மை டியர் ராவணா வித் லவ் சீதா - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 11

மாடர்ன் உடை அணிந்த பிறகு மேலும் கூடுதல் கம்பீரத்தோடு தென்பட்ட இந்திர ராவணனை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த பெண் சைட் அடிக்கவும் அதை கண்டதும் சீதாவுக்கு கோபம் மூக்குக்கு மேல் வந்தது..!!

என்ன தைரியம் இருந்தால் என் கண் முன்னாடியே இவனை பார்த்து அவ சைட் அடிப்பா?? அவளுக்கு இருக்கு என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே அந்த பெண்ணை பார்த்து வேகமாக சென்றாள் அவள்..

" ஹலோ மிஸ்.. உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா?? ஒரு ஆம்பள பையன் அதுவும் அழகா அம்சமாக இருக்கிற ஆம்பள பையன் டிரஸ் பண்ணிட்டு நீட்டா வெளிய வந்துட கூடாதே.. உடனே சைட் அடிக்கிறதுக்கு கிளம்பி வந்துடுவீங்களே.. பெண்களுக்கு மட்டும் இல்லை இங்க ஆண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை போல .. இன்னொரு முறை அவனை நீ திரும்பி பார்ப்பதை பார்த்தால் அதுக்கு பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன் பத்திரகாளியா மாறிடுவேன்..", ஆள்காட்டி விரலை நீட்டி நீட்டி அவளிடம் சண்டை போடுவது போல் பேசினாள் சீதா.

"இங்க பார்த்தியா ஒரு பையனுக்காக ரெண்டு பொண்ணுங்க அடிச்சிக்குதுங்க.. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனுக்கு தான் இப்படியெல்லாம் நடக்குமாம்.. நமக்கு பாரு ஒரு பொண்ணு கூட திரும்பி பார்க்க மாட்டேங்குது", என்று அலுத்து கொண்டான் அங்கிருந்த சேல்ஸ் மேன் ஒருவன்.

" இங்க பாருங்க நீங்க பாட்டுக்கு வந்து உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க நான் வேறு எங்கேயோ பார்த்துட்டு இருந்தேன் நீங்க தப்பா புரிஞ்சுட்டு வந்து என்கூட சண்டை போடுறீங்க"

" கற்பனை பண்ணிட்டு வந்து உன் மேல் பழி போடுவதற்கு எனக்கு என்ன அவசியம் வந்திருக்கு நீ அவனைப் பார்த்தத நான் பார்த்தேன் சும்மா என்கிட்ட பொய் சொல்லாத அப்புறம் நடக்கிறதே வேற", என்று பதிலுக்கு பதில் அவளும் பேசினாள்.

இவர்கள் இருவரும் சத்தம் போட்டு பேசுவதை பார்த்துவிட்டு பதட்டத்தோடு அருகில் ஓடி வந்தான் ராவணன்.

" எதற்காக இப்படி சண்டை போடுகிறாய் பொது இடத்தில்?? அங்கே பார் அனைவரும் உன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் நமக்கு தேவையா??", என்று அவளின் கைபிடித்து சமாதானம் செய்ய முயன்றான் ராவணன்.

அதுவரை அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அதே பெண் இப்பொழுது அவன் வாய் திறந்து தூய தமிழில் வசனம் பேசவும் அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டாள்..!!

அம்மாடி அம்மா.. இத்தனை நேரமாக நாம சைட் அடித்துக் கொண்டிருந்தது ஒரு பைத்தியத்தை தானா?? இவன் என்ன அந்த காலத்து படத்தில் வரும் ஹீரோ போல வசனம் பேசிக் கொண்டிருக்கிறானே அடக்கடவுளே இது தெரியாமல் நான் பாட்டுக்கு ஜொள்ளு விட்டிருக்கேன் போல.. என்று மனதிற்குள் அந்த பெண் நினைத்துக் கொண்டாள்.

" என்னடி அப்படி பாக்குற மறுபடியும் அவன?? உனக்கு அவ்வளவு கொழுப்பாயிடுச்சா?? இப்போ தானே சொன்னேன் நான் உன்னை திரும்பி பார்க்காதே சைட் அடிக்காதே என்று மறுபடியும் என் கண்ணு முன்னாடி அவனை சைட் அடிக்கிற உனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்??", என்று மீண்டும் சண்டை கோழியாக சண்டைக்கு சென்றாள் அவள்..

