மை டியர் ராவணா வித் லவ் சீதா - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 10

மாடியில் இருந்து ராவணனை கைபிடித்து தர தரவென்று இழுத்து கொண்டு கீழே வந்தாள் சீதா..

" இங்க பாரு இந்தர்.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ ரெடியாகிருக்கணும் கொஞ்ச நேரத்தில் நாம இரண்டு பேரும் இங்கிருந்து வெளியே கிளம்பறோம் சரியா?? அதாவது நீ போட்டிருந்த பழைய உடைகளை திரும்பவும் போட்டுக்கோ.. நாம போயி உனக்கு புது உடைகளை வாங்கி வரலாம் சரியா??" , என்று அவனுக்கு புரியும் படியாக மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்தாள்..

" அப்படியா?? புதிய உடைகளை வாங்கலாம் என்று சொல்கிறாயா சரி இதோ நான் தயாராகி வருகிறேன்", என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்று விட்டான்.

அப்பாடா இவனுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள நமக்கு தொண்டை தண்ணி வற்றி போய்விடும் போல என்ன பண்றது இவன் கூட சேர்ந்து நாமளும் செந்தமிழ் பேச கத்துக்கணுமோ என்னவோ.. தூய தமிழில் நான் படிச்சதே கிடையாது இதில் என்னை பேச வேற வச்சுடுவான் போல இருக்கு இந்த இந்தர்.. என மனதிற்குள் அவனை ஒரு புறம் கடிந்து கொண்டாலும் இன்னொரு புறம் இவனால் தான் , தான் பேசும் தமிழ் மொழி இன்னும் அழகாய் வளர்கிறது என்கிறதை அவளும் உணர்ந்து கொண்டாள்..

சிறிய புன்னகையுடன் அவளும் சற்று நேரத்தில் தயாராகி வந்துவிட.. பின் இருவரும் அவளுடைய ஸ்கூட்டியில் கிளம்பி வெளியே சென்றனர்..

அந்த ஊரிலேயே இருக்கும் பிரபல ஜவுளி கடைக்கு சென்றார்கள் இருவரும்..

அங்கிருந்த அனைவரின் பார்வைக்கும் இவன் விசித்திரமாக தென்பட்டான்..

அதேபோல் அவனுடைய பார்வைக்கும் அனைவரும் விசித்திரமானவர்களாக தான் தென்பட்டார்கள்..!!

மென்ஸ் செக்ஷனுக்கு அவனை அழைத்துச் சென்று அவன் உயரத்திற்கு ஏற்ற, உடல்வாகிற்கு ஏற்ப அழகிய ஸ்டைலான ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்டை எடுத்துக் கொடுத்து அதை போட்டு வர சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்..

ஆனால் அவனோ அந்த உடையை பார்த்துவிட்டு..

" சீதா என்ன இது ஆடை ஆங்காங்கே கிழிந்திருக்கிறதே?? பழைய துணி போலிருக்கிறது ஏன் இந்த ஊரில் எல்லோரும் கிழிந்த உடைகளை அணிகிறீர்கள்?? அத்தனை வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறதா இந்த நாடு..?? கிழிந்த உடைகளையும் கெட்டுப்போன உணவுகளையும் விரும்பி அணிந்து கொள்கிறார்கள், அந்த உணவை சாப்பிடுகிறார்கள்.. எல்லாமே எனக்கு விசித்திரமாக இருக்கிறது.. நீங்கள் தான் இப்படி எல்லோரும் மனநல பாதிக்கப்பட்டவர்கள் போல தெரிகிறீர்கள் என்று பார்த்தால் கடைசியில் எனக்கும் இதே போன்ற ஆடையை வாங்கி தருகிறாயே இதை அணிந்து கொண்டால் என்னை பார்ப்பவர்கள் பைத்தியம் என்று சொல்ல மாட்டார்களா??", என்று அவன் கேள்வி கேட்கவும் அங்கே நின்று கொண்டிருந்த சேல்ஸ்மேன் வாய் விட்டு சிரித்தான்.

