மை டியர் ராவணா வித் லவ் சீதா - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 19

கூடவே வந்து கொண்டிருந்த ராவணன் திடீரென்று காணாமல் போகவும் என்ன ஆயிற்று என்று பதட்டத்துடன் சுற்றிலும் தேடிப் பார்த்தாள் சீதா ..

ஆனால் அங்கே வந்த வழியே திரும்பி பார்க்க..

பத்து பதினைந்து பேர் நிற்கும் அளவிற்கு ஒரு கூட்டம் கண்ணிற்கு அகப்பட்டது .. ஒரு வேளை அன்று போல் இன்றும் யாரையாவது தூக்கிப் போட்டு மிதித்து கொண்டிருக்கிறானா என்ற சந்தேகம் அவள் மனதில் வரவும் வேகமாக அந்த கூட்டத்தை நோக்கி சென்றாள்..

அவள் எதிர்பார்த்து சென்றது ஒன்று ஆனால் அங்கே அவள் கண்டது வேறு..

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் எழுந்து நிற்க கூட முடியாமல் தளர்ந்து போய் தரையில் கிடக்க..

அவருக்காக இவன் வருவோர் போவோரிடம் எல்லாம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தான்..

அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள் சீதா..!!

ஒரு ஊரையே ஆண்டு கொண்டிருந்த மன்னன் .. அதுவும் கம்பீரமான மன்னன்.. இன்று யாருக்காகவோ நடு ரோட்டில் நின்று கொண்டு யாசகம் கேட்பதை பார்த்ததும் அவளுக்கு வேதனை உண்டானது..

எதற்காக இப்படி ஒரு முட்டாள்தனத்தை அவன் செய்கிறான் என்று ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை அவன் மனதில் இருப்பதை உணர்ந்ததும் அவளுக்கு பெருமை ஏற்பட்டது..

" யாரோ போல் கடந்து செல்லும் மக்களே.. உங்களில் ஒருவரான இந்த முதியவருக்கு உடல் நலக்குறைவால் உழைக்கவும் முடியாமல் பசிக்கு உணவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.. இங்கே இவருடைய ஒரு வேளை உணவுக்கு என்னிடம் பொற்காசுகள் இப்போதைக்கு இல்லை.. இந்த அதிசய உலகத்தில் நீங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளும் தாள்களும் என்னிடம் இல்லை.. இல்லையென்றால் நானே அவருக்கு உதவி விடுவேன் ஆனால் இப்பொழுது என்னால் முடிந்த ஒரே உதவி இவருக்கு பதிலாக நான் யாசகம் கேட்டு அவருக்கு உணவளிப்பது தான் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ஒருவர் பசியாற..", என்று கம்பீரமாக அவனை கடந்து செல்லும் மக்களை பார்த்து அவன் யாசகம் கேட்டான்.

கம்பீரமான தோரணையுடன், அவன் சுத்த தமிழில் யாசகம் கேட்பதை எல்லோரும் விசித்திரமாக பார்த்துக் கொண்டே சென்றார்கள்..!!

சிலர் அவன் பேசுவதை கேட்டு விட்டு, பக்கத்தில் மயங்கி கிடக்கும் அந்த முதியவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவன் கைகளில் சில தாள்களை திணித்துவிட்டு சென்றார்கள்..

அவன் குரலில் கம்பீரமும் இருந்தது அதே சமயம் ஒருவர் பசியால் வாடிக் கொண்டிருக்க அவருடைய பசியை ஆற்ற வேண்டிய கடமை நம்முடையது என்கிற கருணையும் கடமையும் அந்த குரலில் சேர்ந்தே ஒலித்தது..!!

பிறரிடம் அவன் யாசகம் கேட்டு பெற்ற தாள்களை எடுத்துச் சென்று அருகில் உள்ள இட்லி கடையில் கொடுத்து அவருக்கு சாப்பாட்டு பொட்டலங்களை வாங்கி வந்து கொடுத்தான்..

