மை டியர் ராவணா வித் லவ் சீதா - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 20

இரவு பத்து மணி..

வீட்டிற்கு வந்ததும் அசதியில் படுத்தவுடன் உறங்கிவிட்டான் ராவணன்..

ஆனால் சீதாவிற்கு தான் உறக்கம் வரவே இல்லை.. எப்படியாவது மீனாட்சிபுரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஏடுகளை எடுத்து படித்தால் தான் நிம்மதி வரும் என்று தோன்றியது அவளுக்கு..

இன்னொரு புறம் கவலையாகவும் இருந்தது..

ஒருவேளை, அந்த ஏடுகளை எடுத்து படிக்கும் பொழுது அவனுடைய சாபத்திற்கான விமோசனம் கிடைத்துவிட்டால் அவன் இந்த உலகை விட்டு நீங்கி அவனுடைய 18 ஆம் நூற்றாண்டுக்கு சென்று விடுவான் அல்லவா?? என்ற கவலையும் வந்தது அவளுக்கு..

அப்படி மட்டும் நடந்து விட்டால் அவனை விட்டு தன்னால் இருக்க முடியுமா ?? அவனை தன்னால் மறக்க முடியுமா?? முதலில் அவனின் நினைவுகள் இல்லாமல் ஒரு நாள், ஒரு நிமிடத்தையாவது கடத்த முடியுமா?? என்று ஏகப்பட்ட யோசனைகள் அவள் மண்டைக்குள் ஓடியது..

கட்டிலில் எந்த கவலையும் இல்லாமல் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் ராவணனை பார்க்கும் பொழுது அவளுக்கு நெஞ்சம் கனத்தது..

ஆரம்பத்தில் அவனைப் பார்த்த பொழுது எப்போதுடா இவனிடம் இருந்து விடுதலை கிடைக்கும்?? எங்கே போய் இவனை தொலைத்து விட்டு வரலாம்??, என்று யோசித்தது உண்மைதான்..

ஆனால் அவனுடன் பழக ஆரம்பித்த பிறகு அவனுடைய குணங்களும், அவள் மீது அவன் காட்டிய அக்கறையும், பொது ஜனங்கள் மீது அவன் காட்டிய கருணையும் அவள் மனதில் நிலைத்து நின்றன..

சுயநலமின்றி அடுத்தவர் நலனுக்காக பாடுபடும் ஒருவனை முதல்முறையாக சந்தித்த மகிழ்ச்சி அவள் மனதிலிருந்து இந்த நொடி வரை நீங்க வில்லை..

அப்பேர்பட்ட மனிதனை அத்தனை சீக்கிரத்தில் மறக்கவும் முடியாது இழக்கவும் முடியாது அல்லவா??!!

அதனால் அவளுடைய மனம் தவித்துக் கொண்டிருந்தது அவனை நினைத்து..

அவள் நினைத்தால் மீனாட்சிபுரம் போகாமல் அப்படியே எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருந்து விடலாம் தான்..

ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக இன்னொருவனுடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது அல்லவா?? அதனால் தான் அவளுடைய மனம் மீனாட்சிபுரம் சென்றாக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது..

அதுவும் இல்லாமல் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த மன்னனின் வாழ்க்கையில் ஒரு பெண்ணும் இருக்கிறாளே அதுவும் மனைவியாக..

அவள் யார் என்று இப்போது வரை தெரியவில்லை .. அவள் புகைப்படம் கூட எந்த வலைத்தளத்திலோ அல்லது புத்தகங்களிலோ இல்லை..

எல்லா இடத்திலும் இந்திர ராவணன் என்று அவனுடைய பெயரை போட்டு அவன் புகைப்படம் மட்டும் இருக்கிறது.. அவனுக்கு நெருக்கமானவர்கள், மனைவி அல்லது குடும்பத்து ஆட்கள் புகைப்படங்கள் என்று ஒன்று கூட இல்லை எல்லாவற்றிலும் அவன் புகைப்படம் ஒன்று மட்டுமே இருந்தது அதுதான் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை..!!