" மேடம் இவன் என்ன இந்த பேச்சு பேசுறான்?? என்னவோ சங்க காலத்து மன்னன் போல இத்தனை வசனம் பேசுறானே?? ஆனா ஒரு வகையில இவன் சொல்றது நிஜம் தான் கிழிந்து போன ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் போட்டுட்டு இதுதான் மாடர்ன் உலகம்னு நாம சொல்லிட்டு திரிகிறோம்.. அதே போல கெட்டுப் போற நிலைமையில் இருக்கிற உணவுகளை தான் நாம எல்லாரும் காசு கொடுத்து விரும்பி சாப்பிடுறோம் எல்லாமே நிஜம் தானே??", என்று சீதாவின் அருகில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் கேள்வி கேட்க அவளுக்கு தான் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது..

என்னடா இது பொது இடம் என்று கூட பாராமல் அனைவரின் முன்பும் இப்படி மானத்தை வாங்குகிறானே என்று அவன் மீது கோபம் வரும் பொழுதே பக்கத்தில் இருந்த முதியவர் எடுத்துக் கூறிய விஷயங்களை கேட்ட பிறகு ஆமாம் இவர் சொல்வதும் நிஜம்தானே ஒரு வகையில் பார்த்தால் இந்திர ராவணன் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான்.. எல்லாமே இங்க தலை கீழாகத்தான் இருக்கிறது.. எங்கள் பார்வைக்கு அவன் பைத்தியம் அவன் பார்வைக்கு நாங்கள் எல்லோரும் பைத்தியம் போல இருக்கிறோம்..என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் புன்னகையுடன் அவனிடம் திரும்பினாள்..

" சரி இந்தர் இந்த உடை உனக்கு வேண்டாம் நான் வேற வாங்கி தரேன் அதை போட்டுக்கோ சரியா??", என்றவள் இம்முறை கிழியாத ஜீன்ஸ் ஒன்றை எடுத்து அவனுக்கு தோதாக இருக்கும் நிறத்தில் அவன் கையில் எடுத்துக் கொடுத்தாள் சில உடைகளை..

" இதை எடுத்துட்டு அங்க கடைசியில் இருக்கும் அறைக்குள் போயி உடையை மாற்றிக் கொண்டு வெளியே வரணும் சரியா??", என்று அவள் கூறினாள்.

" அவ்வளவு தானே இதோ மாற்றிக் கொண்டு வருகிறேன்..", என்று சொல்லிவிட்டு ட்ரையல் ரூமிற்குள் சென்றான் அவன்..

பத்து நிமிடம் கழிந்தது..

20 நிமிடம் கழிந்தது..

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கூட கடந்து விட்டது..

ஆனால் இன்னமும் ட்ரையல் ரூமிற்குள் சென்ற ராவணன் வெளியே வந்த பாடு இல்லை..!!

இவன் என்ன இன்னமும் ஆளையே காணோம் நிஜமாவே துணி மாற்ற தான் போனானா இல்ல வேறு வழியில் தப்பித்து எங்கேயாவது வெளியே போய் விட்டானா?? என்கிற சந்தேகம் அவள் மனதிற்குள் வரவும் வேகமாக ஓடி சென்றாள் ட்ரையல் ரூமை நோக்கி..

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் கதவைத் தட்டினாள் அவள்..

" இந்தர் இந்தர்.. கதவைத் திற.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க??", என்று அவள் கதவை தட்டவும் சிறிது நேரம் கழித்து மெதுவாக அந்த கதவு திறக்கப்பட்டது..

திறந்த கதவின் பின்னாடி இருந்து தலையை மட்டும் நீட்டி அவளை எட்டிப் பார்த்தான் அச்சத்தோடு ராவணன்..

" என்ன ஆச்சு ஏன் இன்னும் வெளியே வராம இருக்க?? உடையை மாற்றிக் கொண்டாயா இல்லையா??"

இல்லை என்பது போல் தலையாட்டினான் அவன்.

" இன்னமும் உடையை மாற்றவில்லையா என்ன ஆச்சு உனக்கு?? அந்த உடை உனக்கு சரியில்லையா இல்ல பிடிக்கலையா??"

" அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை சீதா ஆனால் ஒரே ஒரு பிரச்சனை தான்"

" என்ன பிரச்சனை??"

" இந்த உடையை எப்படி அணிவது, என்னால் சமாளிக்க முடியவில்லை..", என்று கேட்டானே ஒரு கேள்வி..!!

அந்த கேள்வியில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள் அவள்..!!

