மை டியர் ராவணா - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,482
113
Germany
அத்தியாயம் 14



இந்திர ராவணன் மங்களாபுரத்து குறுநில மன்னன் என்கிற இந்த தகவலை தவிர அவளுக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது ஆகவே வலைத்தளங்களில் இவனைப் பற்றிய மேலும் விவரங்களை சேகரிப்பதற்காக சில தகவல்களை பதிவேற்றினாள் அதை கொண்டு அது என்ன தகவல் தரப் போகிறதோ என்று கைகளால் டேபிளில் தாளம் போட்ட வண்ணம், அவள் பதட்டத்தோடு காத்திருக்க..



திரையில் வரிசை கட்டி வந்த தகவல்களை பார்த்ததும் அவளுடைய பாதாம் வடிவ கண்கள் பெரிய வஞ்சரை மீன் சைசுக்கு விரிந்தது..!!



அதிலிருந்த தகவல்களை வரிசையாக படிக்கும் பொழுது அவளுடைய இதயம் ஒரு நொடி நின்று.... பிறகு தான் துடிக்க தொடங்கியது!!



கடவுளே.. அப்படி என்றால் இதில் இருக்கும் செய்தி எல்லாம் நிஜம்தானா என்று அவளுக்கே பலமுறை சந்தேகமுண்டானது..



தன் கண்களால் பார்த்துக் கொண்டிருப்பது உண்மைதானா அல்லது கனவா பிரம்மையா கற்பனையா இப்படி ஏகப்பட்ட சந்தேகம் குழப்பம் பதட்டம் என்று அவள் மனதில் ஏகமாய் தோன்றியது ஆனால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் இவையனைத்தும் நிஜம் தான் என்பது போல் திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது இந்திர ராவணனின் புகைப்படம்..!!



அதில் , எப்படி இவள் அவனை முதல் நாள் சந்திப்பில் சந்தித்தாளோ அதே போன்ற உடைகள் அணிந்து கையில் வாளுடன் நின்று கொண்டிருந்தான் அவன்..



அதே கம்பீரம் அதே நேர்கொண்ட பார்வை அதே கண்கள் அதே உயரம் அதே எடை அச்சு அசலாக அப்படியே அதில் இந்திர ராவணன் போலவே இருந்தான்.. இல்லையில்லை இந்திரராவணனே அதில் இருந்தான்....!!



தூக்க கலக்கத்தில் பார்க்கிறோமோ என்று கண்களை கூட ஒரு முறைக்கு இருமுறை நன்றாக கசக்கி விட்டு பார்த்தாள் ஆனால் அப்பொழுதும் இந்திரா ராவணனின் புகைப்படம் மாறாமல் அப்படியே ஒளிர்ந்து கொண்டிருந்தது கணினி திரையில்..!!



அவன் சொன்னது போலவே தான் அதில் இருந்தது.. அதுவும் எப்படி??!!



மங்களாபுரத்தின் குறுநில மன்னனாக இந்திரா ராவணன் வாழ்ந்து வந்திருக்கிறான் , பதினெட்டாம் நூற்றாண்டில்..!!



வீரம் கம்பீரம் கண்ணியம் நேர்மை இவை எல்லாவற்றிற்கும் பேர் போன ஒரு நல்ல மன்னனாக வாழ்ந்து வந்திருக்கிறான் ராவணன்..



நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லதை மட்டுமே செய்து கொண்டிருந்த மன்னன் அவன்..



அவனுடைய நல்லாட்சியில் மக்கள் அங்கே திளைத்துக் கொண்டிருந்தார்கள் மகிழ்ச்சியில்..



பல எதிரி நாட்டு மன்னர்களுடன் போர் புரிந்து எல்லோரையும் வென்றவனாக அவன் இருந்தான்.. வெற்றிக்கே நெருங்கிய சொந்தக்காரனாக திகழ்ந்தான் அவன்..



எதிரி நாட்டு மன்னர்கள் முதல் அனைத்து படைகளும் அவனை கண்டால் அஞ்சியது..!!



இந்திர ராவணன் என்கிற பெயரை கேட்டாலே பின்னங்கால் பிடரியில் இடிபட அனைவரும் ஓடினார்கள்..