" பெரியவரே இதோ இங்கே பாருங்கள் உங்களுக்கான உணவை நான் வாங்கி வந்திருக்கிறேன்.. இப்பொழுது உங்களுக்கு கொடுத்து உதவுவதற்கு என்னிடம் பொற்காசுகளோ அல்லது என்னுடைய கிரீடமோ நகைகளோ என்னிடம் தற்போது இல்லை.. அதனால் மக்களிடம் உதவி கேட்டு உங்களுக்கு நான் உணவு வாங்கி வந்திருக்கிறேன் இதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்", என்று கூறி அவரை தன் மடியில் சாய்த்து கொண்டு உணவளிக்க தொடங்கினான்..

அவள் வாங்கித் தந்திருந்த உயர் ரக ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் அணிந்திருந்தவன் பிறரிடம் இந்த முதியவருக்காக யாசகம் கேட்டு உணவு வாங்கி வந்து இப்பொழுது அவருக்கு சாப்பாட்டை ஊட்டி கொண்டிருக்கும் அவனுடைய செயலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள் சீதா..!!

'அதே தெருவில் எத்தனையோ இளைஞர்கள் அதைக் கண்டும் காணாமல் சென்றார்கள் ஏன் பெரியவர்கள் கூட கண்டுக்காமல் தான் போனார்கள் ஆனால் இவனுக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை வந்தது?? அதுவும் மன்னனாக இருந்து கொண்டு எப்படி அவனால் யாசகம் கேட்க முடிந்தது ??எந்த ஒரு மன்னனும் செய்ய துணியாத ஒரு விஷயத்தை இவன் எப்படி இத்தனை சாதாரணமாக செய்தான்?? சாதாரண மனிதர்களுக்கு கூட யாசகம் கேட்க வேண்டும் என்றால் உடம்பெல்லாம் கூசி போவார்கள் சங்கடப்படுவார்கள்.. ஆனால் இவனோ ஒரு மன்னனாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட அந்த சங்கட உணர்வு எதுவும் இல்லாமல் தைரியமாக இப்படி ஒரு செயலை செய்து விட்டானே?? ', என்று அவளுடைய மனம் நெகிழ தொடங்கியது..!!

சற்று நேரம் காத்திருந்தாள் அவள்.. அந்த முதியவருக்கு அவன் சாப்பாடு ஊட்டும் வரை..

எல்லோரும் அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டே சென்றார்கள்..

இன்னும் சிலர்," பாக்குறதுக்கு ஆள் என்னவோ டிப் டாப்பா பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கான் ஆனால் பேசுவதெல்லாம் சங்க காலத்து தமிழ் போல இருக்கிறது போதாத குறைக்கு அந்த ஆளுக்கு பதிலாக இவன் பிச்சை எடுத்து சாப்பாடு வாங்கி கொடுக்கிறானே.. என்ன இது அதிசயம் இந்த காலத்திலும் இப்படி ஒருத்தன் இருப்பானா?? கேட்டால் கையில் காசு இல்லை என்கிறானே..", என்று சிலர் அவன் காது பட கிசுகிசுத்து கொண்டே சென்றார்கள் ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை..

கடமையே கண்ணாக அவருக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டுட்டு அவன் வந்தான்..

" இந்தர்.. என்ன பண்ணிட்டிருக்க இங்க??"

" அதுவா சீதா இந்த முதியவருக்கு மிகவும் உடல் நலக்குறைவு போல சாப்பாடு கூட சாப்பிடாமல் பசியோடு இருந்தார்.. உன்னை அழைக்கலாம் என்று பார்த்தால் நீ வெகு தூரம் சென்று விட்டாய் போல.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உன்னை பார்க்க முடியவில்லை அதனால் தான் நானே இவருக்கு உதவலாம் என்று முன் வந்தேன் என்னிடம் பொற்காசுகள் எதுவும் இல்லை என்னுடைய தங்க நகைகளை கூட கழட்டி வைத்து விட்டு வந்து விட்டேனே.. இப்போது அவருக்கு எப்படி உதவி செய்வது என்று எனக்கு தெரியவில்லை அதனால் எல்லோரிடமும் யாசகம் கேட்டு அவருக்கு உதவி புரிந்தேன்.."