என்னது இந்த ட்ரெஸ்ஸை போட முடியலையா அட கடவுளே அதுக்காக நானா போய் மாத்தி விட முடியும்??!!

ஆனால் இதைப் பற்றி நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் விட்டுவிட்டேனே இவனுக்குத்தான் இந்த காலத்து தமிழும் வராது இந்த காலத்து உடையையும் போட்டுக் கொள்ள வராது இது தெரிஞ்சும், நான் பாட்டுக்கு மாடர்ன் உடைகளை வாங்கி இவனுக்கு கொடுத்து விட்டேன் இவன் என்னடான்னா துணைக்கு என்னை கூப்பிடுவான் போல இருக்கே இன்னும் கொஞ்ச நேரத்தில்?? என்று மனதிற்குள் பதட்டத்துடன் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே..

" சீதா எனக்கு ஒரு உதவி செய்வாயா என்னால் இந்த உடையை அணிந்து கொள்ள முடியவில்லை ஆகையால் நீ வந்து எனக்கு உதவி செய்தால் சற்று நன்றாக இருக்கும்"

" அடிங்கொய்யால.. இப்பதான் நினைச்சேன் அதுக்குள்ள வாய் திறந்து கேட்டுட்டியா அது சரி நான் எப்படி உனக்கு உடைமாற்றி விடுவது இதெல்லாம் நல்லாவா இருக்கு??", என்று அவள் கோபத்துடன் கேள்வி கேட்க.

" அதையேதான் நானும் கேட்கிறேன் இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது?? இதெல்லாம் ஒரு உடையா?? காற்றோட்டமே இல்லை இதை அணிந்து கொண்டு நான் எப்படி வெளியே வருவது??"

" இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஆனால் நான் எப்படி உள்ளே வர்றது அந்த கோலத்தில் என்னால் உன்னை பார்க்க முடியாதுப்பா அதுக்கப்பறம் என்னுடைய கண்ணுக்கு தான் பாதிப்பு உண்டாகும்", என்று அவள் பயத்துடன் கூற..

" இல்லை சீதா பாதி உடையை அணிந்து விட்டேன் மீதியைத்தான் என்னால் அணிய முடியவில்லை", என்று சொல்லிக் கொண்டே அவன் கதவை திறந்து கொண்டு வெளியே வர முயற்சி செய்ய..

உடனே அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் கத்தி விட்டாள் அவள்..

" ஏய்.. ஏய்.. நில்லு நில்லு.. அங்கேயே நில்லு.. வெளிய வராத யாராவது பார்த்தால் என்ன ஆகிறது??", என்று சொல்லிக் கொண்டே அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

" பயம் வேண்டாம் சீதா கண்களை திறந்து பார்.."

" இந்த கன்றாவிய நான் கண் திறந்து வேற பார்க்கணுமா??", என்று முணுமுணுத்துக் கொண்டே மெதுவாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்..

அவள் நினைத்தது போல் இல்லாமல் ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து கொண்டு, ஷர்ட் மட்டுமே அணியாமல் நின்று கொண்டிருந்தான் அவன்..

" அப்பாடா நான் கூட என்னவோன்னு நினைச்சிட்டேன்.. ஒரு நிமிஷம் இரு வரேன்", என்று சொல்லிவிட்டு அவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள் யாராவது கவனிக்கிறார்களா என்று..

நல்லவேளை யாரும் அங்கு கவனிக்கவில்லை எல்லோரும் அவரவர்களின் பர்ச்சேஸ் விஷயத்தில் கவனமாக இருந்தார்கள்.. அதனால் இவளும் சுதந்திரமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக தாழ் போட்டாள்..

" என்ன பிரச்சனை உனக்கு??"

" இதை என்னால் அணிந்து கொள்ளவே முடியவில்லை", என்றான் அவன்.

"எதை??", என்று அவள் கேட்கவும் அவன் உடனே குனிந்து கீழே பார்த்தான்..

அப்பொழுதுதான் அவளும் கவனித்தாள்..

அவனால் அந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழுதாக போட முடியவில்லை போல.. இழுத்து பிடித்து எப்படியோ போட்டிருந்தான்..

மிகவும் இறுக்கமாக இருந்திருக்கும் போல.. அதனால் தான் திணறுகிறானோ என்று அவனைப் பார்த்தாள்.