" ஓவரா நீ திமிராக பேசாதே நிஜமாகவே நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சைட் அடிச்சேன் தான் ஆனால் இப்போ சொல்றேன் தெரியாத்தனமா பாத்துட்டேன் அவனை.. இப்படி ஒரு பைத்தியத்தை தான் இவ்வளவு நேரமா சைட் அடிச்சுட்டு இருந்தோம் என்கிற விஷயமே எனக்கு இப்போது தானே தெரிய வருது அம்மாடி அம்மா ஆளை விடு தாயி உன் ஆளை நீயே இழுத்துட்டு போ நீயே கண் கொட்டாமல் உட்கார வைத்து 12 மணி நேரம் கூட சைட் அடிச்சுக்கோ எனக்கு இது தேவையே கிடையாது அவன் பார்க்கத்தான் அழகாக இருக்கிறான் ஆனா அவன் வாயை திறந்தால் தானே தெரியுது அவன் நல்லவனா இல்லை பைத்தியமானு.. இப்படி தூய தமிழில் வசனம் பேசிட்டிருக்கானே அந்த காலத்து ஹீரோ போல எனக்கு இவன் வேண்டவே வேண்டாம் நீயே வச்சுக்கோ ஆளை விடு", என்று கை எடுத்து கும்பிட்டு ஓடியே போய்விட்டாள் அந்த பெண்..

" அடிங்கொய்யால.. எம்புட்டு திமிரு இருந்தா என் முன்னாடியே அவனைப் பார்த்து இப்படி பேசிட்டு போவ அவனை பற்றி உனக்கு என்னடி தெரியும்?? நல்ல தமிழில் பேசினால் பைத்தியமா அந்தளவிற்கு ஆகிவிட்டதா இந்த உலகம்?? அது சரி ஊருக்குள் ஒருத்தன் மட்டும் நல்லவனாக இருந்தால் மற்றவர்கள் கண்ணுக்கு அவன் தப்பாகத் தான் தெரிவான் இதில் இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?? நல்ல தமிழ்ல பேசுறதுக்கு நமக்கு தான் வக்கில்ல.. அவனாவது பேசுறானே அதை பார்த்து பெருமைப்படணும் அதை விட்டுட்டு அவனைப் பார்த்து பைத்தியம்னு சொல்லிட்டு போற.. வாயாடி இங்க வாடி உனக்கு இருக்கு", என்று அவள் பாட்டுக்கு கத்த தொடங்கிவிட்டாள் சீதா ஆனால் அந்த பெண் ஓடி மறைந்து பல நிமிடங்கள் கடந்திருந்தது..

மெதுவாக அவளின் தோள் மீது தன் கரங்களை அழுத்தமாக பதித்தான் இந்தர்.

" சீதா அனைவரும் நம்மை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பொது இடத்தில் இவ்வாறு சண்டை போடுவது சரியல்ல.. வா நாம் வெளியே போகலாம்", என்று அவளின் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

அதன் பிறகு பில் செக்ஷன் சென்று அவன் அணிந்திருந்த உடைக்கு ஏற்ற பணத்தை செலுத்தி விட்டு அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்..

வெயில் அதிகமாக இருக்கவும் மரத்தடியில் ஒருவர் இளநீர் விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு வண்டியை நிப்பாட்டினாள் சீதா..

" வா இளநீர் குடிச்சிட்டு போகலாம்.. கொஞ்சம் கூட்டமா இருக்கிற மாதிரி இருக்கு நான் போய் வாங்கிட்டு வரேன் அதுவரைக்கும் எங்கேயும் போய்டாத இங்கேயே இரு சரியா ", என்று சொல்லி விட்டு சென்றாள்.

வண்டி நிப்பாட்டியிருக்கும் இடத்திற்கும் இளநீர் கிடைக்கும் இடத்திற்கும் கிட்டத்தட்ட பத்தடி தூரம் இருந்தது நன்றாக வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் காரணத்தினால் ஏற்கனவே சற்று கூட்டம் அதிகமாக இருந்தது ஆனால் இவள் அங்கே போவதற்குள் சற்று நேரத்தில் அங்கே கூட்டம் கூடி விட இளநீர் வாங்குவதற்கு பெரும் போட்டியாக இருந்தது..

அனைவரையும் கடந்து உள்ளே சென்று அடித்து பிடித்து இளநீர் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தாள் சீதா..

" இங்க பாரு இந்தர் உனக்கு வேண்டியதை வாங்கிட்டேன் நீயும் ஒன்னு வாங்கிக்கோ நானும் குடிக்கிறேன் ஆனால் அடேங்கப்பா ஒரு இளநீர் வாங்குவதற்கு எத்தனை போராட்டம்??", என்று திட்டிக்கொண்டே வெளியே வந்து அவள் பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த ராவணனை காணவில்லை..!!