அவன் மனைவியின் முகம் எப்படி இருக்கும் ?? யார் அந்த தேவதை?? அவன் மனதை களவாண்ட கள்ளி யாராக இருக்கக்கூடும்?? அவள் கொடுத்து வைத்தவள் இல்லையா??

இப்பேற்பட்ட கம்பீரமான மனிதனுக்கு மனைவியாக வாழ்வது என்றால் அத்தனை சுலபமான காரியமா?? அல்லது அத்தனை சாதாரணமான ஒரு விஷயமா என்ன??

நிச்சயம் அவள் கொடுத்து வைத்தவள் தான்..!!

யார் அந்த மகராசி என்று தெரியவில்லையே..?? போகட்டும் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்??

அவனுடைய கடந்த கால நினைவுகளை மறந்து சாபம் பெற்று இப்பொழுது அவன் இங்கே இருக்கிறான் அவ்வளவுதான்..

வந்த இடத்தில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுடன் நட்பாக பழகி, கடைசியில் மனதையும் அவனிடம் இழந்து விட்டேனோ??!!

பழகியது சில தினங்களே என்றாலும் அவனுடைய நினைவுகள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டனவே..!!

அதையெல்லாம் யோசித்து ஏக்க பெருமூச்சொன்றை வெளியிட்டவள் அப்படியே படுத்து அவளும் உறங்கி விட்டாள் ஒரு கட்டத்தில்..

காலை 9 மணி..

வீட்டில் இவனை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்ல முடியாது என்கிற காரணத்தினால் அலுவலகத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டாள் சீதா..

கருநீல வண்ணத்தில் ஜார்ஜெட் சேலை அணிந்திருந்தாள் சீதா, அவள் நிறத்திற்கு பொருத்தமாக..!!

தலைக்கு குளித்திருந்த காரணத்தினால் கூந்தலை ஃப்ரீ ஹேரில் விட்டிருந்தாள்..

" இந்தர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம இங்கிருந்து கிளம்ப போறோம் தயாராக இரு நான் உனக்கு வாங்கி கொடுத்த உடைகளில் ஒரு செட் எடுத்து வைத்துக் கொள் சரியா??"

" நாம் இருவரும் எங்கே செல்ல போகிறோம் சீதா??"

" அதெல்லாம் இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது முக்கியமான ஒரு வேலை இருக்கு அதனால் கண்டிப்பா போய் தான் ஆகணும் டாக்ஸி புக் பண்ணிருக்கேன் வா போகலாம் நேரமாச்சு.."

அவள் சொல்வதில் பாதி விளங்கியும் பாதி விளங்காமல் இருந்த போதும் அவள் எங்கோ அழைக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது..

அதனால், மறு கேள்வி எதுவும் கேட்காமல் அவள் பின்னாடி சென்றான் அவன்..

அவள் எதிர்பார்த்தது போலவே சரியாக பத்து மணிக்கு அவள் புக் செய்த டாக்ஸி வந்து விடவும் இருவரும் பின்பக்க சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்..

நெடுஞ்சாலையை கடந்து ஊரின் எல்லையை தாண்டி சென்றது அந்த டாக்ஸி..!!

ஜன்னல் வழி வீசும் காற்றில் சீதாவின் தலை முடி பறந்து வந்து அவளுடைய வதனத்தில் இம்சை செய்தது..

கண்களை வெளிப்புற காட்சியில் பதித்திருந்தாலும் அவளுடைய எண்ணங்கள் என்னவோ மீனாட்சிபுரத்தை தான் சுற்றி சுற்றி வந்தது..