" ஒரு மன்னனாக இருந்து கொண்டு எப்படி உன்னால் யாசகம் கேட்க முடிந்தது ?? உனக்கு சங்கடமாக இல்லையா??"

" இதில் சங்கடம் எங்கிருந்து வந்தது சீதா..?? நம்மைப் போலவே இருக்கும் பிற உயிர்களும் பசியால் வாடுவதை பார்த்துவிட்டு எப்படி நம்மால் கல் மனதுடன் கடந்து செல்ல முடியும்?? அதனால் தான் இப்படி செய்தேன்..", என்றான் புன்னகையுடன்.

என்ன பதில் சொல்வதென்றே அவளுக்கு தெரியவில்லை அவன் செய்த செய்கை அவளுக்கு பேச்சு வராமல் செய்துவிட்டது..

எத்தனை கருணை உள்ளம் கொண்டவனாக இருக்கிறான் யாரும் பசியில் வாடக்கூடாது கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறானே நிஜமாகவே இவன் ஒரு நல்ல மன்னன் தான்.. அதைவிட இவன் ஒரு நல்ல மனிதன்..!!

'சில லட்சங்களை மட்டும் சம்பாதித்து விட்டு பிறரிடம் தலை வணங்கவே யோசிக்கும் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் மன்னராக வாழ்ந்து விட்டு பிறரின் பசி போக்குவதற்காக யாசகம் கேட்க கூட துணிந்து விட்ட இந்த மனிதனின் மனதை என்னவென்று சொல்வது ??', என்று யோசித்து வியப்படைந்தாள்..!!

" என்ன சீதா இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி??", என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேள்வி கேட்கவும் இவள் முகம் செவ்வானமாய் சிவந்து போனது..

ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதிற்குள் நுழைய தொடங்கியிருந்த ராவணன் இப்பொழுது நங்கூரம் போல் நச்சென்று அமர்ந்து கொண்டான்..!!

பக்கவாட்டில் அவனுடைய உருவத்தை ரசித்துக் கொண்டே ரோட்டில் கண் வைத்து நடக்க தொடங்கினாள் சீதா..

எதேர்ச்சையாக கையை பிடிப்பது போல் மெதுவாக நகர்ந்து சென்று அவன் கரங்களை தன் கைகளோடு கோர்த்துக் கொண்டாள்..!!

அவளுடைய தொடுகை அவன் மனதிற்குள் ஏதோ விசித்திரமான உணர்வை உண்டு பண்ணியது.. ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாகவே நடந்து சென்றான் அவன்..!!

பார்த்த நாள் முதல்.. இந்த நிமிடம் வரைக்கும் அவளிடம் அவன் பழகும் விதம் நட்போடு தான் இருக்கிறது.. ஆனால் அதையும் தாண்டி அவன் மனதிற்குள் சில நேரங்களில் தோன்றும் உணர்ச்சிகளை அவனால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை அதற்கு காரணம் என்னவென்று இப்போது வரை அவனால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை..

அவன் பார்க்காத நேரமாக திரும்பிப் பார்த்து அவனை அவள் ரசிப்பது போலவே இவள் பார்க்காத நேரமாக பார்த்து அவனும் அவளை திரும்பிப் பார்த்து ஓர கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தான்..!!