குறுநில மன்னனாக இருந்தாலும் அவனுடைய ஆட்சியில் எப்பொழுதும் நல்லாட்சி மட்டுமே நிலைத்திருக்கும் அங்கே ஊழல் என்கிற வார்த்தைக்கு இடம் கிடையாது என்பதால் திருடர்கள் முதல் கயவர்கள் வரை அந்த மங்களாபுரத்தை நெருங்குவதற்கே யோசிப்பார்கள், அஞ்சுவார்கள்..



மீறி அங்கே திருட்டு பயம் அல்லது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற வார்த்தையை காதால் கேட்டாலே .. அதற்குக் காரணமானவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவான் இந்திர ராவணன்..



தவறு செய்யும் அனைவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கி வந்ததால் தான் அவனுடைய நாட்டில் எந்தவித குற்றங்களும் நிகழவில்லை.. குற்றம் செய்ய நினைப்பவர்களும் அந்த ஊரில் வாழவில்லை..



இப்பேற்பட்ட கம்பீர மன்னன் மக்களுக்காகவே தன்னுடைய முழு வாழ்நாளையும் செலவழித்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அவ்வப்போது தன்னுடைய மனைவியிடமும் பாசத்தைக் காட்டி அவளையும் சந்தோஷமாகத்தான் பார்த்துக் கொண்டான் என்றது அந்த வரலாறு..!!



"ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ...??

உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர் குழாயில் நீர் வருமோ??"



என்கிற பாடலுக்கு தகுந்தவாறு தான் இந்திர ராவணனின் வாழ்வும் இருந்தது..



தனக்காகவும் கொஞ்சம் நேரத்தை தன் கணவன் ஒதுக்க மாட்டானா என்று அவனுடைய மனைவி ஏங்கிக் கொண்டிருக்க..



உனக்காக நேரம் ஒதுக்கினால் ஊர் மக்களை யார் கவனிப்பது என்று ஊருக்காகவே உழைத்துக் கொண்டிருந்தான் அந்த ராவணன்..



கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தன் மனைவியிடம் காதல் செய்வதையும் அவன் ஒரு நாளும் மறந்ததில்லை..



தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்த இந்திர ராவணன் அவனுடைய மனைவிக்காக தனி மாளிகையையே கட்டியிருந்தான் அந்த ஊரில்..



இப்படி சந்தோஷமாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மன்னனின் வாழ்வில் புயல் போல் வந்தது, அந்த ஒரு நாள்...!!



அப்படி என்ன நாள் அது என்று சுவாரசியமாக திரையில் கண் பதித்து அவள் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில்..



" சீதா...", கரகரப்பான குரல் அவள் காதருகில் ஒலிக்கவும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் அவள்.



அங்கே தூக்க கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தான் இந்திர ராவணன்..



அடக்கடவுளே இவன் எப்போ எந்திரிச்சு வந்தான் அப்படி என்றால் இத்தனை நேரமாக நான் இதில் இவனைப் பற்றிய தகவல்களைப் படித்துக் கொண்டிருந்தேனே அதை எல்லாம் பார்த்து இருப்பானோ?? இல்லன்னா என் கூட சேர்ந்து இவனும் இந்த கதையை படிச்சிருப்பானோ?? அதற்கு வாய்ப்பில்லை தான்.. இருந்தாலும் மனதிற்குள் எழும் இந்த சந்தேகத்தை என்ன செய்வதென்று அறியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் அவள்.



" என்னாச்சு??"



" சீதா.. எனக்கு உறக்கமே வர மாட்டேன் என்கிறது என்னவோ தெரியவில்லை கண்களை மூடினால் என் கனவில் போர்க்களம் மட்டுமே கனவாக வருகிறது அதில் ஏகப்பட்ட நபர்களை நான் கொன்று குவிக்கிறேன்.. எனக்கு அந்த இடத்தை எங்கோ பார்த்தது போலவே இருக்கிறது அவர்களை எல்லாம் எங்கோ சந்தித்தது போலவே இருக்கிறது.. அவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் யார் அவர்கள் என்று எதுவுமே எனக்கு தெரியவில்லை குழப்பமாக இருக்கிறது சீதா.. நேற்று கூட இதே போல் ஏதோ ஒரு கனவு வந்தது மங்கலான உருவத்தில் ஒரு அழகிய பெண் உருவம் என்னை நெருங்கி வந்து கட்டியணைத்துக் கொண்டது.. அந்த உருவத்திற்கு சொந்தக்காரர் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் அவளுடைய அணைப்பில் நான் நிம்மதியாக உறங்கினேன்.. இந்த கனவும் கனவில் வரும் நபர்களும் யார் என்று எனக்குத் தெரியவில்லை சீதா என்னால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை", என்று சொல்லி அவளுடைய கைகளை இறுக்கமாக பற்றி கொண்டான் அவன்.