" அடக்கடவுளே மறுபடியும் இவன் எங்க போனான் எங்கன்னு போய் நான் தேடுவேன் இப்ப தானே நிக்க சொல்லிட்டு போனேன் ", புலம்பிக்கொண்டே அவனை சுற்றிலும் தேடினாள்.

ஆனால் அந்த மெயின் ரோட்டில் எங்கும் அவன் தென்படவில்லை..

சரம்சரமாக கார்களும் பைக்குகளும் அங்கே ரோட்டில் வேகவேகமாக சென்று கொண்டிருந்தது இதற்கு இடையில் சிக்னலை தாண்டி அந்த பக்கம் போனால் ஒரு பானிபூரி கடை இருந்தது.. அங்கே கிட்டத்தட்ட 15 20 பேர் ஒரே இடத்தில் குழுமி இருந்தார்கள்..

அங்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ ஒருவேளை இவன் அங்கே சென்று ஏதாவது வம்பு செய்து விட்டானோ?? என்றெல்லாம் அவள் மனதிற்குள் பலவாறு தோன்றியது..

ஆனால் இவன் எப்படி ரோட்டை கடந்து அந்த பக்கம் சென்றான் என்று தெரியவில்லையே.. எதுக்கும் அங்க போய் ஒரு முறை பார்த்துடலாம் ஏன்னா எங்கேயும் அவனை காணல இருக்கும் ஒரே ஒரு சாய்ஸ் நமக்கு அது மட்டும் தான்.. அதனால அங்க போய் பார்த்துடுவோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் கையில் இருந்த இளநீர் இரண்டையும் கீழே வைத்துவிட்டு வேக வேகமாக எதிர்பக்கம் தெரிந்த ரோட்டுக்கு சென்றாள்..

கூட்டத்தை விலக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு அவள் உள்ளே நுழைந்து பார்க்க அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராவணன் அங்கே நின்று கொண்டிருந்தான் அவனைப் பார்த்த பிறகுதான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வெளியானது ஆனால் அந்த நிம்மதிக்கு அற்பாயுசு போல..

அவனைப் பார்த்த அடுத்த நொடியே அவள் அதிர்ச்சியடைந்தாள்..!!

காரணம், அங்கே ஒருவனை போட்டு ராவணன் கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருந்தான்..!!

அடி அடி என்று அவனை அடித்து கை கால்களை முறிக்காத குறை மட்டும்தான்..

ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டிருந்தான் அவன்..

கடவுளே இப்ப என்ன ராகு காலத்தை இழுத்துட்டு வந்தானோ தெரியலையே எதுக்காக இவனை போட்டு இந்த அடி அடிக்கிறான் எல்லாரும் இப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்களே என்று நினைத்து கொண்டவள் வேகமாக அவன் அருகில் சென்று அவனை சண்டையிலிருந்து விலக்கி விட்டாள்..

" இந்தர் என்ன பண்ணிட்டிருக்க?? ஏன் இப்படி அவுங்களை போட்டு அடிக்கிற கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா ஏன் என்னாச்சு உனக்கு??"

" சீதா உனக்கு உண்மை என்னவென்று தெரியாது நீ எதுவும் பேசாதே.. சற்று நேரத்திற்கு முன்பாக இங்கே நடந்த சம்பவத்தை நீ நேரில் மட்டும் கண்டிருந்தால் நிச்சயம் நீயும் இவனுக்கு இதே போன்ற தண்டனையை தான் அளித்திருப்பாய்..", என்றான் கோபத்தோடு ராவணன்.

" அப்படி என்ன பண்ணிட்டான் அவன் எதுக்காக இப்படி அடிக்கிற நீ என்ன சைக்கோவா?? திடீர் திடீர்னு காணாம போற.. எங்கேயாவது போய் சண்டைக்கு போற.. இல்லன்னா எங்கேயாவது போய் நியாயம் கேட்க போற.. கண்ட வசனத்தையும் பேசி எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குற என்னாச்சு உனக்கு?? முதலில் உனக்கு என்னதான் பிரச்சனை அதை என்கிட்ட சொல்லு.. இப்போ எதுக்காக அவுங்களை போட்டு இந்த அடி அடிக்கிற?? எல்லாரும் இதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே சண்டை போடுறத நிப்பாட்ட மாட்டீங்களா இப்படித்தான் வேடிக்கை பார்ப்பீர்களா டிவி பாக்குற மாதிரி.. என்ன ஜனங்க நீங்கல்லாம் ", என்று சுற்றியும் நின்று கொண்டிருந்த ஆட்களைப் பார்த்து கேள்வி கேட்டாள் அவள்.