ஒட்டியானம் அணியவில்லை நெத்தி சுட்டி ஜிமிக்கி இப்படி எந்தவித அணிகலன்களும் அவள் அணிந்து கொள்ளவில்லை எந்த வித ஒப்பனையும் செய்யவில்லை இருந்தும் அவளுடைய முகம் பிரகாசித்தது ஆதவனின் ஒளிக்கதிர் போல..!!

காற்று போக முடியாத இடத்தில் கூட காதல் புகுந்து விடும் என்பார்கள் இப்போது அவன் நிலையும் அதுதான்..!!

கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய பிம்பம் அவன் மனதிற்குள் நுழைந்தது ஓவியமாய்..!!

வண்டியில் போகும் போது வழி நெடுக எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும்..

ஆனால் சைடு மிரர் வழியாக அவனைப் பார்த்துக் கொண்டே தான் அவள் வண்டி ஓட்டினாள்..

அவனும் அவ்வப்போது சைடு மிரர் வழியாக அவளுடைய மாம்பழ கன்னங்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தான் இதழ் புன்னகையோடு..!!

சுற்றியுள்ள அனைத்தையும் மறந்து விட்டு தங்களுக்கென்ற பிரத்தியேகமான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்..

ஸ்பீட் பிரேக்கர் வரவும் உடனே வண்டியை ஒரு அழுத்து அழுத்தினாள்..

சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவன் ஸ்பீட் பிரேக்கர் போடவும் உடனே அவள் மீது சாய்ந்து கொண்டான் ..!!

அவனுடைய இரு கரங்களும் அவளுடைய இடையை சுற்றி வளைத்துக் கொண்டது..

சூடான அவனுடைய உள்ளங்கை அவளுடைய மணி வயிற்றில் படவும், உள்ளுக்குள் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குத்தாட்டம் போடத் தொடங்கியது அவளுக்கு..!!

கையை எடு இந்தர் என்று ஒரு வார்த்தை அவள் சொன்னால் அவன் கையை எடுத்து விடுவான் தான்.. ஆனால் ஏனோ, அந்த பெண்ணிற்கு அதை சொல்ல தோன்றவில்லை..!!

அவனும் அவள் பஞ்சுமேனியை அணைத்தபடி அமர்ந்திருந்தான்.. அவன் நினைத்திருந்தால் விலகி அமர்ந்திருக்கலாம் ஆனால் ஏனோ அவனுடைய கரங்கள் பிடிவாதமாக அவள் வயிற்றில் பதிந்திருந்தது..!!

விலகி செல் என்று அவனுடைய மூளை எச்சரித்தாலும் இன்னும் சற்று நேரம் இருக்கலாமே என்னாகி விடப் போகிறது என்று அவனுடைய உள் மனம் ஏங்க தொடங்கியது..!!

- தொடரும்..

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
ஐ இப்ப ராவணும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டான்🤩🤩🤩🤩
எனக்கு ஒரு டவுட் ரைட்டர்!!!! இன்னைக்கு இப்படி துடிப்பவன்....அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் இல்ல.....
அப்படி இருந்து இருந்தா.....அந்த குழந்தையும் அழுது இருக்காது....இவனும் சாபம் வாங்கி இருக்க மாட்டான் இல்ல....
 
  • Love
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
ஐ இப்ப ராவணும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டான்🤩🤩🤩🤩
எனக்கு ஒரு டவுட் ரைட்டர்!!!! இன்னைக்கு இப்படி துடிப்பவன்....அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் இல்ல.....
அப்படி இருந்து இருந்தா.....அந்த குழந்தையும் அழுது இருக்காது....இவனும் சாபம் வாங்கி இருக்க மாட்டான் இல்ல....
எல்லா நேரமும் ஒரே மாதிரி மனிதர்கள் இருப்பதில்லையே சகோதரி. அந்த சம்பவம் நிகழ்ந்து தான் அவன் இங்கு வர வேண்டும் என்பது விதி போல அதாவது writer போட்ட விதி😜😜😂😂... மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
  • Love
Reactions: Gowri Karthikeyan