நீ பார்த்தது கனவு கிடையாது இந்தர்.. நீ பார்த்தது எல்லாமே நிஜம்.. உன் கனவில் வந்த போர்க்களம் , நீ போரிட்டது, பலரை நீ கொன்று குவித்தது நாட்டை வென்றது அனைத்தும் நிஜம்தான்.. அதேபோல் உன்னை கட்டியணைத்து உன்னை சமாதானப்படுத்திய அந்த பெண்ணின் உருவம் நிச்சயமாக உன் மனைவியாக தான் இருக்க வேண்டும் இதெல்லாம் உன்னிடம் சொன்னால் நீ நம்பவா போகிறாய் இல்லை என்றால் உன்னை நம்ப வைக்கத்தான் என்னால் முடியுமா??



சத்தியமாக இப்போதைக்கு என்னால் முடியாது இந்த விஷயங்கள் எல்லாம் உண்மையிலேயே இது 100 சதவீதம் நிஜம்தானா என்பதை நானே இன்னும் உறுதி செய்யவில்லை அப்படி இருக்கும் பொழுது உன்னிடம் எப்படி கூற முடியும்.. இப்போதைக்கு நான் படித்த தகவலின் படி நீ மங்களாபுரத்து குறுநில மன்னன் தான்.. அதுவும் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த மன்னனே தான்..



ஆனால் நீ எப்படி 2026 ஆம் ஆண்டுக்கு வந்தாய் என்று தான் தெரியவில்லை..??!!



புயல் போல் அந்த ஒரு நாள் வரவில்லை என்றால் ராவணன் நிச்சயமாக நன்றாக வாழ்ந்திருப்பான் என்பது போல போட்டிருந்ததே.. அப்படி என்ன நாளாக இருக்க முடியும் ??



அது என்ன நாள் என்பதை முழுசா படிக்கிறதுக்குள்ள இவன் வந்துட்டானே மறுபடியும் அதை படிக்கலாம்னு பார்த்தால் இவனும் கூட வந்து உட்கார்ந்து நானும் படிப்பேன் என்று சொன்னால் என்ன செய்வது?? வேற வினையே வேண்டாம் இப்போதைக்கு அமைதியா இருந்துடுவோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அவனிடம் எந்த பதிலையும் சொல்லாமல் கணினியை ஆஃப் செய்தாள்..



" கற்பனையாக இருக்கும் அதனால்தான் உனக்கு கனவாக வந்திருக்கிறது வேறொன்றும் இல்லை நீ சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத நல்லா படுத்து தூங்கு சரியா நான் இங்கே தான் இருக்கேன் கவலை வேண்டாம் போய் தூங்கு", என்று சொல்லி அவனைக் கட்டிலில் படுக்க வைத்து அவன் உறங்கும் வரை அவனுடைய கைகளை பற்றி கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்தாள் சீதா..



இவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டவன் என்னவோ நிம்மதியாக உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான் ஆனால் இவளுக்குத்தான் நிம்மதியே இல்லை..



இப்படி எல்லாம் பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு மன்னனால் இன்னொரு நூற்றாண்டுக்கு வர முடியுமா?? இதெல்லாம் சாத்தியமா ?? படத்தில் தானே இதெல்லாம் பார்த்திருக்கிறோம் நிஜத்தில் கூடவா இப்படி எல்லாம் நடக்கும்??



இதை போய் நான் வெளியே சொன்னால் என்னை தானே எல்லாரும் பைத்தியக்காரி மாதிரி பார்ப்பாங்க மத்தவங்களை விடு முதல்ல அம்மாகிட்ட போய் சொன்னால் அவங்களே என்னை பைத்தியம் என்று பட்டம் கட்டி விடுவார்களே என்று அவளுடைய மனசாட்சி அவளுக்கு எடுத்துரைத்தது..



அது என்னவோ நிஜம்தான்..