அதனால் காற்றில் அசைந்தாடும் கூந்தல் அவளுடைய எண்ணங்களுக்கு தடையாக மாறிவிட.. உடனே , கோபம் கொண்டு தலைமுடியை மொத்தமாக இழுத்து ராவணன் பக்கம் வீசினாள்..

வேகமாக காற்று வீசவும் ..அதே நேரம் இவள் கூந்தலை அள்ளி அவன் பக்கம் போடவும்.. சாட்டையடி போல அவளுடைய கூந்தல் அவன் கன்னத்தை பதம் பார்த்தது வேகமாக..!!

சுள்ளென்று கன்னத்தில் அடி விழவும் வேகமாக திரும்பி சீதாவை ஒரு பார்வை பார்த்தான் அவன்..!!

ஆனால், அவளோ அவன் பக்கம் திரும்ப கூட இல்லை ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளை பார்த்த வண்ணம் அசையாமல் சிலை போல் அமர்ந்திருந்தாள்..

" எதற்காக சீதா இப்பொழுது உன் கூந்தலை கொண்டு என் கன்னத்தில் அறைந்தாய்??", என்று அப்பாவியாக அவன் கேள்வி கேட்ட போதும் கூட அவனுடைய குரல் அவள் காதுக்கு எட்டவில்லை போலும் அவள் திரும்பவே இல்லை..!!

ஆனால் அவனுடைய குரல் முன்னாடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் காதில் விழுந்தது..

விசித்திரமாக அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவன்..

'பாக்குறதுக்கு சினிமா பட ஹீரோ மாதிரி இருக்கான்..ஆனா பேசுறதெல்லாம் சங்க கால தமிழ் மாதிரி இருக்கு இவன் என்ன பைத்தியமா ?? இல்ல நிஜமாவே சினிமா படத்தில் நடிப்பதற்காக வரிகளை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறானா??', என்று அந்த டிரைவர் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.. ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவும் இல்லை அவர்களிடம் அவன் பேச்சு கொடுக்கவும் இல்லை..

இப்படி ஏதாவது கேள்வி கேட்க போய் அவர்களிடம் பிறகு அதிக பிரசங்கி என்று திட்டு வாங்க வேண்டுமா??, என நினைத்துக் கொண்டுதான் அவன் அமைதியாக இருந்து விட்டான்..

ரோட்டில் கண் பதித்து அவன் காரை ஓட்ட தொடங்கி விட்டான் அதன் பிறகு இவன் சம்பாஷனையில் அவன் கவனம் செலுத்தவில்லை..

எத்தனை முறை கூப்பிட்டும் திரும்பாமல் வெளிப்புற காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்கும் சீதாவை வித்தியாசமாக பார்த்தான் ராவணன்..

'எப்பொழுதும் ஒரு கேள்வி கேட்டால் 10 பதில் கூறுவாளே.. இன்று எண்ணாயிற்று இந்த பெண்ணிற்கு?? ஏன் திரும்பி பார்க்காமல் அமர்ந்திருக்கிறாள்?? ஒருவேளை நம் மீது எதுவும் கோவமா அல்லது வேறு ஏதாவது யோசனையில் இருக்கிறாளா??', என்று யோசித்துக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்பொழுதுதான் முழுதாக அவளை கவனிக்கவே தொடங்கினான் அவன்.

அந்த கருநீல வண்ண நிறத்தில் உள்ள சேலை அவளுக்கு மிகவும் பாந்தமாக இருந்தது.. அதுவும் காற்றில் அசைந்தாடும் கூந்தலை அவ்வப்போது அவளுடைய கைகள் விலக்கி விடுவதற்காக சற்று மேலே தூக்கவும் அவளுடைய பளிச்சென்ற இடை அவன் கண்ணில் மின்னல் போல் மின் வெட்டியது..!!

வழவழப்பான அந்த சாட்டின் சருமத்தை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தான் அவன்..