" எனக்கு இந்த உடை சுத்தமாக பிடிக்கவில்லை சீதா மிகவும் இறுக்கமாக இருக்கிறது ஏதோ ஒன்று என் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது காற்றோட்டமாகவே இல்லை இந்த உடை எனக்கு வேண்டவே வேண்டாம்.."

" இங்க பாரு தயவு செஞ்சு இதை மாத்திட்டு வெளியே வா இங்கே வம்பு வேண்டாம் ..",

" நான் சொல்வதை தயவு செய்து கேள்"

" முடியாது"

அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் அந்த டி-ஷர்டை எடுத்து அணிந்து கொண்டான் அவன்..

முகத்தில் எந்தவித சந்தோஷமும் இல்லை வருத்தம் மட்டும்தான் இருந்தது அவனுக்கு ஆனால் அந்த அழகிய ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டில் அவனைப் பார்த்த பிறகு அவள் தான் சொக்கி போய்விட்டாள்..!!

" அடேங்கப்பா இத்தனை அழகாய் இருக்கானே?? அந்த உடைகளில் பார்த்ததை விட இந்த உடையில் இவனுடைய கம்பீரமும் உயரமும் மிகவும் எடுப்பாக தெரிகிறது.. எத்தனை பெண்கள் பார்த்து இவனை கண் வைப்பார்களோ தெரியவில்லை.. முடிஞ்சளவுக்கு எவ கண்ணிலும் இவன் படாதவாறு பத்திரமாக வெளியே கூட்டிட்டு போகணும்", என்று அவள் மனதிற்குள் தோன்றிய எண்ணத்தை பார்த்து அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது..

இது என்ன இது புது வித மாற்றம்?? இவனை பார்த்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் என் இதயம் படும் பாடு நான் மட்டுமே அறிவேன்.. இவனை எவள் பார்த்தால் எனக்கென்ன வந்தது ஆனால் எனக்கு ஏன் கோபம் வரணும்??என்று யோசித்து குழம்பி தான் போனாள்..

"சீதா சீதா..", என்று அவளின் தோள் தொட்டு ராவணன் கூப்பிடவும் தான் அவள் நிகழ்காலத்திற்கு திரும்பினாள்..

"என்னாயிற்று??"

" என்னத்த சொல்றது உன்கிட்ட சொன்னா மட்டும் புரியவா போகுது பேட்டரி போட்ட பொம்மை மாதிரி இருக்க.. உன்கிட்ட வந்து என்னுடைய உணர்வுகளைப் பற்றி சொன்னால் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை உனக்கு இருக்கோ என்னமோ??", என மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவன் கை பிடித்து வெளியே அழைத்துச் சென்றாள்..

வெளியே வந்ததும் எல்லோரும் அவர்களை விசித்திரமாக பார்த்தார்கள் ..

என்னடா இது ட்ரையல் ரூமில் இருந்து இருவர் வெளியே வருகிறார்கள் என்று..

யாருடைய பார்வையையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டுக்கு வேறு பக்கம் சென்று விட்டாள்..

ஆனால் சற்று நேரத்தில் எதார்த்தமாக திரும்பி ராவணன் இருக்கும் பக்கம் அவள் பார்க்க..

அங்கே அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சி அடைய செய்தது..!!

காரணம் அங்கே ஒரு இளம் பெண் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு சைட் அடித்துக் கொண்டிருந்தாள்..

" கொய்யால எம்புட்டு தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே அவனைப் பார்த்து இந்த பொண்ணு இப்படி ஜொள்ளு விடுவா?? இன்னைக்கு இவளுக்கு இருக்கு", என்று மனதிற்குள் அந்த பெண்ணை கடிந்து கொண்டவள் வேக வேகமாக அந்த பெண்ணை நோக்கி சென்றாள் புயல் வேகத்தில் சீதா..!!

- தொடரும்..






 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
May 19, 2026
60
12
8
Tiruppur
சீதாக்கு possessive mess பொங்கி வழியது 🤭 🤭 🤭 🤭 🤭
Yess...😂😂
மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️
சீதாக்கு possessive mess பொங்கி வழியது 🤭 🤭 🤭 🤭 🤭
Yess... மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️