அப்படின்னா இத்தனை நாளாக இவனை பைத்தியம் என்று நினைத்துக் கொண்டு நான் தான் பைத்தியக்காரியாக வாழ்ந்திருக்கிறேனா??



அவன் என்னவோ தெளிவாகத்தான் இருந்திருக்கிறான் நிஜமாகவே அவன் சொன்னது போல அவன் ஒரு மன்னன் தான் அவன் மங்களாபுரத்து மன்னனே தான் அவன் கண்களுக்கு எல்லாமே விசித்திரமாக தெரிவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை தான்.. பல நூற்றாண்டுகள் கடந்து வந்த மன்னனின் கண்களுக்கு இங்கிருக்கும் எல்லா விஷயங்களும் அதிசயமாக தானே தெரியும் அதில் எந்த தவறும் இல்லை தான்..



அவன் பார்வைக்கு நாங்க எல்லாரும் பைத்தியம் போல தெரிகிறோம் எங்களுடைய கண்களுக்கு இவன் பைத்தியமாக தெரிகிறான்.. இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டாள் அவள்..



மத்த விஷயங்கள் எல்லாம் சரிதான் ஆனால் அதிலிருந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் மனதை உறுத்துகிறது உடனே ஓடி சென்று மறுபடியும் கணினியை உயிர்பித்து அந்த விஷயத்தை தொடர்ந்து படித்து விடலாமா என்று கூட அவளுடைய மனம் யோசித்தது ஆனால் வேண்டாம் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திர ராவணன் மீண்டும் எழுந்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது அவன் சரியாக தூங்கவில்லை அதனால் இப்போதைக்கு இந்த முயற்சியை கைவிட்டு விட்டு நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வண்ணம் அவளும் தரையில் படுத்துக் கொண்டாள்..



அப்படின்னா இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா யாரு அந்த பொண்ணு அவள் மேல உயிரையே வச்சிருக்கான் போலயே அவளுக்காக மாளிகை கட்டிக் கொடுத்திருக்கான்.. அந்தளவிற்கு ஏகபோக காதலோ?? அவள் யாராக இருக்கக்கூடும்?? அவ்வளவு அவசரப்பட்டு அவன் அந்த நூற்றாண்டில் திருமணம் செய்தாக வேண்டுமா என்ன கொஞ்ச நாள் பொறுத்திருக்க கூடாதா?? என்று பொறாமைப்பட்டது அவளுடைய பெண் உள்ளம்..



இப்படி பொறாமை பட்டால் மட்டும் என்ன நடந்திடப் போகுது அந்த நூற்றாண்டுக்கு பயணம் செஞ்சு நீ போய் அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா?? இதெல்லாம் நடக்கிற காரியமா ஏற்கனவே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு நீதான் உன் கண்ணால் அந்த செய்தியை படித்தாயே இன்னுமா நம்பிக்கை வரவில்லை?? என்று அவளைப் பார்த்து எள்ளலாக சிரித்தது அவளின் மனசாட்சி..!!



இருந்தாலும் எதுக்காக அவன் அத்தனை சீக்கிரமாக திருமணம் செய்யணும் அப்படி என்ன அவசரம் இந்த கடுவன் பூனைக்கு??!! என்று முகத்தில் எழுந்த சினத்துடன் அங்கே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இந்தரை பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா..!!



- தொடரும்..
 

Author: நிதனிபிரபு
Article Title: மை டியர் ராவணா - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அதானே....நீ போய் அவனை கல்யாணம் பண்ணி இருந்து இருப்பியா என்ன🤭🤭🤭🤭🤭
"Woman in love"....cute aa தான் இருக்கு படிக்கும் போது😘😘😘😘😘☺️
ஒரு வேளை நீ அவன் மனைவி போல இருக்கியோ என்னவோ😁😁😁😁😁😁

எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கப்பா?????

இப்பவே படிச்சா தான் என்ன சீதா
 
  • Love
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
அதானே....நீ போய் அவனை கல்யாணம் பண்ணி இருந்து இருப்பியா என்ன🤭🤭🤭🤭🤭
"Woman in love"....cute aa தான் இருக்கு படிக்கும் போது😘😘😘😘😘☺
ஒரு வேளை நீ அவன் மனைவி போல இருக்கியோ என்னவோ😁😁😁😁😁😁

எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கப்பா?????

இப்பவே படிச்சா தான் என்ன சீதா
மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🥰 🥰 🥰