அந்த நீல வண்ணம் அவளுடைய நிறத்தை மேலும் எடுப்பாக எடுத்துக்காட்டியது போகாத குறைக்கு அவளுடைய இடை அவனைப் பார்த்து அவ்வப்போது கண் சிமிட்டவும் லேசாக மனம் தடுமாறித்தான் போனான் ராவணன்.....❤️❤️

ஸ்பீட் பிரேக்கர் போடும் பொழுதெல்லாம் அவளுடைய தேகம் குலுங்கி குலுங்கி அமரவும் அவளுடைய அங்கங்கள் அனைத்தும் நடனமாடியது..

ஒரு நொடி கூட இமைக்காமல் அந்த ரம்மியமான காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்..

அவள் இடையில் கஞ்சத்தனத்தை காட்டி சற்று மேலே தன்னுடைய வள்ளல் குணத்தை காட்டியிருந்த பிரம்மனை நினைத்து ஆச்சரியப்பட்டான் ராவணன்..💓💓

அழகு சிலையாக அமர்ந்திருக்கும் சீதாவை கண் கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க.. அதே நேரம் கார் வேகமாக ஒரு வளைவில் திரும்பவும், பூ குவியலாய் வந்து அவன் மீது சரிந்தாள் சீதா..!!

உடனே வேகமாக அவளுடைய இடையை அவன் கரங்களால் அணைத்துக் கொண்டான் ராவணன்..!!

கார் வேகமாக திரும்பவும் அவளுடைய தலை இப்பொழுது அவன் நெஞ்சில் சாய்ந்திருக்க.. அவன் அணைப்பில் முழுதாக அவனுடன் ஒண்டி கொண்டிருந்தாள் அந்த பேதை..💓💓

மெதுவாக இமை குடைகளை உயர்த்தி அவனை அவள் நிமிர்ந்து பார்க்க..

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..!!

அடர்த்தியான புருவங்கள் வில்லாக வளைந்திருக்க தீட்சண்யமான அவன் விழிகள், அவளுடைய மருண்ட மான் விழிகளை விழுங்கியது..❤️❤️

அவளுடைய எண்ணங்களுக்கு தடையாக அந்த வளைவு வரவும் அவளும் திடுக்கிட்டு போய் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

ஆனால் அவனைப் பார்த்த பிறகு அவளுடைய எண்ணங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக.. அவனுடைய விழிகளில் மொத்தமாக கரைந்து கொண்டிருந்தாள் சீதா, சுற்று புறம் மறந்து..!!

ஒருவரை மறந்து ஒருவர் விழியால் கைது செய்து கொண்டிருக்க.. தங்களை மறந்து அவர்களுடைய இதழ்கள் சந்தித்துக் கொள்ள முயற்சி செய்தது..

ஒரே நேரத்தில் இருவரின் வழிகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டிருக்கும் போதே எதிராளியின் இதழை நோக்கி சென்றது பார்வை..!!

அடர்ந்த மீசைக்கு நடுவே சிக்கியிருந்த அவனுடைய தடித்த உதடுகள், இவளின் பளபளக்கும் மென் இதழ்களை கண்டதும் துடித்தது தாபத்தால்..!!

பார்த்துக் கொண்டே இருந்தால் போதுமா?? ருசிக்க வேண்டாமா?? என்பது போல அவளுடைய தேனிதழ்கள் அவனைப் பார்த்து கேள்வி கேட்க..

என்ன செய்வதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தான் இந்தர்..!!

அவனுக்கு உதவும் வகையில் கார் வேகமாக மற்றொரு வளைவில் திரும்பவும்..

இருவரும் எதிர்பாராத நேரமாக பார்த்து தங்களின் இதழ்களை பூட்டிக் விட்டு சுயநினைவு எனும் சாவியை தொலைத்தார்கள்..!!

- தொடரும்..

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அடேய்கலா .....டிரைவர் இருக்கான் டா முன்னாடி....என்னடா பண்றீங்க🙈🙈🙈🙈