" அவர்கள் அப்போதும் இதே போல தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சீதா அதனால்தான் நான் ஒரு கை பார்த்து விடலாம் என்று களத்தில் இறங்கினேன் இதில் என்ன தவறு இருக்கிறது?? "

"ஆ...... வசனமெல்லாம் நல்லாத்தான் பேசுற முதல்ல என்ன பிரச்சனை சொல்லு எதற்காக இவரை போட்டு அடிச்ச??"

" இந்தாம்மா பொண்ணு.. நீ பாட்டுக்கு அந்த பையனை போட்டு கண்டபடி திட்டாத பாவம் அந்த புள்ள வந்ததால தான் இங்க பிரச்சனை சரியானது.. நீ பாட்டுக்கு அந்த பிள்ளையை பார்த்து இம்புட்டு பேச்சு பேசுறியே?? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க அந்த பொண்ணு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு நின்னுட்டு இருந்துச்சு.. அந்த பொண்ணு கிட்ட இந்தாளு தப்பா நடந்துக்க பார்த்தான் ஆனால் தட்டிக் கேட்க ஒருத்தரும் வரல அந்த பொண்ணு எப்படி கத்தி கூச்சல் போட்டு உதவி கேட்டுச்சு தெரியுமா?? இதோ இப்ப வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டிருக்காங்களே இந்த ஜனங்க அப்பையும் இதே போல தான் வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டிருந்தாங்க ஒருத்தரும் உதவிக்கு வரல வயசான காலத்தில் என்னால் போய் அவன் கிட்ட சண்டை போட முடியாது முடிஞ்சளவு தட்டி கேட்க தான் முடியும்..

அதனால் அவனிடம் போய் சண்டை போட்டு தட்டி கேட்டேன் என்னையும் புடிச்சு கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை மறுபடியும் கைபிடித்து இழுத்து வம்புக்கு வந்தான்.. அப்போதான் இந்த தம்பி வந்து நியாயம் கேட்டுச்சு அப்போ கூட பேச்சு வார்த்தையில் தான் கேட்டுச்சு அந்த தம்பி.. இவன்தான் ஓவரா வாய் பேசினான் அதனால்தான் அந்த பையன் அடிச்சுது இதுல என்ன தப்பிருக்கு சொல்லு?? ஒரு பெண்ணுக்கு இத்தனை அநியாயம் பொதுமக்கள் மத்தியில் நடக்கும் போது எல்லாரும் வேடிக்கைதான் பார்க்கிறாங்க ஆனா ஒருத்தன் மட்டும் தான் தைரியமா வந்து நியாயம் கேட்டான்.. அப்படிப்பட்டவனை பார்த்து நீ இத்தனை பேச்சு பேசி திட்டுறியேமா இது என்னம்மா நியாயம்..?? நல்லதுக்கே காலம் இல்ல கரிகாலம்னு இதைத்தான் சொல்றாங்க போல", என்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி அங்கிருந்து அகன்று விட்டார்.

அப்பொழுது தான் நடந்த விஷயம் எல்லாம் அவளுக்கு புரிந்தது..

அப்படி என்றால் இங்கே இருக்கும் இந்த பெண்ணிற்கு ஆபத்து என்றதும் ஓடி வந்து உதவி செய்திருக்கிறானா இவன்??

பாவம் அதைக்கூட நான் புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசிவிட்டேன் கடவுளே என்று முதல்முறையாக அவனை மிகுந்த மரியாதையோடும் அன்பு பொங்கும் நெஞ்சத்தொடும் ஏறிட்டாள் சீதா...!!

- தொடரும்..

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
என்ன நீ இப்படி ராவணனை தப்பா பேசிட்ட.....அவன் ரொம்ப நல்ல ஹீரோ மெட்டீரியல் தெரியுமா🤩🤩🤩🤩🤩
 
  • Like
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
என்ன நீ இப்படி ராவணனை தப்பா பேசிட்ட.....அவன் ரொம்ப நல்ல ஹீரோ மெட்டீரியல் தெரியுமா🤩🤩🤩🤩🤩
மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
என்ன நீ இப்படி ராவணனை தப்பா பேசிட்ட.....அவன் ரொம்ப நல்ல ஹீரோ மெட்டீரியல் தெரியுமா🤩🤩🤩🤩🤩
மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️