவனை ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு அவளுடைய அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்..


நாள் முழுக்க இவனை தேடி வெளியே அலைந்து திரிந்து வந்ததில் உடல் முழுக்க வியர்த்துப் போய் கிடந்தது அவளுக்கு..


உடனே உடைமாற்ற அவளுடைய அறைக்குள் நுழைந்தாள்..


கபோர்ட்டில் இருந்த அவளுடைய மெல்லிய நைட் கவுனை எடுத்து அணிந்து கொண்டாள்..


வான் நீல நிறத்திலிருந்த அந்த மெல்லிய நைட் கவுன் அவளுடைய உடல் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டியது..


ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து அவள் நடந்து வரும்பொழுது அவளுடைய அங்கங்கள் அசையும் அழகை அவளுடைய ஆடை பிரதிபலித்துக் கொண்டிருந்தது கண்ணாடியாக..!!


வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ராவணனின் கண்களில் இவள் பட்டு விட்டாள்..


என்ன வகையான உடை இது வித்தியாசமாக இருக்கிறது என்று அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன் அவளை நெருங்கினான்..


குனிந்த தலை நிமிராமல் ஏதோ ஒரு யோசனையில் வேகவேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள் எதிரில் வந்து கொண்டிருந்த ராவணனை கவனிக்காமல் அவன் மீது மோதி விட.. தடுமாறி கீழே விழப் போனாள் சீதா..


"அய்யோ சீதா.. நிதானம்.. நிதானம்..", என்று சொல்லிக்கொண்டே அவளை தாங்கி நின்றான் அவன்.


ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருக்கும் அந்த ராவணனின் கைப்பிடிக்குள் சிறிய கொடி போன்ற தேகத்துடன் மெல்லிய பூந்தளிராய் தஞ்சம் அடைந்திருந்தாள் சீதா ..!!


- தொடரும்..
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: மை டியர் ராவணா - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
இந்த எழுத்து எனக்கு ரொம்ப பரிசியமானதா இருக்கு...
என்னோட favourite writer தானே நீங்க🤩🤩🤩🤩🤩......
 
  • Like
Reactions: பிரபா